31 Jul 2017

வழி பற்றி,,,,,,

சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து விடுகிறது வானம்,அதுவரையாய் சூழ்க் காட்டி கட்டி வைத்திருந்த நீரை மழையாய் பெய்யச்செய்து கொண்டிருந்தது. யாரிடமும்எந்தஅனுமதியும்பெறாமல்எந்தத்தகவலும்சொல்லாமல் இப்படி திடு திப் என வந்து நின்றால்,,,,,,,?கொஞ்சம் பின் வாங்கிப் போகிறதுதான் மனம்.

மழை வந்த நேரம் இவன் போய்க்கொண்டிருந்த இடம் ரயில்வே ட்ராக்காக இருந்தது,

மேம்பாலம்கட்டுகிறபணி ஆரம்பான நாளிலிருந்து இவன் குடியிருக்கிற ஏரியாவாசிகளும்அதைச்சுற்றிஇருக்கிறஊர்க்காரர்களும்ரயில்வேட்ராக்கிற்கு  அந்தப்பக்கமாய்இருக்கிறவர்களும்டவுனுக்குள்போய் வருகிற வழி இதுவாகத் தான் இருந்தது.

இல்லையெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது கேட் வழியாகத்தான் போக வேண்டும்,அதுவும் இல்லையெனில் மேம்பாலம் ஏறித்தான் பயணிக்க வேண்டும்.

அப்படியாய் பயணிப்பதும் இல்லாமல் இருப்பதும் அவரவர்கள் சௌகரியம் என்றாலும் கூட பாலம் ஏறிப்போவைதையோ இல்லை இரண்டாவது, மூன்றா வதுகேட்டின்வழியாய்போவதை விடுத்து இந்த ரயில்வேட்ராக்கின் வழியாகத் தான் வந்து போகிறார்கள்,பெரும்பாலுமாய்/

அது போலத்தான் இவனும் அவ்வழியே செல்கிறான்.வருகிறான்,அலுவலகம் செல்வதற்கும் இதர வேலைகளுக்குமாய்/

மாலையில்அலுவலகம்விட்டுக்கிளம்பும்போதுசற்றுதாமதமாகத்தான் ஆகிப் போகிறது,கிளம்ப நினைக்கிற வேளையில் கிளம்ப நினைக்கிற வேலைக்கு சரியாய் கிளம்பிப்போய் விட முடியவில்லைதான்அது இன்றென இல்லை, என்றைக்குமே அப்படித்தான் ஆகிப்போகிறது.

பாரக்கிற வேலையை காதலிக்கிறவர்களுக்கு இந்தக்கதிதான் போலும், அலு வலகத்திற்கு அலுவலகம் இவன் போல் நேர்ந்து விடப்பட்டவர்கள் கொஞ்சப் பேர் இருத்தான் செய்கிறார்கள்,அந்த ரகத்தில் இவன் முழுமுதல் ஆள் போ லும்/

அலுவலகம் முடிந்து பஜார் போய் காய்கறி வாங்கிக்கொண்டு போக வேண் டும் என நினைத்திருந்தான்,

கத்திரிக்காய்,வெண்டைக்காய்,முட்டைக்கோஸ்,புடலங்காய்நன்றாகஇருந்தால் சுரைக்காய் சௌச்சௌக்காய் இதுதான் அவன் வாங்குகிற வழக்கமான காய் கறிகளிகளாய் இருக்கும்,பின் தக்காளி இல்லாமலா,,,?

மேற்சொன்னஎல்லாக்காய்கறிகளிலும்அரை அரைக்கிலோவாக வாங்குபவன்  தக்காளியை மட்டும் ஒருகிலோ வாங்குவான்,

இப்பொழுது தக்காளி விலை ஏறிப்போனதிலிருந்துகடைக்குப்போகிற போதெல் லாம் ஒவ்வொரு காய்கறிகளின் விலையையும் கேட்டுத்தான் வாங்குகிறான்,

தக்காளி விலை ஏறிப்போன சிறிது நாளிலிருந்து கத்திரிக்காய் விலையும், வெண்டைக்காய் விலையும் ஏறிப்போனது ஏகத்துக்கு/

இது பரவாயில்லை.சின்ன வெங்காயம் வாங்க இன்னும் கொஞ்ச நாள் போ னால் ஒரு மாதச்சம்பளம் முழுவதையும் கொண்டு போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது.என்று நினைத்துக்கொண்டுதான் போய் வந்து கொண்டிருக்கி றான் பஜாருக்கு/

