13 May 2017

சந்தம்,,,,,,,,

மனம் பிடித்த பாடலை மனம் பிடித்த நேரத்தில் மனம் பிடித்தவர்களுடன் கேட்பது மனதுக்கு மிகவும் இசைவான விஷயமும் பிடித்துப்போன விஷயமு மாகும்.

அதிலும்பிடித்ததை செய்கிற போது லயித்துப்போகிற லேசான மனதுக்கு இற குகள்முளைத்துப்போகிறதுதான்.யாரையும்கேட்காமலும்யாரிடமும் அனுமதி பெறாமலுமாய்/

வீட்டில் சின்னவனிடம் சொல்லியிருந்தான்.

உனக்குப்பிடித்த பாடல்களில் கொஞ்சம் எனக்குப்பிடித்த பாடல்களிலுமாய் கொஞ்சம் சேர்த்து என்னுடைய செல் போன் மெமரியில் பதிஎது கொடுத்து விடு,நேரம் வாய்க்கையில் நான் கேட்டு அகிழ்ந்து கொள்கிறேன்,இது நீ எனக்கு செய்யும் மிகப்பெரிய உதவி மட்டுமல்ல,உனக்கு கிடைக்கப்போகிற பெரும் புண்ணியமும் ஆகும்.என்ற போது பாடல்கள் என்னிடம் கைவசம் கொஞ்சம் இருக்கின்றன.அது உங்களுக்குப்பிடிக்குமா என்னவென்று தெரிய வில்லை.

எனது இளந்தாரி பருவத்துக்கு ஏற்ற மாதிரியும் ஓடுகிற ஓட்டத்திற்கு கேட்கி றது போல் இருக்கிற துள்ளலும் லயமும் இசையும் கொண்ட பாடல்களாய் பதிந்து வைத்திருப்பேன்,அது தங்களுக்கு ஏற்றதும் உவப்பானதுமாய் இருக்கு மா என்னவெனத்தெரியவில்லை.இருந்தாலும்பதிந்து தருகிறேன் ,உடன் தாங் கள் பழைய சிடியில் வைத்துள்ள லயம் சொட்டுகிற பாடல்களை மனம் பிடிக் கிறது போல் எடுத்துத்தருகிறேன்,நன்றி வணக்கம்,என பேசிய பேச்சை இடை மறித்து வெட்டிக்கொண்டு போய் பதிந்து கொடுத்த மனம் பிடித்த பாடல்கள் செல்லின் மெமரி கார்டை நிரப்பியும் ,வீட்டிலிருக்கிற பென்ட்ரைவிலுமாய் இருக்கிறது,எப்பொழுதாவது நேரம் வாய்க்கிற சமயங்களில் அதை கேட்டு மகிழ கிடைக்கிற வாய்க்கிற சமயங்கள் அரிது பட்டும் நிம்மதி பட்டுமாய்/

அவனும் சரி சரி என சொல்லிவிட்டானே ஒழிய அவனுக்கும்அந்த வேலை யைச்செய்ய நேரமில்லை,ஒத்துக்கொண்டதை செய்து கொடுக்க முடியவில் லையே என சொல்லியும் கொள்வான் அவ்வப்பொழுதாக/

அவனது மாலை வேளையிலான படிப்பும் ஹோம் ஒர்க்கும் அதற்கு அனுமதி வழங்க மறுத்து விடுகிறது,பாடங்களை எழுதிப்பார்க்கிறான்,கம்ப்யூட்டரில் பதிந்துவைத்துக்கொண்டு பெண்ட்ரைவில்பிரதி எடுத்துக்கொண்டு போகிறான், அதை வெளியில் கம்ப்யூட்டர் சென்டரில் போய் காப்பி எடுத்துக்கொண்டு வந்து பேப்பர்களின் அடுக்கிய பக்கங்களை கை நிறைய வைத்துக்கொண்டு புரட்டுகிறான்,இரவு மணி பண்ணிரெண்டை தாண்டி நேரம் இல்லாததால் பதி மூணு மணிவரை படிக்க முடியவிலையே என கவலைகொள்கிறான்.

