7 Jun 2016

பார்வை வரிகளாய்,,,,,

ஒன்பது மணிக்கெல்லாம் மண்டபத்திற்கு சென்று விட்டிருந்தான். மண்டபத் திற்கு செல்வதிற்குள்ளாக மணிவண்ணன் நாலு தடவையாவது போன் பண்ணியிருப்பார்.

தினம் தினம் தான,,னான,,,னான,,,,னானே,,,,,,,,,,,என ஒலித்துக் கொண்டிருந்த பாடல் வரிகள் மனம் கவர்ந்ததாக/

அந்தப்பாடலை காட்சி அமைப்புடன்தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறான். எத்தனைதடவைப்பார்த்தாலும்அலுக்காத ஒன்றாய் இன்று வரை அந்தப்பாடல் இவன் மனதில் சம்மணமிட்டு/ அமர்ந்திருக்கிறதாய்/

பாடலின் வரிகளும் அதற்கு தகுந்தாற்ப் போல் அமைந்து போன காட்சி அமைப் புகளும்பிண்ணனிஇசையும்அந்தப்படத்தில்பொருத்தமாய் அமைந்திருப்பதாய் நினைத்து வந்திருந்தான் இது நாள் வரை/

என்ன வேலை எப்படி இருந்த போதும் இவன் எங்கு என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும்இவனுக்குகேட்கிற தொலைவில்அந்தப்பாடல் ஒலித்தால் இவனது மனதை எடுத்து படக்கென பாடலின் வசம் ஒப்படைத்து விட்டு வேலையைப்பார்க்க ஆரம்பித்து விடுவான்.

வேலைகள்ஏதும்இல்லாத நாட்களில் முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்து விடுவான் தொலைக்காட்சி முன்பாக/

பெரும்பாலுமாய் மனம் பிடித்தவையையும் ,மனம் வசீகரித்துவையுமான பாடல்களை இது நாள் வரை இப்படித்தான் கேட்டும் மகிழ்ந்தும் இருக்கிறான். இதில் மனம் பிடித்தமானவைகளுக்கு தனியாகவும்,மனம் வசீகரித்தவைகளு க்கென தனியாகவும் அவனது மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த உண்டுகளில் இவன் கேட்ட பாடலும் ஒன்றாய் இருந்து போக வேறு வழியி ல்லாமல் மாட்டிய பேண்ட் சர்ட்டுடன் பாட்ல் முழுவதையும் கேட்டு முடித்து விட்டே போவது என முடிவெடுக்கிறான்.

அதற்குள்ளாகத்தான்மணியண்ணனிடமிருந்துபோன்.ஒன்றும்பிரச்சனையில்லைகேட்டபாடலின்பாதிவரைகேட்டதுகேட்ட படி இருக்கமீதியை இவனே சொந்தக் குரலில் முணுத்துக்கொண்டே போய் விடலாம்.யாருக்கும் கேட்காமல். பல சமயங்களில் அப்படித்தான் ஆகியிருக் கிறது.ஏதாவது பணி அவசரத்தின் காரணமாகவோ அல்லது வேலையை முன் வைத்தோ செல்ல நேர்கையில் இப்படித்தான் விட்டுச் செல்வான். தொலைக் காட்சியில் பாடல் பாதியில் பாதியாய் நிற்க ,,,,,,,,,,மீதியை இவன் வழியில் சென்று கொண்டிருக்கையில் முடிப்பான்மனதிற்குள்ளாக/

அப்படியாய்த்தான்இன்று செல்ல வேண்டியிருக்கும் என்கிற நினைப்பை ஓரம் கட்டி விட்டு முழுப்பாடலையும் கேட்டுவிட்டுத்தான் எழுந்தான்.

ஆனால் மணியண்ணனுக்கு இப்படியாய் பாடல் கேட்பதில் விருப்பம் இருப்பம் இருந்ததில்லை. கூடவே சினிமா நாடகம் என்பதையும் வரிசையில் சேர்த்துக் கொள்வார்.

மாறாகநீயூஸ்சேனல்,டிஸ்கவரி சேனல்,,,,,,என பார்ப்பதாகச் சொல்வார்.சரி அவரது விருப்பத்திற்கும் தடை சொல்லக்கூடாது.

வீட்டைவிட்டு படியிறங்குகையில் வழக்கமாக தென் படுகிற செந்நிற நாயைக் காணவில்லை.எங்காவதுசுற்றப்போயிருக்கலாம்.அல்லதுஇறைதேடிக்கிளம்பி யிருக்கலாம்.நல்ல நாட்டு நாய் என்பது அதன் உடல் வாளிப்பிலும், கண்க ளிலும் காதிலும்,வாலிலுமாய் தெரிந்தது.

