28 Jan 2018

டிக்,,,டிக்,,,டிக்காய்,,,,,,

ஓடிக் கொண்டிருந்த கடிகாரம் நின்று போகிறது தனது சுற்று வட்டப்பாதையி லேயே,,/

சின்னதும் பெரியதுமான முட்கள் சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிற விநாடி முள்ளையும்துணைக்குச்சேர்த்துக்கொண்டுநின்றுபோனகடிகாரத்தினுள்அடை கொண்டதாய்,/

ஒன்றும் மூன்றும் மட்டுமல்ல,சொல்லுக்கு உறுதியான நான்கும் இரண்டு மான எண்கள் வெள்ளை நிறம் காட்டிய டயலில் பழுப்பு நிறம் காட்டி அழுத்த மாய் பதிக்கப்பட்டு காட்சிப்பட்டதாய்/

ஆள் உயரத்திற்கும் மேலாய் இருந்த சுவரில் எட்டிப்பிடிக்க முடியாவண்ணம் உயரம் காட்டி வீற்றிருந்த கடிகாரம் பார்க்க டிசைனாகவும் அல்ட்ரா மார்ட னாகவுமாய்,,,/

காசுக்கடை பஜாரில் நகைக்கடைக்கு பக்கத்தில் இருக்கிற வடக்கு புறம் வாசல் வைத்த கடையில் வாங்கியது,

அது கொஞ்ச வித்தியாசம் காட்டி வீற்றிருந்த கடை,கடிகாரக்கடையில் கடிகா ரம் மட்டும்தானே இருக்கவேண்டும்?ஆனால் கொஞ்சம் ஈவும் இரக்கமும் இருந்ததுஅவ்வப்பொழுதுகொஞ்சம்மனிதாபிமானத்தையும்துணைக்கு சேர்த்துக் கொண்டார் கடையின் முதலாளி/

இதெல்லாம் கேட்டாலும் காணக்கிடைக்காத ஒன்றாகிப் போன இந்தக் காலத்தில் உங்களிடம் மட்டும் எப்படி மேன்மை கொண்டு குடியிருக்கிறது என்பதற்கு அவர் சொல்லிச்செல்கிறபதில்கொஞ்சம் வித்தியாசம் காட்டியும் மனித மனம் கொண்டுமாய்,,./

”இதுலஎன்ன இருக்குது ன்னு இவ்வளவு ஆச்சரியப்படுறீங்க,இல்ல ஆச்சரியப் படுறது போல நான் ஒண்ணும் பெரிசா செஞ்சிறலயே,,,,,,நல்லா யோசிச்சிப் பாருங்க நம்ம அப்பா தாத்தாகாலத்துலயும் அதுக்கு முந்துனதலை முறை யிலயும் மசுசஒறவு,அனுசரன, அன்பு நட்பு,கைகோர்த்துக்குறது தோள்சாய்ச்சி க்கிறது எல்லாம் இருந்துச்சிதான, அப்பிடி இருக்கும் போது இப்ப மட்டும் அது போலான மனிதாபிமானமான பழக்கங்க பெரிசா பேசப்படுறதும் அதிசியமா பாக்கபடுறதும் ஏன்,,,,?அது என்னமோ நமக்கு சம்பந்தமில்லாத அந்நியமான விஷயம் மாதிரி பாக்குறீங்களே எதுக்குன்னு கேக்குறேன்

“,நான் ஒண்ணும் பெரிசா எதும் செஞ்சிடல சார்,ஏங் கடைக்கி வர்றவுங்க கிட்ட அனுசரணையா நடந்துக்கிறேன்.அவுங்க அந்த நேரத்துல கேக்குற உத விய என்னால செய்ய முடியிற அளவுக்கு இருந்துச்சின்னா அது ஏங் கட்டுக் குள்ள இருக்குற விஷயமுன்னா கண்டிப்பா செஞ்சி தர்றேன்,பண உதவி உட்பட,

“பண உதவின்னா ஏங்கையில இருந்து குடுக்குறது இல்ல, ஏங்கிட்டகடிகாரம் வாங்க வர்றவுங்களுக்கு கடன் தர்றேன்,இது ஏங் யேவாரத்த பெருக்க ஒதவுங் குற நம்பிக்கையிலையும் எனக்கு தெரிஞ்சவுகளாவும் நம்பிக்கையானவுங்க ளாவும் வர்றவுங்களுக்கு நான் செஞ்சி குடுக்குற ஒரு சலுகை, இல்ல ஒரு உதவின்னு கூட சொல்லலாம்,