எழுதி எழுத்துக்களிலும் அச்சடித்த புத்தகங்களின் பிரதிகளிலுமாய் வி பதித்தி கவனம் செலுத்தி படித்திக்கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்து எதோ ஞாபகம் வந்தவனைப்போல சட்டையை மாட்டிக்கொண்டு பிரண்ட் வீடு வரை போய் விட்டு வந்து விடுகிறேன் எனச்செல்கிறான்,

என்ன என்று கேட்டால் வந்து சொல்கிறேன் எனச்சொல்லிவிட்டு பிரண்டிடம் கேட்டு விட்டு வந்த பாடங்களின் வரிசைகளை அங்கிருந்து யார் யாரிடம் என்னென்னபடிக்க வேண்டும் போன் பண்ணிவிட்டுசொன்னதை வந்து சொல் வான்,

இதைஇங்கிருந்தே செய்யலாமே எனச்சொன்னால் இல்லை அங்கு போனால் உடன் இருக்கும் பிரண்டிடம் ஏதும் கேட்டுக்கொள்ளலாம் சந்தேகம்,விட்டுப் போன பாடம் ,கிளாஸில் பாடம் நடத்தும் போது இவன் கேட்க விட்டுப் போனதை அவனிடமும்,அவன் கேட்க விட்டுப்போனதை இவனிடமுமாய் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.என்பான்,அது தவிர மனதுக்குப்பிடித்ததை பேசி மகிழ்ந்து கொள்ளவும் பாடத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு லேசாகிக் கொள் ளவுமாய் உதவுகிறது என்பான்.

லீவு என்றாலோ அல்லது வீட்டில் சும்மா இருப்பதாக அவன் மனம் தோணி விட்டாலோ உடனே கிளம்பி விடுவான்,பிரண்ட் வீடு செல்கிறேன் என,சரி போய் விட்டு வா சடுதியில் என்றால் கேட்க மாட்டான்,சரி எனச்சொல்லி விட்டுச் செல்பவன்தான்,அவன் சென்ற வேளை முடிந்ததும் பிரண்ட் உடனான பகிர்வு மற்ற மற்ற படிப்பு கல்லூரி நினைவு மற்றும் மற்றுமான இதரங்களை பேசி விட்டு வரும் போது கொஞ்சம் தாமதமாகிப்போகும் இயற்கையாகவே/

அந்த தாமதத்திற்கான காரணத்தை அவன் நேரடியாகச்சொல்லாமல் வர்ணி க்கிற விதத்தில் கொஞ்சம் மயங்கித்தான் போக வேண்டும்.

பிளஸ் டூ படிக்கிற காலங்களில் இவன் கைவசப்பெற்ற சைக்கிள் இப்பொழுது இது போலாததிற்கும் கல்லூரி மற்றும் இதர இடங்களுக்குமாய் சென்று வர உதவுகிறது என்றுமாய் சொல்கிறான்.

அதிலும் சித்தப்பா வீட்டிற்கும் ,பாட்டி விட்டிற்குமாய் சென்று வருவதில் தனி விருப்பம் கொண்டிருப்பான் எப்பொழுதும்,

நீண்டு விரைகிற சாலைகள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அதி வேகம் காட்டி தன்னில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களையும் பாத சாரிகளையும் சுமந்து செல்கிற வேளையில் நான் அதற்கு ஊடு பாவாக சரடு காட்டி நெய்வது போல் எனது நகர்வு இருக்கும் அன்றாடங்களில்/

அதிலும் அழுத்தமுடியாத ரிப்பேர் காட்டி சிரிக்கிற சைக்கிளை கையாள்வது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை,அதன் போக்கில் சைசாகவும்,ஒரு தினுசாக வும்ஓட்டிச் செல்ல வேண்டும்,இல்லையென்றால் சண்டி மாடு போல படுத்துக் கொண்டு நகராது.பள்ளம் மேடுகளில் மட்டுமல்ல, சாதாரணமாய் சாலையில் செல்லும் போது சிறிது அதிர்வு காட்டி ஓட்டிச் சென்றால் கூட போதும், சைக்கிளின் செயின் கழண்டு விடும்.என்ன செய்யலாம் என மூளையை கசக்கியெல்லாம் பெரிய அளவில் யோசிக்காமல் கொஞ்சம் நகன்று அதன் போக்கில் சென்று விட்டேன் அவ்வளவே என்பான் அவன்.