எடுக்கிற எட்டடியை ஒரே பாய்ச்சலில் கடந்து விடுமோ என எண்ணுகிற அளவிற்காய் கெதி எடுத்து ஓடும்.

அப்படியானகெதியும் வேகமும் அதன் கால் ஒடிந்து போனதிலிருந்து இல்லை. பின்னங்கால்கள்இரண்டில்இடதுபக்கக்காலைமுழங்காலுக்குக்கீழாகதரையில் ஊனாமல்ஓடிக்கொண்டிருக்கும்

யாரோகல்லால் அடித்துவிட்டார்கள் என்றார்கள்.இல்லை முள் தைத்திருக்க லாம் என்கிற யூகத்தையும் சொன்னார்கள்.இல்லை இல்லை நாய்களுக்குள் ளாக வந்த சண்டையில் ஒரு நாய் காலைக்கடித்து வைத்து விட்டது என்றார் கள்.

இதுவும் லேசுப்பட்டதில்லை.தெருவிற்குள்ளாக மற்ற நாய்களை நுழைய விடுவதில்லை.குரைத்து அடித்து விரட்டி விடும் .அதேநேரம்ஜாக்கிரதையாய் விரட்டப்படுகிற நாய் முறைத்தால் பின் வாங்கி ஓடிவந்து விடும்.

இவன் வண்டியை எடுத்துக்கிளம்புகையில் ஓடிவந்து காலடியில் நிற்கும். ஹெல்மெட்டை அதன் தலை மேல் மாட்டப்போனால் உதறி ஓடி விட்டு பின் இவன் அருகில் வந்து நிற்கும்.அப்படி வந்து நின்றதும் அதன் முன்னங்காலை தூக்கிவண்டியின்கிக்கரின் மீது வைத்து மிதிக்கச்செய்து ஆக்‌ஷன் செய்வான்.

இவனது மனைவிசப்தம் போடுவாள்.அது கழுத எங்கெங்க போயி எப்பிடியெப் பிடி ஒழப்பீட்டு வந்துச்சோ,ஒடம்பெல்லாம் பாருங்க ஒரே சாக்கடைகரை வேற என்பாள்,அத விடும்மா,அதெல்லாம் கடந்தும் அதுக்கு மத்தியிலும்தான நாம வாழறோம் எனச்சொல்லி வண்டியை எடுத்தவனை ஏக்கத்துடன் பார்ப்பது போல் பார்த்தது.

அதன் பார்வையில் இவனுக்குபிடிபடாதது அது ஒன்றுதான்.ஸ்நேகமாய் பார்க்கிறதா அல்லது ஏக்கத்துடன் பார்க்கிறதா என்பதுதான் அது.

காவி நிறத்தில் சாயம் பூசிய படிகள் ஐந்தில் மேற்படியில் அமர்ந்தவாறு வீதியையும் வீதியின் ஓரமாய் முளைத்துக்கிடந்த வீடுகளையும் வெற்று வெளியையும் வேடிக்கை பார்த்தவாறு அதற்கு பிஸ்கட் போடும் போது பார்க்கிற பார்வையிலும் இவன் ஏதாவது மண்வெட்டி வைத்து வேலை செய்கையிலோ அல்லது விளக்குமாறு வைத்து வீட்டின் வெற்று வெளியை கூட்டிக்கொண்டிருக்கையிலோஇவனுக்கு அருகில் சற்றே இடைவெளிவிட்டு ஓடோடி வந்து அமர்ந்து கொண்டு பார்க்கிற பார்வைதான் அந்தப்பார்வையாய் இருக்கிறது.

என்னப் பார்வை உந்தன் பார்வை என புரிந்து கொள்ள முடியா புரிதலுடன் போய்க்கொள்ள வேண்டிய நிமிடங்களில் பயணிக்கிறவனாய் அடிக்கடி/

நண்பர் முருகானந்தம்தான் அந்த திருமண மண்டபத்தை பேசி விட்டார்.அந்த ரோட்டில் இருக்கிற மண்டபங்களுக்கு ரூபாய் 15 ஆயிரமாவது ஆகும் குறை ந்தது என்றார்.ஆனால் இவர்தான் பேசி அதை குறைத்துக்கொடுத்தார். அப்படி யெல்லாம் பேசிய நண்பர் முருகானந்தம் அன்றிலிருந்து மண்டபத்தில் மட்டும்நிற்காமல் எங்கள் மனதிலுமாய் நிறைந்துநின்றார்.

