12 Oct 2017

துளிர்ப்பு,,,,,,

தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து பெரிதாக என்ன செய்து விட்டோம் அவைகளு க்கு?

கூடவேகொஞ்சம்பிரியமும்,பாசமும்என்றுவேண்டுமானால் சொல்லிக் கொள் ளலாம். நான் ஒரு குடம்,எனது மனைவி ஒரு குடம்,மூத்த மகன் ஒரு குடம், இளைய மகள் இரண்டு குடங்கள் எனமாற்றி, மாற்றி ஊற்றிய தண்ணீர் மண் பிளந்து,துளிர்த்துநெடித்தோங்கி,உயர்ந்துகிளைபரப்பி,பூவும்,பிஞ்சும்,இலைகளும், காய்களுமாய் நிற்கிறது.

அதென்ன அவள் மட்டும் இரண்டு குடம்?ஆமாம் அவளுக்கு மரங்களின் மீது அலாதிபிரியம்உண்டு.மனிதர்களீன்மீதும்தான்/

வேப்பமரங்கள் இரண்டு+ஒன்று=மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,அதோ நீங்கள் பார்க்கிற அந்த சிறு வெற்றிடத்தில் நின்ற நெல்லிக்காய் மரம் நிலைக்க வில்லை.பூச்சி விழுந்து இறந்துபோனது.அது தவிர நீங்கள் நிற்கிற இடத்தி லும், மூலைக்கொன்றாயும்,வரிசைதப்பியுமாய் ஊன்றி வைத்திருந்த நெட்லி ங் கம் மரங்கள் வேர் புழு வந்து இறந்து போனது.

மனிதர்களுக்குமட்டும்தானா,மரங்களுக்கும்,தாவரங்களுக்கும்நோய்வந்து விடுகிறதுதானே?

நட்டு முளை விடுக்கிற நேரத்தில், பயிர்விளைந்து முழுதாகபலன்தருகிற நேரத்தில்,இவை இரண்டும் இல்லையென்றாலும் கூட இடையில் வந்து விழு ந்து விடுகிற நோயில் கருகிப்போகிற அல்லது மடிந்து விடுகிற நோய் தாக் கிய பயிர்களையும்,இதுமாதிரியான மரங்களையும் நட்ட விவசாயி நிலத்தில் விதைத்ததைகையில்அள்ளிபலனாய்பார்க்கிறவரைமனதில்ஈரத்துணியைசுற்றிக் கொண்டுதான் திரியவேண்டியிருக்கிறது.

எங்களைப்போலவீட்டைசுற்றியிருக்கிறபக்கவாட்டுவெளிகளில்மரம்,செடி நடுகிறவர்களின்கவலைமனதரிக்கிறஅளவிற்குஇல்லாவிட்டாலும் கூட மன மரிக்கிறவர்களின்கவலையைதன்னில்தாங்கப்பழகிக் கொண்டவர்களாகவும், மரங்க ளின் மீதுதனி காதல் கொண்டு இப்படி இரண்டு குடங்கள் தண்ணீரை மொண்டு கொண்டு ஊற்றுவாள்.

அதிலும் அந்த பன்னீர் மரங்கள் மீது அவளுக்கு தனிபிரியம் உண்டு.அதுதானே பூக்களைச்செரிகிறது.இலைகள் உதிர காய்கள் விழ,பிஞ்சுகள் கிடக்க மரங்களி லிருந்து செரிந்த பூக்களை பூ ஒன்று நடமாடி பெறக்கி எடுத்த காட்சியை காண கண் கோடி வேண்டும் போலிருக்கிறது.

பன்னீர மரப்பூக்களை பொறுக்கி நீட்டிய உள்ளங்கையில் வரிசையாக வைத்து பார்ப்பாள்.வலது கையால் எடுத்து இடது கையில் அடுக்கி வைத்து இரண்டு கைகளாலும் தொடுத்து தலையில் சொருகிக்கொண்டு வளைந்த நாணலாய் நடந்து வருவாள்.