இது போலாய் பேசுகிற அவனது பேச்சுக்களைக்கேட்க இனிக்கும் சில நேரங் களில்/கசக்கிறபொழுதுகள் விதிவில்லக்காய்.என்ன இப்படி என்றால் விடுங் கள் இதுபற்றிபெரிதாகபேசிஅலட்டிக்கொள்ளவெல்லாம் வேண்டாம். சமயா சமயங்க ளில் ஆகிப்போகிற இது போலான இடரக்கடரங்களை பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

வாழ்க்கையென்றால் லாபமும் நஷ்டமும் மேடும் பள்ளமும்தானே எனவும் இன்னும் இன்னுமாய் வாழ்க்கையைப்பற்றி கேட்டும் கண்டும் வளர்ந்த எனக்கு இது சாதாரணமாகத்தெரிகிறது, வாழ்க்கை நடப்பு அப்படித்தான்.என ஏதோ வேதாந்தி போல பேசிசெல்வான்,

சரி போதும் விடு வாயை மூடு சாப்புடப்போற வேளையில ஓன் பேச்சை ஆரம்பிச்சிறாத என்பாள் பெரியவள்,

ஏய் போம்மா தெரியும்,என அவளிடம் பொய் கோபம் காட்டி விட்டு பாருங் கப்பா,பாருங்கம்மா அக்கா என்னய கேலி பண்றாங்க என்பான்,

அப்படியாய் அக்காவும் தம்பியுமாய் பேசிச்சிரித்து பொய் கோபம் காட்டி விளையாடுகிற நேரங்களில் சாப்பாடு இரண்டாம் பட்சமாகவும் அவர்களூடாக இருக்கிற பாசம் முதல் பட்சமாகவும் வந்து நெசவிட்டுப்போகும் லேசாக.’

இதைப் பார்த்துக்கொண்டிருக்கிற இவனது மனைவிக்கு கண்களில் நீர் துளிர் த்து விடும் லேசாக/ துளிர்த்த நீரை யாருக்கும் தெரியாமல் இவன் அருகில் வந்து துடைத்துக்கொள்வாள், இவன் தோளில் சாய்ந்தபடி.

இதற்காகவாவது அவர்கள் அடிக்கடி அப்படியாய் பேசிச்சிரித்து பொய் சண்ஐ போட்டுக்கொள்ளக்கூடாதா எனத்தோணிப்போகிறது,

வயதான காலங்களில் அப்படியாய் தோணிப்போகிற மனதிற்கு அப்படியாய் இதம் தருவது இது போலான சாய்ந்து கொள்ளல்கள்தானே,,,,?என எண்ணுகிற வேலைகளில் அல்லது கல்லூரி விட்டு வந்ததுமாய் குளித்து விட்டு மற்றே தேனுமாய் வேலை இருந்தால் முடித்து விட்டு கையிலியை கட்டிக் கொண்டு சட்டையில்லா வெற்று உடம்போடு துண்டை போர்த்திக்கொண்டு உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விடுவான்,அல்லது எழுத….,,,,,/

படிக்கிற படிப்பு எழுதுகிற தன் வேகம் காட்டி முனைப்பாய் சென்று கொண் டிருக்கிற வேளைகளை அவன் அன்றாடம் அவிழ்த்து வைக்கிறாந்தான் வீட் டின் தனியறையிலும் மைய ஹாலிமாய் அமர்ந்து கொண்டு/

படிப்பதற்கும் எழுதுவதற்கும் இன்னும் இன்னுமாய் சிந்திப்பதற்கும் தனி அறைகளும்மூடிதாளிடப்பட்டஏதோ ஒரு அறையும் தேவை இல்லை என்னை பொறுத்தஅளவில்,போதும்இது,நீங்கள்பேசிக்கொண்டிருக்கும்போதும்,வீட்டில் நிறைசப்தமாய்தொலை காட்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிற வேளை யிலும் கூட என்னால் பாடங்களை படிக்கவும் எழுதவும் முடியும்.என்ன தொலைக் காட்சியில் செய்தியோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தால் என்னால் முழு கவனம் செலுத்தி படிக்கவோ எழுதவோ இயலாது, அப்படி அது மீறி படித்தேனானால் அதுவரையிலுமாய் கூடுகட்டி படித் து கட்டிக்காத்து வைத்திருந்த பாடங்கள் என மனதிலிருந்து சிதறி கழன்று ஓடி விடக்கூடும்,ஆகவே செய்திச்சேனல்களையும் விவாத நிகழ்ச் சிகளையும் தவிர்த்து வேறெதுனுமாய் வைத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்லி விடுவான்.

