8 Sept 2017

இடைவெளி,,,,,,

நம்மில் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது அம்மாதிரியான அனுபவப் பகிர்வு? 

நாற்புறமும்கத்தரித்துவெட்டியதுமாதிரிபரந்துவிரிந்தமைதானம். 
 
மைதானத்தின் நடுவே தியாகிகள் நினைவு ஸ்தூபி.ஸ்தூபியை சுற்றி வட்டமாய் கட்டப்பட்ட கம்பிகேட்.ஸ்தூபியின் அருகில் உயரமாய் நின்றிருந்த விளக்குக் கம்பத்தில் சோடியம் லைட்டுகள் நான்கு பக்கமும் திரும்பி.
சோடியம்வேப்பரின்வெளிச்சம்இன்னும்தரையைதொடவில்லை.

மைதானத்தின் இடதுபுறம் இருந்த கோவிலை ஒட்டி வரிசையாக அமர்ந்திருந்த டீக் கடை,சைக்கிள்கடை.தவிட்டுக் கடை,ப்ளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடை.பழைய பேபர் கடை, கயிற்றுக் கடை பக்கத்தில் சிரியதாய் தெருவோரடீக் கடை.அதைத் தாண்டி போஸ்ட் ஆபீஸ் பெரியதாக,காரை பெயர்ந்து,பெயிண்ட் உதிர்ந்து போய். நன்றாக வாழ்ந்து நொடித்துப் போன பெரியதனக் காரரின் வீடாய். மைதானமெங்கும்விரிந்திருந்த பழக்கடைகள், வெங்காயவியாபாரம். 

தெருவிளக்கின் வெளிச்சத்தையும் மீறி அவர்கள் பொருத்தி வைத்திருந்த காடா விளக்கின் வெளிச்சம் காற்றில் ஆடி,ஆடி கண்ணை உறுத்தியது. 

நான் வாங்கிய பாயை சைக்கிளில் கட்டிக் கொண்டிருக்கையில் எதிர் சாரியில் கூட்டம் நிறைந்த ரோட்டிலிருந்து என்னை குறி வைத்து வந்தான் அவன். 

என்எதிரில்நின்று என்னை நிதானித்துப் பார்த்தவன்“டேய்என்னை தெரியுதா”? 
என்றான். 

நினைவுகளின் புரட்டலில் அவனது முகம் சரியாக பிடிபடவில்லை. கேள்விக் குறியுடன்அவனைஅமைதியாய்பார்த்தபோது.............நான்தான்சுந்தரம்என்றான். 

பல்வேறானதிசைகளில் பயணிக்கிற வாழ்க்கை நினைவுகளின் இனி மையை யை வற்ற வைத்து விடுகிறதுதான்.நம்மில் பெரும்பாலா னோருக்கு கிடைக் கிற பாக்கியம்தான் எனக்கும் கிடைத்திருக்கிறது. எவ்வளவு நேரம்தான் அன் பொழுக கூப்பிட்டவனை பேசாமல் பார் த்துக் கொண்டிருக்க? 

இருவருமாய் டீ சாப்பிட்டோம்.“எங்கவேலைதான் பாக்குறேன் நான், காசுக் கடை பஜார்ல நகைப் பட்டறை வச்சிருக்கேன்.”விசிட்டிங் கார்டை நீட்டினான். வெள்ளை வேஷ்டி,வெள்ளைசட்டையில் மிடுக் காய் தெரிந்தான்.துண்டுப் பேப்பர்களால் சட்டைப் பை நிரம்பித் தெரி ந்தது.இடது கையில் வாட்ச் கோல்ட் கலர் செயின் போட்டு,கழுத்தில் மைனர் செயின்,தங்கக்கலர் ப்ரேம் போட்ட கண்ணாடி,“எல்லாமே கவரிங்” எனவும் “பிழைப்புக்காக என்னமோ திங்கிற யேவாரம்” எனவும் சொன்னான். 

எங்களின் கல்யாணம்குடும்பம்,பிள்ளைகள்அவர்களதுபடிப்பு எல்லா மே பேசினோம்.இருவருமாய் இன்னொரு டீக் குடித்தோம்.வழக்கம் போல “நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் வீட்டுக்கு வரணு ம்” எனப் பிரிந்தோம். 