அவளது ஆசைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.ஆனாலும் அணையிட்டு விடவும் முடியவில்லை.செய்யட்டுமே இதுமாதிரியானவைகளை அவள் மன லயங்களிலிருந்து மீட்டெடுத்தவாறு/

“ஏன் இப்படியெல்லாம் செய்யிற அசிங்கமா” எனச்சொல்லும் அவளது அண்ண னின்காதில் இரண்டு பூக்களை சொருகிவிட்டு நாக்கை சுழற்றிக்கொண்டு முன் வரிசைபற்கள் தெரிய வாய் கொள்ளாமல் சிரிப்பாள்.

“போ அங்கிட்டு” என அந்த சப்ததை பார்த்து அதட்டும் அவளது அப்பாவிடம் “ஊம் அவன் மட்டும் நேத்து ஏன் ஜாமெண்ட்ரிபாக்ஸ தூக்கீவச்சிக் கிட்டான்” .என முகப்பலிப்புக்காட்டி அப்பாவின் கழுத்தை கட்டிக்கொள்ளுகிற அவளைப் போல் உள்ள பிள்ளைகளின்,பையன்களின் பேனா, ஜாமெண்ட்ரி பாக்ஸ் வரை மறைந்து போகிறதாய் சொல்லப்படுகிற புகார்கள் வீடுகளெங்கும் நிறைந்து போய்த்தான் உள்ளது.

“ஏன் அப்படி”? அவைகளைமட்டுப்படுத்த வேண்டியதுதானே?என்கிற கேள்விக ளுக்கு “விடுங்கள் அதெல்லாம் வேண்டாம்,நடந்து விட்டுப்போகட்டும் இது மாதிரியானநிகழ்வுகள்என்பதேபதிலாய்இருக்கிறது.

அடித்துக்கொள்கிறசகோதர,சகோதரிகளும்காணாமல்போகிறஅவர்களதுபேனா, பென்சில்களும்,ஜாமென்ட்ரிபாக்ஸீகளும்தொடுத்துச்சொல்லப்படுகிறஅவர்களது
புகார்களும்இருக்கிறவரை வீடுகள் நிறைந்தே காட்சியளிக்கிறது.

அந்தகாட்சிகளின்வெளிப்படுதலில்அன்பும்,கோபமும்,கண்டிப்பும்மனலயங்க
லிருந்து மீட்டெடுக்கப்படுகிறநெகிழ்தலும்நடந்துபோய்விடுகிறதுதான்.

அப்படியான நடப்புகளும், பிள்ளைகளின் அசைவுகளும், பூப்பெறக்கல்களும்,
பூத்தொடுத்தல்களும்நன்றாகவேயிருக்கிறதுபார்ப்பதற்கு.மனம்லயிக்கவும்,
ரசிக்கவும்முடிகிறது.

வாய்கொள்ளாஅவளதுசிரிப்பிலும்,கைவிரித்துமலர்ந்த அவளது மென்ஸ்பரிச த்திலும்  மனம்அவிழச்செய்து விடுகிறாள்.

தண்ணீர் ஊற்றியதை தவிர்த்து என்ன செய்தோம் அவைகளுக்கு?கூடவே கொஞ்சம்,பிரியமும் பாசமும்/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அடித்துக்கொள்கிறசகோதர,சகோதரிகளும்காணாமல்போகிறஅவர்களதுபேனா, பென்சில்களும்,ஜாமென்ட்ரிபாக்ஸீகளும்தொடுத்துச்சொல்லப்படுகிறஅவர்களது புகார்களும்இருக்கிறவரை வீடுகள் நிறைந்தே காட்சியளிக்கிறது.

உண்மை
உண்மை
அருமை
தம 1

vimalanperali said...

இப்பொழுது அவ்வகைகள்
காணாமல் போனதுதானே பிரச்சனை,
இல்லாமல் இருக்கிற போது இருந்த
நிறைவு இப்பொழுது இருக்கும்
போதில் இருப்பதில்லை,

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா.

Yarlpavanan said...

மனிதர்களுக்கு மட்டும் தானா, மரங்களுக்கும், தாவரங்களுக்கும் நோய் வந்து விடுகிறது தானே?
சிந்திக்க வைக்கும் கருத்து.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்க்கம் சார்,
நன்றியும் அன்பும் மேலுற்றுப்போக,,,/