15 May 2016

வெத்து யெடம்,,,,,,,

கொண்டுவந்துவிடவேண்டுமா,,,,எனக்கேட்டபொழுதுவேண்டாம்போய்க்கொள் கிறேன் நான் நீங்கள் உங்களது வேலையைப் பாருங்கள் எனச் சொன் னவரின் பேச்சைக் கேட்டதினால் ஏற்பட்ட பச்சாதாபமா இல்லை அவரை கொண்டு போய் விட முடியவிலையே என்கிற ஆதங்கத்தினால் ஏற்பட்டதா தெரியவில் லை.

மருங்கலுக்கு சற்றுக்குறைவாக பச்சாதாபப்பார்வைபார்த்து விட்டு இரு சக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு கிளம்புகிறான் ராமு/

பஜாருக்குப்போகவேண்டும் காய்கறிகள் மற்றும் தேங்காய் வாங்க வேண்டும், முடிந்தால் காசிருந்தால் பையில் இடமிருந்தால் வெங்காயம் வாங்கிக் கொள் ளலாம்,

இதில் காய்க்கறிக்கடையும் வெங்காயம் விற்கிற கடையும் பக்கம் பக்கமே, காய்கறிக்கடையில்வெங்காயமும்,தேங்காயும்இருக்கும்,இவனுக்கானால்தர்ம சங்கடம்,என்னடா இது எங்களது கடையிலேயே காய்கறி வாங்குகையில் வெங்காயமும் தேங்காயும் சேர்த்து வாங்கிகொள்ளலாம்தானே எனக் கேட்டு விடுவாரேஎன்கிறஉதறல்வேறு,சரிகேட்டாலும்கூட பரவாயில்லை, அதற்காக பழக்கத்தை விட முடியுமா,,,,?

வெங்காயம்வாங்குகிறகடையில்கிட்டத்தட்டபத்துவருடங்களுக்கும் மேலான பழக்கம்,

சார்லஸ் இருக்கும் போதிலிருந்து கிளைத்து நட்பு விட்டது. சார்லஸ் கடை யின் வேலையாள்.ஆனால் அவர்தான் முதலாளி மாதிரி எல்லோருக்குமாய் காட்சிப்படுவார்,அவர் கடையில் இல்லை என்றால் கடைக்கு வருபவர்கள் சரக்குவாங்காமல்போய்விடுகிற கொடுமையும்நடப்பதுண்டுஅவ்வப்பொழுது.

இப்பொழுது சார்லஸ் கடையில் இல்லை தனியாய் கடை போட்டு விட்டார். கொடுக்கிறசம்பளம் கட்டுபடியாகவில்லை,தவிர பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.இனியும் போய் ஒரு கடையில் சம்பளத்துக்கு வேலை பார்த்து தொன்னாந்து திரிவதை விடுத்து சொந்தமாய் ஒரு தொழில் செய்யலாம் என்கிற முடிவுதான் என்றார்.

தூத்துக்குடி வாழை இலை கிடைக்கும் என போர்டு வைத்திருந்த கடையில் வெங்காயம்,தேங்காய்,வெள்ளைப்பூண்டு பிரம்புக் கூடை விளக்குமாறு என நிறைய வைத்திருந்தார்கள்.

கடைக்குப்போனதும் முதல் வேலையாக சரக்கு என்ன வேண்டும் என கேட்கிறாரோ இல்லையோ வணக்கம்சொல்லிவிடுவார்,

ரிட்டையர் ஆவதற்கு முன்பாக கேரளா பார்டரில் வேலைபார்த்தாரம்,மத்திய அரசுப்பணி,பதவியின் பெயர் எப்பொழுதோ சொன்னது மறந்து போனது.ஏதோ வேலைபாக்கப்போயிஅங்கிட்டெல்லாம் பாத்துக்கிட்டோம்,இல்லை முடியுமா சொல்லுங்க,மனசார நம்ம அங்கிட்டெல்லாம் போயிட்டு வந்துருவ மா காசு செலவழிச்சி,குடும்பத்தப்பிரிஞ்சி தனியே இருந்துட்டாலும் கூட அது ஒரு சௌகர்யமாத்தான் இருந்துச்சி சார் அந்த நேரத்துல, ரெண்டா வது பொழப்பு நிர்பந்தம் என்பார்.

