11 Feb 2018

பத்தாவது வீட்டுக்காரரும் செவ்வரளிப்பூச்செடியும்,,,

பெய்து முடித்திருந்த மழையின் ஈரம் இன்னும் காயவில்லை.

தரை முழுக்க வுமாய் படர்ந்து பரவி பாவி மண்ணுக்குள்ளாய் ஈர்ந்து மரத்த டியிலும் தெரு முழுக்கவுமாய் ஆங்காங்கே பாவி நின்ற செடிகளின் ஓரமா யும் தாங்கி அடை கொண்டு நிற்பதாய் ஆகிப்போகிறது,

அதிலும் அந்த செவ்வரளி பூச்செடியின் அடியில் போய் தங்கவும்பூத்துகாத்து நிரைந்து நிற்கிற அதை நோக்கி ஓடுவது என்றால் பெய்கிற மழைக்கும் பெய்து முடித்ததற்கும் மிக மிக கொண்டாட்டமும் உச்சிக் குளிர்வும் போலும்.

அந்த உச்சிக்குளிர்வு அங்கு வந்ததுமாய் செடியின் அடியை ஆராதித்து அதன் அழகைஅண்ணாந்து பார்த்து உச்சி மோந்து மகிழ்ந்துவிட்டு சிறிது நேரம் .தங்கி யும்உரைகொண்டும்உரையாடியும்நலம்விசாரித்துவிட்டுமாய்வேறொரு உரு கொண்டுமாய் காட்சிப்பட்டு விட்டு மறைந்து போகிறது மண் ணுக் குள்ளாக,

அதுவும் அந்த செவ்வரளிப்பூ பூத்து காத்து நிற்கிற செடியை நோக்கி ஓடுவது என்றால் பெய்கிற மழைக்கும் பெய்து முடித்ததற்கும் மிக மிக கொண்டாட்ட மும் உச்சிக் குளிர்வும் போலும்.

காரணம் காரியம் இல்லாமல் எதுவும் பெரிதாக இருந்திருக்கவில்லை உச்சிக் குளிர்விற்கும் சென்றடைவிற்குமான போக்கிற்கும்காரணம் தெருவில் இருந்த பள்ளமும் அச்செடி முளைத்துக்காணப்பட்டஇடத்தில் நோக்கியதாய் இருந்த சரிவுமே எனச் சொல்லப்படுகிறது.

அச்சரிவு இருந்த இடத்திலே முளைகொண்டு காட்சிப்பட்ட செடி யாருக்கும் சொந்தமில்லை/

தெரு ஓரமாய் தன்னால் முளை கொண்டு நின்ற செடி என்பதால் அது தெரு வுக்கே சொந்தம் என்கிற பொதுவுடமை/

தெருவிலிருக்கிற பத்து வீடுகளில் ஆளுக்கு ஒரு வீடு என முறை வைத்து தண்ணீர் ஊற்றினார்கள்,

நல்ல தண்ணீரா உப்புத்தண்ணீரா என்பதெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சு, ஊத்துகிறார்களே தண்ணிர் இந்த தண்ணீர் பஞ்ச நேரத்திலும் கூட என்பது பத்தாவது வீட்டுகாரரின் வாதம்,

“குடிக்க, குளிக்க,சமையல் பண்ண இன்னும் மத்த மத்ததுக்கே தண்ணி காண மாட்டேங்குது, இதுல செடிக்கு வேற தண்ணின்னா எங்க போறது சார் எங்க போறது சொல்லுங்க”என்கிறார்,

அவனை இந்தத்தெருவிலிருக்கிற யாருக்கும் பிடிப்பதில்லை. காரணம் யாத ர் த்தம் பேசுகிறவர் என்பதினால்,

அவர் சொல்லுவார் ”என்னடா இதுன்னா இதுதானா இதுக்குப்போயி எதுக்கு அங்க இங்க போயிக்கிட்டு காச கரியாக்கிக்கிட்டு திரியிறீங்க,” என்கிற அவரின் பேச்சில் ஒரு, எள்ளலும் துள்ளலும் இருக்கும்,

அந்த எள்ளலிலும் துள்ளலிலும் யார் மனதையும் புண்படுத்தாத,எல்லை மீறாத பேச்சும் கரிசனையும் அன்பும் வாஞ்சையும் கண்டிப்பாக இருக்கும்.

ஆனால் தெருவில் இருக்கிற பத்து வீட்டில் யாருக்கும் எதுவும் என்றால் முத லாவதாக போய் நிற்பார்,

”என்ன இது ஏன் எனக்கு சொல்லல,,,,”? என உரிமையுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்களுடன் சண்டைக்கு நிற்பார்,

ஆஸ்பத்திரியா,போலீஸ்ஸ்டேசனா,இன்னும்பிறபிற மாதிரியான பிரச்சனை யா , தனது சொந்த வேலைகளை விட்டு விட்டுக்கூட போய் நிற்பார்.

“என்ன ஏதாவதுஒண்ணுன்னா இப்பிடி அழுத்துக்கிட்டு நின்னா எப்பிடி,,,,, வீடுக ள்ல ஒண்ணு கண்ண கசக்கீட்டு நிக்கிறீங்க,இல்லைன்னா பல்ல கடிக்கிறீங்க, இதுதா நடக்குது முனுக்குன்றதுங்குள்ள,

”இப்பஎன்னஒங்க வீட்டுக்காரரு ஒடம்புக்கு சரியில்ல,அவ்வளவுதான அதுக் குப் போயி நீங்களா ஒரு முடிவு பண்ணீட்டு அழுதுக்கிட்டு நின்னா எப்பிடி,,,. அதெல்லாம்நாமகொண்டு போயி காட்ற டாக்டர்க பண்ண வேண்டிய வேலை. அனாவசிய கவலை அர்த்தமில்லாத கவலைகள உண்டு பண்ணீரும் பாத்துக் கங்க ஆமாம்,,,”என அவர் வருத்தப்பட்டு கொண்ட நாட்களில் எட்டாவது வீட்டு முனியக்காவின் வீட்டுக்காரருக்கு முடியாமல் போய்விட்டது,

இரவு படுக்கைக்குப் போனவர் மறுநாள் ஒரு பக்கம் மூஞ்சி தொங்க எழுந்தி ருந்திருக்கிறார்,விஷயத்தை சொல்லாமல் விஷயத்தின் வீர்யம் தெரியாமால் ஒரே களேபரம் பண்ணிக் கொண்டிருந்த அம்மாவின் தொந்தரவு தாங்க மாட் டாமல் முனியம்மக்காவின் மகள் பத்தாவது வீட்டுக்காரனின் வீட்டுக்கு வந்து விட்டாள்.

உடனே அவளது மனைவி அவளை பிடித்துக்கொண்டாள் பிடி பிடி என, “ஆமாடி ஒங்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு உதவி உபகாரம் தேவைன்னா அவர கூப்புடுவீங்க,ஆனா அவரு சொல்லுறது மட்டும் எட்டிக்காயா கசக்கும் ஒங்களுக்கு இல்ல, வா இப்பிடி உக்காரு இப்பத்தான் டீப்போட்டேன் சாப்புடு, அந்த மனுசன் இப்பத்தான் சலூனுக்கு போயிருக்காரு,கொஞ்ச நேரத்துல வந்துருவாரு ,வந்ததும் நானே கூப்புட்டுக்கிட்டு வர்றேன்,அவரு தனியா யார் வீட்டுக்கும் வர மாட்டாரு,ஒண்ணு ஏங் தொணை வேணும் இல்ல பெரிய மகள கூப்புட்டுக்கிட்டு வருவாரு,ஊரெல்லாம் சுத்தி வர்ற மனுசனுக்கு பக்க த்து வீட்டுக்கு போறதுக்குஏங் தொணை வேண்டியதிருக்கு,பாத்துக்க,,,,” என்ற அவளது பேச்சை கேட்டுவிட்டும் அவள் கொடுத்த டீயை குடித்து விட்டும் சலூன் நோக்கிப்போனவள் அவனிடம் விஷயத்தை சொல்லிவிட்டு வந்து விட்டாள்,

சொன்ன விஷயத்தை விட அவள் போன வேகமும் சொன்ன விதமுமே அவனை கலங்கச் செய்து விட்டதாக,,,,,,என்ன கலங்கினாலும் என்ன செய்ய ,பாதி முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது எழுந்து போய் விட முடியாது,

அப்பா என்ன செய்கிறார் எனக்கேட்ட போது பழுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருக்கிறார் எனவும் முகம் கழுவப் போனவரை தடுத்து ”உக்காருங்க பேசாம டாக்டர் கிட்ட போயிட்டு வந்துட்டு மத்ததெல்லாம் செஞ்சிக்கிறலாம்,,” என்கிற மனைவியின் சப்தத்திற்கு கட்டுப்பட்டு அப்படியே உட்கார்ந்து விட்ட தாக சலூனுக்கு போயிருந்தவள்(மகள்) சொன்னாள்.