இப்பொழுது அதுவும் போவதில்லை.வழக்கமாக வாங்குகிற கடையில் இப் பொழுது கடைக்காரர் இல்லை,அதற்குப்பதில் அவரது உறவினர் ஒருவர்தான் இருக்கிறார்,பெரியவர் அவர்,அவரது மாமனார் என்றார்கள்,

கடைக்கார் இல்லாத ஒரு நாளில் அவரிடம் காய்கறி வாங்கிய போது கொஞ்சம் கூட குழைவற்று தெரிந்தார்,பேச்சிலும் சொல்லிலும் செயலிலுமா ய்/

கடைக்குக்கடைஇதுபோலானவர்கள்வியாபாரத்தைகெடுக்கவென்றேஇருப்பார்கள்.அதில் இவரும் ஒருவர் போலும்.

அதனால் அவர் இருக்கிற போது கடைக்குப் போக மாட்டான்.இப்பொழுது சிறிது நாட்களாக வாடிக்கையாகவே அவர்தான் இருந்தார் கடையில்.பஜார் வழியாய் போகிற போது வண்டியை விட்டு இறங்காமல் பார்த்துக்கொண்டே போவான்,அவர் கடையில் நின்றால் காய்கறிகள் வாங்க மாட்டான்.

இப்படியாய் மூன்று நான்கு தடவைகளுக்கு மேல் ஆகிப்போனது,

நான்காவது தடவையாய் கடையைப்பார்த்து விட்டு அவரில்லா வெறுமையை தாங்கிப்போன பொழுது இடையில் அவரை பார்க்க நேரிட்டுப்போகிறது,

ஏன் இப்படி பெரும்பாலான நேரங்களில் கடையில் பார்க்க முடிவதில்லையே எனக்கேட்ட பொழுது இல்லை சாயங்கால வேளைகளில் எனது மகளைக் கூப்பிடபள்ளிக்குப்போய்விடுவேன்.அதனால்தான்இருப்பதில்லைஎன்றார்.ஆனால் உண்மை அது இல்லை என்பது போகபோகத்தெரிந்தது.

அவர்வைத்திருக்கிற ட்ராவல்ஸில் வண்டியின் ட்ரைவராகப்போய் விடுவார் எனத்தெரிந்தது,

ஒரே ஒரு வண்டிதான் வைத்திருந்தார்,

காய்கறிகளின் விலைகள் ஏறியதிலிருந்து கடையில் சரியாக வியாபாரம் ஓடவில்லை,நான் பெரியவர்(எனது மாமனார்)அப்புறம் வேலைக்கு என இருக் கிற பையன்என அனைவருக்கும் சம்பளம் கட்டுபடியாகவில்லை. அதனால் தான்எனதுட்ராவல்ஸ்ஒருவண்டிக்குநானேடிரைவராகஓடிக்கொண்டிருக்கிறேன்.

டிரைவரும் கொஞ்ச நாளாக சரியில்லை.அவனுக்கு பணம் கொடுத்து மாள வில்லை,அது சரியில்லை இது சரியில்லை என வண்டியை காரணம் காட்டிக் கொண்டுவந்து நிற்கிறான்,இல்லையானால் எனக்கு சம்பளம் கூட்ட வேண்டும் கட்டு படியாகவில்லை என்கிறான்,சரி எதற்கு வம்பு நமக்குத்தான் டிரைவிங்க் தெரியுமேஎன நானே வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் இப்பொழுது, வண்டிக்குப்போகாத தினங்களில் என்னை கடையில் பார்க்கலாம் நீங்கள்,

போன மாதத்தின் மாலை வேளையாய் என்னை நீங்கள் கடையில் பார்த்த அன்று நான் வண்டிக்குப் போகவில்லை.ஆகவே என்னை முழு உருத்தரித்து நின்றவனாய் காணும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறது உங்களுக்கு.என்றவர் சரி நான் இல்லையானால் என்ன ,,கடை இருக்கிறதே என் பெயர் சொல்லிச் செல்கிற காய்கறிகள் அங்குதானே அடை கொண்டு கிடகின்றன,பின் ஏன் வருத்தம் கொள்கிறீர்கள் வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே வழக்கம் போல எனச்சொன்னவராய் சிறிது நேரம் பேசி விட்டு சரி அப்படியே கிளம்புவோம் எனகிளம்பும் முன்பாக வாருங்கள் ஏதாவது கடையில் போய் டீ சாப்பிடலாம் என்றார்.