அது போலாய் உறவுகள் பற்றி பேசும் போது தனிமையில் இருக்கிற வயதா னவர்கள் பற்றியும் அனாதைகள் பற்றியும் ஆதரவற்றவர்களைப் பற்றியுமாய் பேசுவதை தவிர்த்து விடுங்கள் முழுமையாய்/ ஏனெனில் என் கவனம் அதன் பின்னாய் வால்பிடித்து சென்றுவிடக் கூடும் / ஆகவே,,,,,,,எனச் சொல்லி விடு வான். அவனது கறார் சுமந்த பேச்சுக்களை தட்டி விடவோ அல்லது தவிர்த்து விடவோ நினைக்கிற நேரங்களில் கொஞ்சமாய் அவனில் முளைத்து கிளை விடுகிற கோபங்களை அவனாகவே கிள்ளி எறிந்து விடுவான் சிறிது நேரம் கழித்து,பரஸ்பரம் கோபம் கொள்வதும் அதை தட்டிக்கழிப்பதும் நம்மனதின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது,இருக்கவும் வேண்டும் என்பான்.

ஏண்டா டேய் ஒரு பனியன் கினியன் இல்லைன்னா டீ சர்ட்டு ஏதாவது போட்டுக்கோ,,,இப்பிடி வெறும் ஒடம்போடஉக்காந்துக்கிட்டு,,,என்றால் என்ன இப்ப அதுனாலவீட்டுக் குள்ளதான ஒக்காந்துருக்கேன்.வெளியில எங்கயாவது போனாசரிங்கலாம்,கண்ணுவச்சிருவாங்க,ஒடம்பப்பாத்துஎரிச்சிறுவாங்கங்குற கருத்த உள்ளடக்கி,ஆனாஇங்க அப்படியில்லையே,நான் அம்மா,அப்பா, அக்கா,,, மட்டுமாய் இருக்கும் போது ஏன் இப்பிடியெல்லாம் வந்துறப் போகுது, அப்பிடியே வந்தாலும் வரட்டுமே என்னதான் இப்ப கெட்டுப்போகப்போகுது என்பான்.

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.காலையில் காலேஜிக்குப்போகும் போது மாட்டுறபேண்ட் சர்ட்டுதான் சாய்ங்காலம் வந்துதான் கழட்டு வைக்கிறேன். அதுவரைக்கும் எதோ கவசத்த மாட்டுன மாதிரி ஒடம்பெல்லாம் ஒரே கசகச ப்புஅதுவும்இந்தவெயில்லஒடம்பு பூரா ஒரே வேர்வ நாத்தம் தாங்க முடியல.,,,, எனச்சொல்கிற அவன் பி ஆர் ஜவுளிக் கடையில் எடுத்த சட்டையைப்போடும் போடுகிறநாட்களில்இப்படியெல்லாம்சொல்லமாட்டான்.

கடைக்குப்போன அன்று அவனுக்கு இரண்டு சட்டைகள் வாங்குவதாக எந்தத் திட்டமும் இல்லை.எந்த வரை படத்தையும் வரைந்து தயார் செய்து கொண்டு போயிருக்கவில்லை.

இவனைப்பொறுத்தவரை முன்னேற்பாடு போகிற எந்தக்காரியத்தை விடவும் முன்னேற்பாடற்றுப்போகிற விஷயங்கள்தான் சிறந்து அமைந்ததாக இருந்த துண்டு,

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகச்சென்றதால் மாடல்கள் நிறைய பார்க்கக்கிடைத்தன.

கடையும் கடையின் விஸ்தீரணமும் அதன் வாசனையும் அங்கிருக்கிறவர்க ளும் இவனுக்கு புதிதும் இல்லை,பழக்கமற்றவர்களும் கிடையாது, வாங்கண் ணே,வாங்க சார்,நல்லாயிருக்கீங்களா,நல்லாயிருக்கேன்,என்கிற பேச்சுக்கள் சுமந்துதான் இவனும் கடைக்குள் நுழைவான்,

வாங்கசார்,பேண்ட் சட்டையின்னா மேல மாடிக்குப்போங்க,சுடிதார்ன்னா இங்க கீழ எடுங்க என்பார் ,கல்லாவில் இருக்கிறவர்,இது அவரது வழக்கமான வசனம்தான் என்றாலும் கூட இவன் துணி எடுக்க வந்திருக்கிற விதத்தையும் இவனது மனரசனையையும்,நெசவையும் பாதிதூரம் அறிந்து வைத்திருப்பார், மீதியை இவன் சொன்னதும் இரண்டையும் கலந்து துணிகளை எடுத்துக் காண்பிப்பார்.

