3 Jun 2018

துளிர் வேராய்,,,,



ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் தன் நிலை கொண்டுள்ள மண்ணில் வேர் விட்டும் துளிர்த்துமாய்,,,,/
                    ************
வேர்விட்டும் துளிர்த்துமாய் நிலை கொண்டுள்ளவைகள் பாவியும் பரவியுமாய் ஓடித் திரிகிற பரப்பின் மீது உயிரோட்டம் காட்டி,,,/
                       **********
உயிரோட்டங்களின் வழித் துள்ளல்களாய் இம்மண்ணும் மண்ணில் விதை கொண்டவைகளும்,நிலை கொண்டவைகளுமாய்,,,,/
                        **********
நிலை கொண்டவைகளின் வழித்தோண்றல்கள்,
விதை கொண்டவைகளின் பின் வழி தொடர்வாயும் விதையிட்டவரின் கைபிடித்துமாய்,,,/
                        **********
பற்றிச் சென்ற கைகளின் ஈரமும் வாஞ்சையும் நெஞ்சங்களின் அடி ஓர உரம் கொண்டும் காட்சிப்பட்டுமாய்,,,,/
                   ***********
காட்சிப்பட்டவைகளும்,ஈரம் கொண்டவைகளும் பரஸ்பரம் தங்கி உறை கொண்ட மனங்களின் விசாலமும் விலாசமும் நம்மில் உறை கொண்டே,,,/
                         **********
உறை கொண்டவைகளின் ஓட்டமும் நடையும் மென் நிமிர்வும் தன்னில் நிலை கொண்டுள்ளதை படம் பிடித்துச்செல்கிற நகர்வுகள்,,,/
                     ***********
நிலை காட்டி நகர்கிற நிமிடங்களும் நொடிகளும் வட்டவடிவம் கொண்டுள்ள கடிகாரத்திற்குள் அடைகொண்டதாய்,,,,,/
                        **********
அடை கொண்டவைகள் யாவும் தன் நிலை பட்டே புலப்பட்டுச்செல்வதாய்,,,,/
                                 *************
புலப்பட்டவைகளின் புலர் பொழுதுகள் உயிரசைவு காட்டிச் சென்ற நிமிடங்களின் உறைவுகள் கடினம் தாங்கியே,,,/
                 *********
கடினம் காட்டி காட்சிப் பட்டவைகள் யாவும் உன்னிலும் என்னிலும் நம்மிலுமாய்,,/
                           ***************

நிலையுற்றும் நிலையற்றதுமான நிறங்களின்  அடைகொண்ட புள்ளிகளே துவக்கமாய்,,,,,/

                          *************************
துவங்கிய புள்ளிகளின் நிறங்களும் அடர்வுகளும் ஓர விளிம்புகளின் துவக்கம் காட்டியாய்,,,,,/
Top of Form
Top of Form

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

vimalanperali said...

அன்பும் பிரியமும்!

vimalanperali said...

நன்றியுடன்!

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப நன்றாக இருக்கிறது

துளசிதரன், கீதா

vimalanperali said...

மிக்க நன்றியும் அன்பும்!