”அப்பிடிப்பாத்த நான் செய்யிற இந்த மாதிரியான உதவியிலயும் ஒரு சுய நலமும் கலந்துருக்கு.அது தாண்டி மொகம்தெரியாம வர்றவுங்க சில பேருக்கு கூட குடுத்து விட்டுருவேன் கடிகார த்த தூக்கி,

”இவனுக்குஎன்னஒண்ணுலபோனாஇன்னொனுல எடுத்துருவான்னு சொல்லு வாங்க,ஏங்காதுபடயேகூடபேசிக்கிருவாங்க,ஆனாஅது அப்பிடியில்ல, அப்பிடி யில்லாமலும்இல்ல.பொழப்புக்காக நான்,,,ஆகணும்,அது யேவாரத்துல ஏங் தலையெழுத்துன்னு வச்சிக்கங்களேன்,

“ஆனாஅதமீறி எனக்குன்னு ஒருசில விஷயங்க இருக்கு,அதன் அடிப்படை
யில தான் நான் இயங்குறேன்னு நெனைக்குறேன்,போன ஆறு மாசத்துக்கு முன் னாடி ஏங் கடைக்கு கடிகாரம் வாங்க ஒருத்தர் வந்தாரு பாத்துக்கங்க, அவரு ஏதோ ஒரு கௌவர்மெண்ட் ஆபீஸீல வேலை பாக்குறதா சொன்ன ஞாபகம்,

“நான் பொதுவா யாரு என்ன பாக்குறவேலை எதுன்னு கடைக்கி வர்ற கஸ்ட மர்கள் கிட்ட கேக்குறது கெடையாது,.அவுங்களா சொல்லுவாங்க,சரின்னு கேட் டுக்குறது உண்டு,சில சமயம் என்ன மீறி நல்லா யாதர்த்தமா பேசுறவுங்க கிட்ட கேக்குறது உண்டு,

“இதுல பாத்தீங்கன்னா சில பேரு யாதார்த்தமா இருக்கேன்னு கள்ளத்தனமா பேசிச் சிரிப்பாங்க,பேசு பூராம் ஒரே சக்கரையா இருக்கும்,மனசு முழுக்க கள்ளம் நெறைஞ்சி இருக்கும்,அப்பிடி ஆளு ரெண்டொரு வார்த்த பேசுன ஒடனே எனக்கு அடையாளம் தெரிஞ்சி போகும்,அப்பிடியா கதைன்னு அவங்க கிட்ட அவுங்க ரூட்டுலயே பேசி அப்பிடியே அனுப்பிச்சி வச்சிருவேன்,அவுங்க கிட்டப் போயி எதுன்னாலும் நேரடியா பேசணும் பாத்துக்கண்ணு மல்லுக்கு நின்னமுன்னா நம்ம யேவாரம் போயிருமா இல்லையா,பின்ன என்ன செய்யி றது நைச்சியத்துக்கு நைச்சியமாத்தான் போக வேண்டியது இருக்கு.

“ஒரு தடவைன்னா அப்பிடித்தான் கடிகாரம் வாங்க வந்த ஒருத்தன் என்னா பண்ணீட்டான்னா வாங்குன கடிகாரத்த விடவும் அதுக்கு குடுக்கப்போற வெலைய விடவும் ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கான்,ஆள் பாத்தா சும்மா இன் பண்ணி கூலிங்கிளாஸ் போட்டு டிப் டாப்பா இருக்கான்,பேசுற பேச்செல் லாம் சம்பந்தா சம்பந்தமில்லாயும் ஒரு விஷயத்த முழுசா பேசாமலும் அத்து அத்து பேசிக்கிட்டு இருக்கான்,அதுவும் சப்தம் போட்டு பேசுறான்,

“இவன் இப்பிடி பேசுறதுனால கடைக்கி வந்த ஒண்ணு ரெண்டு கஷ்டமர்களும் நெளியிறாங்க, சில பேர்ன்னா கடைக்குள்ள வர்ற காலடி எடுத்து வச்சிட்டு அப்பிடியே போயிறாங்க,

“என்னக்குன்னா ஒரே சங்கடமா போயிருச்சி,கடைக்கி வந்த கஷ்டமர்க கிட்டமொகம்சுண்டி பேசிறக்கூடாதுன்னு நானும் கம்முன்னு அவன் பேசுறதப் பூரா கேட்டுக்கிட்டே இருந்தேன்.அவனும் பேச்ச நிறுத்துறது மாதிரி இல்ல, போறது மாதிரியும்தெரியல,

“என்ன செய்ய பின்ன,இதுக்கு மேலசரிப்பட்டு வராதுன்னு ”சார் வாங்குன கடி காரத்துக்கு பணத்தக் குடுத்துட்டு கெளம்புங்க,நானும் கடைக்கி வர்ற மத்த கஸ்டமர்கள கவனிக்கனும்ன்னு சொன்னதும் அவனுக்கு வந்த கோவத்தப் பாத்தீங்கன்னா ஏயப்பா அவ்வளவு கோவப்படுறான் சார்,நான் ஒண்ணும் சொல்லல, நீ கடைக்கி வந்து யேவாரம் வாங்கி முக்கால் மணி நேரத்துக்கு மேல ஆகிப்போச்சி,முக்கால் மணி நேரமும் வெறும் வெட்டிப் பேச்சா தேவை யில்லாம பேசீருக்க,இன்னைக்கி ஒரு நாள் நீ வந்து நீட்டி நெளிச்சி பேசிக் கிட்டு போயிருவ,நாளைக்கி ஏங்கடைக்கி வர்றதுக்கு ஆளுங்க யோசிக்கும், என்னடா இது ஒரே கச்சரா புடிச்ச கடையா இருக்கும் போல இருக்கும்ன்னு போயிரு வாங்க,நான்ஏங் பொழப்ப பாப்பேனா ,ஒங்களோட பேசிக்கிட்டு இருக்க பாப்பே னான்னு சொன்னதுக்கு அந்த ஆளு சொல்றான் சார்,கடைக்கி வந்த கஷ்டமர நீ கேவலபடுத்தீட்ட.,அவமானபடுத்தீட்டநீஇதுக்குபதில்சொல்லித்தான்ஆகணும், ஒண்ணைய போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணி ஸ்டேசனுக்கு இழுக்காம விட மாட்டேன், ஆச்சா பூச்சான்னு குதிக்கிறான்,

“அட கண்றாவியே போலீஸ் ஸ்டேசனுக்கு போற நாயி இங்க ஏண்டா இவ்வ ளவு குதி குதிக்கிறான்னு நெனைச்சிட்டு ,,,,சரி நீஎங்க வேணாலும் போயிக்க மொதல்ல ஏங்கிட்ட வாங்குன கடிகாரத்த கீழ வையிடா இவனேன்னு சொன் னா அத குடுக்க மாட்டேங்குறான்.

“அவ்வளவு பேச்சிலயும் வாங்குன கடிகாரம் அவன் கைய விட்டு யெறங்க மாட்டேங்குது,இருக்கமாபுடிச்சிக்கிட்டான்.அப்பறமாகடைப்பயந்தான்சுதாரிச்சி அவன் கையில இருந்த கடிகாரத்த பாய்ஞ்சி புடிங்கீட்டான்,

அது அவனுக்கு அவமானமா ஆகிப்போச்சாம்,ஒடனே சத்தத்த ரெண்டு மடங் கா கூட்ட ஆரம்பிச்சிட்டான்.பொறுத்துப்பொறுத்து பாத்த நான் இனிமே சும்மா இருந்தா பைத்திக்காரனாகிப் போவோம்ன்னு நெனைச்சிக்கிட்டு கடையில ஓரமா சாத்தி வச்சிருந்த உருட்டுக் கம்ப எடுத்துக்கிட்டு இங்கயிருந்து ஓடிறு ஒழுக்கமான்ன ஒடனே ஆளக்காணம் அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல.எங்க போனான் என்ன ஆனான்னே தெரியல,

“விசாரிச்சா அவனுக்கு வேலையே இதுதானாம்,கடை கடைக்கி வந்து இது மாதிரிபொருள்வாங்கவேண்டியது,,பேசவேண்டியது சண்டபோட வேண்டியது. கடை ஓனரு கொஞ்சம் அப்புராணி சப்புராணியா இருந்தா வாங்குன பொருளு க்கு பணமே குடுக்காம கெளம்பீற வேண்டியதுன்னு ஒரு நடப்பு வச்சிருந்து ருக்கான்னு தெரிஞ்சது.

