13 May 2018

மென் நடை வேகம் காட்டி,,,,

மெதுவாக நடந்து பழக்கமில்லை போலும் மணியண்ணனுக்கு,

வேகம்,வேகம் வேகம்தான்,,,,,எதையாவது எட்டிப்பிடிக்கிற வேகம் அவரது நடையில் இருந்து கொண்டே இருக்கும்,

காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்திருப்பவர் வீட்டின் நடையிலிருந்து கிளம் பும் வாக்கிங்தான் அன்றைய அவரது முதல் நடையின் துவக்கம் எனலாம்.

கழுவியமுகத்தை சட்டையின் நுனி கொண்டு தெரு முனையிலிருக்கும் ரோட்டு டீக்கடையில் போய் முகம் துடைப்பவர் குடிக்கும் டீதான் அவரது நடையை ஆரம்பித்து வைக்கும் கிரியா ஊக்கியாக இருக்கும்/

டீகடைக்காரர் கேட்பார்,என்ன சார் ,இவ்வளவு வேகமா நடையில,,,,?கொஞ் சம் தாக்காட்டி போனாத்தான் என்ன,ஒரு வேளை நான் குடுக்குற டீயாலதான் ஒங்க நடையோட வேகம் கூடிப் போகுதோன்னு எல்லாரும் கேக்குறாங்க என டீக் கடைக்காரர் சொல்லும் பொழுது பெரிதாக சிரிக்கும் ஒரு சிரிப்பே டீகடைக்காரரின் பேச்சிற்கு பதிலாய் இருக்கும்,

”அப்பிடி இல்லப்பா நடையோட வேகம் கூடிப்போறதுக்கும் நான் வேகமா நடக்குறதுக்கும் காரணம் நான் விழுந்துறக்கூடாதுங்குற முன் ஜாக்கிரதை முக்கியம்,ரெண்டாவது இப்பிடியே ஓடிக்கிட்டே இருக்குறது என்னோட ஒடல் சக்திய டெவலப் பண்ணும்ன்னு நெனைக்கிறேன்,

“காலையில எந்திரிச்சி இப்பிடி வெளியுலகத்தப்பாக்க ஓடிவரும் போது கெ டைக்கிற புத்துணர்ச்சி நாளெல்லாம் என்னைய இயங்க வைக்கிற புத்துணர்ச் சி சார்ஜ்ரா இருக்கும்ங்கும் போது நான் ஏன் இவ்வளவு ஓட்டமும் நடையுமா இருக்கக்கூடாதுன்னு கேக்குறேன்,

“தவிர இப்பிடி இருக்குறதுனால எனக்குள்ள தூங்கிக்கெடக்குற சக்தி முழிச்சிக் கிருதுங்கும் போது ஏன் நான் அத கைக்கொள்ளக்கூடாதுன்னுன்னு எனக்கு ள்ள ஒரு கேள்வி ஓடிக்கிட்டே இருக்கும் என்பார்,

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்,இப்பிடி இருக்குறது எனக்கு சக்தி தருது ன்னு நெனைக்கிறேனோ இல்லையோ,நல்லா இருக்கு எனக்கு,,,,,/

”யாருக்கும் எந்த யெடஞ்சலும் இல்ல இதுனால ,ஓடிக்கிறேன்,பொண்டாட்டி புள்ளைங்கள்ல இருந்து கூடப் பொறந் தவுங்க அக்கம் பக்கம் ஆபீஸீ கடை கன்னின்னு எதிர்படுறவுங்கள எந்த விகல்பமும் இல்லாம பாக்குறேன், அவங் களோட நல்ல மதிப்போட பழகுறேன்.அவுங்களுக்குன்னு மனசுக்குள்ள தனித் தனி செக்‌ஷன் ஒதுக்கி அதுல அவுங்கவுகளுக்குத்தகுந்தாப்புல யெடம் ஒதுக்கி வச்சிருக்கேன்,

“அந்த ஒதுக்கல்ல வெளைஞ்ச பேச்சும் பழக்கமும் மதிப்பும் அதன் காரணமா பூத்துத் தெரியிற பழக்கம் வழக்கமும் என்னைய இன்னைக்கி வரைக்கும் நன் மதிப்போடவும் நல்லாவும் வச்சிருக்கு,”