வெங்காயம்விலைஎன்னவெனத்தெரியவில்லை,போன வாரம் போகும் போது கிலோ ரூபாய் 40 சொன்னார்கள்.இந்த வாரம் எவ்வளவு எனத்தெரிய வில்லை, தவிர வெங்காயம் தெளிவாக ஒன்றும் இல்லை.இவன் வழக்கமாக வாங்குகிற கடை நேற்று பூட்டி இருந்தது,வழக்கம் போல நேற்று அலுவலகம் விட்டுக் கிளம்பும்போதுவீட்டிலிருந்துபோன்/

வரும்போதுவெங்காயம்வாங்கிகொண்டுவந்துவிடுங்கள்வீட்டில்மருந்துக்குக் கூட வெங்காயம் இல்லை,அவசியத்தை மனதில் இருத்திக் கொள்ளுங்கள் என்றாள்.மனைவி.

சரி என்ன அதனால் இப்பொழுது வாங்கிக்கொண்டு போய் விடலாம் பொரு ளை என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் கையில் கொண்டு வந்திருந் ததாய் நினைத்தபைஇல்லை.

காலையில் கிளம்புகிற அவசரத்தில் எடுத்துபைக்குள்ளாக வைத்துக்கொள்ளா மல்வந்துவிட்டான்.சாப்பாடுகொண்டுவருகிறதோள்பைதான் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் வாங்கினான்,ரகுமான் ஆப்டிக்கல்ஸ் பக்கத்தில் இருக்கிற சந்தில் உள்ள கடையில்/

உடன் வேலைபார்க்கிற நண்பன் கூடக் கேட்டான்.எங்கு வாங்கினீர்கள் என்ன ஏது,எனக்கு ஒன்று வாங்க வேண்டும் என,,,,,,,/பையின் நிறமும் தோற்றமும் அவனைக்கவர்ந்து விட்டது போலும்.

இவனைப்பார்த்தஇந்தஇரண்டுநாட்களில்இருபதுமுறையாவதுகேட்டிருப்பான், அவன்அப்படித்தான் ஒரு கேள்வியை ஒன்றுக்குபத்துத் தடவையாவது கேட்க வேண்டும் என்கிற நினைப்பு அவனில் எப்பொழுதும் உண்டு, இது போக அவன் எதையும் ஒன்றுக்கு நான்கு முறை தீர விசாரித்துச் செய்கிற ஆள்.சரி பரவா யில்லை.இது தவிர காய்கறி வாங்க,பலசரக்கு வாங்க, என தனியாக் ஒரு வெள்ளைப்பை ஒன்று வைத்திருப்பான்.பரவாயில்லை பார்க்கநன்றாகவே இருந்தது,அந்தப்பை.முரட்டுத்தனமாககெட்டிப்பட்டு போய்,,

கடையில் பை வாங்கிய அன்று கடைக்காரரிடம் கேட்டான்,இது என்ன தார்ப் பாலின் மெட்டிரீயலில் செய்ததா அல்லது யூரியாச்சாக்கில் தைத்ததா எனக் கேட்டபோது நீங்கள் கேட்ட இரண்டு மெட்டீரியலும் இல்லை,தார்ப்பாலின் மெட்டீரியலியே கொஞ்சம் லோ குவாலிட்டி இது என்றார்.

செல்ப் சர்வீஸ் சென்டரில் பலசரக்கு வாங்கிய நாளொன்றில் கையில் பை கொண்டு வராமல் போனது உறைக்க ஓடிபோய் அவசரத்திற்கு என வாங்கி வந்த பை இப்பொழுது உதவுகிறது.

ஆனால் அதை எடுத்து வரவில்லையே என்ன செய்ய,,,,,,?கை இருப்பவருக்கு பைஎதற்கு என அர்த்தமற்று பேச முடியாது,வாங்க வேண்டியபொருளை கை யில் வாங்கிக் கொண்டுபோகமுடியாது,ஆகவேதான் பைதான் வேண்டும்,

ஆபிஸிலிருந்து கிளம்பும் போது முத்தண்ணாவிடம் ஏதாவது துணிப்பை இருக்கிறதா எனக் கேட்டான்,மஞ்சபைஇருந்தால்கூடப்போதுமானது.என,,/

அறுந்துபோன ஒற்றைக் காதைஇன்னொருகாதுடன் இணைத்துக்கட்டி புத்தகப் பையாகசுமந்து கொண்டு போன நாட்கள் நினைவில் வருகிறதுதான் முத்த ண்ணாவிடம் பை கேட்ட பொழுது/

பெ.நா.சி.நா தெருவில் இருந்து மேலத்தெருவில் விழுந்து முஸ்லீம் வீதி வழியாக வந்து பள்ளிக்கு ப்போய் வந்த நாட்களில் பள்ளியின் முன்னால் அமர்ந்து இலந்தைப்பழம் விற்கிற பாட்டியை பார்க்காமல் கடந்து பள்ளிக்குள் போய் விட முடிந்ததில்லை.

தவிர்த்து வீட்டிலிருந்து கிளம்பிப்போகிற நாட்களில் நாச்சி தெரு வழியாக வராமல்முருகன்கோவில்வழியாகப்போய்பொட்டல்மிதித்துபோஸ்ட்ஆபீஸை பார்த்துவிட்டு லைசாண்டர் ஆஸ்பத்திரி வழியாகசென்றுபள்ளிக்குப் போகிற நாட்களில் பொட்டலிலும் முருகன் கோவில் தெருவிலுமாய் கீழே கிடக்கிற நீயூஸ்பேப்பர்களின்பிட்களை எடுத்து படித்துக்கொண்டே போவதில் இருக்கிற சந்தோஷம்இவனைஅடிக்கடிஅந்தவழியாகப்போகச்செய்திருக்கிறது தான்.

அந்தவயதில்தெரிந்திருந்தபள்ளிப்பாடங்களைமட்டும்மனம்நிறைத்துவைத்துக் கொள்ளாமல்இம்மாதிரி பேப்பர்களைப்படிப்பதிலும் அதை பள்ளியில் படிக்கிற சக மாணவ மாணவிகளிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதிலும், இருக் கிற அலாதி ஆர்வம் அவனை எப்பொழுதும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயும், அந்த வழியில் செல்ல வைத்துக் கொண்டுமாய்/

தபால்ப்பை வைத்த டரவுசரும், தோள்ப் பட்டை ஓரம் கிழிந்த சட்டையுமாய் இவனது உடலுடனும் இவனுடன் படிக்கிற எல்லா மாணவர்களின் உடலில் ஒட்டிக்கொண்டு கிடக்கும். அப்படியாய் ஒட்டிக்கிடந்த நாட்களில் இருந்த ஒட்டுதலும்பாசமும்இப்பொழுதுஇல்லைஎனவேநினைக்கத்தோணுகிற து.

வெங்காயம் வாங்க பைதான் வேண்டுமா என்ன என கடைக்காரர் கனத்த பிளாஸ்டிக்பைஒன்றில் வெங்காயத்தையும் தேங்காயையும் போட்டுக் கொடு த்தார்,வீடு போகிற வரைக்கும் மட்டுமல்ல,அதற்கும்மேலாய் தாங்கும் இது, எனக்கொடுத்தபோது காய்கறிக்கடைக்காரர் நான் என்ன விட்டவனா,, ,என்கிற கேள்வி தாங்கி பக்கத்துக் கடையிலிருந்துபைஒன்றைவாங்கிப் போட்டுக் கொடுத்தார்,

சும்மாவாநூற்றுச்சொச்ச ரூபாய்க்கு காய்கறி யேவாரம் என்றால் வேறு பக்கம் போய் விடக் கூடாது என்கிற ஆதங்கமும் தந்திரமும்தானே இருக்க முடியும் என நினைத்து காய்கறியை வாங்கிக்கொண்டு திரும்பவும் இவனது அலுவல கம் வழியாகத் தான் வந்தான்.

மார்க்கெட்டிலிருந்து அப்படியே பாலம் வழியாகப் போயிருக் கலாம். அப்படித் தான் மனம் போய் விடுகிறது என்ன அப்பக்கமாகப்போனால் பாலத்து ஓர டீக் கடையில்நல்லடீயும்இரண்டு இனிப்பு பிஸ்கட்டுமாய் சாப்பிட்டு விட்டு வரலாம்.