கடைக்குச் செல்கிற பொழுதுகளில் என்றாவது ஒரு நாட்களில் கடைக்கு வருகிற டீயை இவனுடனாய் பங்கு போட்டுக்கொள்ளபிரியப்பட்டுக் கொண்டு டீ சாப்பிடுங்கள் என்பார் இவன் மட்டும் தனியாக கடைக்கு காய்கறி வாங்கப் போயிருந்தால், அது அல்லாது இரண்டு மூன்று பேர் நின்றிருந்தால் கேட்க மாட்டார்,நாகரீகம் கருதி மட்டுமல்ல,ஒருவரை விட்டு ஒருவரிடம் மட்டுமாய் கேட்பது அவரது வியாபாரத்தை பாதிக்கும் என்கிற கணக்கில் கேட்க மாட்டார்,

அவரது கணக்கு அந்த நேரத்தில் சரிதான் எனத்தோணி காட்சிப்படும் அந்த இடத்தில் /

அப்படியாய்தவறவிட்டஒன்றை சரி செய்கிற விதமாய் இப்பொழுது கடைக்குக் கூட்டிக்கொண்டு போகிறார் போலிருக்கிறது.

ரோட்டோரக்கடையில்தான் டீ சாப்பிட்டார்கள்,ஒருடீயும் கூடதுணைக்குச் சேர்த்துக் கொள்ள ஒரு வடையுமாய் எடுத்துக்கொண்டார்கள். எப்பொழுது டீக் கடைக்குப்போனாலும்அதுதான்அவனது வழக்கமானமெனுவாக இருந்து போன துண்டு,அதுதான்இன்றும்அதே கடையில்,,,,

டீயைக்குடித்துக் கொண்டே கடைக்குஅருகில் இருக்கிற மரத்தை பார்க்கிறான். இது போல மரங்களைப்பார்ப்பது இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதாகவே போய் விட்டது,சாலையோரத்தில் ஏதாவது பணி என்றால் இல்லை சாலை யை விரிவு படுத்த வேண்டும் என முடிவு பண்ணி விட்டால் முதல் வேலை யாய் மரத்தைத்தான் வெட்டி எடுத்து விடுகிறார்கள். அப்புறம்தான் சாலை வேலை மற்றது மற்றது பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். அப்படியான நேரத்தில் இப்படி கிடைத்த இடத்தில் கடையின் ஓரமாய் சின்னதான ஒரு குழியில் மரத்தை வளர வைத்திருப்பது நல்லவிஷயமாகவே இருக்கிறது.

அது எந்த ஒரு மரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,மரம் என்பதுதானே கணக்கு என்கிறார் டீக்கடைக்காரர்.இவர்கள் இருவரது பேச்சையும் கேட்டவ ராய்/

வீட்டின் ஓரமாய் இருக்கிற வேப்ப மரத்தில் வந்து அடைகிற பறவைகளின் எண்ணிக்கைகொஞ்சம்கூடுதல்காட்டியேஆகிப்போகிறதுசிறிதுநாட்களாகவே/

தின்ன ஏதுமற்றதாலா அல்லது அடைய இடமில்லாமலா என்பது சற்று குழப்பமாகவே உள்ளது இந்த விசயத்தில் ,

சரி இருக்கட்டும் எதற்கும் அந்த பறவைகளிடமே கேட்டு விடலாமே என எத்தனித்தவனினாய் கேட்க முற்படுகிற போது இடறிடுகிற ஒன்றாய் பறவை களின் பாஷையும் அதன் நடவடிக்கைகளும் கொஞ்சம் சிவப்பு சிக்னலாய் வந்து கை காட்டியும் கண் சிமிட்டியுமாய்நின்று காட்சிப்படுகிறது.

சரி சரி வேண்டாம் இந்த பரிட்சை என முடிவெடுத்தவனாய் தினசரி காலை யிலும்மாலையிலுமாய் இரண்டு மூன்று கை நிறைந்த தானியங்களை மொட் டை மாடியில் தூவி விட்டும் அதற்குப்பக்கத்திலேயே மண்பானை மூடியில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டுமாய் வந்து விடுகிறான்.

