17 May 2017

வேர்ச்சில்லுகள்,,,,,,,

ராமுஅண்ணன்போன்பண்ணும் போது டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தான் இவன்/

டீ ஒரு திவ்ய அமிர்தமாய்த்தான் இருக்கிறது கிடைக்கிற நேரத்திலும் தக்க சமயத்திலுமாய் கிடைத்தால்/

ஐந்து இஞ்ச் உயரம் கொண்ட சில்வர் டம்ப்ளரில் நிறைந்த அளவிலும் தலை தட்டவுமாய் ஊற்றிக்கொடுக்கப்படுகிற டீயை காலை எழுந்ததுமாய் குடிக்கிற போது ஒரு பலன் தெரிகிறது,மாலை அலுவலகம் விட்டு வந்து குடிக்கையில் வேறொரு பலன் தெரிகிறதுதான்,

கொடுக்கிற கைக்கும் வாங்குகிற கைக்குமாய் பூத்துப்போகிற உறவு சட்டென் று கலர் பட்டாய் தெரிந்து போகிறது.

ஆனால் இரண்டும் பிரயோஜமற்றோ இல்லை குடிப்பது வீண் என்பதான மனோநிலையையோஏற்படுத்திவிட்டுச்சென்றுவிடுவதில்லை,மாறாக இன்னும் ஒரு அரை கிளாஸ் குடித்தால் தேவலாம் போல தோணி போகிறது.

காலையில் சீக்கிரமாய் எழுந்திருக்கிற பழக்கம் கைவிட்டுப்போய் வெகு நாட்கள்ஆகிப்போனது, கிட்டதட்ட ஆறு அல்லது ஒரு வருடத்திற்கு பக்கமாகச் சொல்லலாம்.ஞாபக நாட்களின் எண்ணிக்கைகளில் வந்து போகிற பிசகு/

சரி அது பரவாயில்லை என விட்டு விடலாம் சற்றே துணிவாய்/ தூங்கச் செல் கிற இரவுகள் பெரும்பாலுமாய் ஏதாவது ஒரு பெரும் அல்லது சிறும் நினைவு சுமந்தே செல்வதாய் இருக்கிறது பெரும்பாலான அல்லது எல்லா நாட்களி லுமாக/

அப்படிசுமக்கவும்தூக்கிவைத்துக்கொள்ளவுமாய்ஏதாவதுஒரு நினைவு விடாப் பிடியாக வந்து ஒட்டியும் கொள்கிறது,

“என்ன இப்படி ஏன் அது என்பது போலான நினைவுகள் மனதை சுற்றிச்சுற்றி வந்து தூக்கத்தை தூங்கச்செய்து விட்டு இவனை விழிக்கச்செய்து விடுகிறது .

அதுபோலானபொழுதுகளில்நீண்டுதெரியும்இரவைவம்பாகப்பிடித்துத்தள்ளவு ம் சபிக்கவும் வேண்டியதாய்த்தான் வேண்டி இருக்கிறது,இருக்கவே இருக்கி றது.

அது தவிர அது போலான நேரங்களில் புத்தகம்,தொலைக் காட்சி, டேப் ரிக்கார்டரில்பாடல்கள்எனவரிசைகாட்டிஅடுக்கிவைக்கப்பட்டிருக்கிறவைகளில் இவன்பெரும்பாலுமாய்தேர்வுசெய்வது புத்தகங்களைத்தான்.

மூடி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள் எதுவும் கருத்துச்சொல்லாது,வம்பு பண்ணாது,முரண்டு பிடிக்காது, சப்தம் எழுப்பாது,பிறரை தொந்தரவு செய்யாது, திறந்து படிக்கிற போது சொல்ல வந்ததை ஆணித்தரமாக மனதில் ஊனி விட்டுச்செல்கிற மந்திரப்பொருளாய் இருக்கிறது.

முந்தாநாளைக்கு முதல் நாள் பிரபல கவிஞரின் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான்.படித்துக்கொண்டிருந்த பக்கங்கள் பிடித்துப்போய் விட விடா மல் படித்துக்கொண்டிருக்கிறான்,தூக்கம் கண்களை அள்ளிச்செருகும் வரை,

வந்து விட்ட தூக்கம் புத்தகத்தை அப்படியே இடை மடிப்பாய் படித்த பக்கம் வரைமடித்து வைத்து விட்டு தூங்கச்சொல்லி விடுகிறது.அப்படியே தூங்கியும் போய் விடுகிறான்.