நன்றாக குளு,குளு என வீசிய காற்றில் பறந்து வந்து விழுந்த தூசி யாக போகும் பொழுது அந்த தகவலைச் சொன்னான். 

“நம்ம கூட படிச்ச பஷீர் புரோட்டாக் கடையில வேலைசெய்யிறான்.” “ராமர் கை வண்டி இழுக்குறான்,” செபாஸ்டின் மார்க்கட்டுல மீன் யேவாரம் பண்ணு றான்.என்றான். 

வீட்டிற்கு வந்ததும் லேசாக ஞாபகத்திற்கு வந்தான் சுந்தரம். பள்ளி நாட்களில் அழகாகவும்,நுணுக்கமாகவும்,நன்றாகவும் படம் வரையத் தெரிந்தவன். 

அவன் வரைந்து கொடுத்த தாஜ்மகால் படம் என்னிடம் நிறைய நாட் கள் இருந் தது.அன்றாடங்களின் இயந்திரத்தனமான நகர்வுகளிலிரு ந்து இம்மாதிரியான பழைய பள்ளிநாட்களின் நண்பர்களை சந்திப்பதும்,அவர்களோடு பேசி அளா வளாவதுமான நிகழ்வு மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறதுதான். 

நினைக்கையில்இனிமையாய்இருக்கிறதுதான்நானும்எனதுநண்பர்கள் சுந்தர மும் , பஷீரும்,ராமரும் ஒரே பள்ளியில்தான் பள்ளி இறுதி வரை. 

வெவ்வேறு செக்ஷன்களில் வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயின்ற போதும் கூட நாங்கள் நல்ல மார்க் வாங்கத் தவறியதில்லை. அதனா லேயே எங்களுள் பூத்திருந்த ஒற்றுமைகெட்டிப் பட்டது எனலாம். 

அப்புறம் பள்ளி இறுதியாண்டு முடிந்து கல்லூரிப் படிப்புக்காக கை கொடுத்துப் பிரிந்தோம்.வசதியைப் பொறுத்துதானே கல்லூரிகளின் மேல் படிப்பு அமைகி றது. 

அது போலவே அமைந்து விட்ட கல்லூரி மேல் படிப்புகளை முடித் தும் முடிக் காமலும் ஐவரும் வெவ்வேறு நிலைகளில் வாழ்கையில் செட்டிலாகிப் போய் விட்ட நாட்களை சுந்தரம் பகிர்ந்து கொண்டும், ஆழ விதைத்து விட்டும் போய் விட்டான். .

நாங்கள் அனைவரும் படிக்கும்போது நல்ல நிலையில்தான் இருந் ததாய் ஞாபகம். நன்றாக உடுத்தியும்,உண்டும் இருந்ததாய்த்தான் ஞாபகம். 

பின்எப்படிஇந்தமுரண்பாடு.தெரியவில்லை,சுந்தரமும்அதேயேதான்சொன்னான். தெரியவில்லை என./ 

உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

2 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல நினைவலைகள்...

//பின்எப்படிஇந்தமுரண்பாடு.தெரியவில்லை,சுந்தரமும்அதேயேதான்சொன்னான். தெரியவில்லை என./

உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.//

இதில் என்ன முரண்பாடு இருந்திடப்போகுது, ஏதோ ஒவ்வொரு தொழிலில்தானே அவர்களும் இருக்கிறார்கள்.

படிக்கும்போது இருக்கும் வசதி என்பது பெற்றோர் தேடித்தருவது.. இப்போ இருக்கும் வசதி என்பது நாமாகத் தேடிக் கொள்வது...

அவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வம் இல்லாமல் போயிருக்கலாம்ம்.. ஏதோ உணவுக்கு வருமானம் இருந்தாலும் போதும் என கொஞ்சம் சோம்பேறிகளாகக் கூட இருந்திருக்கலாம்.... வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பங்கள் வந்து வீழ்த்தியிருக்கலாம்.. எதைச் சொல்வது.. அட்ரஸ் கேட்டுப் போய்ச் சந்திச்சுக் கேட்டு வந்து நமக்கும் சொல்லுங்கோ ஹா ஹா ஹா:).

vimalanperali said...

வணக்கம் அதிரா அவர்களே ,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/