இவனால் முடியாத அன்று இவனது மனைவி அந்த வேலையை செய்து விடுகிறாள்.இவர்கள் தானியம்போட்டதால் அந்த பறவைகள் வந்ததா இல்லை பறவைகள்வந்ததால்இவர்கள் தானியம் போட்டார்களா,தெரியவில்லை, எனப் புரியாத அளவிற்கு பறவைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது,

ஆனால் கூடியப்பறவைகளுக்கு இவர்களால்தான் வாடிக்கையாக உணவு வைக்கமுடியவில்லை.கம்பு கேப்பை என்றால் விரும்பி உண்ணுகிற புறாக்கள் வேறு கோதுமை அரிசி என ஏதாவது போட்டால் தின்னவே மாட்டேன்கிறது. இதில் அந்த சாம்பல் கலர் பூத்த புறா செய்யும் அலும்பு சொல்லித் தாங்குவ தாய் இல்லை.

கழுத்தைக்கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு கொர்க்,,,,,கொர்க்,,,,என கத்திக்கொண்டு மாடியை ஒரு சுற்று சுற்றி வந்து அப்புறம்தான் மாடியில் விரித்துப்போட்டிருக்கிற கம்பு அல்லது கேப்பையை தின்னும். அப்படித் தின்றால்தான் அதற்கு நிம்மதி.

அதுவும் காலையில் பக்கத்து வீட்டு மாடிக்கு சினப்பிள்ளைகள் பல்துலக்க வந்து விட்டால் அன்று பறவைகள் வராது,

வராது என்றால் அந்த நேரத்தில்தான்,அப்புறம் நேரம் கிடைக்கும் போது வரும் போலிருக்கிறது.

காலையில்சாப்பிடவில்லை,ஒன்பதுமுப்பதுமணிக்கெல்லாம்அலுவலகத்திற்கு வந்து விட்டான். வீட்டில் சாப்பிடவில்லை,

காலைச்சாப்பாடை விட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகப் போகிறது.

காலையில் சாப்பிட்டுவிட்டு வயிற்றைதூக்கிக்கொண்டு ஓடிவர முடியவில் லை, நிறைந்திருக்கிற வயிறு காற்றடித்தது போல் உப்பிப்போய் மூச்சித் திணறுகிற அளவிற்கு திக்குமுக்காட்டம் காட்டி விடுகிறது.

அதற்கு பயந்தே பெரும்பாலுமாய் சாப்பிடாமல் விட்ட வயிறு இப்பொழுது பசி தாங்கப்பழகிப்போனது.

தவிர உடல் உழைப்பு இல்லாத உடம்பில் களவாணிசதைவிழுந்து தொந்தி வைத்துப்போனது இவனுக்கு.

தொந்திவைத்துப் போனதில் கூட வருத்தம் இல்லை இவனுக்கு,ஆனால் உடல் பெருத்தது போல்காணப்படுவதும்முன்பு போல் இலகுவாக இருக்க முடியா மல் போனது தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

ஆகவே காலைச்சாப்பாட்டை கட் பண்ணி விட்டான்.மதியச்சாப்பாடுதான் நேரடியாக/,

அதுவரை டீயும் வடையும் மட்டுமே,சமயத்தில் அது கூட இல்லை.

இன்றைக்கு காலையில் கேப்பை வடையும் டீயும் சாப்பிட்டிருந்தான்.அது கொஞ்சம் மதியச்சாப்பாடு வரை தாங்கியது,தவிர நெஞ்செரிச்சல் புளிச்சே ப்பம வயிற்று கனம்,அதனால் அனாவசிய உடல் தொந்தரவு என்கிற பயம் இல்லை அதுவேகொஞ்சம் நிம்மதியாக இருந்தது.அதையே பழக்கமாக்கிக் கொள்ள முடிந்தால் அந்த நிம்மதியை கைக்கொண்டும் வசப்படுத்தியும் விட லாம் எளிதில் என்பது இவனது மனக்கணக்காக இருக்கிறது சிறிது நாட்களாக/

அந்தசிறிதுஎன்கிற மனக்கணக்கு பொய்யாகிவிடக்கூடாது என்பதில் இப்பொ ழுது கொஞ்சம் உறுதியாக இருக்கிறான்.

சாய்ங்காலம் வீட்டிற்குப்போகிற போது கொஞ்சம் லேட்டாகிப் போனது. இரண் டாவதுகேட்வழியாகப்போகலாம்தான். ஆனால் இந்நேரம்கேட்மூடியிருக்கும், கேட் திறக்க லேட்டாகும்,ஆகவே ரயில்வே லைன் வழியாகப்போய்விடலாம் என நினைத்து வந்தான்.