போன வாரம் ஆபீஸீக்கு வந்த ஒருத்தர் சொல்றாரு,சார் உண்மையாவே மனசறிஞ்சி சொல்றேன் சார்,ஒங்களப்போல ஒரு மனுசர பாக்குறது ரொம்ப ஆபூர்வம் சார்,அதும் இது போல ஓரு கௌவர்ன்மெண்ட் ஆபிஸீலங்குறார், ஆபிஸீக்குள்ள நா நொழையும் போதே வாங்க சார் நல்லாயிருக்கீங்களானு கேட்டு பளிச்சின்னு சிரிக்கிற அந்த கொணமும்,நல்ல மனசும் யாருக்கும் லேசுலவாய்க்காதுசார்,ஒங்களுக்கு வாய்ச்சிருக்கு,அது கடவுள் குடுத்த வரமா, இல்ல நீங்களா தேடிக்கிட்ட குணமான்னு தெரியல,நல்ல கொணம் இருக்குற யெடத்துல கடவுள் குடியிருப்பாருன்னு சொல்வாங்க,அது போலயான்னு தெரியல, எப்பிடி இருந்தாலும் இத கைவிட்டுறாதீங்க சார்,இது போலான வார்த்தைகளும் வரவேற்புகளும் எங்களப்போல வர்ற மனுசங்களுக்கு மனச வருடி விடுற ஒரு மென்வாஞ்சை சார்,தயவு செய்து எந்தக்காலச்சூழல்லயும் எந்தநெருக்கடியிலயும் இந்த அரிய கொணம் ஒங்கள விட்டுப் போகக் கூடாது ன்னு வேண்டிக்கிறேன் சார், இது போலான பழக்கம் வழக்கங்க உறுதியா ஒங்கள நல்ல யெடத்துக்கு கொண்டு போகப்போகும், ஏங் அனுபவத்துக்கும் வயசுக்கும்சொல்றேன் சார்,நீங்க நல்லாயிருக்கணும் சார் ரொம்ப காலத்து க்கு, நல்லா இருப்பீங்க சார், வாழ்க்கைக்கு மனசும் நடப்பும் தான சார் முக்கி யம் ன்னு சொல்வார்,

”இந்தநன் மதிப்புக்காகவும் நல்லாவுக்காகவும் இந்த நடைஎன்ன,,? இன்னும் எவ்வளவு வேகமா எந்த நடை கூட நடக்கலாம்ன்னு தோணுது, பாப்போம் பொழச்சிக்கெடக்குற காலம் வரைக்கும் இப்பிடியேஓட முடியிதா இல்ல”,,,, ,,,,,?  என கேள்விக்குறியிட்டு சிரிப்பார்/

அந்த பாத்துக்கிருவோமில் இருக்கிற அவரது அசையாத நம்பிக்கை தான் அவரை இவ்வளவு தூரம் முன்னகர்த்திச்செல்லவும் ஓடவுமாய் வைக்கிறது போலும் என நினைக்கத்தோணுகிறது அவரைப் பார்க்கிற ஒவ்வொரு கணங் களிலுமாய்,,,/

குச்சியான கால்களை முன்னகர்த்தி குண்டான தொந்தியுடன்நடந்து போகும் போது டக் டக் டக்கென சபதம் கேட்கிற ஒரு தொனி இருக்கும்.ஒரு லயம் இருக்கும்,சீரான வேகமும் சீரான கை வீச்சும் சீரான மூச்சும் அந்த நடையின் போது அவர் உடன் கட்டி இழுத்துப்போகும் சமாச்சாரங்களாய் தொற்றிக் கொ ண்டு வரும்.இதில் ஏதாவது ஒன்றில் சின்னதாய் ஒரு எழுத்துப்பிழையோ இடறகரடலோ ஏற்பட்டு விட்டால் அல்லது ஏற்பட்டதாய் அவர் உணர்ந்து விட்டால் நடையை நிறுத்து விடுவார் சிறிது நேரம்,

நிறுத்திய வேளையில் டீ வடை சிகரெட் என போகாமல் நின்ற இடத்திலிந் தே ஒரு மென் தியானியின் மனோ நிலைக்கு சென்று திரும்புபவர் சிறிது நேரத் தில் தூக்கத்திலிருந்து விழித்தவர் பொல நடையைத் தொடர்வார்.

அப்படியாய் தொடரும் நடையில் அவர் செல்லும் பாதை பயந்து வழிவிடும் அவருக்கு என்பார்கள்,

”பயந்தெல்லாம் வழிவிட வேணாம் ,இப்பிடியே இது போல சாதாரணமா நடக் க அனுமதிச்சா போதும்,நடக்குற நம்ம எவ்வலவு முக்கியமோ அது போல நடக்குற பாதையும் முக்கியமில்லையா” பெய்யிற மழைக்கும் தண்ணிக்கும் அடிக்கிற காத்துக்கும் வெயிலுக்கும் தாங்குறது போல இருக்குற பாதையும் முக்கியம் என்பார்.

நம்ம தாங்கி நிக்கிற மண்ணும் அதோட வீர்யமும் நல்லாயிருந்தாதானப்பா நம்ம போற பாதையும் அதோட வலிமையும் நல்லாயிருக்கும் எனவும் சொ ல்ல மறக்க மாட்டார் கூடவே,,,/

”நம்ம நட்டு வைக்கிற வளமான வெதை மண் கீறி மொளைச்சி வர மண் வளம் முக்கியமோ அவ்வளவு முக்கியம்,நாம போற பாதை தெரிஞ்சிக்க, சும்மா யில்ல ஒண்ணும்.

”வெதை மொளை எடுத்து வர்ற நேரத்துல அதோட வாயில்ல போயி நீ கால அழுத்தமா வச்சி நின்னுக்கிட்டயின்னா எப்பிடி மொளைச்சி வரும் வெத,அது துளிர்த்து துளிர்த்து மேல வர முட்டி முட்டிப் பாத்து நம்ம கால் அழுத்தத்தோட பலம் தாங்க மாட்டாம பூமிக்குள்ளயே கெடந்து கருகி உயிர விட்டுரும்,அது போலதான் நாம நடந்து போற பாதையும் முள்ளும் கள்ளுமா கரடு தட்டிப் போயி இருந்துச்சின்னா எங்கிட்டுப் போயி நீ நடக்கவும் ஓடவும் டூவீலர்ல போகவும் முடியும் சொல்லு,,,,,?

நடந்து போற பாதை கரடு தட்டிப்போகாம இருக்குற மாதிரி பாத்துக்குற வேண்டியதும், விதை மொளச்சி வர்ற யெடத்துல கால அழுத்தமா ஊனாம இருக்க பாத்துக்குற வேண்டியதும் நம்மதான்” என்பார்.

”பாத்துக்கிறதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல பாதையப் பாத்து நடக்கச் சொல்லு” என்பார்கள் இவரை கேலியும் கிண்டலுமாய்,/

நடக்குற பாதைக்கும் வழி விடுற ரோட்டுக்கும் கண்ணும் மனசுமா இருக்கு சரியா பாத்துப் போங்கன்னு சொல்றதுக்கு எல்லாம் நடந்து போறவங்களோட மனசையும் அவசர அவசியத்தையும் பொறுத்த விஷயம்தான் என்பார் சிரித்துக் கொண்டே,,/

அவரது சிரிப்பிலும் மென்மையானபேச்சிலும்ஆதரவான நடப்பிலும் எப்பொழு தும்பூத்துக்கிடக்கிறவாஞ்சை அருகில் இருப்பவர்களை அரவணைத்துக் கொள் ளும்,

இதற்கு சாட்சியாக அவர் அணிந்திருக்கிற கறுப்புப்பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் அவரது நடையின் வேக அடையாளம் சொல்லி கூடவே செல்கி றதாய்,,/

நட்டு வைத்த ரோஜாச்செடிகள் நான்கு வெட்கி தலை குனிந்ததாய் பதிவாகி றது அவரது நடையின் வேகத்திலும் அழகிலுமாய்,,,,/

செடிக்கும் பூவுக்கும் காய்க்கும் இல்லாத பாக்கியம் இங்கு யாருக்கும் கிடை த்து விடப் போவதில்லை எனும் போது நடந்து போகிற எனக்கு எப்படியப்பா கிடைக்கும் என்பார் மணியண்ணன்,

அது என்னமோ தெரியவில்லை,அல்லது சொல்லி வைத்த மாயமோ புரியவி ல்லை, கறுப்புப் பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் போட்டு விட்டால் அவ ருக்கு கொஞ்சம் கூடுதல் அழகும் அவர் மீதான மதிப்புமிகுந்த பார்வையும் வந்து விடுகிறதுதான்,

இதில் மதிப்பு சரி .கூடுதல் அழகு பொதிந்திருக்கிறது நீங்கள் அணிந்திருக்கும் உடையில் எனச் சொல்லும் போது அவர் கொஞ்சம் சங்கடமும் வெட்க மும் பட்டுக் கொள்வார்.

சங்கடம் சரி,வெட்கம் என்னத்துக்கு என்றால்,,,”அட சும்மா இருங்கண்ணே, கல்யாண வயசுல பொண்ணு நிக்கிறா வீட்டுல,இதுல போயிக்கிட்டு நீ மாப் புள மாதிரி இருக்க,அழகா இருக்கன்னு வேற பேசிக்கிட்டு,,,”எனச் சிரிப்பார்,

“சரி விடுங்கண்ணே கேலிதான என்றால் கேலிதாண்ணே,கேலிதாண்ணேஒரு ட்ரெஸ் போடுறதுகுஇவ்வளவு அலப்பறையா என்பவர் அது ஒண்ணும் இல்ல ண்ணே பெரிசா,ஏங் வயசுக்கு அந்த நேரம்அதுதான,லைட்க்கலர் பேண்ட்டுக்கு டார்க்க்கலர் சட்டை, டார்க் கலர் பேண்ட்டுக்கு லைட்க்கலர் சட்டைன்னு போ ட்டுக்கிட்டு திரியிறது என்னோட பழக்கம், பேண்ட் சட்டை போட ஆரம்பிச்ச வயசுல இருந்து இப்ப வரைக்கும் இதுதான் எனக்குள்ள வேர் விட்ட பழக்கமா இருக்குண்ணே” என்பார்,

“எனக்கு பெரும் பாலும் இந்த ரெடிமேட் பிடிக்காதுண்ணே, என்னன்னாலும் சரி துணி எடுத்து தைச்சித்தான் போடுறது வழக்கம்,இப்பக்கிப்பம்தான் புள்ளை ங்க வற்புறுத்தலுக்கு இணங்கி ரெடிமேட் பேண்ட் சர்ட் எடுத்துக்கிறது உண்டு, அதுலயும் பையன்னா இன்னும் ஒரு படி மேல போயி ட்ரெஸ் எடுக்குற அன்னைக்கி ஏங்கூட கடைக்கே வந்துருவான்,இத பாத்துக் கிட்டே இருக்குற ஏங் பொண்ணும் பொண்டாட்டியும் சும்மா இருப்பாங்கன்றீயா,அவுங்க பங்குக் கு அவுங்க என்ன பண்ணுவாங்கன்னா நாங்க கடைக்கி போனப்பெறகு எங்க ளுக்கே தெரியாமா பின் தொடர்ந்து வந்துருவாங்க,

வீட்லயிருந்து கொஞ்ச தூரம்தான் கடை,அதுனால வர்றதுக்கு ஈஸியா வேற போயிறுமா,அதுனால அது அவுங்களுக்கு ஒரு சௌகரியமா போயிரும், ஆத்தாளும் பொண்ணும் பேசாம இருக்க மாட்டாங்க,அத எடுத்தேன் ,இத் எடுத்தேன்னு மாசா மாசம் கடையில போயி ஏதாவது ஒண்ணுக்கு கடைக்கி நடையா நடந்துக்கிட்டுதான் இருப்பாங்க,

”கடைக்காரரும் இவுக போனா என்னஏதுன்னு கூட கேக்க மாட்டாரு,என்ன கேக்குறாங்களோ,அது என்ன வெலன்னாலும் தூக்கி குடுத்துருவாரு,

”நான் போய் என்னன்னு கேட்டமுன்னா நான் என்னா எல்லாருக்குமா தூக்கி குடுக்குறேன்,ஒங்க வீட்டம்மாவையும் ஒங்க மகளையும் பாத்தா ஏங் பொ ண்ணு மாதிரியும் பேத்தி மாதிரியும் இருக்கு மாமா , பின்ன எப்பிடி நான் தராம இருப்பேன் மாமான்னுவாரு,

“நானும் பையனும் ட்ரெஸ் எடுத்து பாத்துக்கிட்டு இருப்போம்.வந்துருவாங்க நடுவுல புகுந்து,,,/

“கடைக்காரரும் சும்மா இருக்க மாட்டாரு,இங்க பாருங்க மாமா ,நீங்க ஒங்க ளுக்குன்னு ட்ரெஸ் எடுக்க கடைக்கி வந்து ஒரு வருஷத்துக்கும் மேல இருக்கும், ரொம்பத்தானா மிச்சம் பிடிக்காதீங்க,மாமா,,,,” என்பார்,

தொழுகைக்கு போயிட்டு கடைக்கு நேரா வர்ற நாட்கள்ல அவர்கிட்ட அந்த கேலியும் கிண்டலுமான பேச்சு இருக்காது,

“அதுல ஏங் வீட்டுக்காரியும் மகளும் சேந்து வந்துருக்கும் போது அவரோட கேலிப் பேச்சுக்கு அணை கெடையாது.அப்பிடி பேசுவாரு,என்ன பேசுனாலும் கேலியும் கிண்டலும் அவரோட பேச்சுல எள்ளி நகையாடுனாலும் கூட ஒரு வரம்புக்கு மீறுன பேச்சா இருக்காது அது.