“அட நாசமா போறவனேன்னு மனசுல நாலு நல்ல கெட்ட வார்த்தையா தேடி கண்டுபிடிச்சு வஞ்சிச்சிட்டு அத அப்பிடியே மறந்துட்டேன்,

ஆனா அன்னைக்கிகடிகாரம் வாங்க வந்தவரு அப்பிடியில்ல,பார்வையிலயும் பழக்கத்துலயும் தெரிஞ்சிச்சி, அவரு நல்ல மனுசன்னு,அவரு கடிகாரம் வாங் குனமொறையே என்னைய கவர்ந்துருச்சி,

“கடைக்குள்ள வந்த ஒடனே சொல்லீட்டாரு,இந்த வெலையில இருந்து இந்த வெலைக்குள்ள கொஞ்சம் மார்டனா இருக்குற மாதிரி ஒரு கடிகாரம் வேணு முன்னு அப்பிடி எடுக்கும் போது பத்து அம்பது கூடுனாலும் பரவாயில்ல எடுங்கன்னு,,,/

”நாந்தான் போயி எடுத்தேன் வரிசையில இருந்து,அப்பிடி எடுக்கும் போது அவருவந்துட்டாரு,சார்எல்லாத்தையும்எடுக்கவேணாம்,நான் அட்டைப்பெட்டி மேல இருக்குற படத்த வச்சே சொல்லீர்றேன், அதுகள மட்டும் எடுங்க போதும், அதுலயிருந்து செலக்ட்ப்பண்ணி எடுத்துக்கிறேன்னாரு,

“அப்பிடி எடுத்த ஒரு மாடர்னான கடிகாரத்த அட்டைப்பெட்டிக்குள்ள வச்சி கட்டீட்டு போகும் போது சொன்னாரு ,பரவாயில்ல,நான் எதிர்பாத்து வந்தத விட நல்ல மாடலா கெடைச்சிருக்கு ரொம்ப தேங்ஸீன்னு,,,,,,, சொல்லீட்டு கெளம்பும் போது இங்க பக்கத்துல அரிசிக்கடை எங்க இருக்குதுன்னு கேட்டார், கையக்காண்பிச்சேன்,ஏங் கடைக்கு ரெண்டாவதா இருக்குற கடைய,

அவரு கேட்டாரு ஒடனே அங்க எப்பிடி அரிசி எல்லாம் நல்லாயிருக்குமா, என்ன ஏதுன்னு நல்லாயிருக்கும் சார்,என்ன கடைக்காரரு கொஞ்சம் பேசு வாரு,அதமட்டும் கேக்க நமக்கு பொறுமை வேணும் சார்ன்னு சொன்னதும் அத நான் பாத்துக்கிறேன்னு போனவரு,போன கால் மணி நேரத்துல செவத் துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்துட்டாரு,

“வாங்கீட்டேன் அரிசிய,நான் ஒரு கௌவர்மெண்ட் ஆபீசுல வேலை பாக்குற மாசச் சம்பளகாரன்,ஒரு மூடை அர்சி வேணும்,குடுத்துட்டு தவணை முறை யிலபணம்வாங்கிக்கிறலாமான்னு கேட்டேன்,ஒடனே பட்டுன்னு சரின்னுட் டாரு,அது மட்டுமில்ல,இதக்கேக்க ஏங் சார் இவ்வளவு தயங்குறீங்க,ஒங்களு க்குத்தான் என்னைய பழக்கமில்லையே தவிர எனக்கு ஒங்களப்பத்தி முழுசா தெரியும்,நீங்க வழக்கமா காய்கறி வாங்குற கடையில வந்து ஒங்ககிட்ட நானேசொல்லலாமுன்னுஅப்பநெனைக்கிறதுஉண்டு,நம்மகிட்டஅரிசிவாங்கிக் கங்கன்னு,,.சரிபடக்குன்னுஅப்பிடி சொல்றதுக்கும் யோசனையா இருந்துச்சி.

”ஏன்னா நீங்க ஏதாவது ஒரு கடையில பழக்கம் வச்சிருந்து வாங்கீட்டு இருந் துட்டு இருப்பீங்க,அதப்போயி ஒழைச்சி விட்டது மாதிரி ஆகிறக் கூடாது. அதான்பாத்தேன்.ஏன்னா பழக்கமுங்குறதுதொப்புள் கொடி உறவு மாதிரி, அத அத்துட்டு வர்ற மாதிரி பண்ணீறக் கூடாதுன்னு சொல்லீட்டு ஒடனே சரி அட்ரஸ மட்டும் குடுங்க,தூக்கி விட்டுர்றேன் மூடையன்னாரு, இல்ல நான் பக்கத்து கிராமம்,நாளைக்கி வந்து ஒரு மூடைய பிரிச்சி அம்பது அம்பது கிலோ வா ரெண்டு நாளையில வாங்கீட்டுப் போறேன்னு சொல்லீட்டு சாம்பி ளுக்கு அந்த அரிசியில ஒரு கிலோ மட்டும் வாங்கிட்டுப்போறேன்னு ஏங்கிட்ட சொல் லீட்டு அரிசி வாங்குன பைய தெறந்து காமிச்சிட்டுப் போனாரு/