சரி வந்து விடுகிறேன் இதோ என சலூன்காரரிடம் கொஞ்சம் விரைவு காட் டச் சொன்னவராய் சலூனிலிருந்து வந்தார்,

சலூனுக்கு போய் விட்டு டீக் கடையில் டீயை சாப்பிட்டு விட்டு வரலாம் என்பதுதான் அவர் சலூனுக்கு போகும் போது எடுத்த முடிவாய் இருந்தது. ஆனால் இப்பொழுது முடியாது போலிருக்கிறது,

டீக்கடைக்காரர்வருத்தப்படுவார்,அனாவசியமாகஅவரதுகடைவழியாகத்தான் போனார் சலூனுக்கு.போகும் போதே சொல்லிவிட்டுத்தான் போனார்.

அதற்கு அர்த்தம் நான் வந்து விட்டேன்,கொஞ்சம் பேசலாம் டீயும் வடையு மாக என,,,/

அட பரவாயில்லையே டீக்குடிக்க வருகிற இடத்தில் இவ்வளவு நல்லதாக பேசவும் வருகிற கடை மீது அக்கறை எடுத்துக் கொள்ளவும் இப்படி ஒரு ஆள் இருக்கிறாரே என கடைக்காரருக்கு ஒரு பிரியம் வர கடைக்காரர் அவர் அந்தப்பக்கம் போனாலே சார் வாங்க ஒங்களுக்காக டீ எடுத்து வச்சிருக்கேன் எனச் சொல்லி விடுவார்.

அவரும் போகிற போக்கில் தலையை ஆட்டி விட்டு சென்று விடுவதுண்டு, அப்படியான சமயங்களில் அவரால் வர முடியும்,அல்லது வர முடியாமல் போய் விடமுடியும்,ஆனால் இதையெல்லாம் மீறி சலூனுக்குப் போகிற தினங்களில் கண்டிப்பாக டீக்குடிக்க போய் விடுவதுண்டு.

டீ என்றால் டீ மட்டுமாதானா அதோடு சேர்ந்த அவரது பேச்சு டீக்கடைக்கா ரரை மிகவும் கவர்ந்து விடுவதுண்டுதான்,

இதுதான் என்று அடையாளப்படுத்தி இருக்காது அவர்களது பேச்சு,பேசுவார்கள் காற்று வாக்கில், வெயில் வாக்கில் மழை வாக்கில் என,,,/

ஒரு விடுமுறை நாளின் மதியத்தில் பேசிக்கொண்டிடிருந்த பொழுது டீக் கடைக்காரர் சொன்னது அவர் மனம் தைத்து விட அவர் சொன்ன ஆலோச னையில் இன்று கடை நன்றாக நடப்பதாகச் சொன்னார்,

முக்கூட்டிகட்டியிருக்கிற பறவையின் கூட்டைப்போலக் கூரை தாங்கியிருந்த கடையின் ஓரமாய் வெந்து கொண்டிருந்த வடையும் வடை போட்டுக் கொண் டிருந்த கிழவனாரும் டீ ஆற்றிக்கொண்டிருந்த டீ மாஸ்டரும் இவரது உறவி னர்கள் என்று சொன்னார்,

”வடை போடுறவருக்கு தினம் இவ்வளவு,டீ மாஸ்டருக்கு தினம் இவ்வளவு கடையில் நிற்கிற எனக்கு தினம் இவ்வளவு கரண்ட் பில் யெட வாடகை எல் லாத்துக்கும் போக மிச்சமுன்னு ஒண்ணும் இல்ல,இதுல டீ மாஸ்டரையோ வடை மாஸ்டரையோ யாரையாவது ஒருத்தர நிறுத்தீரலாமுன்னு பாத்தா யார நிறுத்துனாலும் யேவாரம் படுத்துரும்,

“டீ மாஸ்டர கேட்டு வந்து டீ சாப்புட்டு போறவங்களும் வடை போடுறவரு கைப்பக்குவத்துக்காகஇங்கவடை வாங்க வர்றவுங்களும் நிறைய இருக்காங்க, இதுல நான் யாரை நிறுத்துனாலும் ஏதாவது ஒண்ணு பாதிக்கும் அப்புறம் கடை நடத்தி என்ன பிரயோஜனம் சொல்லுங்க,,,” எனடீக்கடைக்கார் சொன்ன தும்,,,,வாஸ்தவம்தான் நீசொல்றதும்,இல்லைங்கல,,,பாதிப்புன்னு ஒண்ணு வந் தா அதுக்கான நிவாரணமுன்னு ஒண்ணு இருக்குது.அது என்னன்னு நம்ம தான் தேடி கண்டு பிடிக்கணும் தெரியுதா, அதுக்காக இப்பிடி தலையில கை வச்சிட்டு உக்காந்துட்டா சரியாப் போச்சா,,,,,,,ரெண்டு பேர்ல யாரையும் நீ வேலைய விட்டு நிறுத்த வேணாம்.கொஞ்சம் கடைய விட்டு வெளியில போ ,மில்லு ஆபீஸீ இப்பிடி ஏதாவது ஒண்ணுல போயி பாரு,மொத்தமா ஏதாவது ஒரு யெடத்துக்கு டீ வடைன்னு தேவைப்படும்,அங்க கொண்டு போயி ஓங் யேவாரத்த விஸ்தீரணப்படுத்து, சரியாகப் போகுமில்ல,அதவிட்டு பாவம் அவுங்களப்போயி ஏன் வேலைய விட்டு நிறுத்தணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்க,,,,,,”எனச்சொன்ன சிறிது நாளில் அவன் யேவாரத்திற்கு பிள்ளையார் சுழியிட்டு விட்டேன்,ஒரு மில்லில் எனச் சொன்னான்.

மொத்தமாக அங்கு காலையும் மாலையுமாக கணிசமான எண்ணிக்கையில் டீயும் வடையும் விற்பதாகவும் வேலைக்காரர்களது வாரச்சம்பளத்தில் கொடு த்து விடுவார்கள் எனவும் சொன்னான்.

அன்றிலிருந்து இன்றுவரை தன் வியாபாரம் கூட வழி சொன்னவர் என அவர் மீது டீக்கடைக்காரனுக்கு எப்பொழுது ஒரு தனி மரியாதை உண்டு.

ஆனால் அவர் எப்பொழுதும் போல் எந்த எதிர்பார்ப்புமின்றி போய் வருகிறார்,

ஆனால் இன்று டீயும் டீக்கடை போவதும் கட் ஆகிப் போகிறது.

வீட்டிற்கு போய் குளித்து விட்டு எட்டாவது வீட்டுக்காரரின் வீட்டுக்குப்போன போது சலூன் கடைக்காரர் சொன்னது போல் அவனுக்கு முகப்பக்கவாதம் வந்திருந்தது,

இடது பக்க முகம் தொங்கிப்போய் இருந்தது. ஒரு பக்கமாய் வாயும் மூக்கும் கண்ணும் காதும் ஒத்துழைக்கவில்லை அவனது செய்கைக்கு.ஆனால் எப்பொ ழுதும் போல் எல்லா வேலைகளையும் செய்ய முடிந்தது அவனால்.அவனது மனைவி சொன்னது போல் படுக்கையே கதி என இல்லாமல் எழுந்து முகம் கழுவி குளித்து ரெடியாகி இருந்தான்,

“சார்டோண்ட் வொரி,நம்ம ஜீ ஹெச் டாக்டர்கிட்ட கேப்போம்,அவருதான் நம்ம ஏரியாவுக்கே கடவுள் மாதிரி,அவரு இப்ப ஜி ஹெச்சுல ஓ பீ பாத்துக்கிட்டு இருப்பாரு,அவரு கிட்ட போவம்,அவரு கரெக்டா சொல்லீருவாரு,இங்க போக லாம்,இந்தடாக்டர்பாக்கலாமுன்னு,அவரு சொல்றது ஓரளவுக்கு கரெட்க்டா இருக்கும்.அந்த கரெக்ட கைபிடிச்சிக்கிட்டே போயிருவம்,,” என்ற பத்தாவது வீட்டுக்காரைஏறிட்ட எட்டாவது வீட்டுக்காரனின் மனைவி அவள் ஏற்படுத்திய களேபரம் பொய்யாகிப் போன கவலையில் கம்மென ஆகிப் போனாள்.

அப்பொழுதும் பத்தாவது வீட்டுக்காரர் அதையேதான் சொல்லிவிட்டு வந்தார், எட்டாவது வீட்டுக்காரரின் மனைவியிடம்.”ரொம்ப பல்லக்கடிக்காதீங்க ,இல்ல ரொம்பவும் கண்ண கசக்காதீங்க,…”என ,

”சரி அவுங்களுக்கும்மத்தஎல்லாருக்கும் இதுபோல சொல்றதெல்லாம் சரிதான், நம்ம வீட்டு நெலமையும் கொஞ்சம் கவனிங்க,,,,”என்றாள் அவரது மனைவி.