அலுவலகம் தாண்டி பாய் டீக்கட்டையில் நின்று டீசாப்பிடும் போது மேகம் கட்டிக் கொண்டு நின்றது,கட்டிக்கொண்டு நின்ற மேகத்தை குத்தி விட்டால் தண்ணீர் பொத்துக்கொண்டு விழுந்து விடும் போலிருக்கிறது.

டீயைக்குடித்து முடிக்கும் முன்பாக லேசாக சொட்டு வைத்த மழைத்துளி டீக்கிளாஸில் வந்து சொட்டியது. சொட்டிய தண்ணீர் டீயில் கலந்து டீக்கு ருசி கூட்டியது.கூடிய ருசியுடனான டீயைக் குடித்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு போனபோதுதான் அந்த விபத்து நடந்ததாக அறிகிறான்,

குடித்து முடித்த டீயின் ருசிநாவின் சுவையறும்புகள் எங்குமாய்பரவி பாவி யிருக்க அதன் மணத்துடன் போய்க் கொண்டிருக்கிறான்,

கடை,கடைதாண்டி லாட்ஜ்,லாட்ஜ் தாண்டி வந்த ரயில்வே ஸ்டேஷன் அது தாண்டி வந்து விட்டிருந்த ரயில்வே லைனை கடக்க முனைந்து கடந்தும் விடுகிறான்.

முதலாவதுலைனைக்கடந்து முடித்து இரண்டாவது லைனைக் கடந்து கடக்க முற்படுகையில்தான்எதிரேவந்த இருசக்கரவாகனத்தில் லைனைக் கடக்க முனைந்தவர்கள் வண்டி சறுக்கி விட்டு விழுந்து விடுகிறார்கள்.

கணவனும் மனைவியும் கைக்குழந்தையுமாய் வந்தவர்கள் மழைக்கு முன் பாக போய் விடலாம் என நினைத்து ரயில்வே லைனில் ஏறிய மறுகணம் அது சறுக்கிவிட்டு விட்டு விழுந்து விடுகிறார்கள்.

விழுந்தஅதிர்ச்சியில் அய்யோஎன் குழந்தை என கைக்குழந்தையுடன் அவர் கள் வந்த இரு சக்கரவாகனத்தின் பின் சக்கரத்தில் விழுந்த மனைவி சப்தமிடு கிறாள்,
 
சப்தம் கேட்டு திரும்பிய இவன் அப்பொழுதுதான் கவனிக்கிறான்,

லைனைக்கடந்துவிட்ட இவனது வண்டியின் பின் சக்கரத்திற்கு நேராகவும் அதன் பக்கமாகவும் விழுந்திருந்தார்கள்.இவன் வண்டியை விட்டு கீழிறங்கி கீழே விழுந்து விட்ட கைக்குழந்தையை தூக்கி தாயிடம் கொடுத்து விட்டு கொழந்தைக்குஒண்ணும் இல்லம்மா பயப்படாதீங்கஎனச்சொல்லியவனாய் அந்தஇடத்தைவிட்டுநகர்கிறான்,

அதுவரையிலுமாய் பெய்ய மறந்திருந்த மழைதன் பலம் காட்டிப்பெய்கிறது. குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் ரயில்வே லைனின் அருகிலிருந்த கோ யிலுக்கு ஓடுகிறாள்.

கணவனும்பின்னாலேயஇருசக்கரவாகனத்தைஉருட்டுக்கொண்டு போகிறான். இவனும்மழை நிற்கும் வரை அதே கோயிலில் ஒதுங்கி நிற்கிறான்.

சொல்லாமல் கொள்ளாமல் அவிழ்ந்து விடுகிறது வானம்,அதுவரையாய் சூழ்க் காட்டி கட்டி வைத்திருந்த நீரை மழையாய் பெய்யச்செய்து கொண்டிருந்தது. யாரிடமும்எந்தஅனுமதியும்பெறாமல்எந்தத்தகவலும்சொல்லாமல்/

5 comments:

vimalanperali said...

நன்றி சார் கருத்துரைக்கு
அன்பும் ப்ரியமும்/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும் அன்பும்,,,/

M0HAM3D said...

அருமை சகோ

vimalanperali said...

வணக்கம் முகமது அல்தாப் சார்,
நன்றியும் அன்புமாய்,,,,,,,/