ஆனால்இந்தத்தடவை அப்பிடியில்லை,பையனைக்கூட்டிக்கொண்டு போயிரு ந்ததும் ”அப்ப பாப்பாவுக்கு சுடிதார் எடுக்க வரல நீங்க”,,,,என இனம் கண்டு கொண்டவராய் மேலே மாடிக்குப்போகச்சொன்னார்,

கருப்பு வெள்ளை,கோடுகள்,கட்டங்கள் டிசைனகள் என இன்னும் இன்னுமாய் நிறைந்து தாங்கி வந்த துணிகளின் மாடல்கள் பழதாகி பின்னுக்குபொபோய் விட இப்பொழுது வந்திருக்கிற டிசைனகள்தான் தற்காலர்களை இழுத்துப் பிடி ப்பதாகப்போய் விடுகிறது.

அதன் படியான கலரில் மேட்சில் ஒரே ஒரு சட்டை எடுத்துக்கொள்கிறேன் அதுவும் இரட்டைக்கலரில் அமைந்தால் நலம் என நினைக்கிறேன் என தன் மன வரவை முன் வைத்துத்தான் வந்தான் கடைக்கு இவனுடன்/

அந்த வருடத்தின் புது வரவு போலும்,முன்பு போல் குடும்பத்தில் இருக்கிற பையன்கள்களுக்கும் ,பெண்பிள்லைகளுக்கும் ஒன்று போல் ஒரே டிசைனில் துணி எடுத்து அதை இரண்டு மூன்று வருடங்களுக்காவது போட்டுக் கொள் வது போல் சட்டையாகவும் ,டவுசராகவும்,பாவடையாகவும், சட்டையாகவும் உருமாற்றித்தருவார்கள்.

இப்பொழுது எழுநூறு எண்ணூறு போட்டு சட்டை எடுத்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் காணாமலும் உடலோடு ஒட்டுக்கொண்டு சிறிதாகபோய் விடுகி றதாகவும் ஆகிப்போகிறது.

அப்படித்தான் வேண்டும் என்பதாயும் ஒரு ட்ரெண்ட் உருவாகி விட்டது.அது அதிஷ்டவசமா அல்லது துர்ரதிஷ்டவசமா எனபது தெரியவில்லை,ஆனால் அதுதான் இப்போதைக்கு சாஸ்வதம் என்பது போல் ஆகிக்காணப்படுகிறது.

அந்தக்காணல் காட்டிச்செல்கிற வழியில் இப்பொழுது எடுக்க வந்திருக்கிற சட்டைகளை கடையில் எடுத்துக்காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த வருடத்தில் வந்திருந்த மாடலானதும் அவன் நினைத்து வந்திருந்த வரைவின்படியுமாய் இரட்டைக்கலர் சட்டை இரண்டு மூன்று கடைக்காரர்கள் எடுத்துக்காண்பிக்கும் போது வந்து போனது ஊடுபாவாக/

அப்படி வந்த இரண்டு மூன்றை தனியாக எடுத்து வைத்துக்கொண்டான் தனி யாக, மிச்சமாய் காட்டிய சட்டைகளில் அவனது கவனம் செல்லாமல் இருப் பதை கவனித்த கடைக்காரர் இனி அவனுக்கு நான் எடுத்துப்போடும் மற்ற சட் டைகளில் நாட்டம் போகாது ,ஆகவே மற்றவற்றையெல்லாம் எடுத்து வைத்து விடுகிறேன்நான், என்றவாறு அவர் எடுத்து வைத்துக்கொண்டிருக்க அதற்குள் ளாய்அடக்க மாட்டா ஆவலை முன் வைத்து கடைக்காரரின் முன் அனுமதியு டன் பிரித்துப் பார்க்கிறான் சட்டையை/