மறு நாள் அலுவலகம் போய் வந்துமாய் ஞாபகம் வந்து விட்ட படிக்காமல் விட்ட புத்தகத்தின் பக்கங்கள் இவன் இன்னும் படிக்க வேண்டிவையாய் பாக்கிப்பக்கங்கள்நிறைய இருக்கின்றன என ஞாபகப்படுத்தியது.

படிக்கும் சூழல் இப்பொழுது இல்லை.ஒரு பக்கம் தொலைக்காட்சியின் சப்தம்,ஒருபக்கம் பிள்ளைகளின் பேச்சு,இடையிடையில் பேசிய மனைவியின் பேச்சு,,,,,என நிறைந்து போய் இருக்க ஒரே கசகசப்பு,,,,,,

கசகசப்பு என மனதுக்குள் நினைக்காவிட்டாலும் கூட படிக்க இயலாத சூழல் இருக்கிறது இப்போதைக்கு என்பதை உறுதி செய்துச் சென்றது.சரி வேணாம் ரொம்பவுமாய் மல்லுக்கட்டி படிப்பது மனதில் தங்காது,சமயத்தில் பத்து பேர் இருக்கிறஇடத்திலும்கூடஉள் வாங்கிப்படிப்பான்.சமயத்தில் அது முடியாமல் போய்விடும்.

இதையெல்லாம் மீறி எல்லோரும் தூங்கிப்போன இரவுகளில் ஒற்றையாய் படுத்துக்கொண்டும் நடந்து கொண்டும் அமர்ந்து கொண்டுமாய் படிப்பதில் இருக்கிற உள் வாங்கல்கள் கொஞ்சம் கூடுதல் அசை சேர்ப்பதுண்டு,கதையின் நாயகனும் நாயகியும் தவிர்த்து அதில் வரும் சம்பவங்களும் இவனை கை பிடித்துகூட்டிப்போவதுண்டு, மாபெரும் ஒன்றை தன் மடியில் கட்டி வைத்துக் கொண்டு அதை கிஞ்சித்தும் தயங்கங்காமல் அள்ளி அள்ளி தருவதில் கஞ்சத் தனம் காட்டாத பொக்கிஷமாக இருந்திக்கிறது எப்பொழுதும்.

அதற்காகவே படுக்கப்போகிற வேளைகளில் இது போலாய் புத்தகங்களை தேடிப் போவதுண்டு.

மற்றொன்று தொலைக்காட்சி,தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பதை விட பாடல்கள் கேட்பது இவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாய்.

சிலு சிலுவெனவும்,அடர்த்தி காட்டியும்,மென்மை பூத்துமாய் இன்னும் இன்னு மானவையென மழை வெயில் காற்று,,,என்கிற பன்முகம் காட்டி ஒற்றை சிரிப்பாய் வந்து சிரித்துப்போகிறமனம் அள்ளிப்போகிற பாடல்களை சப்தமில் லாமல் வைத்து கேட்டு மகிழ இவனுக்கு எப்பொழுதும் பிடித்ததுண்டு.

இவன் தூங்கிப்போகும் வரையும் அல்லது தூங்கிப்போன பின்புமாயும் கூட சமயாசமயங்களில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கும்.இது விட்டால் பாடல் கள் கேட்டுக் கொண்டே படுத்துக் கிடப்பதும் மனதுக்கு இதமளிக்கிற விஷய மாக இருக்கும். என்ன அந்நேரம் டேப்ரிகார்டரில் பாட்டு வைத்துக் கேட்பது அக்கம் பக்கத்தார்களுக்கு சிரமம் தரக்கூடும்.ஆகவே செல்போனில் பதிந்து வைத்திருக்கிற பாடல்களைதலையணைக்கு பக்கத்திலாக வைத்துக் கொண்டு கேட்பான்,அதில் இதப்படுகிற மனது அதன் தாக்கம் கொண்டு தூங்கிப் போகும் அப்படியே/

இதை எல்லாம் மீறி படித்தும் தொலைக்காட்சி பார்த்தும் பாடல்கள் கேட்டு மாய் கூட தூக்கம் கொள்ளாத மனம் விழித்துக்கொண்டிருக்கிற உடல் தாங்கி அதிகாலைமூன்று மணிவரை அல்லது நடு இரவு இரண்டு, ஒன்றை மணி வரை கூட தன்னை தூங்காமல் தக்க வைத்துக்கொண்டிருக்கும்.

