22 Oct 2017

விடுமுறை தினத்தின் வடு சுமந்து,,,,,,,

விடுமுறை தினங்களில் இப்படியாய் இரு சக்கர வாகத்தில் இலக்கில்லாமல் சுற்றித் திரிவதும் நன்றாகவே இருக்கிறது,முதலிலெல்லாம் சைக்கிளில் ,இப்பொழுது வசதி வந்ததும் இரு சக்கர வாகனத்தில்/

அதுதான் ஒரு இரு சக்கர வாகனம் இருந்தால் தேவலாம் என மனதில் நினைத் தாலே நான்கைந்து கம்பெனிகள் உடனே கனவில் வந்து எங்களது வாகனம்,,, என ஆரம்பித்து அவர்களது கம்பெனி வாகனத்தின் சிறப்பையும் அதன் விலை யையும்,மொத்தமாக பணம் கொடுத்து வாங்க முடிந்தாலும் சரி, இல்லை என்றால் தவணை முறையில் நீங்கள் பணம் கட்டி வாங்கிச் செல் வதற்குமாய் ஏற்பாடு செய்து தருகிறோம் எனச் சொல்லி தண்ணீர் குடிக்கா மல் பேசி விட்டு சென்று விடுகிறார்கள்.

கனவு கலைந்து காலையில் எழுந்து பார்க்கும் பொழுது கனவில் விதைத்த எண்ணம் ஆழமாய் வேர் ஊன்றிப்போகிறதாய் மனதில்,

அப்புறம் என்ன செய்ய ஊனிய வேரை அறுத்தெரியவா முடியும்,சரி என ஏதாவது மனதுக்குப்பிடித்த கம்பெனியில் போய் நின்று வாங்கிவந்தவாகனம் தான் இது.

அதில்தான் இப்படியாய் போய்க் கொண்டிருக்கிறான்.

பாலத்தின் வழியாகத்தான் போனான்.ஆனால் பாலத்தின் அருகாகப் போனவ னுக்கு ஒரு யோசனை,பாலத்தின் மீதேறிப்போய் பஜார் சென்று அங்கு ஏதாவது ஒரு காய்கறி வாங்கிக்கொண்டு வரலாம் என்பதுவே இவனது திடீர் முடிவாய் இருந்தது,

வேண்டாம்அப்படியெல்லாம்,வீட்டில்தான்காய்கறி கிடக்கிறதே,நேற்று காலை தானே இவனும் மனைவியுமாக போய் வாங்கி வந்தார்கள்.

நேற்று இவனும் மனைவியுமாய் போன போது கடையைஅடைத்துஇருக்கும் காய்கறிகளில் பாதியை காணவில்லை.இருந்த கொஞ்சமும் முகம் வாடிப் போய் இருந்தது,

வாடிப்போய் இருந்தவைகளும் கைக்கு எட்டாத விலையில் இருந்தது,கடைக் காரரிடம் கேட்டதற்கு கடைக்காரர் தலையிலடித்துக்கொண்டு சங்கடமாய் நெளிந்தார்,

முட்டைக்கோஸ் எந்தக்காலத்துல கிலோ நூறு ரூபாய்க்கு வித்துச்சி,இப்பிடி இருந்தா நாங்க எப்பிடி யேவாரம் பண்ன சொல்லுங்க,,,எனச்சொன்ன போது இவன் மனைவி கேட்டாள் தீபாவளின்னா பொதுவா மட்டன் சிக்கன் வெலை தான கூடும்,காய்கறி வெலை கூடுதே,பொதுவா இந்த நேரத்துல தக்காளியும் தேங்கா வெலையும்தான் கூடும்,ஆனா மத்த காய்கறிக வெலை கூடியிருக்கே ஆச்சரியமா இருக்கு என்றாள்,தர்மசங்கடமாக சிரித்த கடைக்காரரிடம் காய் கறிகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள்,

அந்த நினைவை பின்பற்றியவனாய் பாலத்தின் கீழாக வந்து வீடு வந்து சேர்ந் தான்.

இன்று மூன்றாவது ஞாயிறாய் இருக்கிறது,இந்தஞாயிறின் சிறப்பென ஒன்றும் இல்லை எனச்சொல்லி விட்ட போதிலும் கூட தீபாவளியை பின் தள்ளிவிட்டு அது முடிந்த பின்னாய் வந்த ஞாயிறு என வேண்டுமானால் சொல்லலாம்.