சட்டை அடங்கிய பெட்டியை பிரித்துப்பார்க்கும் முன்பாக கையெலெடுத்த பெட்டியை நாலா புறமுமாக திருப்பிப்பார்க்கிறான்,பெட்டி மேல் ஒட்டப் பட்டு ள்ள லேபிளைப் பார்க்கிறான்.சட்டைக்கு போஸ் கொடுத்திருக்கும் விளம்பர மாடலைப்பார்க்கிறான்,பின் விலைப்பார்க்கிறான்,விலையை பார்த்துவிட்டு முகத்தைசுழித்தவனாய் இனி வேண்டாம் இந்த சட்டை,வேறு எடுத்துக் கொள் ளலாம் என இவனிடம் பரிந்துரைக்க,,,,,,,,,அவனை முதுகில் தட்டிக் கொடுத்த வாறும் அவன் மனதில் நினைத்த பிடித்த சட்டையையும் அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்து மனம் முகர்ந்து கொண்ட சட்டையையும் அது அல்லாது இவனுக்கு இது பிடிக்கும் கண்டிப்பாக என அவன் ஓரக்கண் கொண்டு பார்த்த சட்டையையும் பிடித்திருந்தது/

பிடித்திருந்த சட்டைகள் இரண்டும் சட்டையின் வெளிப்புறம் ஒரு கலரும் சட்டை கையை மடித்து விடும் போது இன்னொரு கலருமாகவும் மடித்து விடப்பட்ட கையை அப்படியே அமுக்கி வைத்து மடக்கி மாட்டிகொள்ள ஒரு வாரும் காட்டி படம் விரித்தது.

சூப்பர் என்றான் அதைப்பார்த்ததும்,அவன் சூப்பர் எனச்சொன்ன சட்டையையே எடுத்தார்கள்,அடுத்ததாய் எடுத்துக்காண்பித்தசட்டைகளுக்குஊடாய் அவன் ஓரக்கண்ணால் பார்த்த இன்னொரு சட்டையும் எடுத்துக்கொள்ளச்சொன்னான் இவன்,

அவனுக்கானால் அப்படியாய் இரண்டு சட்டைகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ள சம்மதமில்லை,வேறொன்றுமில்லை பெரிதாக,கணக்குப் போட்டுப் பார்த்தான்,மனதிற்குள்ளாக,அப்பா இரண்டு சட்டைகள் இவ்வளவு விலை வருகிறது.இன்னும்பேண்ட்எடுக்கவில்லை,அதைஎடுத்தால்இவ்வளவுவருமே, சாப்பிடும் அளவிற்குத்தான் சாப்பிடலாம்,அளவு மீறி சாப்பிட்டால் அஜீரணம் ஆகிப்போகும் அல்லது வெளியில் வந்துவிடக்கூடும்,அது உடலுக்கும் மனதி ற்கு ஏற்பட்டுப்போகிற வீண் தொந்தரவு.ஆகவே வேண்டாம் இன்னொன்று என அவன் சொல்லி விட்டு இவனை சங்கடமாக ஏறிட்டான்./

இவனுக்கானால் பேச நா எழவில்லை.மாறாக பேசுவதற்கு பதில் நீர் சுற்றி விடுகிறது கண்களில்,இதைப்பார்த்து விட்ட அவன் சிறிது மௌனம் காத்த வனாய் நின்ற போது நீ ஒன்றும் அதிகம் சாப்பிடவில்லை,ஒரு கவளம் கூட எடுத்துக்கொள்ளலாம் என ஆசைப்பட்டிருக்கிறாய்,அதில் பெரிதாய் தவறொன் றுமில்லை,எடுத்துக்கொள்எனச்சொல்லிவிட்டுஎன்றபோது கண்ணாடியைக் கழட்டி விட்டு விட்டு கண்களில் சுற்றிய நீரை துடைத்தவாறே எடுத்துக்கொள் உனக்குபிடித்தவையாய் இரண்டு,,,,,/இப்பிடி யோசிக்கிற உன் போன்ற பிள் ளைகள் இருக்கிற வரை என் போன்ற தகப்பன்கள் கொஞ்சம் கோளாறாகப் பிழைத்துக்கொள்ளலாம்என்கிறயோசனையும்பெருமிதமுமாய்பொங்கிவழிந்த நேரத்தில் எடுத்து வந்த சட்டையை போடுகிற நாட்களில் அவன் அப்படியெ ல்லாம் சொல்வதில்லை.

