11 Dec 2016

நெருப்பின் நிமிடங்களாய்,,,,(லால் சலாம் பாகம் 4)

தொடக்கத்தில் இஸ்கரா,அப்புறம் ஸ்பெரியோத்ழீயின் ப்ரோலித்தாரி ஆகிய பத்திரிக்கைகள் வழியாகவும் கட்சி காங்கிரஸ் வழியாகவும் கிராமங்களில் கட்சிப்பள்ளியை நடத்துவது மூலமாகவும் பிரபலமாகியிருந்தீர்கள்.

1914 ஆகஸ்ட்டில் மூண்ட முதல் உலக யுத்தம் பற்றி நீங்கள் கீழ்க்கண்டவாறு பேசினீர்கள்.எழுதினீர்கள்.

போரில் லாபம் யாருக்கு,,,?முதலாளிகளுக்குத்தானே?

போரில்கோடிக்கோடியாகபணம்குவிப்பார்கள்.உண்மையில்இதுதாய் நாட்டை காக்கும் போர் அல்ல.முதலாளிகளைக்காக்கும் போர்.

ஆகவே படை வீரர்களே,குடியானவர்களே உங்கள் ஆயுதங்களை உங்கள் முத லாளிகளுக்கும் அரசர்களுக்கும் எதிராகத்திருப்புங்கள்.புரட்சி செய்யுங்கள். நியாயமற்ற போர் ஒழிக என்கிறீர்கள்.

இம்மாதிரியான வெப்பமான நாட்களின் நகர்தலில்தான் ருஷ்யாவில் புரட்சி என கேள்விப்பட்டுருஷ்யா வருகிறீர்கள்.செங்காவற் படையினர் மாலுமிக ளின் அணிவகுப்புக்கு மத்தியில்/

எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் இன்னல்கள் இன்னும் இன்னுமான நிறைய தடைகளை மீறி தாய் நாட்டிற்கு வந்தாயிற்று.

நீங்கள் களைத்து ஓய்ந்திருந்தாலும் தங்கள் உள்ளம் களி துள்ளியது.

ருஷ்யாவின் வாழ்வில் மகத்தான திருப்பம் ஏற்பட்டு விட்டது.

நீங்கள் எதிர் பார்த்த தங்களுக்கு பிடித்தமான இந்த வார்த்தைகளை மனம் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டது.

இந்தசொல்லையும்மனவேதனையையும்பகிர்ந்துகொள்ள தங்களது தாயாரும் இல்லை.தங்கள் துணைவியாரின் தாயாரும் இல்லை.தாங்கள் ருஷ்யா வருவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்புதான் இறந்து விட்டிருந்தார் உங்கள் தாயார்.

என் அன்பு அம்மா ,நான் சிறையில் கழித்த காலங்களில் எந்தெந்த சிறைச் சாலைக்கு உணவுப்பொருட்களை எடுத்து வரவில்லை நீங்கள்.பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ,சீல் ஒராத்தல்….எந்தெந்த நகரங்களில் விதி உங்களை அலைக்க வில் லை.,,,,,,,?

”அம்மா ஒரு தரமாவது உண்னை காண மாட்டேனா,,?மென்மையான பெருமி தம் வாய்ந்த உனது கரங்களில் ஒரு தரமாவது முத்தமிட வாய்காதா எனக்கு, அம்மா எங்கள் அன்பு அம்மா,எங்களின் புது வாழ்வு மலரும் வரை வாழ்ந்தி ருக்கவில்லையே அம்மாவே/”

அம்மாஅருமை தாயே என் அறிவையும் உன் அன்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.ருஷ்யா வந்ததும் அன்னையின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டுவந்த தாங்கள் ஜாரை அகற்றிய பின் ருஷ்யாவில்போல்ஸ்விக்குகளும் மக்களும் எப்படி செயல்பட வேண்டும் என்கிற துல்லியமான திட்டத்தை வகுத்தீர்கள்.

தொழிலாளர்களையும் குடியானவர்களையும் கொண்ட புரட்சிப்படை புரட்சி செய்து ஜார் அரசை அகற்றிய பின் தற்காலிக அரசாங்கத்தின் பிரதி நிதிகளாக நிலபிரபுக்களும் முதலாளிகளும் இருந்தார்கள்.

அது தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.சோவியத்துக்களை வலுப்படுத்த வேண்டும் என்கிறீர்கள் தாங்கள்.

அதன் அர்த்தம் அவர்களை போல்ஸ்விக்குகள் ஆக்கவேண்டும் என்பதைத் தவிர்த்து வேறென்ன,?நிலங்களும் தொழிற்சாலைகளும் நிலபிரபுக்களும் அல்லவே,

அது எல்லா மக்களுக்கும் சொந்தம் ஆக வேண்டும்.அதன் பின் நாம் யுத்தத் திற்கு முடிவு கட்டிவிடுவோம். என்கிறீர்கள்.

இந்நிலையில் கோடைகாலத்தில் ஒரு நாள் தொழிலாளர்களும் படை வீரர்களும் தாமாகவே வீதியில் ஊர்வலமாகச் செல்கிறார்கள்.

இப்படிஊர்வலம்நடத்தும் படி போல்ஸ்விக்குகள் அவர்களை தூண்டவில்லை. ஆனாலும் அவர்களது ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்கள். எல்லா அதிகாரமும் சோவியத்துகளுக்கே,முதலாளித்துவத்துவத்தின் மந்திரி கள் ஒழிக/

உணவு சாமாதானம்,சுதந்திரம் என்கிற கோசங்களுடன் ஆர்ப்பாட்டக்கார்கள் ஊர்வலமாக வந்தார்கள்.

மக்களின் இந்த இயக்கத்தில் பெரும் வலிமை புலப்பட்டது.

ஆனால்1905ல்ஜார்அரசாங்கம்நடந்துகொண்டது போலவே ஆயுதமற்ற மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய்யுமாறு கட்டளையிட்டது.

தற்காலிக அரசாங்கம் சரியாக 12 வருடங்கள் கழித்து 1917 ஜீலையில்/ தற்கா லிக அரசாங்கத்தின் இழி நிகழ்வுகள் மக்களை கலவரமடையச் செய்கி றது.

தாங்கள் சட்ட விரோதமானவர் என அறிவிக்கப்படுகிறீர்கள்.உங்கள் தலை மேல் கத்தி.தற்காலிக அரசாங்கம் தங்களை அழித்துவிட முடிவு செய்கிறது. அதன் பின்,,,,?

அதன் பின் என்ன தலை மறைவு வாழ்க்கை மேற்கொள்கிறீர்கள்/

தலைமறைவு வாழ்க்கையில் அங்குமிங்குமாய் அலைக்கழிக்கப்படுகிறீர்கள்.

பல வேடங்களில் பல இடங்களில் குடியேறுகிறீர்கள்.கட்சியின் மத்தியக் கமி ட்டியுடன் இடையறாது உங்களது கடிதத்தொடர்பு/

கட்சி இன்னும் கொஞ்ச காலம் உங்களின் தலைமறவு வாழ்க்கை அவசியம் என்கிறது.

இடைக்காலஅரசாங்கத்தின்அதிகார வர்க்கம் தனது விஷநகங்களை கூர்தீட்டி திக்கெட்டும் தேடுகிறது தங்களை/

இந்நிலையில் அக்டோபர் 24 ஆம் தேதி தாங்கள் ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். மத்தியக் கமிட்டிக்கு/

நேரம் வந்து விட்டது.எழுச்சியை இன்னும் தள்ளிப்போடக்கூடாது என்று/

மறு நாள் அக்டோபர் 25 சோவியத்துக்களின் இரண்டாவது காங்கிரஸ் ஸ்மீல் னியில் தொடங்கியிருந்தது.

காங்கிரஸ் தொடங்குவதற்கு முன்பு இன்றே எழுச்சி தொடங்குவது அவசியம்.

தற்காலிகஅரசாங்கத்தைசோவியத்துக்களிடம்ஒப்படைக்கவேண்டும்எனஎண்ணீ ர்கள்.

நகரத்தில் நிலையற்ற ஈர வாடை வீசிக்கொண்டிருந்தது.கூடவே சிறு தூறலும்.

ஆயினும் ஆட்கள் வீடுகளின் கமான் வளைவுகளுக்கு அடியில் கும்பல் கும்ப லாக குழுமியிருந்தார்கள்,படை வீரர்கள் அல்லது ஆயுதம்தாங்கிய தொழிலா ளர்கள் நிறைந்த லாரிகள் வீதிகள் வழியே சென்றன.

எங்கோ துப்பாக்கிக்குண்டுகள் வெடிக்கும் ஓசைகள் கேட்கும்.மெசின்கள் சட சடக்கும்.மீண்டும் கலவரம் நிறைந்த சப்தம் நிலவும்.

பாலங்களின் அடியில் எரிந்து கொண்டிருந்த நெகிடி நெருப்புக்களை செங் காவல் படை வீரர்கள் பாதுகாத்து காவல் புரிந்து கொண்டிருந்தார்கள்.

நெவா ஆற்றின் மேல் இருந்த இணைப்புப்பாலத்தை பிரித்து உயர்த்தி விடும் படி பகலில் தற்காலிக அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கிறது.

ராணுவக்கல்லூரி மாணவர்கள் வழிப் போக்கர்களை பாலத்திலிருந்து அகற்றி விட்டு போக்குவரத்தை தடை செய்தார்கள்.

ஒரே ஒரு பாலத்தை மட்டும் பிரித்து உயர்த்திவிட்டார்கள்.

செங்காவற்படைகள்இருந்ததால்அவர்கள்மற்றபாலத்தைநெருங்கிவிடமுடிய
வில்லை.

இந்த விவரங்களை கேட்ட தாங்கள் உடனடியாக ஸ்மோல்னீக்குக்கு கிளம்ப வேண்டும்என்கிறீர்கள்.பல்வலிக்காரர்வேடத்தில்கிளம்புகிறீர்கள்.ஸ்மோல்னீ  மாளிகை செல்கிறீர்கள்.

மாளிகையின் முன் படை வீரர்களும் ஆயுத பாணிகளான மாலுமிகளும் தொழி லாளர்களும் சுடர் ஒளி வீசும் கிளர்ச்சியாளர்களும்/

திடலில் ராணுவக்கட்டளை ஒலிக்கிறது.”படைபிரிவு அணி வகுக்க”தாங்கள் இதயம் விம்முகிறது.எந்தநாளுக்காக காத்திருந்தீர்களோஅந்தநாளின்அர்த்தம் உங்கள் கண் முன்னே/

லெனின் வந்து விட்டார்,வெனின் வந்து விட்டார் என்கிற செய்தி ஸ்மோல்னீ எங்கும்பரவியது.அவ்வளவுசந்தோஷம்உங்கள்வருகையால்.தொடர்புஆட்கள் ராணுவக்கமிட்டியின் உத்தரவுகளைப்பெற்றார்கள்.கமிட்டி உத்தர விட்டது.

தந்தி நிலையம் தபால் நிலையம் ரயில் நிலையம்,பாலங்கள் அரசாங்க அலு வலகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றுங்கள்.செங்காவற்படைகளே அணி வகுத்துப்புறப்படுங்கள்,ஆயுதமேந்தியதொழிலாளர்நிறைந்தலாரிகளில் கப்பற் படைவீரர்களும் தரைப்படை வீரர்களும் புறபட்டுச்சென்றார்கள்.அக்டோபரின் காரிருளில்/

அக்டோபர் 24 முடிந்து 25 தொடங்கிய இரவில் ஆயுதமேந்திய பாட்டாளிகளும் புரட்சிப்படை வீரர்களும் ருஷ்யாவின் தலைநகர் பெத்ரோ கிராமத்தை கைப் பற்றி விட்டார்கள்.

அடுத்ததாய் தற்காலிக அரசாங்கம் அமைந்திருந்த பனிக்கால அரண்மணை/

செங்காவற் படைகளுக்கும் புரட்சிப் பட்டாளங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. பனிக் கால அரண்மனையை சூழ்ந்து கொள்க.





தொடரும்,,,,,,

2 comments:

'பரிவை' சே.குமார் said...

லால் சலாம் அருமை அண்ணா...
தொடர்கிறேன்.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/