மண்டபம்வேண்டும் இன்ன தேதிக்கு இன்ன விஷயத்திற்காய் எனச்சொன்ன போது யாரிடம் சொல்லி எந்த மண்டபத்தை பேசலாம் ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இல்லாமலும் ஊருக்கு நடுவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடமாகவும் அனைவரும் சுலபமாய் வந்து போகிற அளவிற்காய் தூரமுள்ள பொதுவான மண்டபம் எது எனபார்க்கையில் தூத்துக்குடி சாலையில் உள்ள மண்டபம் தான்தோது எனப்பட்டது.அதையாரைவைத்துப்பேசுவது, எப்படி பேசுவது என்கிற யோசனையில் இருந்த பொழுது சட்டென ஞாபகத்திற்கு வந்தவர் நண்பர் முருகானந்தம்தான்.

முருகானந்ததிடம். விஷயம் சொல்லி சம்மதம் கேட்ட பொழுதுநண்பர் கன்னியாகுமரியில்இருக்கிறேன்கடலுக்கு மிக அருகாமையாக, வந்த வேளை முடிந்ததும் நானே அழைக்கிறேன் உங்களை/ பின் தங்களது விஷயத்தை பேசிக்கொள்ளலாம் எனச்சொன்னவர் கன்னியாகுமரியிலிருந்து வந்தமறு நாளே இவனிடம் சொல்லாமலேயே மண்டபத்தை பேசி முடித்து வாடைகை இவ்வளவு அட்வான்ஸ் இவ்வளவு முன் பணம் கொடுக்க வேண்டும் அதற்காக பணம் இவ்வளவு வேண்டும் என போன் பண்ணினார், அப்பொழுது இவன் பணி முடித்து வந்து கொண்டிருந்தான் இரு சக்கர வாகனத்தில்/

இப்பொழுது வைத்திருக்கிற வாகனத்தைப்போட்டு விட்டு 100 சி சியில் வேறொரு புது வாகனம் வாங்கலாம் என யோசித்த ஒரு நாளில் ஷோ ரூமில் போய் நின்றான்.

அவர்களும் இவனிடம் என்ன ஏது என விபரம் கேட்டு விட்டு வண்டி வாங்க தேவையான ஆவணங்களைச்சொன்னார்கள்.சரிஎன தலையாட்டிவிட்டு முன் பணம் ஏது கட்ட வேண்டாம்.வண்டியை அப்படியே எக்ஸேஞ்சாய் எடுத்துக் கொள்கிறேன் என்கிற உறுதி மொழியுடன் ஷோ ரூமிலிருந்து வெளிவந்த அன்றிலிருந்து இன்று வரை 100 சி சி வாகனம் கைக்கு எட்டுகிற தூரத்தில் இருக்கிற கனவாக மட்டுமே இருக்கிறது.

அடுத்தடுத்ததாய் முளைத்து நிற்கிற வேலைகள் தொடர்ந்து ஓடிக் கொண் டிருக்கிற ஓட்டம் அன்றாட நகர்வின் நுனி விளிம்புகள்,,,,,என எல்லாம் சுமந்து நிற்கிற கணங்களில் இதெல்லாம் தவறித்தான் போகிறது இது நாள்வரை/

தூத்துக்குடி சாலை திரும்புகிற முக்கில் இருக்கிற கடையில் குடித்த டீயின் ருசி நாவறும்புகளில் ஒட்டி இருக்க மண்டபத்தின் வாசலில் வந்து நிற்கிறான். அட மண்டபத்து வாசலில் மணியண்ணன்.

மணியண்ணன்8.15க்கெல்லாம்வந்துவிட்டதாய்ச்சொன்னார்,அவர்இருக்கிறார் இவன்இருக்கிறான்.இன்னும்நான்கைந்துபேர்களைஉடன்சேர்த்துக்கொண்டால் இன்று நடக்க இருக்கிற ஒட்டு மொத்த நிகழ்வும் ஒரே நூலிழையில் பாவு கட்டியது போல் நெசவிடப்பட்டு விடும்.

மண்டபத்தினுள்ளாய் பார்க்கிறான். மண்டபத்தினுள்ளாக எரிந்தடூம் விளக்கின் ஒளி இவனது கண்களில் பட்டு பிரதிபலிப்பதாக/

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...

காட்சி எங்களுக்கும் விரிகின்றது பார்ப்பதற்கு...
தமிழ் மணம் 2

vimalanperali said...

வணக்கம் தளி சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/