தவிர அவசரஅவசரமாய் போய் கறி எடுக்க வேண்டிய தேவை இல்லை, மட்டன்அல்லதுசிக்கன்வேணுமாஎனமனைவியிடம் கேட்ட பொழுது இல்லை, ”எதுக்கு இப்பத்தானே எடுத்தோம்.மூணு நாளுதான ஆகியிருக்கு வேணாம் விட்டிருங்க” என்று சொன்னபோது பிள்ளைகளும் அதையே முன் மொழிந் தார்கள்,

பெரியவள் பரவாயில்லை.சின்னவள் ”வேண்டாம் என்றால் வேண்டாம்தான் கறியை எடுத்துக்கொண்டு வந்து தட்டு முன்னால் வைத்த போது கூட சரி, தொட்டுக்கூட பார்க்க மாட்டாள்.”ஏன் இப்பிடி செய்யிற என்றால் வேணாம்ன் னு சொன்னத கொண்டு வம்பா கொண்டு வந்து வச்சிங்கின்னா எப்பிடி நாளைக்குப்பின்ன இதே பழக்கம் ஆகிப் போகும்.ஒன்ன வேணாமுன்னு கடை பிடிச்சா வேணாம்தான்,அதுல வெட்டியா காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டம்ன் னா அப்புறமாபின்னாடி செரமம்””நான் சொல்றது எல்லாத்துக்கும் பொருந்தாது. அதே நேரம் எல்லாத்துக்கும் பொருந்தாம இருக்காது,என்பாள் மேலும்/

பெரியவள் அப்பிடியில்லை,சரி என போய் விடுவாள்,இருந்தாலும் சரி இல் லையென்றாலும்சரி,இல்லைஎன்றால்என்னஅவளுக்கு முகம் கொஞ்சம்
கோணும். அவ்வளவே, அந்தக் கோணலும் கூட சிறிது நேரத்தில் சரியாகிப் போகும்.அதையாரும்போய்சரிசெய்யவேணாம்.தானாகவேசரியாகிப் போகும். அந்த சரியான தனங்களுடன் நகன்று போகிற வாழ்க்கையுடன் கரம் கோர்த்து இணைந்து செல்பவளாக இருக்கிறாள்.

காலையில் எழுந்ததிலிருந்தே மிகவுமாய் தொந்தரவு செய்த இடுப்பு வலியை அவ்வளவு லேசாக ஓரம் கட்டி விட முடியவில்லை,ஒரு மூன்று மாத ங்களாக இல்லாமல் இருந்தது,எந்தவித தொந்தரவும் அற்றும் இது பற்றிய சிந்தனையே இல்லாமல் நிம்மதியாக இருந்தான். இன்று அந்த நிம்மதியை குழைத்து எறிந்தது போல வந்து உடம்புக்குள் உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் தொந்தரவு பண்ணுகிறது,சமயத்தில் நிறைய,,/

நேற்று அலுவலகத்திற்கு செல்லும் போது ஒன்றும் தெரியவில்லை.அல்லது மற்ற மற்ற யோசனைகளில் தெரிந்த வலியை அவ்வளவாக உணரவில்லை எனவே தோணிகிறது.

மதியம் வேலையெல்லாம் முடிந்த பின்னாக சாப்பிட எழுந்திருக்கும் பொழுது இடுப்பில் வந்து பிடிவாதம் காட்டி அமர்ந்து கொண்டு விலக மறுக்கிறதாய் வலி,

படக்கென எழுந்து நின்று விடக்கூட முடியவில்லை.கொஞ்சம் பிரேக்கிட்டு பிரேக்கிட்டு தாங்கித் தாங்கி எழுந்து நிற்பது போல் நின்றுதான் சாப்பிடப்போக வேண்டியதாகிப் போகிறது.

அன்றுசாப்பாடுகொண்டுவரவில்லை,தீபாவளிக்குமறுநாள்வீட்டிற்குப்போய்த்தான்சாப்பிடப்போகவேண்டும்,வீடுஇங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும். இரு சக்கரவாகனத்தில்தான் போய் விட்டு வந்து விடலாம்,

வீடு,,,,அங்குபோய் சாப்பாடு என்கிறபோது கொஞ்சம் நேரமாகி விடுகிறதுதான். வீட்டிற்கு போகிற போது கொஞ்சம் மனம் மந்தம் விழுந்து விடுகிறது போலவும் அல்லது ஏதாவது ஒன்றின் கவன ஈர்ப்பில் சிக்கியும் அழகு வயப் பட்டுமாய் திரிகிற கட்டாயம் ஏற்பட்டு விடுகிற சமயங்களில் தானாய் தாம தமாகிப் போகிறதுதான் சாப்பிட்டு முடித்து திரும்பவுமாய்ஆபீஸ்வருவதற்கு,,,/

ஒரு தடவை இப்படித்தான் சாப்பிட்டு வரும் பொழுது பக்கத்து தெருவழியாக வந்து கொண்டிருந்தான்,

இவனது நண்பனின் அம்மாவுடன் அவளது மருமகள் கொஞ்சம் சப்தமாய் பேசிக்கொண்டிருந்தாள்”,என்ன இப்ப,”,,,என்பது போல,,/.

தெரு முக்கு திரும்பியதிலிருந்து ஆறாவது வீடு/வேகமாக போய்க் கொண்டி ருந்தவனின் காதில்“என்ன இப்பவின் கடைசி இழுவை மட்டும் வந்து மோதி யதாக இருக்க இவனுக்கு அதற்கு மேல் போகவும் மனதில்லை, போகாமல் இருக்கவும் முடியவில்லை.

வண்டியின் வேகம் குறைத்தவன் லேசாக வீட்டிற்குள் எட்டிப்பார்க்கலாம் என கொஞ்சம் தலையை அந்தப் பக்கமாக திருப்புகிறான்.அந்நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியில் வந்த மருமகள் இவனைப்பிடித்துக் கொள்கிறாள்.

“சார் நீங்களே சொல்லுங்க,ஏங் மாமியார் ஒண்ண சொல்றாங்க,ரொம்பவும் இல்ல,கொஞ்சம் அக்கம் பக்கத்துக்காரங்ககூட பாத்துப்பழகுங்குறாங்க,அது கூட ஒரு வகையில சரின்னு எடுத்துக்கிறலாம்,ஆனா கொஞ்சம் கெத்தா இரு, நாம எல்லாம் பண வசதியோட இருக்குற ஆள்க,அதுனால அக்கம் பக்கத்துக் காரங்க கூட டச்சு வச்சிக்கிறாதங்குறாங்க,அவுங்க சொல்றது வாஸ்தவமும் இல்ல,நடைமுறைக்கு ஒத்து வராத ஒண்ணுன்னு எனக்குத் தெரியும் .அப்பிடி யே வாஸ்தவமுன்னு வச்சிக்கிட்டாலும் கூட நான் எப்பிடி நாலு பேரு கூட பழகாம பேசாம இருக்க முடியும், இல்ல இருந்துற முடியும் சொல்லுங்க,

”நான் நெறை மாசமா இருக்கும் போது ஏங் வீட்டுக்காரரு நைட் டூட்டிக்கு போயிருறாரு,ஏங்மாமியாருகிராமத்துல இருந்து கடைசி பஸ்ஸீக்கு வர்றமு ன்னு சொன்னவுங்க கடைசி பஸ்ஸீ வரலைன்னு சொல்லி அவுங்களும் வரல,ஏங் வீட்டுக்காரருக்கு மனசு பிடிக்கலை என்னைய தனியா விட்டுட்டு போறதுக்கு,லீவு கேட்டுப்பாக்குறாரு அவுங்க மேலிடத்துல குடுக்கமாட்டேங்கு றாங்க, என்ன செய்ய பின்ன,என்னைய விட்டுட்டு போயிருறாரு,நானும் அக் கம் பக்கத்து வீடுகள்ல போயி சொல்லல இத.அவுங்க யாருக்கும் தெரியாது இந்த விஷயம்,ஆனா இதையெல்லாம் கவனிச்சிக்கிட்டு இருந்த எதுத்த வீட்டு பெரியவரு என்ன அவுங்க வீட்டம்மாவையும் சின்ன மகளையும் விட்டு அவுங்க வீட்டுக்கு கூட்டீட்டு வரச்சொல்லீட்டாரு,எனக்குன்னா ஒரே தயக்கம். என்னடாஇது அடுத்தவுங்க வீட்டுல போயி எப்பிடி தங்குறதுன்னு நெனைப்பு,,,, ஏங் தயக்கத்தக்கேள்விப்பட்டவரு என்ன பண்ணீட்டாருன்னாச் சின்ன மகள மட்டும் ஏங்கூட படுக்க வைச்சிட்டு இவரு தெரிஞ்ச ஆட்டோவுக்கு போன் பண்ணி சொல்லீட்டு ராப்பூராம் தூங்காம முழிச்சிக்கிட்டு அவரு வீட்டு வாசல் லயே லைட்டப் போட்டுக் கிட்டு காவலுக்கு ஒக்காந்துருந்தது மாதிரி ஒக்காந் திருந்தாரு.

”அவருக்கு இருக்கும் எங்க பெரிய அண்ணனோட வயச நெருக்கி,அவரப் பாக் கும் போது பூரா எங்க அண்ணன நான் நெனச்சிக்கிருவேன்,ஆனா அன்னைக்கி நைட்டு எனக்கு ஒண்ணும் ஆகலதான்,இருந்தாலும் அவரோட கரிசனையும் அவரோடகவனிப்பும் பெரிய விஷயமில்லையாசொல்லுங்க”,,,,என இவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளது மாமியார் வந்து விட்டாள் இடுப்பில் கை வைத்தவாறே,,,/

பொதுவாகவே அந்தத்தெருவில் அவளது பிம்பத்தை அப்படித்தான் பதிய வைத்திருந்தாள்.கொஞ்சம் முரட்டுத்தனம் காட்டியும் கொஞ்சம் கரடு முரடு கலந்த பிம்பமாயும்/

அவரைப் பார்த்ததும் ”அம்மா வணக்கம்மா” நான் ஒங்க மகனோட பிரண்டுமா, நானு தாலுகா ஆபீஸில வேலை பாக்குறேம்மா, மத்தியானம் சாப்புட வந்தே ம்மா,போகும்போது ஒங்க மருமக பேசிக் கிட்டு இருந்தா நின்னேன் கொஞ்சம், அவ்வளவுதாம்மா,,,” எனச்சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த அம்மாள் பேச ஆரம்பித்தாள்,

“தம்பி நான் கேட்டுக் கிட்டுதான் இருந்தேன் அவ ஒங்ககிட்ட பேசுனதையெ ல்லாம்.எனக்கு தம்பி அப்பிடியே இருந்து பழகிப்போச்சி,இனிம போயி நீ மாறி புதுஆளா புத்துருவா வான்னா என்னால வர முடியாது.அது அவ்வளவு லேசும் இல்லை, அப்பிடியே மாறி வந்தாலும் கூட எப்பவாவது ஏங்கொணம் வெளி யில தலை தூக்கத்தான் செய்யும்.அந்த கொணங்கள நான் தூக்கி எறியிறது ரொம்பவே செரமம் தம்பி,ஏங் மகன் கூட வைவான் ஏன் இன்னும் அப்பிடியே அந்தக் காலத்துலயே இருக்கீங்கன்னு நாங்க அந்தக்காலத்து ஆட்க, அப்பிடித் தாண்டா இருப்பம்ன்னு சொல்லீட்டேன்.ஆனாலும் இப்பம் ஏங் மருமக பேசுற தயும் சொல்றதயும் வச்சிப் பாக்கும் போது நானும் கொஞ்சம் மாறித்தான் ஆகணும்போலயிருக்குப்பா மாறிக்கிறேன்,இல்லபழைய படியுமா கிராமத்துல யே போயி இருந்துக்கிறேன்.ஆனா அங்க போனாலும் அதுதான நாலு பேற அனுசரிச்சுத்தான் ஆகணும்,அப்பத்தான் பொழப்ப ஓட்ட முடியும்முன்னு எடுத்துடுறேன் தம்பி” என அவர் சொன்னதும் இவன் மனதுக்கு மிகவும் சங்க டமாகிப் போய் விட்டது,