“அப்பிடியும் கடைக்கி ஆள்க வரத்தான் செய்யிறாங்க,அந்த சல்லவாரிப் பைய லப் போல ஆள்க வரவும்தான் செய்யிறாங்க,என்ன செய்ய வாக்கப்பட்டாச்சி ன்னு போக வேண்டியதுதான்,என சொன்ன கடைக்காரரிடம் வாங்கி வந்த நாளிலிருந்து இன்றுவரை பெரிதாக ரிப்பேர் என எதுவும் வந்ததில்லை., அதற்கு தேவையான பேட்டரி போடுவது தவிர்த்து.

ஒனக்கும் ஆசைதானப்பா நூத்தி எழுபத்தஞ்சி ரூபாய்க்கு வாங்குன கடிகாரம் இன்னும் எத்தன வருஷம் நிக்காம ஓடணுமுன்னு நெனைக்கிற என்பான் நண்பன் முத்துசாமி.

அவன்அப்படித்தான்”விடுகழுதையஎன்னஇப்பகெட்டுப்போச்சிஅதுஓடலைன்னா என்ன பொழுதன்னைக்கும் ரிப்பேர் பாத்து ரிப்பேர் பாத்து வச்சிக்கிறாம வேற ஒண்ண புதுசா வாங்கீட்டு போக வேண்டியதுதான,இதுல என்ன பெரிசா லாஜி க் கா யோசிக்கிற” என்பான்.

“அப்பிடி இல்லடா ஒரு பொருள் பயன்பாடு இல்லாம போயிருச்சின்னா நீ சொன்ன மாதிரி தூக்கி போடுறது சரி,ஆனா அதுதான் நல்லாத்தான இருக்கு, பாப்போம் ரிப்பேர் பண்ணி பயன் படுத்த முடியுமான்னு,இல்ல முடியாதுங்குற நெலம வந்துச்சின்னா தூக்கி எறிஞ்சிருவோம்.அத விட்டுட்டு ஏன் நம்மளா முந்திக்கணும்என கேட்டால்,,,,,,,,”அப்பிடி இல்ல நண்பா ஒவ்வொரு பொரு ளு க்கும் உபயோப்படுற காலமுன்னு ஒண்ணு இருக்குல்ல,அது முடிஞ்ச ஒடனே இல்ல அது முடிஞ்சி போச்சின்னு நமக்கு தெரிய வரும் போது தூக்கி எறிஞ்சி றலாமுல்ல” என்பான்,

இல்ல நண்பா நீ சொல்றது வாஸ்தவம் போல தோணுனாலும் கூட வாஸ் தவம்இல்ல நண்பா, உபயோகப்படுத்துற காலம் முடிஞ்சி போச்சின்னு எல்லா த்தையும் தூக்கி எறிஞ்சிறமுடியாது,சிலதுகள வேணா அப்பிடி செய்யலாம், சிலதுகள நீ நெனைக்கிற மாதிரி தூக்கி எறிஞ்சிற முடியாது.எனும் போது சரிதான் அது என்பது போல ஒத்துக்கொண்டு அப்போதைக்கு நகன்று விட்டா லும் கூட அவனது குணமும் செயலும் அப்படித்தான் இருந்தது,

இருந்த போதிலும் எட்டாத ஆளுயர சுவர்களில் மாட்டப்பட்டிருந்த கடிகாரங் கள் ரிப்பேர் செய்யப்பட்டு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன,,,,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உபயோகப்படுத்துற காலம் முடிஞ்சி போச்சின்னு எல்லா த்தையும் தூக்கி எறிஞ்சிறமுடியாது,

உண்மை
உண்மை
நன்றி நண்பரே

vimalanperali said...

நன்றியும் அன்பும் உள்ளம் தொட்ட கருத்துரைக்கு!

iramuthusamy@gmail.com said...

நாம் வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கெல்லாம் பலதரப்பட்ட பயன்பாடு உள்ளது என்றாலும், நம் மனது இப்பொருட்களுடன் உணர்வு பூர்வமாகவும் ஒனறிவிடுவது இயல்பு. சுவர்க் கடிகாரம் இது போன்ற பொருட்களில் ஒன்று. இக்கருத்தை சிறப்பாக விளக்கியமைக்கு பாராட்டுக்கள்.

vimalanperali said...

வணக்கம் முத்துச்சாமி சார்,
மனந்தொட்ட கருத்துரைக்கு
நன்றியும் அன்பும்,,,/