“எல்லைதாண்டாத கன்னியமான பேச்சோட விளிம்பும் உள் வட்டமும் எனக்கும் புள்ளைகளுக்கு புடிச்சிப் போகும்,/

வீட்டுக்காரிதா கொஞ்சம் ஒத்துக்குற மாட்டா என்ன பேசுனாலும் அது காரிய த்துக்கான பேச்சுதானன்னுவா, வாஸ்தவந்தா ,காரியத்துக்கான பேச்சுதான்னா லும் கூட இவ்வளவு ஒட்டுதலா யாரு பேசுவா,நாமளும் எத்தனை கடைக்கு போயிருக்குறோம். அதுல யாரு பேச்சாவது இப்பிடி இருந்துருக்கா, அவரோட பேச்சுமத்தக் கடைக்காரங்க பேச்சுலயிருந்து கொஞ்சம் வித்தியாசப் பட்டுத் தெரியுதுல்ல,கொஞ்சம் ஒட்டுதலாவும் உயிரோட்டமாவும் பேசுறாருல்லன்னு நான் சொன்ன பேச்ச கடைக்காரரு பக்கத்துலயிருந்து கேட்ட மாதிரி இல்ல மாமா நான் அப்பிடி ஒண்ணும் வலிய பேசிச்சிரிக்கிற ஆளு இல்ல மாமா, தவிர்த்து யேவாரத்துக்காக ரெண்டு பேசத்தான் வேண்டியதிருக்கு, அதுலயும் ஒங்களப் போல மனசுக்குப்பிடிச்சவுங்ககிட்ட கொஞ்சம் ஒட்டு தலா பேசிக்கி ருவேன் அவ்வளவுதான் மாமா…” என்பார்,

பேசியதோடு நிற்காமல் மாமாவுக்கு கொஞ்சம் வெலைக் கூடுன ட்ரெஸ்ஸா எடுத்துப்போடு காண்பி என்பார்,கடைக் காரப்பையனைப் பார்த்து/

மாமா நீங்க காசு கூட குடுக்க வேணாம் மாமா,எடுத்துட்டுப் போங்க, எங்க மாமாவுக்குநான் பிரியாக்குடுத்ததா இருக்கட்டும்ன்னுவாருன்னுவாரு, அவரு கடைக்கி ட்ரெஸ் எடுக்கப்போனா ஒரே சிரிப்பும் பேச்சும் சந்தோஷ முமா திரும்பி வருவோம்,அந்த சந்தோஷமும் சிரிப்பும் பேச்சுதான் இப்ப நீ பாக்குற இந்த கறுப்பு வெள்ளை சட்ட பேண்ட்டுல ஒட்டிக்கெடக்கு,

“இத எடுத்து எடுத்து மூணு வருஷத்துக்கு மேல ஆகப் போகுது பாத்துக்க, கெடக்குது இன்னும் நெறம் மங்காம இருக்குற இந்த பேண்ட்டு சட்டைய போட்டுக்கிட்டு போகும் போது ஒரு மதிப்பான பார்வை கெடைக்கிது,

“அந்த நேரம்தான் பேண்ட் சட்டை குடுத்த கடைக்காரர நெனைச்சிப்பாத்துக் கிறுவேன் என்பார்,அந்த நினைத்துப்பார்த்தலும் கடைக்காரருடனான ஒட்டு தலும் பழக்கமும் வாஞ்சையும் ஒரு சேர அவரது நடையின் வேகத்தில் ஒட்டிக் கிடக்க அவரது நடையின் வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறதுதான்,

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,/

Yarlpavanan said...

அருமையான படைப்பு
தொடருங்கள்

vimalanperali said...

தொட்டுத்தொடர்வதை வாழ்த்துகிற நல் உள்ளத்திற்கு நன்றி!