10 Dec 2016

கிளர்ச்சியின் நகர்வுகளாய்,,,,,,,(லால் சலாம் பாகம் 3)

கடந்த மேதினத்தை தனிமையாக கொண்டாடிய உங்களுடன் இந்த ஆண்டு உங்களது துணைவியார் நதேழ்தா கன்ஸ்தன்தீனாவும்/

மே தினத்தை புரட்சியா ளர்களுக்கே உரிய முறையில் கொண்டாடுவது என ஷ்னென்கோயாசிறைக்குடியிருப்புவாசிகள்தீர்மானித்தீர்கள்,கொண்டாடினீர்கள். தொழிலாளர்களும் எல்லா மக்களும் சுதந்திர ருஷ்யாவில் மே தினத்தை செங்கொடிகளுடன் விருப்பம் போல கொண்டாடும் காலம் வரும்தானே என பிரையாசைப்பட்டீர்கள்.

ஆனால் மறுநாளே குதிரைக்குளம்பொலிகள் அதிர ஷ்ஸென்கோயே கிராமத் திற்குவந்தபோலீஸ்காரர்கள்உங்களதுவீட்டைசோதனையிட்டார்கள். ஒன்றும் சிக்காத அச்சோதனையில் தாங்கள் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புத்தக ங்களும் மைக்கூடும் தப்பின.

புத்தகங்களின் அருமை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்.?

அது தடை செய்யப்பட்ட புத்தகம் என்ற ஒற்றை வரியை தவிர்த்து.

நல்லவேளையாகபுத்தககங்கள்பிழைத்தது.தாங்களும்தான்.பின்னே?புத்தகங்கள் சிக்கியிருந்தால் தங்களது சைபீரிய சிறை குடியிருப்பு வாசம் நீடித்திருக்குமே?

இப்படியான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியிலிருந்து விடுதலைய டைந்த தாங்களை பெரும்பாலும் வாட்டி எடுத்தது ஒரே சிந்தனைதான்.

1898 ல் முதல் காங்கிரஸ் மீன்ஸ்க் நகரில் நடைபெற்றது.ஆனால் போலீசார் அமைப்பாளர்கள் எல்லோரையும் உடனே கைது செய்து விட்டார்கள்.மீண்டும் கட்சியை உடனே அமைக்க வேண்டும்.இதற்கு உடனே தேவைப்படுவது ருஷ்யாவின் எல்லா முண்ணனி சக்திகளையும் உடனே ஒன்று திரட்டி இணைக்கும் செய்தித்தாள்.உங்களது சொல்லும் செயலும் சிந்தனையும் அது பற்றியதாகவே.

விளைவுசெய்தித்தாள்பிறக்கிறது.இஸ்கரா,,,,?(தீப்போறி)

செய்தித்தாளின் வடிவம், அதன் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரையி லான உள்கட்டமைப்பு,என எல்லாவற்றையும் ஷ்ஸென்கோயே கிராமத்திலி ருந்து எண்ணி திட்டமிட்டிருந்தீர்கள் நீங்கள்/

சரிஇப்பொழுது இஸ்கராவை ஊருவாக்க வேண்டும்,அதற்கு பணம்வேண்டும். கட்டுரைகள் எழுதித்தர ஆசிரியர் வேண்டும்.விநியோகிக்க ஏஜெண்டுகள் வேண்டும்.மற்ற செய்தித்தாள்களைப்போல இஸ்கராவை கடையில் போட முடியாது.

இஸ்கராவில்கட்டுரைஎழுதஆசிரியர்,இஸ்கராவைவிநியோகிக்கஏஜெண்ட்,பத்திரிக்கை அச்சிடப்பணம் எல்லாம் பண்ணி விட்டீர்கள்.

ஆனால் இஸ்கராவை எங்கிருந்து வெளிட,,,,,,?ஜார் மன்னருக்கு எதிராக ,ருஷ் யாவில் இம்மாதிரி செய்தித்தாள் வெளியிடுவதெல்லாம் முடியாத காரியம். என்ன செய்யலாம்,எப்படிச்செய்யலாம்.,,,,?இது பற்றியதான விரிந்த கல்ந்தா லோசனை தோழர்களுடன்,,,/

இறுதியாக முடிவாகிவிட்டது.

