29 May 2017

சுவாதீனம்,,,,,,

No automatic alt text available.

ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்
பைத்தியம் போல் தோற்றம் கொண்ட ஒருவர்
சாலையில் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்,
சாலையோரக் கடையில்
டீக்குடித்துக்கொண்டிருந்த என்னிடம்
ஓட்டதை நிறுத்தியவராய் வந்து
கையேந்துகிறார் பரிதாபம் காட்டி/

பரட்டைத்தலையும் இறக்கி விடப்பட்ட
அழுக்கு வேஷ்டியும்
சட்டையில்லா வெற்று உடலும்
அவரை பைத்தியம் என்றே உறுதி செய்கிறது.
அவரின் மேல் பரிதாபப்பட்டு நீட்டிய கையில்
கொடுப்பதற்காய் ஒரு பஜ்ஜியை வாங்கி
அவரது கையில் வைக்கிறேன்.
பஜ்ஜியைவாங்கிஅதை மேலும் கீழுமாய்
அது வைக்கப்பட்டிருந்த பேப்பருடன் பார்த்த அவர்
நான் வாங்கிக்கொடுத்த பஜ்ஜியை
வேகம் கொண்ட மட்டுமாய்
எனது முகத்தில் வீசி எறிந்து விட்டு
ஓடி அலைகிறார்,
ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்/

7 comments:

KILLERGEE Devakottai said...

இவரின் மீது கோபப்பட்டால் நாமும் அவரும் ஒன்றே பாவம் என்ன செய்வது ?
த.ம.1

Yaathoramani.blogspot.com said...

கில்லர்ஜியின் கருத்தே என் கருத்தும்
ஆயினும் இந்த நிகழ்வின் பாதிப்பைப்
படைப்பாக்கும் எண்ணம் தோன்றினால்
நாம் மனித நேயம் மிக்கவரே
வாழ்த்துக்களுடன்..

ராஜி said...

பாவம்

vimalanperali said...

அவரின் மீது பம் கொள்கிற அளவிற்கெல்லாம் இல்லை.கண்முன் பார்த்த நிகழ்வின் பதிவு.நன்றி சார் வருகைக்கு!

vimalanperali said...

படைப்புகள் தோன்றுவது இப்படித்தானே!

vimalanperali said...

வணக்கம் ராஜீ அவர்களே.நன்றி வருகைக்கு!

தனிமரம் said...

பாவம் அவரின் மனநிலைப்பிறல்வு!