அன்றைக்கு அவனுக்கு வேர்க்காதா,இல்லை கசகசப்பாக இருக்காதா எனக் கேட்க நினைத்து கேட்பதில்லை.அந்தச்சட்டையை போடுகிற நாட்களில் அவ னது அழகு கூடிப்போய் விடுகிறதுதான் என இவனாக நினைத்துக் கொள்வ துண்டு அவனிடம் சொல்லாமல்/அப்படியான சட்டை அணிந்திருந்த ஒரு பொழுதன்றில்தான் இவனுக்குப்பிடித்த பாடல்களை மெமரிக்கார்டில் ஏற்றி  பதிந்துகொடுத்தான்.

அந்தப்பாடல்களைசெல்போனில் வைத்து கேட்டுக் கொண்டும், வீட்டிலிருக் கிற ஹோம் தியேட்டரில் பென்ட்ரைவில் பதிந்து ஏற்றிக் கொண்டு போட்டுக் கேட்டுக்கொள்கிறான்.

காலை வேளை உழைக்கச்சென்ற அலுவலகத்தின் சுமையை இறக்கி வைக் கிற இடம் வீடாகத்தான் இருக்கிறது பெரும்பாலுமாய்.சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு தோழர்கள்,சிலருக்கு மனம் உறவினர்கள்,இன்னும் சிலருக்கானால் மனம் பிடித்தவர்கள் என இடம் பிடித்திருக்கிற லிஸ்ட்டில் இவனுக்கு மனம் பிடித் திருக்கிற இடம் வீடாய் ஆகிப்போகிறது.

அதுதான் எதுவானாலும், வீட்டுடன் சேர்த்தும் சம்பந்தப்படுத்தி யுமாய் பார்க்க முடிகிறது இவனால்/

முத்துராஜ்கூடச்சொல்வார். ஏண்ணே இப்பிடியாய்இருக்கிறீர்கள், எதுவானால் தான் என்ன எங்களிடம் அதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டேன்கீறீர்களே ?நாங் கள் நீங்கள் சொல் வதைக்கேட்டு ஆயுர்வேதிக் அல்லது வேறு ஏதாவது அலோ பதியில் மருந்து தருவித்தெல்லாம் போட்டு விட மாட்டோம்.அல்லது அதற் கான வழி கூடத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்க மாட்டோம் சமயத்தில்/

அப்புறம் எப்படி தங்கள் மனம் அறிந்து தங்களுக்கான ஒன்றை மாமருந்தாய் அல்லதுகனிவானஒன்றாய்எங்களால் எதுவும் தந்துவிடமுடியும்என நினைக் கிறீர்கள் சொல்லுங்கள் என்பார்கள்,

பழுத்த காலை, கனிந்த மாலை அல்லது பளிச்சென தன் அடையாளம் காட்டி சிரிக்கிற பகல் என எந்நேரம் முத்து ராஜைபார்த்தபோதிலும் அவர் அப்படித் தான் சொல்வார்.

அவருக்கும் அவரைச் சுற்றி நிற்கிற நண்பர்களுக்கும் மிகப்பெரிய வருத்தம் ஒன்று எப்பொழுதுமே உண்டு.அதுதான் அவர் சொல்வது,அண்ணே எங்கள் யாரிடமும் எதுவானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளு ங்கள்,தவிர எதுவானாலும் படக்கென போய் தஞ்சம் அடைகிற இடமும், மருந்திடுகிற வீடாயும் மட்டும் இருக்கக்கூடாது.

ஏதாவது பிரச்சனைஎன்றால் வீட்டிலிருந்து வெளியேறி இது போலான பொது இடங்களுக்கு வந்து விடுகிறார்கள் மற்றவர்கள்.நீங்கள் என்னடாவென்றால் விஷயத்தையே தலை கீழாக மாற்றி விடுகிறீர்கள்.நாங்கள்உங்களது சங்க டங்களைக் கேட்டுகொண்டு சந்தோஷப்பட அல்ல. மாறாகஅதை நீக்க ஏதாவது உதவி செய்யலாம் என்கிற முன் முயற்சி எடுக்க முனைகிறோம் என்கிற முனைப்பானபேச்சுஅவர்களிடமிருந்து வருகிற சமயங்களிலெல்லாம்,,,,,   வேண்டாம் நண்பர்களே,சந்தோஷமென்றால் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம் ,சங்கடமென்றால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள துணிவதில்லை மனம்,ஆகவே விட்டு விடுங்கள் என்னை என் போக்கிற்கு, எதுவானாலும் போகட்டும்என்னுடன்எனஅவர்களிடம் சொல்கிற போது சிரித்துக் கொள்வார் கள் பெரிதாக,சரி விடுங்கள் போதும் அவரை ரொம்பவுமாய் போட்டு தொந் தரவு பண்ண வேண்டாம்,மனமிருந்தால் சொல்லட்டும், இல்லை யெனில் விட்டுவிடுங்கள்,அவராகபார்த்து சொல்ல விழைகிற சமயங்களில் சொல்வார், என முடிப்பார்கள் நண்பர்கள்/

மாதங்களில் பலமுறையும் நண்பர்களை சந்திக்க நேர்கிற போதெல்லாம் ஏற்பட்டுவிடுகிற இப்பேச்சை சட்டை எடுக்கப்போன அன்று இவனுடன் வந்த மகன் கேட்டு விட்டான் வேறு வழியின்றும் அவனது சம்மத்மின்றும்./

ஏன்பா இப்படியெல்லாம் பேசிகொள்கிறார்கள் மேம்போக்காக,அவர்களால் நம் சங்கடத்தை எப்படி போக்கிவிடமுடியும்,தலையில் பாரம் என்றால் மாற்றி கொஞ்சம் எங்களுக்குக்கொடுங்கள் வாங்கிக்கொள்கிறேன் எனச் சொல்ல லா ம், வாழ்க்கை பாரத்தை எப்படி இவர்கள் வாங்கி சுமந்து விட முடியும், எனக்கான பாரத்தை நான்தானே சுமக்க வேண்டும்,

வேண்டுமானால் எனக்கான ஓட்டதை நான் எப்படி ஓட வேண்டும் எனக் கற்றுக் கொடுக்கச்சொல்லுங்கள்,அதை விடுத்து இப்படி,,,,,,,,,,,,,,,,,,,,,,

முதலில் அவர்களை மாறசசொல்லுங்கள் ,பின் நாம் வீட்டிற்குள் விடையை தேடுகிறோமா,இல்லை வெளியில் தேடுகிறோமா என ஆராயச்சொல்லுங்கள் என மகன் சொன்ன போது பக்கதிலிருந்த மின்சாரக்கம்பத்தில் அதுவரை எரி யாதிரிந்த தெரு விளக்கு எரிய ஆரம்பித்தது,

நாங்கள் நின்றிந்த டீக்கடையிலிருந்து மனம் பிடித்த பாடல் ஒலிபரப்பாகியது.

10 comments:

 1. அப்படியே..ஒன்றி வாசித்து ரசித்தோம்...குழந்தைகளு டனான ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தான்.பெரியவர்கள்.. ஆனால்..என்ன...இப்படியான ஒரு மகன் இருக்கையில் தந்தைக்கும், தாய்க்கும் கண்ணில்...நீர் வராமல் போகுமா.என்ன....அருமை

  துளசி, கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   தங்கள் போன்றோர்களின் பாரட்டுக்களே
   என் எழுத்தை உயிர்பிக்கவும்
   உயரழுத்தத்தில் வைக்குமாய் செய்கிறது,
   வாழ்த்துக்கள்,நன்றி/

   Delete
 2. எல்லா அப்பாக்களுக்கும் உண்டு. பேரன்வரை போன எனக்கு பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டதடா...அன்புடன் ஸ்ரீநாத்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராமநாதன் வெங்கட்ராமன் அவர்களே,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 3. எல்லா அப்பாக்களுக்கும் உண்டு. பேரன்வரை போன எனக்கு பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டதடா...அன்புடன் ஸ்ரீநாத்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராமநாதன் வெங்கட்ராமன் அவர்களே,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/
   ஏதாவது ஒரு பின் விளைவை
   ஏற்படுத்திச்செல்வதுதானே
   ஒரு பதிவு செய்யும் வேலையாக
   இருக்கமுடியும்,,,,?

   Delete
 4. இப்படியான மகன் கொடுப்பினைதான்

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும்!

   Delete
 5. இயல்பான நடையில் நடப்பதைக் கண் முன் காட்டி விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பு காட்டிய நன்றி!

   Delete