உங்களது உடல்நலத்திற்கு அயல் நாட்டுப்பயணம் தேவை என்கிற மருத்து வரின் அனுமதிச்சீட்டைப்பெற்று அயல் நாட்டுக்கு பயணமானீர்கள்.

குறுகிய வீதிகளும் கூர் முனைகொண்ட வீடுகளும் சர்ச்சும் உள்ள ஜெர்மன் நகரமான லைப்னிக்கில் உங்களது பயணம் நங்கூரமிடுகிறது.

பல தொழிற்சாலைகளும் அவற்றை விட நிறைய அச்சகங்களும் பல்வகை புத்தகக் கடைகளும் இருந்த லைப்ஸிக்கின் நகரில் ஜெர்மன்ரௌ என்னும் முப்பத்தைந்து வயது சமூக ஜனநாயகவாதி லைப்ஸிக்கின் அருகே உள்ள கிராமத்தில் அச்சகம் நடத்திவந்தார்.அங்குதான் இஸ்கரா பிறந்தது.இஸ்கரா வெளியானது.

அவ்வளவு வேதனையிலும் ரத்தப்போக்கிலும் பிறந்த அழகான குழந்தையை தூக்குவது போல இஸ்கராவை கையிலெடுத்துப்பார்க்கிறீர்கள் கண்களிலும் மனதிலுமாய் பெருமிதம் பொங்க/

இஸ்கராவின் மேற்புறஓரமாய் எழுதப் பட்டிருந்த வரிகளின் மேல் கண் பதிக்கிறீர்கள்.எழும் சிறு பொறி மிகப்பெரும் தீயாய்”

ஆம்சிறு பொறி கப்பலிலும் ரயிலும் குதிரை வண்டியிலுமாய் ஏகப்பட்ட தடை களை தாண்டி பயணித்து,பயணித்து,பயணித்து,,,,,,,,பெருந்தீயாய் ஸ்பீட்டர் ஸ்பர்க் வந்து சேர்கிறது.பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து ஏஜெண்டுகள் மூலம் ருஷ்யாவரை கால்பதித்தது இஸ்கரா,

ஜார் மன்னருக்கு எதிராகவும் ,முதலாளிகளுக்கு எதிராகவும் போராடுங்கள் என கற்பித்தது இஸ்கரா/

கட்சி அமைக்கும் படியும் புரட்சிக்கு அறைகூவியும் அழைத்தது இஸ்கரா/

தொழிலாளர்களும் குடியானவர்களும் தங்கள் வாழ்க்கையில் விழிப்புணர்வு பெறவேண்டும் என கண் திறந்தது இஸ்கரா/

எங்கும் இஸ்கரா,இஸ்கரா,இஸ்கராதான்,,,,,/

தொழிலாளர்கள் மத்தியிலும் அவர்களது வாழ்விலும் பெரும் பங்காற்றியது இஸ்கரா,இஸ்கராவால் தூண்டிவிடப்பட்ட தீரமிக்க தொழிலாளர் இயக்கம் ருஷ்யாவில் மூண்டெழுந்தது.

இந்பேரியக்கம் அனைத்தின் தலைவராக,இயக்குனாராக இஸ்கராவின் தலை மை ஆசிரியராக விளங்கியது நீங்கள்தான் என சொல்லவும் வேண்டுமா தோழரே,,,?

இஸ்கரா தொடர்ந்து வெளிவந்தது.

இஸ்கராவிற்கு தொழிலாளர்கள் ஏஜெண்டுகளிடமிருந்து கடிதங்கள்.இது தவிர ருஷ்யஆலைத்தொழிலாலர்களிடமிருந்துகடிதங்களும்கட்டுரைகளும் குறிப்பு களும் அனுப்பப்படுகிறது.

இது தவிர வேறென்ன வேண்டும்.ஒரு பத்திரிக்கையாரை ஊக்குவிக்க,அந்த ஊக்குவிப்புகள் தங்களை நிறைய நிறைய எழுதத்தூண்டியது.

1901 முதல் தங்கள் புத்தகங்களும் கட்டுரைகளும் லெனின் என்றே பெயரிட்டு வந்தது.லெனின் என்று பெயரிட்டு வந்த பிறகு லண்டன் நகரில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் தாங்கள் வெற்றி பெற்றீர்கள்.

வெற்றி அடைந்த பின் லண்டன் நகரிலிருந்த மார்க்சின் கல்லறைக்குச்சென்று அஞ்சலி செலுத்தி விட்டு உறுதிமொழி ஏற்கிறீர்கள்.

தோழர்களே,மாபெரும் ஆசான் நம் மார்க்ஸ்,அவருடைய போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் விசுவாசத்துடன் கடை பிடிப்போம்.ஒரு போதும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.முன் செல்வோம் தோழர்களே.என,,/

பீட்டர்ஸ்பர்க்கின் புத்தீலவ் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் தொடங்கி யது ஒரு நாளில்/ அதுவே வேலை நிறுத்ததிற்கு இடப்பட்ட முதல் புள்ளி யாகவும் ஆகிப்போகிறது.மேஸ்திரிக்குப்பிடிக்கவில்லை என்கிற காரணத்தால் மூன்று தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

இதை கேள்விப்பட்ட அனைத்துத்தொழிலாளர்களும் பணி செய்ய மறுத்து விட்டார்கள்.இன்னும் இரண்டு தொழிற்சாலைகளும் நின்று போனது.சில நாட்களில் ஆலைகளும் தொழிற்சாலைகளும் வேலையை நிறுத்தி விட்டன. இயந்திரங்கள் செயலற்று நின்றன.பீட்டர்ஸ்பர்க் நகரம் உலர்ந்து உறைந்து போயிருந்தது தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால்/

1905 ஜனவரி 9 ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாகக் கிளம்பினார் கள்.நாங்கள்ஜாரிடம்போகிறோம்,எங்கள்ஜார் அப்பனே உண்மைக்கு ஆதரவளி/ எங்களை பட்டினி கிடந்து மடிய விடாதே. என்று கேட்போம் என்பது தொழி லாளர் வாதம்.

போகாதீர்கள்.ஜார் உங்கள் வேண்டுகோளை செவியேற்க மாட்டார்என்பது ”போல்ஸ்விக்குகளின்”வாதம்.அதைமறுத்தார்கள் தொழிலாளர்கள். இல்லை இல்லை,ஜார்மன்னருக்கு தொழிலாளார்கள் துன்பத்தில் உழல்வது தெரியாது. செருக்குள்ள மேஸ்திரிகளையும் முதலாளிகளையும் ஜார் மன்னர் அதட்டி மிரட்டுவார்.இல்லையென்றால் தொழிலாளர்கள் வாழ்வே கேள்விக் குறியாகி ப் போகும் என்றார்கள் தொழிலாளர்கள்.

முடிவு போல்ஸ்விக்குகள் சொன்னது மாதிரியே./ஊர்வலமாகச்சென்று மனுக் கொடுக்கச் சென்ற தொழிலாளர்கள் ஜாரின் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல,பனிக்கால மாளிகையின் முன் உள்ள வெண்பனிச் சது க்கம் தொழிலாளர்கள் உடலால் மூடிப்போகும் அளவுக்கு கொல்கிறார்கள்.

அன்று மட்டும் பீட்டர்ஸ்பர்க்கில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆயிரத்திற்கும் மேல்/காயமடைந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேல் என பதிவு செய்யப்படுகிறது.

அந்தப்பதிவும் உயிர் இழப்பும் தொழிலாளர்களை ஜார் ஆட்சிக்கு எதிராக போராட எழச்செய்கிறது.அன்று மாலைக்குள்ளாகவே பீட்டர்ஸ்பர்க நகர வீதிகளில் விளக்குக்கம்பங்கள் வீழ்த்தப்பட்டன.தடையரண்கள் அமைக்கப் பட்டன/

விடுதலைக்காக உள் நாட்டுபோர் மூண்டு எழுந்து விட்டது.

”புரட்சி நீடூடி வாழ்க”

“போராடஎழுந்துள்ளபாட்டாளிவர்க்கம்நீடூடிவாழ்க”இப்படித்தான்எழுதினீர்கள் இஸ்கராவில்/

ஜெனிவாவிலிருந்து தாங்கள் எழுதிய காலகட்டத்தில் ருஷ்யாவில் வேலை நிறுத்தங்கள் இடைவிடாமல் நடந்தது உண்மை.