அப்படியாய் ஆகிப்போகிற நாட்களின் மறு நாள் காலையில் எழுந்திருப்பது கொஞ்சம் தாமதம் காட்டித்தான்.அப்படி ஆகிப்போகிற தாமதம் காலை மணி எட்டு எட்டரையைக்கூட எட்டித்தொட்டு விடும்.

அப்படியாகிப் போகிற நாட்களில் எழுகிற அவசரம் டீயைக்குடித்து விட்டுக் கிளம்பச்சொல்லிவிடும் அலுவலகத்திற்கு,அப்படியான டீக்களே ருசிப்பதுண்டு பெரும்பாலுமாய்/

தேவையை ஒட்டிய ஏற்பாடுகளும் ருசித்தல்களும் எப்பொழுதும் நன்றாகவும் மனம் பிடித்ததாகவுமே இருந்திருக்கின்றன/

அப்படியான ஒரு நாளின் காலையில்தான் அவர் போன் பண்ணினார். அவர் போன் பண்ணும் சமயங்களெல்லாம் இப்படி திடீர் என்கிற சொல்சுமந்தவை யாய்த்தான் இருக்கும்.

“அண்ணே ,அங்கனபோயிட்டுஇப்பத்தான்பஸ் எறங்கி வர்றேன்” என்பார், எங்கு போனேன், எதற்குப்போனேன்,எப்பொழுது வந்தேன் என்பதற்கு ஒரு தனி கதை வைத்திருப்பார்.

“கடையிலஒரு டீ சாப்புட்டு நின்னேன்,ஓங் ஞாபகம்வந்துச்சி,அப்பிடியே போன் பண்ணுவம்ன்னுபண்ணுணேன்னே,தா,,,,,,,,,,,,,என்னவரத்துவர்றாம்ங்குற, காலையில மதுரையில ஒரு கல்யாணவீடுண்ணே, போயிட்டுவந்துக்கிட்டு இருக்கேன் பஸ்ஸுல,காலையில வெள்ளன எந்திரிச்சி குளிச்சி முடிச்சி ஆறு மணிக்கெல்லாம் பஸ்ஸேறிட்டேன்.விடியால ஆறே முக்கால் டூ ஏழே முக்கால் முகூர்த்தம் பாத்துக்க,அந்நேரம் போயி என்னத்த சாப்புட,ஒரு டீய மட்டும் குடிச்சிட்டு வெறும் வயித்தோட கெளம்புனவந்தான். போயி ட்டேன், பஸ்ஸப் புடிச்சி,

“ஏ,,,தா,,,,,,,,,,அந்நேரம் பாத்தியன்னா கூட்டம்ன்னா கூட்டம் செம கூட்டம் பாத் துக்க,பஸ்ஸீல கால் வைக்க யெடமில்ல,வீட்ல தூங்காத தூக்கத்த பஸ்ஸீல போகும் போது தூங்கிக்கிருவோம்ன்னு நெனைச்சா அங்க என்னடான்னா நெலமை இப்பிடியா இருக்கு/,

“என்ன செய்ய அடுத்த பஸ்ஸீல கொஞ்சம் கூட்டமில்லாம இருக்கும் அதுல போகலாம்ன்னு பாத்தா அதுவும் அப்பிடித் தான் இருந்துச்சி, இப்பிடி யோசிச் சம்ண்ணாஇன்னைக்குகல்யாணத்துக்குபோயிக்கிறமுடியாதுன்னுட்டுதோணி ருச்சி/ என்ன செய்யச்சொல்ற ஏறிட்டேன் உள்ளபடி ஆகட்டும்ண்ணு/ ஏறுனா தா,,,,,,,ஒருத்தன்இங்கிட்டுத்தள்ளுறான்,ஒருத்தன்அங்கிட்டுத்தள்ளுறான்.நானும் கொஞ்சம் நெளிவு சுளிவா நின்னு பாக்குறேன் முடியல, என்ன செய்ய வாக்கபட்டாச்சு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ங்குற கதையா அப்பிடியே பல்லக் கடிச்சிட்டு டிரைவர் சீட்டுப்பக்கம் போயி நின்னுக்கிட்டு அவரு ஓட்டுறதையும் முன்னாடி ரோட்டையும் பாத்துக்கிட்டே வந்தேன்,