அங்கு டீ சாப்பிடுவதற்கு ஒரு தனி மனம் வேண்டும் என்பார் நண்பர் ஒருவர். குடத்தில் திருகு குழாய் வைத்து டீப்போடுகிற ருசிக்காக அவரிடம் டீசாப்பிட போக வேண்டும் ஒரு நாளில் ஒருதடவையாவது என்பதே நண்பர், சொன்னது சத்தியமாக/

கடைக்கு எவ்வளவு கூட்டம் வந்தாலும் அவர் போடுகிற டீயின் ருசி மாறாது. அதே நேரம் ஒவ்வொரு டீயாகத்தான் போடுவார்,அதில் இருக்கிற ருசி இப்பொழுது நினைத்தாலும் நாவின் சுவையறும்புகளை கவர்ந்து விடும். அந்த ருசிக்காகவும்,கூடவே சாப்பிட முடிகிற இரண்டு பிஸ்கெட்டுக்காவும் மட்டுமே அந்தக்கடைக்குப்போவான் டீக்குடிக்க/

பிஸ்கெட் என்றால் சாதாரண பிஸ்கட் இல்லை. வெள்ளைக்கலரில் வட்டமாக மாவு தூவியது போல் இருந்தது.இவன் கூட கேட்டிருந்தான் கடைக்காரரிடம், இந்த பிஸ்கட் மொத்தமாக பாக்கெட்டில் கிடைக்குமா என,,,,,,,,இல்லை சார் பாக்கெட் எல்லாம் கிடையாது,டப்பாவில் அடைத்துத்தான் கொடுக்கிறார்கள் எங்களுக்கு, வேண்டுமானால் கேட்டுச்சொல்கிறேன்,

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருவார்கள்,காலையில்தான் வந்து விட்டுப் போனார்,நேற்றே நீங்கள் ஒரு வார்த்தை சொல்லியிருந்தீர்களானால் கேட்டு வைத்திருந்திருப்பேன் வந்தவரிடம் என்றார்.

சரி எப்பொழுதாவது இப்படி டீக்குடிக்க வரும்போதுதானே தோணுகிறது, தினசரி அதே நினைப்பாக இருந்து விட முடியவில்லையே,,,,,,,, என்கிற ஆதங் கத்துடன் வீட்டுக்கு வந்தான்.

டீக்கடைக்கு எதிர்த்தாற்போல் இருக்கிற உயர்ந்த கட்டிடம் போல் இவனது அலுவலகத்திற்கு எதிரே பெரிய கட்டிடம்ஒன்று இருந்தது.

சாலையின் இரண்டு பக்கமுமாய் உயர்ந்தும் தாழ்ந்தும் நின்ற கட்டிடங்களு க்கு மத்தியிலாக உயர்ந்து நின்ற அந்த கட்டிடம் வெறுமை தாங்கி உயிரற்ற கூடாய் நின்று கொண்டிருந்தது,

இவன் அறிய இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக 500 பேருக்கும் மேலாக மூன்று சிப்ட்கள் வேலைபார்த்த கட்டிடம்.இப்பொழுது,,,,,,,,,,,,,,,,,என நீளமாக பெரு மூச்சு விட்டார் அங்கு வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.

சும்மாதான் கிடக்கிறது,எலக்ட்ரானிக் சிஸ்டம் வந்த பிறகு இந்த கட்டிட த்திற்குவேலைஇல்லாமல்போய் விட்டது.அதுதான் காலி பண்ணி விட்டார் கள். என்ன செய்யப் போகிறார்கள் இதை எனத்தெரியவில்லை.இவ்வளவு பெரிய கட்டிடம்,நகருக்கு மத்தியில் அதுவும் ஒருகாலத்தில் அத்தனை பேர்க ளை வைத்து கொண்டு ரத்தமும் சதையுமாக இயங்கிய கட்டிடம் இப்படி வெறும் வெற்றுக்கூடாய் நிற்பதை பார்க்கிற பொழுது சங்கடமாக இருக்கிறது ரொம் பவுமே என்றார்,

கீழ் தளமும் மாடியுமாய் இருந்த கட்டிடத்தில் எங்களது காலடித்தடமும் மூச்சுக்காற்றும் படாத இடமே இருந்ததில்லை என வெகுவாய் ஆதங்கப் பட்ட அவர்