கிராமங்களில் குடியானவர்கள் நிலபிரபுகளுக்கு எதிராக நடத்திய போராட்டம் ருஷ்ய ஜப்பானிய போரின் உக்கிரம்.அதில் ருஷ்யப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி என ஜார் ஆட்சி அதிகாரிகளின் விவகாரங்கள் எல்லாம் ஊளுத்துப் போயிருந்த காலம்.

இது பற்றியெல்லாம் யோசனை கேட்க தாய் நாட்டிலிருந்து போல்ஸ்விக்கு கள் அடிக்கடி வருவதுண்டு தங்களிடம்/

இந்நிலையில் தங்களை கட்டாயம் பிடிக்கும் படி அரசு இட்டிருந்த கட்டளை யையும் மீறி தொழிலாளர் எழுச்சியை வழி நடத்த ருஷ்யா வருகிறீர்கள் மாறு வேடத்தில்/

நீங்களும் உங்கள் துணைவியாரும் ஜெனிவாவிலிருந்து சட்ட விரோதமாக தாய்நாடுவந்திருக்கிறீர்கள்/பீட்டர்ஸ்பர்க்கில்வெவ்வேறு இடங்களில் மாற்றுப் பெயர்களில் தனியாக வசிக்கிறீர்கள்.

நிகழ்ச்சி நிரலை அவசர அவசரமாக தயாரித்துக்கொண்டு மாஸ்கோ செல்கி றீர்கள்.

1905 டிசம்பர் 7.12 மணியளவில் மாஸ்கோ மீண்டும் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் மாஸ்கோ ரயில்வே ஊழியர்களும் மாஸ்கோ தொழிற்சாலை தொழிலாளர்களும் குதிரை ட்ராம் தொழிலாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

மின்சார விளக்குகள் அவிழ்ந்ந்து போய்விட்டன.தண்ணீர் சப்ளை நிறுத்தப் பட்டு விட்டது.வேலை நிறுத்தம் மாஸ்கோ நகரம் மட்டுமின்றி மற்ற நகரங்க ளுக்கும் பரவியது.

புரட்சி நெருப்பை ஆரம்பத்திலேயே அணைக்கும் நோக்குடன் தொழிலாளர்க ளுக்கு விடுதலை வழங்குவதாய் உறுதியளித்தார் ஜார் அரசர்.

இது முகம் துடைக்கும் சூழ்ச்சி.ஜாரை நம்பக்கூடாது.பீட்டர்ஸ்பர்க், பனிகால மாளிகை அருகே ஜனவரி மாதம் நடந்த துப்பாக்கிப்பிரயோகம் எங்களுக்கு நினைவிருக்கிறது என தொழிலாளர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

தொழிலாளர்கள்,குடியானவர்கள் எழுச்சி நெருப்புகள் ருஷ்யா எங்கிலும் இரண்டு ஆண்டுகள் எழுந்த வண்னமும் எரிந்த வண்ணமுமாய்/

இரண்டு ஆண்டுகளிலும்,ஜார் அரசின் அதிகாரிகள் ருஷ்யாவில் கைதுகள், பழி வாங்கும் படலம்.சைபீரிய சிறை குடியிருப்பு தண்டனைகள்,மரண தண்டனை கள் என புரட்சியை அடக்கி ஒடுக்கினார்கள்.

இந்நிலையில்தான் அரசின் போலீஸ் நிலையங்கள் எல்லாவற்றிற்கும் பின் வருமாறு உத்தரவு அனுப்பப்படுகிறது.

போல்ஸ்விக்குகளின் தலைவர் லெனினை கண்டுபிடிப்பது அவசியம்.

ஆனால் அவர்களால் உங்களைப் பிடிக்க முடியவில்லை.

1910 ஸ்வீடன்ன் தலை நகர் ஸ்டாக்ஹோமில் இருக்கிறீர்கள்.அங்கு நடந்த கட்சிக்கூட்டத்தில் விரிவுரையாற்ற…/

ஆமாம் உங்களை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.உங்கள் புத்தகங்களிலும், கட்டுரைகளிலும் உங்களைக் கண்டிருந்தார்கள்.,,,,,,,,,,,,,,,,,

                                                                                                                        தொடரும்.,,,,,

4 comments:

 1. வணக்கம்
  அனைத்தும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கவிஞர் ரூன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஆகா
  அற்புத வரலாறு
  தொடருங்கள் நண்பரே
  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete