12 Dec 2016

லால் சலாம் காம்ரேட் லால் சலாம்,,,(லால் சலாம் பாகம் 6)

இந்நிலையில்தான் பல காலமாக தங்களின் உடம்புக்குள்ளேயே குடி கொண் டிருந்த நோய் உங்களை மெல்ல மெல்ல அரித்து படுக்கையில்தள்ளி விடுகி றது தோழரே/உறக்கமின்மையால் முடிவற்ற இரவுகள் வதைக்கும்.காலை வரை கூட நீடிக்கும் சில நாட்களில்.

அனேக நாட்களில் இடைவிடாமல் தலைவலிக்கும்.மட்டுமீறிய உழைப்பும் வேலையாயும் இருந்த உங்களுக்கு முழு ஓய்வு தேவை என்கிறார்கள் மருத் துவர்கள்.

ஒருநாளைக்கு நாற்பது நிமிடம் அல்லது அரை மணி நேரமே எழுதஅனுமதி உங்களுக்கு,அதுவும் நேரடியாக அல்ல,உதவியாளர் மூலமாக/

லெனின் அவர்களே மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.அரசாங்க விவகாரம் பற்றி சிந்தனை செய்யாதீர்கள்.நாட்டு நடப்பு பற்றி கட்டுரை எழுதுவதை நிறுத்துங் கள்எனமருத்துவர்கள்உங்களுக்கு பரிந்துரைக்கிறார்கள்.ஆனாலும் தங்களைக் கட்டுப்படுத்துவதுகேள்விக்குறியேஎனமருத்துவர்களுக்குத்தெரிந்திருக்கிறது.

மருத்துவர்கள்இடைவிடாது முறை வைத்து தங்களை காப்பாற்ற முயன்றார் கள். போராடினார்கள்.

ஆனாலும் தங்கள் உடல் நிலையில் முன்னேற்றம்,ம்ஹூம்,

இரக்கமின்றிதங்களின் உடல்முழுவதையும்ஆக்ரமித்து விட்ட நோய்தங்களது பேச்சைக்கூட விழுங்கி விடுகிறது.

தாங்கள் பேச்சடக்கி போகிறீர்கள்.தங்களின் பேசும் திறன் சிவப்பு சிக்னலிட்டு நிறுத்தப்பட்டுவிடுகிறது.ஓரளவிற்கானகுதலைப்பேச்சுதான்தங்களிடமிருந்து. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காய் சோஸலிசத்திற்காய் நாடு நாடாய் பல்வேறு பிரதேசங்களிலும்கட்சியிலும்செம்படைவீரர்களிடமும்தொழிலாளர்களிடமும் குடியானவர்களிடமும்பேசிய ஜீவன் ததும்பிய பேச்சு இனி கிடையாது. தங்க ளிடம்/ இந்த இனிய பேச்சை இனி கேட்க முடியாது.

பேச்சைமட்டுமல்லதோழரே,,/பழைய நிலையில் உங்களை காண்பது,,,,? நாளு க்கு நாள் நீங்கள் உடல் பொழிவு இழக்கிறீர்கள்.உடல் சீர்கேடு அடைகிறது. காலம்கிழித்துப்போட்டபழந்தேதியாய்உடல்இழைத்துபடுக்கையோடுபடுக்கை யாய் தாங்கள்/

எங்கள்அருமைத்தோழர்லெனின்அவர்களே/அங்கே கிரெம்ளின் மாளிகையில் தங்கள் நிலை என்ன அறிய மக்கள் ஆவலாய்,,,/

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களைப்பற்றிய செய்தி பத்திரிக்கையில்/

காலை நேரம் தங்கள் உடல் நிலை நன்றாக உள்ளது என மக்கள் கேள்விப் படுகிறார்கள்.

மாலை நேரம் தங்கள் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என செய்தி/

இப்படியாககடிகாரமுட்களாய்சுற்றும்நாட்களின்நகர்வுகள்.மக்கள்கவலையை விடதங்களின் மீதான தங்கள் துணைவியாரின் கவலை நாளுக்குநாள்அதிகரி த்தவாறே/

ஆனால்தங்கள்துணைவியாரதும்மக்களைப்பற்றியதுமானகவலைபற்றிகவலை கொள்ளாத தங்களது உயிர் 1942 ஜனவரி 21 மாலை தங்கள் உடலை விட்டுப் பிரிகிறது.

வீட்டிலிருந்துசுமார்ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ரயில் நிலையத் திற்கு தங்களின் உடல் அடங்கிய பெட்டியை தூக்கிச்செல்கிறார்கள் தொழிலா ளர்களும்கம்யூனிஸ்டுகளும்,குடியானவர்களும்,,தோழர்களும்அரசாங்க உறுப்பினர்களுமாய்…./

கொண்டு வந்த சவப்பெட்டி தனி ரயில் மூலம் மாஸ்கோ கொண்டு செல்லப் படுகிறது.மாஸ்கோவில் தங்கள் சடலம் அடங்கிய பெட்டியை இறக்கிய தோழர்கள் அந்தப்பெட்டியை தூக்கிக்கொண்டு வீதிவீதியாக ஆயிரமாயிரம் மக்களுக்கு ஊடாகச்செல்கிறார்கள்.

மக்கள் முடிவுற்ற வரிசையாக தொழிற்சங்க மாளிகைக்கு சென்று கொண்டி ருந்தார்கள்.இரவும் பகலுமாய்/

அவர்களில் மாஸ்கோ வாசிகளும் இருந்தார்கள்,சோவியத் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தவர்களும் இருந்தார்கள்.ருஷ்யர்களும், உக்ரேனிய ர்களும்,ஆர்மீனியர்களும்.கஸாக்கியர்களும் போலோ ருஷ்யர்களும்,ஜார்ஜிய ர்களும் அயல்நாட்டுகம்யூனிஸ்டுகளும்,தொழிலாளர்களும்,,,,,/

தொழிற்சங்கமாளிகையில்மலர்கடலில்மிதந்தது தாங்கள்இருந்த சவப்பெட்டி/ தனிவாக இசைத்தது பாண்டு வாத்தியக்குழு/

அமைதியாக நடந்தார்கள் மக்கள்.

1924ஜனவர்27 மாலை நான்கு மணி வாக்கில் இயந்திரங்கள் நின்றன. கார்கள் நிறுத்தப்பட்டன.ஜனங்கள் தலை வணங்கி நின்றார்கள்.

வெளிநாடுகளில் தொழிலாளர்கள் வேலையை இடை நிறுத்தினார்கள்.

ஐந்து நிமிடம் மௌனம்கடை பிடிக்கப்பட்டது.ஆலைகள்தொழிற்சாலைகளின் சங்குகள் இடைவிடாது ஒலித்தன.

கடல்களில்சோவியத்கப்பல்கள் நின்று விட்டன.ஆற்றமுடியாத நீண்ட துயரக் குரல் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மேலே சோவியத் நாடு எங்கும் பரவி யது.

இறுதி மரியாதை பீரங்கிக்குண்டுகள் முழங்கின,

செஞ்சதுக்கத்தில் தங்களின் மேனி அடங்கிய பேழை சமாதிக்குள் வைக்கப் படுகிறது.பொழுது சாய்கிறது.இருள் சூழ்கிறது.நள்ளிரவு ஆகிறது.அப்போதும் மக்கள் வரிசைகள் தங்களது சமாதியின் அருகாக வரிசை வரியாக சென்ற வண்ணமும் வணக்கம் செலுத்திய வண்ணமுமாய்/

ஆமாம்காம்ரேட்,,,,இந்தஉலகம்முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் நாங்கள் அத்தனை பேரும் மனம் கோர்த்து உங்கள் உங்கள் சொல்லின் செயலின் நடத்தையின்சிந்தனையின்,,,,வழியில்இதோஒன்றுபட்டுசென்றுகொண்டிருக்கி றோம்/

லால் சலாம் காம்ரேட்,லால் சலாம்,,,,,,,,,,/

No comments: