27 Jan 2018

சொல்லிச்செல்லிய,,,,,

அவள் போன் பண்ணிய வேளை மாலை நான்கரை மணியிலிருந்து ஐந்து மணிக்குள்ளாக இருக்கலாம்.

பிரியமானவள்,மனதிற்குமட்டுமல்ல,செயலாலும்அன்பானவள்,ஆதரவானவள், நல்உள்ளம் கொண்டவள்,யார் என தராதரம் பார்க்காமல் பஞ்சாரத்துக் கோழி யாய் அரவணைப்பவள் அல்லது அரவணைக்கும் உள்ளம் கொண்டவள்.

அவளது உள்ளன்பிற்கும் பேரன்பிற்கும் எல்லையில்லை என வாதிடும் போது முத்து சொல்கிறான்,”விடுங்க நண்பா,அப்பிடியெல்லாம் இருக்காது, ஒங்க ளுக்கு அந்தப் பொண்ணு மேல ஒரு ஈர்ப்பு இருக்குது, அதுனால நீங்க இப்பிடி யெல்லாம் அந்தப் பொண்ணப் பத்திபேசுறீங்க,அத தப்பா சொல்லல, அந்தப் பொண்ணு வயசுக்கு ஒங்களுக்கு ஒரு மக இருக்குற போதும் கூட அந்த பொண்ணு மேல ஈர்ப்பு ஏற்படுறதுன்னா அந்த பொண்ணோட ஏதோ ஒரு சில நடவடிக்கைக ஒங்கள கவர்ந்திருக்கு, அது வந்து பசு மரத்து ஆணி போல மனசுல வந்து ஒட்டிக்கிருச்சி,அவ்வளவுதான்,

“ஒண்ணு ஒங்க பொண்ணு இல்ல ஒங்க மனைவி அல்லது ஒங்களுக்கு மிகவும்நெருக்கமானஅல்லதுபிடித்தமானயாராவதுஒருத்தரோட நடவடிக்கை அந்தபொண்ணோட நடவடிக்கையோட ஒத்துப் போகுதுன்னு நெனைக்கிறேன். அது ஒங்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சி இல்லைன்னா மனம் ஒத்துப்போச்சி அதுனாலத்தான் அந்தப்பொண்ணபத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க,மூச்சுக்கு முன் னூறு தரம்/”என்பான் அவன்,

அவன் பேச்சையும் மறுப்பதற்கில்லை, அவன் அப்படித்தான்,எதையும் பட் டென முகத்திற்கு நேராக சொல்லிவிடக் கூடியவன்,அவன் சொல்கிற நேரு க்கு நேரான பேச்சில் அதிக கனமும் காரமும் இருக்கும்,சமயத்தில் கழுத்தில் கத்தி வைத்தது போல் கூட பேசுவான்.

”காரமும்நெடியும்கறார்த்தன்மையும்கொஞ்சம் இருக்கும். என்னடா நீயி ,நீயி என்ன பெரிய இவனா,,,,?என்ன நெனைச்சிக்கிட்டு இருக்கு ற ஓன் மனசுல, பெரிய மயிராட்டம் பேசிருக்குற வீட்ல,ஏண்டா தெரியாமத் தான் கேக்குறேன், வேலை பாத்து நாலு சம்பாதிச்சிட்டா பெரிய ஆளுன்னு நெனைப்பா ஒனக்கு, கூட இருக்குற மனுச மொகம் தயவு தாட்சயண்யமில்லாம போயிருமா ஒனக்கு,,,,,?யார்ரா அவ ஆயிரம் இருந்தாலும் ஓங் பொண்டாட்டிடா, ஓங் உசுருல பாதிடா,அவளப்போயி,,,போடா,ஒழுக்கமா இருந்தா இரு இல்லைன் னா வீட்ட விட்டு போன்னு சொன்னயாமில்லடா,நேத்திக்கு போன்ல சொல் லீட்டு ஓன்னுஅழுகுது,இத்தன வயசுக்கப்புறம் என்னடா பேச்சு அது, அர்த்த மில்லாம,புள்ளைங்கரெண்டும்ஒண்ணுபள்ளிக்கூடகடைசியும்,ஒண்ணுகாலேஜூ கடைசியுமா படிச்சிட்டு இருக்குற நேரத்துல போயி,,,,,, என்னமோ இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆன மாதிரிபிகுபண்ணீட்டு இருந்துக்க வீட்ல, என்னமோ அவளப்போயி பொறந்த வீட்டுக்குப்போயிரு,அங்கயே இருந்துருன்னு சொன் னயாமில்லடா ராஸ்கல்,நல்லவேளை அங்க போயி ஏதாவது அஞ்சி பவுன் பத்து பவுன் வாங்கீட்டு வரச்சொல்லாம போன போ/அது வரைக்கும் ரொம்ப சேமம்டாப்பா,,,/என தலையிலடித்துக்கொள்கிறவன்,,,,,,

”ஆமாம் நீ மட்டும் என்ன பெரிய ஒழுக்கமா என்ன,,? ஊர்ல ஓங் சித்தப்பா யெறந்தன்னைக்கி வேலைக்கி போயிட்ட,எத்தனை பேரு எத்தனை தரம் சொல்லிவிட்டும் கூட நீ வராம மதியம் ஆபீஸீ முடிச்சிட்டுதான வந்த,இங்க ஒனக்காக நீ வருவ, வருவன்னு நீர்மாலை கூட எடுக்காம காத்துக்கிட்டு இருந்தாங்க,மதியம் ரெண்டு மூணு மணிக்குள்ள எடுக்க வேண்டிய பாடி ஒன்னால ராத்திரியாகி எடுக்க வேண்டியதாப்போச்சி.நீ அன்னைக்கி வர முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் அதெல்லாம் ஞாயமா இருந் தாலும் கூட அத ஏத்துக்குற முடியாது,ஆமாம்,

“அது போலத்தான் அவளும் பாவம் அன்னைக்கி கோயிலுக்கு போயிருக்குறா, போன யெடத்துல பழைய சினேகிதிய பாத்துருக்குறா,நட்டு வைச்ச பூச்செடி ஒண்ணு நடந்து போனா எப்பிடி இருக்கும் ,அது போல நடந்து போயிக்கிட்டு இருந்துருக்கா கோயிலுக்குள்ள இவளக் கடந்தும் இவள பாக்காமலுமா,,,,,, மூணாவது சுத்து சுத்தி முடிக்கும் போது அங்கன இருக்குற எல்லா சின்ன தெய்வங்கள் செலையையும் தொட்டு கும்புட்டுட்டு கோபுரத்த அண்ணாந்து பாத்தமானிக்கவே இருந்தவள பக்கத்துல போயி தோள் தட்டி கூப்புட்டுருக்கா, ஓன் பொண்டாட்டி.அவளும் என்னன்னு திரும்பிப் பாத்துருக்கா,பக்கத்துல பள்ளிப்பிராயத்துத்தோழி,ஆகா இது போதாதா ரெண்டு பேருக்கும்,,,?அங்கஒரு உற்சாக ஆறே கறை புரண்டு ஓடிருக்கு கொஞ்ச நேரத்துக்கு/ என்ன தடுத்தும் முடியாத கோயில் நிர்வாகம் சரி போகட்டுமுன்னு விட்டுருச் சின்னு வச்சிக்கவேன்/

“அவுங்க உற்சாக கறை புரளல்களாலகோயிலுக்கு ஏதாவது ஆகிப்போகுமோ ன்னு நிர்வாகம் பயந்திருக்கும் போல,ஆனா நெருக்கம் கொண்ட பள்ளிப் பிரா யத்து தோழிக ரெண்டு பேரும் அப்பிடியெல்லாம் ஏதும் இல்லை நீங்க பயப் புடுற அளவுக்கு,நாங்க அப்பிடியே இந்த கோயில் சாமி கோபுரம் அதோட சிற்பங்கள்ன்னு இன்னும் இன்னுமான விஷயங்களப்பத்தி பேசிட்டு அப்பிடியே போயிருவோம்,அவ்வளவுதான்,இன்னைக்கிநாஅவவீட்டுக்கு போகலாமுன்னு இருக்கேன்,இல்லை அதுவும் அவளுக்கு யெடைஞ்சல்ன்னா ரெண்டு பேரும் போற போக்குல ஹோட்டல்ல போயி ரெண்டு காய்ஞ்சிபோன இட்லிய சாப்புட்டுட்டு கொஞ்சம் சந்தோஷம்,கொஞ்சம் துக்கம், கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் குடும்பம் கொஞ்சம் புள்ளைங்க கொஞ்சம் வரவு செவுன்னு,,,,, பேசீட்டு அதுல கவனமா பரஸ்பரம் நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்குறதா காட்டிக்கிட்டு கலைஞ்சிருவோம்,

“எங்க நெனைச்ச நேரம் ஒரு பொண்ணால ரோட்டுல பாத்த பிரண்ட்ஸ வீட்டு க்கு கூப்புட்டுக்கிட்டு வர முடியுது,,?,வீட்டுல ஆம்பளைங்க அவுங்க பிரண்ட் ஸீகள கூப்புட்டுக்கிட்டு வர்றது மாதிரி எங்களால முடியுதா சொல்லுங்க, இல்ல,அதுக்குமுன்னக்கூட்டியேவீட்லசொல்லணும்,இல்லைண்ணாநீ முன்ன மாதிரிஇல்ல,படிச்சிருக்கவேலைபாக்குற சம்பாதிக்கிறைங்குற திமிரு, அதான் வீட்ட மறந்துட்டு புள்ளைங்கள மறந்துட்டு இப்பிடி பிரண்டோட சுத்திக்கிட்டு அவள வீட்டுக்கு கூப்பிட்டு வந்து காபி பலகாரமுன்னு உபசரிக்கிட்டு இருந்தா குடும்ப நெலைம என்னாகுறது,புள்ளைங்க படிப்பு ஒழுக்கம் எப்பிடி வெளங்கும் சொல்லு,இது என்ன குடும்பமா இல்ல பஜாரா,,,,,ன்னு லாஜிக் பேசுற ஆம்பளை ங்களுக்கு மத்தியில நாங்க நட்பு பாரட்டுறதக்கூட இப்பிடித்தான் செஞ்சி ஆக வேண்டியதிருக்கு.

“அதுனால கோயில்ல இருந்து வெளியில போன ஒடனே ஒரு நல்ல ஹோட்டலா பாத்து சாப்புட்டுட்டு வீட்டுக்குப் போகணும், அதுக்கு முன்னால அவளுக்கு பாத்ரூம் வருதா என்ன ன்னு கேக்கணும்.ஏன்னாபடிக்கிற வயசுல இருந்தே அவளுக்கு ஒண்ணுக்கு வந்தா அடக்கி பழக்கமில்ல,அத அடக்குற சத்தும் தாங்கிக்கிற சக்தியும் அவ கிட்ட இல்ல. இப்ப எப்பிடின்னு தெரியல இவ்வளவு நெறை பஜாருல ஆம்பளைங்களுன்னு எத்தனையோ பாத்ரூம் கட்டி வச்சிருக்குறவுங்க,பொம்பளைங்க அவசரத்துக்கு ஒதுங்க ஒரு பாத்ரூம் கூடவா கட்டியிருக்கக்கூடாது,

ஏன் அப்பிடி கட்டணுமுன்னு தோணல அவுங்களுக்கு,இதுல கூட நாங்க கண்டுக்காம விடப்படுற ஆள்கதானா,,?என்னமோ போங்க,சரி நான் மொதல்ல அவள கூப்புட்டு என்னண்ணு கேட்டுக்கிட்டு அப்பிடியே போயி ஹோட்டலு க்கு போயிட்டு அப்பிடியே கரை புரண்டு ஓடுற உற்சாக வெள்ளத்த அங்கயே ஒடைச்சி விட்டு கலையிறோம் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமைன்னு சொன்னவ சொன்ன சொல்லோட ஈரம் காயாம வீட்டுக்குள்ள வந்து நொழை யிறதுங்குள்ள அவளப்போட்டு அந்த வசவு வஞ்சிருக்கயே அப்பிடி வஞ்சது மட்டுமில்லாம நீ ஓங் பொறந்த வீட்டுக்கு போன்னு சொன்னயாமே,,,ஏன் அப்பிடி அவ இருப்பு இந்த வீட்ல ஒனக்கு யெடஞ்சலா இருந்துச்சின்னா போயிற வேண்டியதுதான நீ பொறந்த வீட்டப்பாத்து,எதுக்கு அவளப் போயி யெடைஞ்சல் பண்ற,இந்த வயசுக்கு மேல அவ தோளுக்கு மேல வளந்த புள்ளைங்கள வச்சிக்கிட்டு எங்க போவா,அப்பிடியே அவ போயிட்டான்னா வீடுதான் நல்லா இருக்குமா சொல்லு,

“அவ இல்லைங்குறது மட்டு மா பிரச்சனை,மொதல்ல வீடு வாசல் சுத்தம், சமையலு,பாத்திரம் தேக்குறது, துணி துவைக்கிறது,புள்ளைங்க படிப்புன்னு இன்னும் இன்னுமா நெறைஞ்சி போயிருக்குற எல்லாத்துலயுமா பட்டுத் தெரி யிற அவ உழைப்பும் மொகமும் இல்லைன்னா தெரியும் ஓங் பாடு,மொதல்ல அத தெரிஞ்சிக்க,வீடுகள்ல பொம்பளைங்க இல்லைன்னா நம்மளப் போல ஆம்பளைங்களுக்கு கிறுக்கு பிடிச்சிறும் கிறுக்கு,மொதல்ல அந்த கிறுக்கு ஒனக்குபிடிக்காமஇருக்கணும்ன்னா பொண்டாட்டியவும் ஒரு ஜீவனா மதிக்கக் கத்துக்க” என்பான்.

சரிதான் அவன் சொல்வதும் என்கிற அரை மனதினாய் இருவரும் டீ சாப்பி ட்டு விட்டும் சிகரெட் குடித்து விட்டுமாய் கலையும் போது இவன் சொன் னான் எனக்கு அந்த பொண்ணு மேல இருக்குறது வெறும் ஈர்ப்பு மட்டுமில்லை, அவளுக்கு ஏங் மேல இருக்குறது மாதிரி உள்ள ஒரு அன்பு பாசம்,,, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரான்னு,,,,,,, சொல்லலாம்.

”அவளுக்கு ஏங்க மக வயசுப்பா நான் எப்பிடி அவள தப்பான கண்ணோட்டத் தோட பாப்பேன் சொல்லு,?அவ போன்ல கூப்புட்ட ஒடனே அன்பொழுக அத எடுத்து தேனா பேசுறேன்னு சொன்னா எப்பிடி,,,,,?இவள மட்டும் இல்ல,ஏங் மக வயசுலஇருக்குறஎந்தப்பொண்ணுகிட்டயும்இப்பிடித்தான் அன்பாவும் கல்மிஷ மில்லாமயுமாய் நடந்துக்கிறேன். இன்னும் சொல்லப்போனா உண்மை யான ஆத்மார்த்தம் சுமந்த அன்பு அது, அது மேல நீ பழி சொல்றையின்னா நீயும்ஒரு சராரியாத்தான் இருக்கைன்னு அர்த்தம்டா,,,,

”அப்பிடிப்பாத்தா நான் போன வருசம் வெளியூர்ல தங்கி வேலை பாத்த நாட்கள்ல ஒரு பொண்ணு எங்க ஆபீசுக்கு புதுசா வேலைக்கு வந்து சேர்றா,

”கல்யாணமாகாதகொஞ்சவயசுப்புள்ள,கண்ணுக்கு லட்சணமாநல்லா இருந்தா ஏங் மூத்த மக வயச விட ஒரு ரெண்டு வயசு வேணாஅதிகமா இருக்கலாம் அவ்வளவுதான், அவ ஆபீஸில வேலைக்கு சேர்ற போது அவளத்தவிர்த்து மத்த எல்லாரும் ஆம்பளைங்க,

“ஆறு ஆம்பளைங்க,இவ ஒருத்தி மட்டும்தான் பொண்ணு. பாத்ரூம் போறது லயிருந்து சாய்ங்காலம் அவ வீடு போற வரைக்கும் பிரச்சனைதான். வீசுற காத்துக்கும் ஓடுற தண்ணிக்கும் வளர்ற மரத்துக்கும் யெடம் பொருள் ஏவல்ன்னு எந்த பேதமும் கெடையாதுன்னு சொல்லுவாங்க,அது போலத்தான் அவளும் ஏங்கிட்ட கொஞ்சம் ஒட்டுதலா இருந்தா,

“அவ அப்பன் வயசு இருந்த என்னை அண்ணன்னுதான் கூப்பிடுவா, அதுக்குப் பாத்தியின்னாஆபீஸே ஒட்டு மொத்த எதிர்ப்பு பாத்துக்க,மொனங்காத ஆட்க ளும் பொறனி பேசாதவுங்களும் ரொம்ப கம்மிதான்னு சொல்லலாம். இருந்தா லும் அவளுக்கு ஏங் மேல இருந்த மதிப்பும் மரியாதையும் கொறையல,

“இத்தனைக்கும் அந்தப் பொண்ணு என்னைய விட உயர் பதவியில இருந்த பொண்ணு,நான் அட்டெ ண்டர்தான்,

“என்ன செய்ய அவ கோயமுத்தூர்லயிருந்து இங்க வேலைக்கி வந்த புதுசுல அவளுக்கு தங்குறதுக்கு வீடு பாத்துக்குடுத்து அவ தங்கீர்க்குற யெடத்துல இருந்து ஒரு ரெண்டு மூணு கிலோ மீட்டராவது இருக்கும்,

”அங்கயிருந்து வர்றதுக்கு வழி சொல்லிக்குடுத்து சாப்பாட்டுக்கு மெஸ்ஸீ சொந்த சமையல்ன்னா காய்கறி மளிகை வாங்க கடை ,டாக்டரு சினிமா தியே ட்டருன்னு அவுங்களுக்கு ஒண்ணொன்னா பாத்து சொல்லிக்குடுத்து கை பிடிச்சி நடை பழக்குற கொழந்தையோட பாங்கோட எல்லாம் சொல்லிக் 
குடுத்து எல்லாம் செஞ்சி குடுத்த காலங்கள்ல ஒடம்பு சரியில்லைன்னனு ஒரு நாலு நா சேந்தடியா லீவு போடுட்டாங்க,

”அப்பத்தான் என்னன்னு எல்லாருமா ஆபீஸுல இருந்து பாக்கப் போயிரு ந் தோம், பாக்கப் போயிருந்த எல்லாரும் ஆளாளுக்கு ஆப்பிள் ஆரஞ்சு ஆர்லிக் ஸின்னு  முடிஞ்ச அளவு கொண்டு வந்தாங்க,

“அதுல ஒருத்தருன்னா என்ன மேடம் ஒடம்புக் குன்னுகேட்டப்ப அவுங்க கொஞ்சம் சொல்ல தயங்குனாங்க,கேட்டவரு யாருன்னா நானும் அந்தப் பொண்ணும் ஆபீஸில பழகுறதப்பத்தி தப்பா பேசுனவருதான். அப்பிடியாப் பட்டருகிட்டப்போயிஎப்பிடி சொல்லுவாங்க அவுங்க, ஒண்ணும் இல்ல எனக்கு சும்மா வெறும் காய்ச்சல்தான்னு சொல்லவும்,,,, அந்தப் பொண்ண பாக்க வந்த எல்லாரும் ஒண்ணு சேந்துக்கிட்டாங்க,

“மேடம்நாங்கஆபீஸிலஆயிரம் பேசிக்கிருவோம்,அதெல்லாம் தப்பா நெனைச்சி வேணுமின்னே பேசுறதில்ல.மத்தபடி நீங்க அவரு கூட பழகுற பழக்கத்த நாங்க தப்பான கண்ணோட்டத்துல பாக்கவும் இல்லை,பேசவும் இல்லை,எங்க எல்லாத்துக்கும் ஒங்க வயச ஒட்டியோ இல்லை ரெண்டு மூணு வயசு கம்மியாவோ ஒரு மக இருக்கா மேடம்.அதுனால ஒங்க உடல் பிரச்சனை என்னன்னு கரெக்டா சொல்ல முடியாட்டி கூட ஓரளவுக்கு யூகமா சொல்லீற முடியும். நீங்க எங்க எல்லார் முன்னாலயும் சொல்லாட்டிக் கூட நாங்க அவர விட்டுப் போறோம் அவர்கிட்ட சொல்லுங்க தயங்காம,அவரு அதுக்குறிய டாக்டர்கிட்ட ஒங்கள கூட்டிக்கொண்டு போயி விட்டுருவாருன்னு என்னையகையக்காமிச்சிட்டுசொல்லவும்அந்தம்மாவும்ஒங்ககிட்டயெல்லாம் சொல்லக் கூடாதுன்னு பிடிவாதம் இல்ல,சொல்ல சங்டப்பட்டுக்கிட்டுதா சொல்ல,

”தலை வலி ஒடம்பு வலி காய்ச்சல்ன்னா ஓப்பானா பேசிரலாம்,பீரியட் டைம் பிரச்சனைஅதுனாலத்தான்சங்கடப்பட்டுக்கிட்டு யார்கிட்டயும் சொல்லல, அண்ணன் கிட்ட கூட என அவள் இவனை கைகாட்டிய நேரம் அலுவலகத்தி லிருந்து வந்திருந்தவர்களில் பாதி பேருக்கும் மேல் அவளது ரூமை விட்டு வெளியில் நின்றிருந்தார்கள்.

இவனும் இன்னும் ஒருவரும் மட்டுமே இருந்த போது சொன்ன விஷயமாய் மாறிப் போனது அவள் சொன்னது.அப்பிடியெல்லாம் மொகம் தெரியாதவுங் களும் முன்னப்பின்ன அறியாதவுங்களுமா அவுங்களோட ஒடம்பு சம்பந்த பட்ட பிர்ச்சனையக்கூட தயங்காம சொல்லும் போது நான் ஏன் அந்தப் பொண் ணோட பேசி பழகுற தப்பா,நெனைக்குற நீயி,

ஏங் மகளோட கூட படிக்கிறவ அவ,அவ ஏங் மககூட வீட்டுக்கு வருவா போவா, பாடம் படிப்பா,நல்லா பேசுவா,நல்லா நடந்துக்குவா,வீட்ல இருக்குற எல்லார் கிட்டயும் எல்லை மீறமா ஒழுக்கம் காட்டி பழகுவா,நானு நீங்க,ஒங்க மக அவ படிப்பு ஏங் படிப்பு அவ பழக்கம் ஏங் பழக்கம்ன்னு இருக்குற பொண்ணு கைகொண்டிருக்குற பழக்கம் உடுத்துறது பேசுறது சாப்புடுறது பழகு றதுன்னு ஏங் பொண்ணு கிட்ட இல்லாத ஒரு பழக்கம் அவகிட்ட இருக்குற போது அதுல ஈர்ப்பு ஏற்பட்டுப்போயி அவ கிட்ட கொஞ்சம் நெருக்கம் காட்டு றேன்தான் ஏங் இன்னொரு மகளப்போல,இது ஒனக்கு தப்பா தெரியுது அப்பிடித்தானே,,,,,,?

அது அப்பிடியில்ல,,,,இவ்வளவு நேரம் நான்எப்பிடி குடும்பத்துல இருக்கணு முன்னு சொன்னயோ அது போல நானும் சொல்றேன்.இது போலான பழக்க ங்கள தப்பா நெனைக்காம இருக்க பழகனுங்குறதும்,,,/என திரும்பும் போது சொன்ன வார்த்தைகள் இவனுடன்இன்னும் ஈரம் காயாமல்,,,,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அது அப்பிடியில்ல,,,,இவ்வளவு நேரம் நான்எப்பிடி குடும்பத்துல இருக்கணு முன்னு சொன்னயோ அது போல நானும் சொல்றேன்.இது போலான பழக்க ங்கள தப்பா நெனைக்காம இருக்க பழகனுங்குறதும்,,,/

உண்மை
உண்மை
அருமை

vimalanperali said...

மனம் நிறைத்த கருத்துரைக்கு பாராட்டுகள்!

iramuthusamy@gmail.com said...

நிறைவான கருத்துக்கள் பிடித்திருக்கிறது.

vimalanperali said...

மிக்க மகிழ்ச்சி சார்,,
கருத்திற்கும் நிறைவான
அன்பிற்கும்/