இவன் சொன்னதை மருமகளிடம் பேசியதை நல்ல படியாக எடுத்துக் கொண் டாரா அல்லது தப்பாக புரிந்து கொண்டு வார்த்தையில் கோபம் புதைத்து பேசுகிறாரா என்பது தெரியவில்லை,

“அம்மா இல்லம்மா நான் ஒங்களுக்கு சொல்ற அளவுக்கு பெரிய ஆளு இல்ல ம்மா இருந்தாலும் ஒங்க நடப்பால இவுங்க வாழ்க்கை பாதிச்சிடக் கூடாது ம்மா,ஒங்களப்பொறுத்தஅளவுக்குநீங்கவாழ்ந்து முடிச்சிட்டீங்க,ஆனா அவுங்க இனிமதாம தொவக்கணும் வாழ்க்கைய ,ஒங்க மகனும் மருமகளும் நாலு யெடங்களுக்குபோகணும்வரணும் ,நாலு பேர் கூட பேசணும் ,பழகணும், ஒங்க பேரன் பேத்திகள படிக்க வைக்கணும்,அதுகளுக்கு நாலு நல்லது பொல்லது பண்ணனும்,வளத்து ஆளாக்கணும்,நாலு யெடங்களுக்கு போயி அதுக ளுக்கு வேலை தேடணும், கல்யாணம் பேசணும்,அவுங்களுக்கு புள்ளைக ஆகும் போது அதுகள கவனுக்கணும், ,அதுகள வளத்து பண்டுதம் பாத்து ஆளாக்கி வரும் போது அவுங்க பொதுவான யெடத்துல போயி ஜோதியில ஐக்கியமாகி நீந்தித்தாம்மாஆகணும்.அதமனசுலவச்சிக்கிட்டுசொல்லத்தான்வந்தேன்.நீங்களே அத புரிஞ்சிக்கிட்ட மாதிரிவந்து ஏங்கிட்ட சொன்னீங்க,அது போதும்மா எனக்கு ,ஏன்னா ஏங் பிரண்டோட குடும்பம் நல்லா இருக்குங்குறப்ப எனக்கும் அது பெருமைதானம்மா,

“இப்ப நீங்க ஒண்ணும் கெட்டுப் போயி நிக்கல,இருந்தாலும் ஏங் பிரண்டு ஏங் கிட்ட வந்து ஒங்களப்பத்தி கொற பட்டு கொஞ்சம் எங்க அம்மா கிட்ட பேசுன்னு சொல்றப்ப எனக்கு ஒரு மாதிரியா ஆகிப் போச்சி.நானும் எப்பிடி வந்து ஒங்க கிட்ட பேசுறதுன்னு யோசிச்சிக்கிட்டும் தர்ம சங்கடப்பட்டுக்கிட்டு மா இருந் தேன், என்ன இருந்தாலும் நீங்க வயசுல பெரியவங்க நான் ஒங்க புள்ள வயசுல நிக்குறவன்.,தப்பாஎடுத்துக்கிறாதீங்கம்மா,,,அப்படியேநான்சொன்னதுதப்புன்னு புரிஞ்சிக்கிட்டீங்ன்னா மன்னிக்கம்மா,,,எனச் சொல்லி விட்டு கிளம்பும் போது அவர்களதுவீட்டிற்கு வெளியில் இருந்த வேப்ப மரத்தில் பூத்து நின்ற பூக்களும் அதன் அருகில் அமர்ந்திருந்த பெயர் தெரியாத பறவை யும் இவனைப் பார்த்து சிரித்ததாகப்பட்டது.அந்த சிரிப்பில் ஒரு ஒட்டுதலும் சினேகமும் ஒட்டிக் கொண்டிருந்ததாய்ப் பட்டது..

