4 Aug 2017

மேட்டுக்குடி,,,,,

சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு.தன் உடலே தனக்கு அந்நியமானது போல/
 
சற்றைக்குமுந்தையசிலவருடங்கள்முன்புவரைகொஞ்சமாகமேடிட்டுத்தெரிந்ததுதான். ஆனால்இவ்வளவுபெரிதாய்அல்ல.ஏதோசின்னதானஒருஇளம்தொந்திபோன்ற அமைப்புடன் உடலை விட்டுத்துருத்தித்தெரியாமல்உடலுடன்ஒட்டியேதான் இருந்தது. அஞ்சுக்கு ரெண்டு பழுதில் லாமல்.

தினசரிகளின்நகர்வுகளில் எப்படியும் ஐந்து கிலோ மீட்டராவது சைக்கிள் ஓட்டி விடுவான். அலுவலகத்தில் அவனது வேலை அப்படி.கடை நிலை ஊழியனு க்கு ஏது ஓய்வு?அதுவும் தனியார் நிறுவனத்தில்/

கடை நிலை ஊழியருக்கான சீருடையிலிருந்த அவன்அனைத்து நிலைப்பணி யாளர்களுக்கான வேலைகலைச்செய்தவன் அந்த அலுவலகத்தில்/

டீ வேண்டுமா,,,?கூப்பிடு அவரை.பைல் எடுக்க வேண்டுமா அவரை அழை யுங்கள்/ வேறெதுவும் தேவையா கறாராக அழைத்து விடுங்கள் அவரை/ இது போக கம்ப்யூட்டரில் ரிப்பேர், கரன்சி எண்ணுகிற மிசின் வேலை செய்யவில் லையா?எங்கேனுமாவது ஒரு பேங்கிற்கு போக வேண்டுமா? அலுவலகத்தில் ஏதேனும் ஒரு டெக்னிக்கல் ஒர்க்கா?எல்லாம் அவன் தலையில்தான்.

சுவர்கள்சூழ்ந்துநின்றஅலுவலகத்தின்ஊழியர்கள்நான்குதிசைகளிலிருந்துமட்டு மல்ல எட்டு திசைகளிலிருந்தும் அழைக்கிற அழைப்பிற்கு அவன் செவி சாய்த்தும் ஓடோடித் திரிந்துமாய்/

அப்படியாய் ஓடித்திரிந்த பொழுதுகளிலும்,வேலை சுமந்த நேரங்களிலுமாய் சைக்கிள்மிதிஅவனுக்கு சுகம் அளித்ததுண்டு.கால ஓட்டத்தில்தான் தெரிந்தது, அது ஓரு சுகம் அல்ல உடற் பயிற்சி என/அதுவாகவும் இருக்கட்டும், இதுவாக வும் இருக்கட்டும்.என்ன இப்போது என அலைந்து திரிந்த நாட்களில் இருந்த உடல் இல்லை இப்போது. அந்த சுறுசுறுப்பும், ஓட்டமும் ஏனோ குறைந்து போனது இப்போது.

அதுஎன்னவெனத்தெரியவில்லை,அதுஎன்னமாயம் எனப்புரியவில்லை. ஓட்ட ம் குறைந்தும் உட்கார்வது அதிகமாக ஆகிப்போன காரணமாய் இருக் கலாம்.

குழித்தொந்தி என்பார்களாம் அந்த மாநிலத்தில்/அது இல்லாதவர்கள் அங்கு மிகவும் குறைவு என ஒரு அறிக்கை போகிற போக்கில் சொல்லிச் செல்கி றதாய்/

அது மாதிரி அவன் நண்பனுக்கு இருந்தது.நண்பனிடம் அவன் பலசமயங்களில் கேட்டதுண்டு, உனக்கு வயிறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது,வயிறு ஆரம்பிப்பது வயிற்றிலிருந்தா கழுத்திலி ருந்தா? தெரியவில்லை சொல் நீ எனக்கு என/

அவன் நண்பனாவது பரவாயில்லை.இன்னும் குண்டாக இருக்கிற ஒரு சிலரை பார்க் கிற போது அவனுக்குள் ஒரு நினைவு எழுந்து மறைவதுண்டு. இவர்க ளுக்கெல்லாம் எப்போது தும்பிக்கை முளைக்கும் என/

நினைப்பதுண்டுதான் அவ்வப்போது அல்லது தினசரிகளின் விடியலில் பல சமயங்களில்/ காலையில் சீக்கிரம் எழ வேண்டும். வாக்கிங் போக வேண்டும் அல்லது சைக்கி ளிங்காவது போக வேண்டும் என/எங்கே எதுவுமற்று எதுவு மற்று தூக்கத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு தூங்கி போய் விடுகிற அதி காலைப்பொழுதுகள் இமைகள் திறப்பதை மறக்கச்செய்து சொக்க வைத்து விடுகிறதுதான்.கூடவே ஓடோடி வந்து போர்த்தி க் கொள்கிற சோம்பலுமாய் சேர்ந்து கொள்ள மெலிதான புரளலுடன் தொடர்கிற தூக்கம் இது எதையும் செய்ய விடுவதில்லை. மாறாக உடல் சோம்பலை வளர்த்து இப்படி குண்டாக்கி வைத்திருப்பதாய்/

சற்றே மேடிட்டுத்தெரிகிறது வயிறு,தன் உடலே தனக்கு அந்நியமானது போல/ கீழ் நோக்கிகுனிகையில் தெரிகிற உடலில் வெள்ளையும் கருப்புமானமுடிகள் அலைபாய்ந்திருந்த உடல் நிறைந்து போன உபாதைகளுடனும், சங்கடங்களு டனுமாய்/

8 comments:

KILLERGEE Devakottai said...

சற்றே சங்கடமான விடயம்தான்...
த,ம,1

கரந்தை ஜெயக்குமார் said...

உடற் பயிற்சியும், நடைப் பயிற்சியும் பலருக்கு மறந்தேபோய்விட்டது

vimalanperali said...

வணக்கம் கில்லர்ஜி சார்,
நன்றியும் அன்புமாய்,,,;

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றியும் அன்பும்,,,,

வலிப்போக்கன் said...

வயிற்றை குறைக்க பயிற்சி செய்தால் அதிகம் பசிக்கிறது.அதனால் பசியை குறைக்க பயிற்சி யை குறைக்க வேண்டியுள்ளது

M0HAM3D said...

தகவலுக்கு நன்றி
தமிழில் கணணி தகவல்

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் முகமது அல்தாப் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/