26 Mar 2018

இளந்தளிர் முகம் காட்டி,,,,

கொஞ்சமேயான வெடிப்பு,எந்த சத்தமும் ஆரவாரமுமில்லாத சின்னதான வெடிப்பு.டொப்,,,,

யாருக்கும் கேடு விளைவித்து விடாத சின்னதான சப்தவெடிப்பு தனது புள்ளி யைஊன்றிய இடத்திலிருந்து நான்காய் எட்டாய் பதினாறாய் மெல்லிய கிளை கள் கொண்டும் கை விரித்துமாய் படம் காட்டியிருந்ததாய்,,,,,/

வீட்டின் பக்கவாட்டு வெளியில் செப்டிக் டேங்க் மற்றும் குளியல் நீர் உறை கொள்ள தோண்டபட்டிருந்த உறைத்தொட்டி மற்றும் வரையறைப்படுத்தி உருவகப்படுத்தி கட்டப்பட்டிருந்த மோட்டார் பெட் தவிர்த்து வெளியில் பரந்தி ருந்த ஒற்றை வேம்பின் அருகாய் கொட்டப்பட்டிருந்த செம்மண்தான்இப்படி வெடிப்பின் புள்ளி காண்பித்து கிளைபரப்பி தன் படம் வரைந்து காட்டியதாய்ப் பட்டது.

அருகில் சென்று பார்த்தான்,நீண்ட யோசனைக்குப்பின்/

எதன் அருகிலும் போவ தற்கு இப்பொழுது யோசித்துத்தான் போக வேண்டிய திருக்கிறது என்பதெல்லாம் இல்லை.என்ற போதிலும் கூட கொஞ்சம் தயங் கியேதான் சென்றான், வெடிப்பு கண்ட மண் துகள்களிலிருந்து கிளம்பியது போல் எறும்புகள் எந்த விதிகளும் அல்லாது வரிசை காட்டியும் மண் குவியலை வட்டமிட்டும், மேலேயும் கீழேயுமாய் ஏறியும் இறங்கியுமாய் சென்று கொண்டிருக்கிறது யாரும் சொல்லாமல் வழியிட்டுக்காட்டாமலுமாய்/

இட்ட கோலங்கள் அழிந்து போகாமலும் அவிழ்ந்து விடுகிற புள்ளிகள் அடை கோட்டுக்குள்ளும் கோடுகளையும் கோலங்களையும் புள்ளிகளையும் தன் கை வண்ணத்தில் பிரசவித்த இல்லத்தரசிகளும் அவர்களது பெண் பிள்ளைகளு க்கும் தெரியாதுதான்.

இல்லையெனில் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.அவர்கள் வரைந் திருந்த கோடுகள் மீதும் அழுத்தி ஊன்றிய அழுத்தம் கொண்ட புள்ளிகள் மீதுமாய் ஊர்ந்த எறும்புகள் ஓர் நாளில் இப்படியாய் வெடிப்பு கண்டு வரைவு காட்டிய மண்ணின் மீது ஊர்ந்தெழுந்து தன் இருப்பு காட்டி செல்லும் என,,,/

காட்டிய இருப்புகளின் அடர்த்தியையும்,அர்த்ததையும் அனர்த்ததையும் உள்ள டக்கி இருப்பு காட்டிய பாதையை எறும்புகள் அறியாதுதான்.

அம்மண்ணின் வெடிப்பையும் அதன் வரைவையும் அர்த்ததையும். பிய்த்துத் தின்ற கிரீம் பன்னிலிருந்து உதிர்ந்திருந்த தேங்காய்ப்பூக்களின் சிறுசிறு துண் டுகளை பொறுக்கி இழுத்து சேகரித்துச் செல்கிற சாரட் வண்டியாய் வீட்டினு ள் கறுப்பு எறும்புகளின் வரிசை.