“பெரும்பாலுமா பஸ்ஸுல போகும் போதெல்லாம் இப்பிடித்தான் பண்ணிக் கிறுவேன்,ஏதாவது ஒரு புற விஷயத்துல கவனத்த செலுத்தீட்டு வந்துரு வேன்,பஸ்ஸீல வந்த கலைப்பும் தெரியாது,வேற ஒரு புது விஷயத்த பாத்த திருப்தி கெடைக்கும்ன்னு அங்க போயி நின்னா அங்கயும் ஒரு ஏழரை வந்து நிக்கிறாம்ண்ணே,

“தெரிஞ்ச பையந்தான்,எங்கதெருக்காரந்தான்,கொரியர்ல வேலைபாக்குறான், நாபோனாவந்தாநல்லா பேசிக்கிறுவான்,நல்லா பழகுவான், கொஞ்சம் தண்ணி சாப்புடுறபழக்கம் உண்டும் போல,அது எனக்கு தெரியாமப் போச்சி, அப்பப்ப கொரியருக்கு போறப்ப டீ சாப்புடனும்ன்னு அஞ்சி பத்து வாங்குவான், ரெண் டொரு நாள் கழிச்சி குடுப்பான், நானும் சரி இல்லாத பைய ஏதோ கேக்கு றான்னுநெனைச்சிகுடுத்துறதுருவேன்.பாத்தாஇப்படிஒவ்வொருத்தர் கிட்டயா அஞ்சி பத்துன்னுவாங்கிதண்ணியடிச்சிட்டு திரிஞ்சிருக்கான். கேள்விப் பட்ட மறு நாளையில இருந்து அப்பிடி காசுகுடுக்குறத நிறுத்தீட்டேன்,

சொன்னேன் நானும் ஒன்னையப்போல தண்ணியடிக்கிற ஆளுதான், இல்லை ன்னு சொல்ல, அப்பிடிப் பாத்தா ஒரு அப்பன் மகன்னு மூணு நாலு பேரு இருந்தா எல்லாரும் ஒருத்தருக்குத்தெரியாம ஒருத்தரு தண்ணியடிச்சுத்தான் இருக்காங்க,இந்தா எங்க தெரு முக்குல ஒரு குடும்பம் இருக்கு பாத்துக்க , ஒனக்குஅநேகம் தெரிஞ்சிருக்குன்னு நெனைக்கிறேன், அவுங்க வீட்ல அப்பாவ தவிர்த்து மூணு பசங்க, மூணு பேரும் பெரிய பையங்க, வாரக் கூலிக்கு வேலைக்கு போறாங்க, ஒருத்தன் மில்லுல ,ஒருத்தன் பல சரக்கு கடையில, ஒருத்தன் இன்னும் எங்கயோன்னு ,,சொன்னாங்க மறந்துட்டேன்,

”எல்லாருக்கும் வாரச்சம்பளம்,எது எப்பிடியோ மக்கமாருக மூணு பேரு சம் பளம்அவுங்கஅப்பா சம்பளம்ன்னு நாலு பேரு சம்பளமும் வீடுவந்து சேரணும், இல்ல அவுங்க ஆத்தாகாரி கத்திக் குவிச்சிபோடுவா குவிச்சி.

“அவ கத்தி நீ கேட்டதில்லையே,யப்பா சினிமாவுல வர்ற சொர்ணக்கா தோத்துப் போவா தோத்து,தலைய விரிச்சிப்போட்டுட்டு தெரு பூரா நடையா நடந்துக்கிட்டே பேசுவா பாரு பேச்சு, இப்படியே பேசிக்கிட்டு வந்த ஒரு நாள்பொழுதுலதான் பேசிக்கிட்டே வந்தவ ஏங் வீட்டுக்கு நேரா வரும் போது எதுத்தாப்புல வந்த டூ வீலர் காரன் மேல மோதிட்டா,

மோதுன வேகத்துல இவளும் கீழ விழுந்துற டூ வீலர் காரன் மனிதாபிமா னத்துல வண்டிய நிறுத்தீட்டுயெறங்கி வந்துருக்கான்,இந்தம்மா போட்ட கூச்ச ல்ல பயந்து போயி வந்தவன் திரும்பி ஓடிப் போயிட்டான் வண்டிய எடுத்துக் கிட்டு.தெருவுலவிழுந்தவஎந்திரிச்சிஏங் வீட்டு நடையில உக்காந்து பொழப்பிக் கிட்டு இருந்துருக்கா,