இது அவருக்கு பழக்கமான குரல்தான்,இன்னும் சொல்லப் போனால் அவர் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாத குரலும் கூட/

“ஆமாம் நீங்கதான் அவுங்க வேணும் ,நாலு பேரு இருந்தாத்தான் நமக்கு நமக்கு நாளைப்பின்ன உதவுமுன்னு சொல்றீங்க,நம்ம கைய தரையில கைய ஊனும் போது இன்னொரு கையையும் சேத்து வச்சிக்கிறனும்.அப்பத்தான் பலமா இருக்கும் ஆமா பாத்துக்கன்னு சொல்றீங்க,.சும்மா நம்ம கைய நம்பித் தான் நம்மன்னு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.நம்ம கை வலிக்கும் போது இல்ல பலம் யெழந்து போகும் போது இன்னொரு கையையும் சேத் துக்கத்தான வேணும்,கை சேரும் போது கை மட்டுமா சேருது,மனசும்தான சேருது,அத ஏன் நம்ம வம்படியா ஏங் தடுக்கணும் இல்ல அணை போடணும் ன்னு சொல்றீங்க,,,,,ஆனா அவுங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அவரு மக பெரிய மனிசி ஆன போது கூட நம்மள கூப்புடல, கேட்டதுக்கு மறந்து போச் சின்னு சமாளிக்கிறாங்க,சுத்தி இருக்குற அத்தன வீட்டுக்காரவுங்களையும் கூப்புட தெரிஞ்ச அவுங்களுக்கு நம்ம வீடு மட்டும் மறந்து போச்சின்னு சமா ளிக்கிறாங்க,அது எப்பிடிங்க சாத்தியம் ,எப்பிடி நெனைச்சிப் பாத்தாலும் அது சாத்தியம் இல்லைன்னு தோணுது.

“அவுங்க அப்பிடி நம்மள ஒதுக்கும் போது நாமளும் ஒதுங்கி போயிக்கிற வேண்டியதுதான பேசாம ,,,,,இவ்வளவு எதுக்கு தெருவுல இருக்குற எல்லா ரும் வேணாம் வேணாம்ன்னு சொன்னப்ப நீங்கதான் தெருவுக்கு நெத்தியில பொட்டு வச்சமாதிரி இருக்கட்டுமுன்னு சொல்லி இந்த செவ்வரளிச்செடிய நட்டு வச்சீங்க,அதுக்கு நீங்களே தான் தண்ணியும் கொண்டு போயி ஊத்து னீங்க,அதப் பாத்து மத்த வீட்டுக்காரங்களும் தண்ணி ஊத்த ஆரம்பிச்சாங்க ன்னு வையிங்காளேன், இப்ப அது மரமா வளந்து நிக்குது, இருந்தாலும் அந்த மரத்துக்கு குடுக்குற மரியாதைய ஒங்களுக்கு குடுக்குறாங்களான்னு பாத்தா அது இல்ல,அதுதான் நான் சொல்றேன்.நம்ம மரியாதைய நம்ம காப்பாத்திக் கிற வேண்டியதுதா,,,,”,என மனைவி சொன்ன சொல் தாங்கி எட்டாவது வீட்டுக்காரரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் வரும் போது அந்த செவ்வரளிச்செடியைப் பார்க்கிறான்,

பள்ளத்திலும்சரிவிலுமாய்இருந்த செடி தன்னை நோக்கி ஓடி வந்த தண்ணீரை தன்னகத்தே இழுத்துக் கொண்டும் உறைய வைத்துக்கொண்டுமாய் பார்த்துக் கொண்டது.

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நம்ம கை வலிக்கும் போது இல்ல பலம் யெழந்து போகும் போது இன்னொரு கையையும் சேத் துக்கத்தான வேணும்,கை சேரும் போது கை மட்டுமா சேருது,மனசும்தான சேருது,அத ஏன் நம்ம வம்படியா ஏங் தடுக்கணும் இல்ல அணை போடணும்

அருமை
உண்மை

வலிப்போக்கன் said...

வீட்டுக்கு வீடு வாசற்படியை உணர்த்துகிறது..எனக்கு...

vimalanperali said...

வணக்கம் சார்.வீட்டுக்கு வீடான வாசல் படிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே...!

vimalanperali said...

மனம் தொட்ட கருத்துரைக்கு.நன்றி!

iramuthusamy@gmail.com said...

நல்ல கதை. பிடித்திருக்கிறது. நன்றி

vimalanperali said...

உள்ளார்ந்த கருத்துரைக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

சிறப்பான கதை அண்ணா...
அருமை...

vimalanperali said...

சிறப்பு செய்த கருத்திற்கு நன்றி
சேக்குமார் அண்ணா,,,,,

M0HAM3D said...

அருமையன கதை சகோ

vimalanperali said...

நன்றி சார்
கருத்துத்துரைக்கும் வருகைக்கும்/