இடுப்பு வலியினால் எழுந்து செம்மையாய் நடக்கக்கூட முடியவில்லை, யாராவது அருகில் இருந்தால் அல்லது பக்கபலமாக கூட்டிச் சென் றால் தேவலாம்போலத் தோணியது,

“ஆமாம் இப்பிடி நேரம் கெட்ட நேரம் வரைக் குமா முழிச்சிக்கிட்டு இருங்க, ராவெல்லாம் தூங்காம முழிச்சிக்கிட்டு புஸ்தகம் படிச்சிக்கிட்டு டீ வியப் பாத் துக்கிட்டு கம்ப்யூட்டர நோண்டிக்கிட்டு இருந்தா இப்பிடி இடுப்புப் புடிக்காம என்ன செய்யும்,,,?நீங்க செய்யிற வேலைக்கு இடுப்பு மட்டுமா புடிக்கும் ,,,,,, , , ,,,கூடத்தான் புடிச்சிக்கிரும், ஆமா,”

”அப்பிடி ஏதாவது ஆனாக் கூட நல்லதுதான் ,அப்பத்தான் சும்மா இருப்பீங்க, என்னமோ பள்ளிக்கூடத்துப் புள்ள பரிட்சைக்கு படிக்கிற மாதிரியில்ல டெய்லி புத்தகமும் கையுமா இருக்குறீங்க, இதுல கம்ப்யூட்டரையும்,டீவியையும் தொ ணைக்கு சேத்துக்கிறீங்க, டெய்லி ராத்திரி தூங்குறதுக்கு ஒரு மணி இல்ல ரெண்டு மணின்னுஆக்கீருறீங்க.புள்ளைங்க கூட வையிது சின்னவ என்னால தூங்கக்கூட முடியல அப்பா பண்ணுற கூத்துனாலைன்னு சொல்றா, பெரிய ஒங்ககிட்ட நேரடியாவே கொற சொல்ல ஆரம்பிச்சிட்டா,அப்புறமும் நீங்க அவ கிட்ட சிரிச்சி பேசி சாமாளிச்சிறீங்க,அவ அந்த நேரத்துக்கு ஒங்ககிட்ட சமா தானம் ஆயிக்கிறா, ஏங்கிட்ட வந்து பொலம்ப ஆரம்பிக்கிறா நான் ஒங்க கிட்ட வந்துதான் சொல்ல வேண்டியதா இருக்கு அவுங்க சொல்றதப் பூரா”,,,,, என சொல்கிற மனைவியை ஏறிடுகிறவன்.”சரி நாளையில இருந்து கரெக்டா தூங்க ஆரம்பிச்சிருறேன்,”என்பான்.

”நாளையில் இருந்து என்ன நாளையில இருந்து இன்னைக்கி நைட்டுல இருந் தேன்னு சொல்லுங்க என்பாள், ஐவன் பேச்சிற்கு பதில் பேச்சாக,,/

”இன்னைக்கி டாக்டர் கிட்ட போனப்ப அவரு சொன்னது ஞாபகத்துல இருக் குல்ல ,ஆமா அத மறந்துட்டு பேசாதீங்க,வயசும் ஆகுது உங்களுக்கு,ஒடம்பும் தளறுது ஞாபகம் வச்சிக்கங்க,சும்மா டாக்டகிட்ட தலைய தலைய ஆட்டிக் கிட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா பழைய குருடி கதவத் தெறடின்னு ஆரம்பிச்சிறுக்கக்கூடாது,”என மனைவி சொன்ன தினத்தன்றின் காலை நேரம் டாக்டரிடம் போயிருந்தான் மனைவியுடன்,

மனைவியுடன்போனது வம்பு என ஆஸ்பத்திரிக்கு போன பின்தான் தெரிந்தது. இவன் சொல்லும் முன்பாக இவனது உடல் நலக்குறைவையும் இவனிடம் இருக்கிற குறைபாட்டையும் சொல்லி விட்டாள்,

முக்கியமாக தூக்கம் பற்றியும் சாப்பாடு பற்றியுமாய் சொல்லிவிட டாக்டர் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார் மிச்சத்தை.

சரி பரவாயில்லை.இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்,இனி நடப்ப வை எனது வைத்தியத்திக்கு கட்டுப்பட்டும் உதவி செய்யுமாறுமாய் இருக் கட்டும் எனச்சொல்லி அனுப்பினார்,அது படி செய்தால் இடுப்பு வலி வராது என்பதற்கான உத்தரவாதம் தெரிய ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி வீடு வந்தவன் இப்பொழுது மறு முறையுமாய் டாக்டரிடம் போகலாமா என யோசி க்கிறான்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

vimalanperali said...

நன்றியும் அன்புமாய்!