“அந்த நேரம் பாத்து நானும் வீட்ல இல்ல,தெருமுக்கு கடையில டீயக் குடிச் சிட்டு வாறேன், வந்தா இந்தக் கூத்து நடந்து கெடக்கு,பின்ன என்ன செய்ய அப்பிடியேவிட்டுறமுடியாதுல்ல,வீட்டுக்குள்ளகூப்பிட்டுவச்சி தண்ணி வெந்நி குடுத்து என்னன்னு கேட்டப்ப “வீட்டுக்காரரு தண்ணியடிக்கிறது தெரியும் சமயத்துல புள்ளைங்க இல்லாத பொழுதுல வீட்லயே வச்சி குடிச்சி ருக்காரு. நானும் சரி ஒடம்பு வலிக்க பாடு படுற மனுசன்னு நெனைச்சி ஒண்ணும் சொல்லாமக்கூட விட்டிருக்கேன்.

”அது பாத்தா இப்ப பெத்த புள்ளைங்களையும் பாதிச்சி நிக்கிதுன்னும் போது மனசு கெடந்து வாதிக்குதுள்ள,ஓங் புள்ள குடிச்சிட்டு அங்கன கெடந்தான், இங்கன கெடந்தான் ,இன்னாரோட சகவாசம் வச்சிருக்கான்னு பெறத்தியாரு சொல்லக்கேக்கையிலஅப்பிடியேநாண்டுட்டுசெத்துப்போகலாம்போலஇருக்கு,

இதுலபெரியவன்வேலைக்குப்போயி வாரக்கணக்குல ஆகிப் போச்சாம், சின்ன வன் அப்பப்ப போறதுனாம்,நடுவுல உள்ளவன் வேலைக்கெல்லாம் ஒழுக்கமா போயிக்கிட்டு இருக்கான்.

ஆனா தண்ணியடுக்கிறத மட்டும் கமுக்கமா செஞ்சிக் கிட்டே வந்துருக்கா ன்,மொதல்லவாரத்துலஒருநாரெண்டுநாள்ன்னுஇருந்த பய வாரம் பூரா குடிக்க ஆரம்பிச்சிட்டான் நாள் போக்குல, இது எங்களுக்கும் தெரியாது,பய ஏற்கனவே கமுக்கமானபையபாத்திங்களா, அதுனாலசரி அப்புராணியா வந்துட்டு அப்புரா ணியா போயிறான் வேலைக்கு, சம்பளமும் வாரம் பொறந்த கரெக்டா வீட்டு க்கு வந்துருதுல்லன்னு நெனச்சி பெரிசா கண்டுக்கல,அவனும் ராத்திரி ஊர் தூங்கிபோனபின்னாடிதான் வீட்டுக்கு வருவான்.ஊர் முழிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிச்சி குளிச்சி முடிச்சி சோத்து சட்டிய மட்டும் வாங்கீட்டுப் போயிருவான்,

“ஏண்டாஇப்பிடிஊருதூங்கிப்போனபெறகுவர்றைன்னுகேட்டாஇல்லரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போயிட்டு வந்தேன்னு சொல்வான்.தெனமுமாடா ரெண்டாவது ஆட்டம் கேக்குதுன்னு கேட்டா ஆமா இங்க வந்தாலும் குருவிக் கூடு மாதிரி இருக்குற வீட்டுல நிம்மதியா தூங்கக்கூட முடியல,கையக்கால மொடக்கிட்டு தூங்க முடியாம கெடக்க வேண்டியதிருக்கு,அதுதான் இப்பிடி வர்றேன்னு,,,,சொல்லி அப்போதைக்கு மழுப்பீட்டான்.

“இந்தப்பைய இப்பிடி வர்றது எப்பிடியோ கடைசி பொண்ணுக்கு தெரிஞ்சி போச்சி.அவ பிடிச்சிக்கிட்டா அவன.அவகிட்ட என்னத்தையோ நைஸ் பண்ணி பேசி ஏங்கிட்ட சொல்லவிடாம பாத்துக்கிட்டான்,அப்போதைக்கு/,

மத்தரெண்டுபையநெலைம இவன் பரவா யில்லைன்னு ஆகிப்போச்சி. இவனா வதுவாரம் முழுக்க வேலைக்குப் போயி ட்டு தண்ணியடிச்சிட்டுத் திரிஞ்சான். அதுகரெண்டு கழுதைகளும் வாரத்துல மூணு நாள், நாலு நாள் வேலைக்குப் போக மீதி நா ஊரச்சுத்தன்னு தண்ணியடிச்சிட்டு திரிஞ்சிட்டு இருந்துருக்குக, ஆனா சம்பளம் மட்டும் கரெக்டா கணக்கு குடுத்துருவாங்க,கொஞ்சம் நஞ்சம் கொறயுறதநான்அன்னைக்கி நைட் கடையில சாப்புட்டேன் ,இன்னைக்கி நைட் கடையில சாப்புட்டேன்னு கணக்குச்சொல்வாங்க,நானும் பெரிசா கண்டுக் குறதுல்ல.சரிதான் ஒழைக்கிற பையங்க சாப்புட்டுட்டு போறங்கன்னு விட்டுறு வேன்,

“கடைசியிலஅவுங்கசாப்புட்டதுவயித்தநெறைக்கிறதுக்கில்ல,ஒடம்பஅழிக்கிற துக்குன்னு தெரிஞ்ச நேரம் நெருக்கி வச்சி கேட்டப்ப வெளியில கடன் வாங்கி கொண்டு வந்து வீட்டுல சம்பளபணம்ன்னு குத்து சமாளிச்சிருக்காங்க,

“சின்ன மகளும் விஷயத்த சொன்னப்ப ரொம்ப சங்கடமா ஆகிப்போச்சின்னு அந்தபொமபளஅன்னைக்கிஎங்கவீட்டுலவந்து பொளம்புனது இன்னும் மனசுல அப்பிடியேஇருக்கு தம்பின்னு அந்த கொரியர்காரன்கிட்ட சொல்லீட்டு ,,,,தம்பி, தண்ணியடிகிறதவிடமுடியலைன்னா அத விருந்துக்கும் மருந்துக்கும் மட்டும் வச்சிக்க,அத விட்டுட்டு இப்பிடி எந்நேரமுன்னு திரியாதன்னு சொல்லி சொ ன்ன சொல்லோட ஈரம் காயிறதுக்குள்ள பஸ்ஸீல அந்நேரம் தண்ணி யோட வந்து பக்கத்துலநிக்குறான்னே நாசமா போற நாயி,

“தா,,,,,,,,,அந்நேரம் போயி போயி சரக்கு வாங்குனாம்ன்னு தெரியல்லண்ணே, அவனுக்குன்னுஎப்பிடிஎங்ககெடைக்குதுன்னும் தெரியலைன்னே,வந்து பக்கத் துல நிக்கிறான்,கழுத என்னத்தக் குடிச்சான்னு தெரியல,நாத்தம் ரெண்டு மைலுக்கு அந்தால அடிக்குதுண்ணே,

டேய் எங்கடா போற இப்பிடி நெலைதெரியாத போதயோடன்னு கேட்டப்ப, நானும்மதுரைக்குஒருகல்யாணத்துக்குத்தான்போறேன்னுசொல்லீட்டு சொன் ன வாயி மூடுறதுக்குள்ள நெல தடுமாறி ஒரு பொம்பள மேல சாய்ஞ் சிட்டான்,

இதுல எந்த விதமான தப்பான எண்ணத்தோடவும் அவன் நடந்துக்கல, சாரி ன்னு சொல்லீட்டு எந்திரிச்சி நின்னுட்டான்.அதுக்குள்ள பாரு அந்த பொம்பள யோட புருசனும் புள்ளைகளும் அவன புடிபுடின்னு புடிச்சிக்கிட்டாங்க,என்ன செய்ய அவன் தப்பான எண்ணத்தோட அப்பிடி செய்யலைன்னு எனக்குத் தெரியும்,ஆனாஅவுங்களுக்குத் தெரியணுமில்ல.இவன் தண்ணி வேற சாப்பிட் டிருந்தானா அது அவனப்பத்தியான தப்பான எண்ணத்துக்கு வழி வகுத்துரு ச்சி/