25 வருடங்களுக்கு முன்பாக இந்த ரோட்டில் இருந்த பெரியகட்டிடம் இதுதான் என்றார்.ஒருகட்டிடம் என்பது வெறும் செங்கலும் சிமிண்டும் மட்டும் இல்லை .மாறாக அது ரத்தமும் சதையுமான உறவுகளை தன்னுள் நெசவிட்டு வைத்திருந்த கூடுதானே.,,,,? என்னதான் நான் ரிட்டையர் ஆகி விட்டாலும் கூடஅந்த கட்டிடத்தைப்பார்க்கிற நாட்களில் என்னுள் படர்கிற வெறுமையை தவிர்க்க முடியவில்லைதான் என எப்பொழுதாவது இவனைப் பார்க்கிற நாட்களில் சொல்லிக்கொண்டிருப்பார்.

அந்தகட்டிடத்திற்கு அடுத்ததெருவில்தான் செண்பகா அக்கா வேலை பார்த்த ரீசார்ஜ் கடை இருந்தது.

அவள்எனக்கு எப்பொழுது அக்காவானாள் அவளை எப்பொழுதிலிருந்து அப்படிக் கூப்பிட ஆரம்பித்தேன் என்பது அரிச்சலாகக்கூட ஞாபகம் இல்லை என்றாலும் கூட அவளை இப்பொழுது வரை அக்கா என்றுதான் கூப்பிட்டு வருகிறான்,

அக்கா,அக்கா,அக்கா,,,,,,ரீ சார்ஜ் பண்ணுவது மட்டுமில்லை,அங்கு செல்போன் விற்றார்கள்.மெமரிக்கார்டிலும்,பெண்டிரைவிலுமாய்பாட்டுப்பதிந்துகொடுத்தார் கள்.ஜெராக்ஸ் மற்றும் பேப்பர் பேனா வியாபாரமும் உண்டு,இது போக எலெக்ட்ரானிக்ஸ் பொருள் ஏதாவது வேண்டும் என்றால் அவர்கள் மதுரை போய் வருகிற நாட்களில் வாங்கி வந்து கொடுப்பார்கள்.நாம் முன் கூட்டியே பணம்கூடகொடுக்கவேண்டாம்,அவரேபணம் போட்டு வாங்கி வந்து விடுவார்.

செண்பகா அக்காவின் கணவர்தான் இந்த வேலையைப் பார்த்துக் கொடுப்பார், ஒரு முறை இவன் மெமரிக்கார்டைக்கொடுத்து பாட்டுப்பதிந்து தர வேண்டும், எந்தெந்தப்பாட்டுஎனகுறித்துக்கொள்கிறீர்களாஎனச்சொன்னபொழுதுஅதெல்லாம் வேணாம் சார்,உங்களுக்கு பிடித்த பாட்டு என்னவென எங்களுக்குத் தெரியும், மாலை வரும் போது நான் மெமரிக்கார்டில் பதிந்து வைத்திருக்கும் பாடல்க ளைக் கேட்டுவிட்டு மனசுக்குப்பிடித்திருந்தால் மட்டும் பணம் கொடுங்கள் போதும் என்பார்,

அதற்கு செண்பகா அக்கா சிரிக்கும்பொழுது அவரது கணவர் கேட்டார்.ஆமாம் ஏன் சிரிக்கிற இப்போ என/ ஆமாம் இவரது 53 வயசுக்கு இந்த மாதிரி மெலடி யும் காதல் பாட்டும்தான் வேணுங்குதா,புள்ளைக்கி கல்யாணம் முடிச்சிருந்தா இந்நேரம் பேரன் பேத்தி எடுத்திருப்பாரு,,,,என்பாள் ,

அட போவே பேரன் பேத்தி எடுக்குறவுங்க என்ன காதலுக்கும்,மெலடிக்கும் ஆளாகக்கூடாதுன்னு இருக்கா என்ன,,,என்பார்,அதற்கு மென்மையாக் சிரித்த அவளின் சிரிப்பு இப்பொழுது வரை ஞாபகம் இருப்பதாக/

No comments:

Post a Comment