வழுக்குகிற பளபள டைல்ஸின் மீது ஊர்ந்து செல்கிற எறும்புகள் எங்கு கற்றன ,இப்படியெல்லாம் இருக்க,யார் அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தா ர்கள் தனக்கு இடரோ ஆபத்தோ வந்தாலொழிய ஒழுக்கத்தையும் கட்டுக் கோப்பை யும் கை விட்டு விடக்கூடாது என,,/

உங்களுக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் கிரீம் காத்த பன்னையும் அதன் மீது தூவப்பட்டிருக்கிறதேங்காய் துகள்களையும் ருசித்துச்சாப்பிட வேண்டும் என,,,/ அவைகள் கேட்டுவிடக் கூடும் என்கிற காரணத்தினாலும் ஒன்று பட்டு ஒற்று மை கொண்ட அவைகள் தன் பலம் காட்டியும் நிறம் காட்டியும் படை பலம் காட்டியும் முஷ்டி உயர்த்தி போராட ஆரம்பித்து விட்டால்,,,,,,,?

போராட்டங்களை கைக்கொண்டவர்களும் அம்மன நிலைக்கு ஆட்ப்பட்டவர் களுக்கும் அந்த வாழ்நிலைச்சூழல் கற்றுக்கொடுத்திருந்த வெப்பமும் ஆக்ரோ ஷமும் இன்னும் யாராலோ எங்கோ, எப்பொழுதோ அடையாளம் காட்டப்பட் டும் அம்புக்குறியிடப்பட்டுமாய்/

குறியிடப்பட்ட அம்புகளின் நுனியை எட்டிப்பிடித்து எறும்புகளும் போராட்ட மும்முனைக்கும் அது தாங்கிய எண்ணத்திற்கும் வந்து விடுமோ,,,?

வந்து விட்டால் என்ன போராட்டம் இல்லாமல்யாராட்டமும் எப்படி செல்லும் என்பதை கைக்கொண்டும் மனம் தாங்கியும் ஏற்றுக்கொண்டு விடுமோ அவைகள் என நினைத்திருந்த நேரம் பிளவுண்டிருந்த மண்ணின் துளையி லிருந்து மெல்லென எழுந்து முளையிட்டு வந்திருந்த ஒற்றைத்தளிர் தன் இலையையும் இலை ஒட்டிய முத்தையும் தன்னில் பதித்து அழகு காண்பி க்க ஆரம்பித்தது,

அந்நேரமாய் தளிர் நின்றிருந்த வெளியெங்குமாயும் அது தாண்டியும் பரவி பயணித்த காற்றுதன் காலூன்றி சென்ற திசைகளில் தன் தடம் பதித்தவாறும் தன்னை நிலை நிறுத்தி சென்றவாறுமாய்,,,.,/

சென்ற நடையின் வேகமும் மதர்ப்பும் ஊன்றலும் பதிவும் தன் நிலை நிறுத்தலை திசைகள் தோறும் முன்னறிவித்துச்சென்றதாய்,,,/

என்னமச்சான் எப்பிடியிருக்க,எங்க போற என்கிறது போலான சம்பிரதாய கேள்விகள்அல்லாமல் பரந்து வீசி குடிகொண்ட தன் திசையறிவித்த விண்ண திர் கேள்விகளில் குடிகொண்டும் அதன் பதில்களை எதிர் கொண்டுமாய்,,,/

எதிர் கொண்டதை ஊரெங்கிலுமாய் ஓடோடிச்சென்று சொல்லிவிட்டு திரும்பு கிறது காற்று/

கெட்டிப்பட்ட மண் பிளந்து தன் தளர்வு காட்டிய இடத்தில் இளந்தளிர் ஒன்று துள்ளித்துளிர்த்திருக்கிறது தன் விடாப்பிடியான பிடிவாதத்தாலும் நான் உள்ளிருந்து முளைத்துத்துளிர்த்து கிளைத்து நெடித்து பரவிப்பாவி பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் பலன் தருவேன் என கட்டியம் கூறியும்,,,,,/

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை நண்பரே

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

Nagendra Bharathi said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

vimalanperali said...

நன்றியும் பிரியமும்!

vimalanperali said...

நன்றியும்.அன்பும்!

iramuthusamy@gmail.com said...

இளந்தளிர் முகங்காட்டி. நல்ல முயற்சி வாழ்த்துகள்.

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்!