என்ன செய்ய பின்னே,என்னதான் அவன் செஞ்சது தப்புன்னாலும் எனக்கு தெரிஞ்ச பய அன்றாடம் பாத்துப்பேசி பழகுற மொகம்.எனக்குன்னா ஒரே சங்கடம், அவனுக்கு அரை போதையில பஸ்ஸீக்குள்ள என்ன நடக்குதுன்னே புரியல,

பஸ்ஸீக்குள்ள ஒரே கரைச்சல்,இவன் மேல சாய்ஞ்சவ கத்திக்கிட்டு இருக்கா, பஸ்ஸ போலீஸ் ஸ்டேசனுக்கு விடச்சொல்லி,போதையில தடுமாறி விழுந்த நம்மாளுமன்னிச்சிக்கங்க,மன்னிச்சிக்கங்ன்னுவிடாமகையெடுத்துக் கும்புடு றான்,

அந்நேரம்கண்டக்டர்தான்தெய்வமாவந்துஒருவழிசொன்னாரு, இந்த பையனக் கூப்புட்டுக்கிட்டு பின்னாடி வாசல்கிட்ட போயிருங்க,அடுத்து வர்ற ஊர்ல அவன யெறக்கி விட்டுர்றேன்,இல்லைன்னா அவன அடிச்சாலும் அடிச்சிப் போட்டுருவாங்க,அந்தப்பையன் மேல ரொம்ப உருத்தலா இருந்தா நீங்களும் சேந்து யெறங்கீட்டு அடுத்த பஸ்ஸீல வாங்கங்குறாரு,

“ஏங்கிட்ட சொன்னதையே அப்பிடியே டிரைவர்கிட்டப்போயி சொல்லவும் டிரைவரும் அடுத்த ஊரு வரவும் பஸ்ஸ நிறுத்தி அந்தப்பையன் யெறக்கி விட்டுறாரு,

“எனக்குன்னா ரெட்ட மனசு,அவன் கூட யெறங்குனா கல்யாணத்துக்குப்போக லேட்டாகிப்போகும்,யெறங்கலைன்னா நான் அவன் கூட சேந்த பயலோன்னு பஸ்ஸீல எல்லாரும் நெனைச்சிருவாங்கன்னு,,,,,கடைசியில ஒரு மனசா அவன்கூடவேயெறங்கிஒரு கடைக்கிக்கூட்டிகிட்டுப்போயி மொகத்துல நல்லா தண்ணி யடிச்சி விட்டு சாப்புட வச்சி அப்பிடியே அந்தக் கடையில தானா ஒரு மணி நேரம் ஒக்காந்துருந்துட்டு கொஞ்சம் போதை தெளியவும் கூப்புட்டுக் கிட்டு வந்தேன்.

கல்யாணத்துக்கும் போகல,ஒண்ணுக்கும் போகல.வீட்ல வந்து ஏங் வீட்டம்மா கிட்டசொன்னா,,”ஒங்களுக்கு இப்பிடி ஊருக்கு பரிஞ்சி போகவே நேரம் சரியா இருக்கு,பேசாமாஎங்களயெல்லாம் கொண்டு போயி எங்கிட்டாவது விட்டுட்டு அப்புறமா ஊரக்கட்டிக்கிட்டு அழுங்க,ஆமா மொய்ப்பணம் குடுத்தேனே, அதயாவது உருப்படியா வச்சிருக்கீங்களா இல்ல, ஊருக்குன்னு செலவழிச் சிட்டீங்களான்னு அவ கேட்டப்பத்தான் அதையும் சேத்து செலவழிச்சிருக் கேன்னு தெரியுது. ஒரே வசவுக்காடு வீட்ல,,,,,,என்ன செய்யசொல்றண்ணே ,இப்பிடித்தான்இருக்குபாத்துக்கஅன்றாடம்வீடு எனத்தான் பேச்சை ஆரம்பிக் கிறார் முடிக்கிறார் ஒவ்வொரு தடவையுமாய் போனில் பேசும்போதும்/ அன்றாடங்களிலும் எப்பொழுதாவது ஒரு முறையுமாய் சந்துக்கிற போதும்/

7 comments:

Yarlpavanan said...

அருமையான எண்ணங்கள்
அழகாக இழையோடி இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

வாசிப்பு சுவாசிப்பு...

Kasthuri Rengan said...

உதவுவதற்கும் சில கட்டுப்பாடுகள் வேண்டும்...
தொடர்க தோழர்

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/