11 Apr 2018

விழுதோடி,,,,,,,,

வந்தவரிடம் கேட்டபொழுது நான் ஒரு கடையில் வேலை செய்கிறேன் என்கிறார்,

ஆள் பார்ப்பதற்கு புது நிறமாய் இருந்தார்,

இதுதான் சார் நம்ம பக்ககலரு என்றவர் ஒடம்புக்குன்னு பெரிசா கவனிக்கி றது இல்ல சார்,ஏதோ கொஞ்சம் உழைப்பு கெடக்கு ,கொஞ்சம் கள்ளம் கபட மில்லாத மனசு,எல்லாம் சேர இப்பிடி இருக்கேன்,இதே போதுமுன்னு கூட நெனைகிறேன் சார் என்றார்,

ரோஸ்கலர் சட்டையும் வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தார்,

ரோஸ்க்கலர் சட்டை பார்ப்பதற்கு மிகவும் நன்றாகவே இருந்தது,வெள்ளைப் பேண்டை விட்டு விட்டு ”அதென்ன சார் ரோஸ்,திக்கான ரோஸாக இது ஒரு மாதிரியாக இருக்கிறதே ஏதும் கொள்கை பிடிப்பா, இயக்கத்துக்காரரா நீங்க”,, என அவரிடம் கேட்ட பொழுது அப்படியெல்லாம் இல்ல சார், அதெல்லாம் எனக்குஅதிகஅளவுல கூட தெரியாது, பெயரளவுல கொஞ்சம் தெரியும், அவ் வளவுதானே தவிர்த்து பெரிசா ஒண்ணும் கெடையாது.சார்,

“போக நான் வேலை பாக்குற யெடத்துல இருந்த யூனியன் தலைவர்ங்க கொஞ்சம் அதுல பிடிப்பா இருப்பாங்க,அவுங்க அந்த இயக்கம் சம்பந்தமா பேசும் போதும் அந்த இயக்கத்துக்காரர் பத்தி பேசும் போதும் அவரோட கொள் கைங்க,சமூகம் சம்பந்தமா அவரு வச்சிருந்த பார்வை பத்தி பேசும் போதும் எனக்கு கொஞ்சம் சிலிர்க்கும்,

”சமயா சமயங்கள்ல அவங்களோட பேச்ச கேக்குற வாய்ப்பு கெடைக்கும், தலைவர்ங்ககூடமனம்ஒட்டுன உரிமையான பழக்கம் இல்லைன்னாலும் கூட அவுங்க மேல இருக்குற மரியாதை காரணமா அவுங்க பேச்ச தள்ளி நின்னு தெறந்த வாய் மூடாம கேட்டுருக்குறேன்,நல்லா இருந்துக்கு,அப்பயும் சரி இப்பயும் சரி அவுங்க அன்னைக்கி பேசுன பேச்ச அசை போடுறப்ப கூட அதோட நிதர்சனம் சமூகத்துல எந்த அளவுக்கு வேர் ஊனிப்போயி இருக் குங்குறது பட்டவர்த்தனமா தெரியும்,

“பெரிய அளவுல கட்சி இயக்கம் கொள்கை கொடின்னு போகாட்டிக்கூட அன்னைக்கி அவுங்க பேசுன பேச்சும் அவுங்களோட நடவடிக்கையும் மனம் புடிச்சிப் போக அவுங்களோட சொற்களையும் பழக்க வழக்கங்களையும் மனசுலதாங்கிக்கிட்டு அப்பிடியே இருக்குறேன் இன்னைக்கி வரைக்கும் அதுல பழுதில்லாம,,,,ஓடிக்கிட்டு இருக்கேன் சார்,

“நீங்க மட்டும் இல்ல ,இன்னும் நெறையப்பேரு இது போல கேட்டுருக்காங்க, கேட்டவுங்ககிட்டயெல்லாம் நானும் இது போலவே சொல்லியிருக்கேன்,

“இப்ப அந்த தலைவர்களெல்லாம் எங்க இருக்காங்கன்னு தெரியல, அதுல எத்தனை பேரு இன்னும் இருக்காங்க,எத்தனை பேரு மண்ணுக்குள்ள போயிட் டாங்கன்னு கூடத்தெரியாது.

“சும்மா சொல்லக்கூடாது அவுங்களோட இருந்த நாட்கள, இத்தனைக்கும் நான் வேலை பாக்குற ஊரு எங்க ஊர்ல இருந்து போயிட்டு வர்ற தூரம்தான்னா லும் கூட அவுங்க தங்கி இருந்த அந்த ஒண்டுக் குடித்தன ரூமுக்கு பக்கத் துலயே தங்கியிருந்தேன்,

“அவுங்கள்ல நல்லா படிச்சவுங்க, நல்ல உடல் உழைப்பு கொண்டவுங்க, கிரா மத்துஅசல் வாசத்தோட இருந்தவுங்க,என்னையப்போல அப்பாவி சப்பாவிங்க, கொஞ்சமாபடிச்சவுங்க,,,ன்னுஎல்லாரும்இருந்தாங்க,இப்பிடிபலதரப்பாஇருந்தாலும் கூட அதுல யாரும் சோடை கெடையாது,

“பாத்தா அப்பாவி போல ஒங்களுக்கு ஒதவாதது போலத்தான் இருப்பாங்க, ஆனா ஒங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு கேள்விப் பட்டா போதும் அடியோட கெளம்பி வந்து நம்மள சுத்தி அணைகட்டி நின்னு பாதுகாத்துருவாங்க,

”இப்பிடித்தான் ஏங் ரூமுக்கு எதுத்த ரூமுக்கார ஒருத்தரோட பணம் ஒரு ஆயிரம் ரூபாய் வரைக்கும் காணாம போச்சி,,, சாயங்காலம் நான் ரூமு க்கு வர்ற வரைக்கும் இப்பிடி ஒண்ணு நடந்திருக்குன்னு தெரியாது,

“அன்னைக்கி வாரத்துல மொத நாளுங்குறதால ஆபீசுல கூட்டமான கூட்டம், அதுனால ரூமுக்கு வர லேட்டாயிருச்சி,சரி அதுனால என்ன இப்ப,ரூமுல வந்து என்ன செய்ய போரமுன்னு கொஞ்ச நேரம் டவுனுக்குள்ள சுத்தீட்டு கடையில சாப்புட்டு வர்றேன்,

“ஏங் ரூமுகிட்ட வழக்கத்துக்கு மாறான இயல்பு கெட்ட தன்மையோட ஆள்க நிக்கிறாங்க,என்னடா இதுங்குற யோசனையோடவும் சங்கடத்தோடவும் ரூம தெறந்து உள்ள போகப்போறேன்,எதுத்த ரூமுல இருந்து ஒரு நாலைஞ்சி பேருஇருக்கும்,சும்மா திமுதிமுன்னு வந்துட்டாங்க,ஏங் சகளையோட,,,,,ரூபா ய காணமாமுல்லடா,இங்க ஒங்களத்தவுர யாருடா வந்து எடுத்துறப் போறா ங்க,ஒழுக்கமா எடுத்த ரூவாய திருப்பிக்குடுத்துரு,இல்ல ரோட்டுல நடக்க முடியாது ,கையக்கால இனிங்கீருவம் பாத்துக்கன்னு,,,, ஏங் பையில கைய விட்டு ரூவாய எடுத்து அவுருகிட்ட குடுத்துட்டு போயிட்டாங்க,,,ஊருல இருந்து வரும் போது செலவுக்கு ஆகுமுன்னு கொண்டு வந்துருந்தேன்.

“எனக்கு இது ஒரு பெருத்த அவமானமாவும்,மிகப்பெரிய தலைகுனிவாவும் ஆகிப்போச்சி, தவுர இப்பிடி ஒரு திருட்டுப்பட்டம் தேவையா எனக்குன்னு சம்பந்தப்பட்டஎதுத்த ரூம்காரர்கிட்ட போயி கேட்டப்ப அவரும் அதையேதான் சொன்னாரு,ரூமுக்கு எதித்தாப்புல இருக்குற நீங்க எடுக்காம இத எடுக்க அயல் கெரகத்துல இருந்தா வந்துரப் போறான்,இல்ல தரையில இருந்து மொளைச்சி வந்துட்டானாங்குறாரு,

சரி இவன் கிட்ட இப்பிடி பேசுனா கதைக்காகாது.அவுங்க பாஷையிலயே பேசிற வேண்டியதுதான்னு ஒரு முடிவோட ராத்திரி குளிச்சிட்டு போயி கடையில சாப்புடப்போறேன்,குளிக்கப்புடிக்கல,சாப்புட புடிக்கலை,டீக்குடிக்க புடிக்கல ரோட்டுல நடந்து வரவே புடிக்கல,,,.உடுப்பெல்லாம் கழட்டீட்டு அம்மணா நடக்க விட்டு கைதட்டி கெக்கலி கட்டி சிரிச்ச மாதிரி இருந்துச்சி,,,/ சரின்னு ஒரு வழியா மனச் சமாதானம் பண்ணிக்கிட்டு ரூமுக்கு வந்து படுக்கலாமுன்னு வந்தா தூக்கமும் வர மாட்டேங்குது,யாரோ மனசுக்குள்ள நெருப்புப்பந்த உருட்டி விட்ட மாதிரி ஒரு கனமான உணர்வோட நெளிஞ்சிக் கிட்டே எந்நேரம் தூங்கிப்போனேன்னு தெரியாம தூங்கீட்டேன்,

“மறு நா வெளியூர் போயிருந்த யூனியன்காரங்க வந்ததும் விஷயத்த சொன் னேன்.சரி இதப்பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க,இத்தோட இந்த விஷயத்த மறந்துருங்கன்னு ,நீங்க கொளம்பி ஆபீஸிக்கு போங்கன்னு சொன்னவங்க சாய்காலம் நான் ஆபீஸ் முடிஞ்சி ரூமுக்கு போது ஏங் சட்டைபாக்கெட்டுல கைய விட்டு பணத்த எடுத்தவன கூட்டிக்கிட்டு வந்து அவுங்க ரூமுலயே ஒக்கந்துருந்தாங்க,இது எனக்குத்தெரியாது,நான் வழக்கம் போல கை கால் மொகம் கழுவீட்டு செல்போன்ல பாட்டுக்கேட்டுக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருந்தப்ப வந்துட்டாங்க ரூக்குள்ள,

“தோல்வி நிலை என நினைத்தால்ன்னு பாட்டகேட்டுக்கிட்டு இப்பிடி ஒக்காந் துட்டீங்களேன்னு கேட்டுக்கிட்டே,,,நேரா ஏங்கிட்ட வந்தவங்க ஏங் சட்டைப் பயில கையவிட்டு பணம் எடுத்தவன மன்னிப்புக்கேக்கச்சொன்னாங்க, எதுத்த ரூமுக்காரர கூட்டிக்கிட்டு வந்து இனிம இப்பிடி செய்ய மாட்டேன்னு சொல்ல வச்சிட்டு அவரு ஏங்கிட்டயிருந்து எடுத்த ரூபாய வாங்கிக்குடுத்தாங்க,

அவங்க செஞ்சது எனக்கே கூட கொஞ்சம் சங்கடமா போச்சி,எதுக்கு மன்னிப்பு கின்னிப்புன்னு கேட்டு பெரிசா போட்டு சங்டப்படுத்திக்கிட்டு ஏதோ நடந்தது நடந்து போச்சின்னு விட்டுற வேண்டியதுதானேன்னு,,,,,

அப்பிடியெல்லாம் விட்டுற முடியாது நண்பான்னு,,,,,,, ஏங் மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணுனவரு போல சொன்னாரு,இத நாங்க எங்க கெத்த காமிக்கி ணு ங்குறதுக்காக பண்ணல நண்பா,ஒனக்கு ஒண்ணுன்னா நாங்க இருக்கோம் பஞ்சாரத்து கோழியா ஒன்னையா பாதுகாக்க அப்பிடீன்னு தெரியனுங்குறது க்காக பண்ணுனதுதான்னு அன்னைக்கி சொன்னவுங்க,,,,,ஏங் கண்ணு முன்னா டியே தொழிலாளர் பாதுகாப்பு தொழிற்சங்கம் பொதுநலம் அது சம்பந்தமான் னு,,, பெரிய விருட்சமா வளந்து பாவி நிக்க ஆரம்பிட்டாங்க,

“தொழிலாளர் பிரச்சனை மட்டுமில்லாம மத்த மத்த நல்ல விஷயங்களப் பத்தியும் யாரும் கவனம் செலுத்தாம மறந்து போற விஷயத்தையும் யாரும் தொட தயங்குற ஒண்ணையும் தைரியமா தொட்டதே அவுங்களோட முழு பலமா தெரிஞ்சிச்சி,

“அந்த பலத்தோட அவுங்க வளந்து நின்னப்ப நான் பாத்துக்கிட்டிருந்த வேலை ய விட்டுட்டு வந்துட்டேன்,குடும்பத்தோட தேவைக்காக,,/

குடும்பம் பெரிசாகி புள்ளை குட்டிகளெல்லாம் வளந்து நின்னப்ப அவுங்க ளுகாக வேற யெடம் நோக்கி நகர வேண்டியதா போச்சி,நகர்ந்து வந்தப் பெற கும் கூட எப்பவாவது அவுங்க ஞாபகமும் அவுங்க அறியாமலேயே அவுங்க கத்துக்குடுக்காமலேயே அவுங்ககிட்டயிருந்தும் அவுங்க மூலமாவும் கத்துக் கிட்ட விஷயம் ஞாபகத்துலயும் மனசுலயுமா நின்னு தாலாட்டுது,

“அந்த மாதிரி நேரங்கள்ல கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாவும் இருக்கும், கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கும்,எத்தனைதான் பசப்பான பல விஷயங்க கண்ணுல பட்ட போதும் கேள்விபட்ட போதும் கூட அந்தபக்கம் இன்னும் தலை சாய்க்காம இருக்கக் காரணம் அன்னைக்கி அவுங்க கூட இருந்த அந்த ஒட்டுதல்தான்னு நெனைக்கிறேன்,அந்த நெனைப்போட பெரும் விருட்சமா வளந்து நின்ன அவுங்க நினைவுகள்ல காலூனி நின்னுதான் இதுவரைக்கும் பயணிக்கிறேங்குறதுக்கு அடையாளம் இந்தக்கலர்சட்டைன்னு சொல்லலாம். தவிர்த்து இந்தக்கலர் எனக்கு பிடிச்ச கலரு என சொல்லியவர் தான் வேலை பார்க்கிற கடை வயர்களும் பல்புகளும் லைட்டுகளுமாய் வரிசைகிரமமாக அடுக்கப்பட்டிருப்பதால் அதை எலெக்ட்ரிக் ஸ்டோர் என்பார்கள்.எனவுமாய் உபரித்தகவலை அவிழ்த்து வைத்தார்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல மனம் வாழ்க...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றியும் அன்புமாய்,,,,/

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
போற்றுதலுக்கு உரிய குணம்

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

அன்பும் பிரியமும் நாகேந்திர பாரதி சார்,/

vimalanperali said...

பிரியம் மிகுந்த கருத்துரைக்கு நன்றி,,/

iramuthusamy@gmail.com said...

விழுதோடி சிறப்பு பிடித்திருக்கிறது.

vimalanperali said...

நன்றியும் அன்புமான கருத்துரைக்கும்
வருகைக்கும் வணக்குகிறேன்,,/