24 Jun 2018

ஒற்றைக்கொன்றை,,,,,


தண்ணீர் ஊற்றினார்,

ஊற்றிய தண்ணீர் பச்சைத்தண்ணீரோ அல்லது சுடு நீரா இல்லை மினரலா அல்லது சாதாரண போர் வாட்டரா தெரியவில்லை.அது தெரிந்தும் அந்த நேரத்தின் தேவைக்கு பெரிதாய் ஒன்றும் உதவிவிடப் போவ தில்லை,

டீக்கிளாஸ் கழுவிய நீரின் மிச்சத்தை ஊற்றினார்,ஊற்றிய கைக்கும் வலிக்கா மல் ஊற்றிய தண்ணீரை தன் மெய் ஏந்தி வாங்கிக்கொண்ட தரைக்கும் வலிக் காமல்/

வலியது,வலியது,வலியது,,,, வலியதை எளியதை எளியதாக்கியது எளியது எளியது, எளியது,,,,,,என்பதுதான் இவனது எளிதான மன ஓட்டம்/

துளிர்த்தது இலை.

துளிர்த்த இலையை தாங்கியிருந்த விதையின் வீர்யம் தன்னகத்தே கொண்டி ருந்த ஒவ்வொன்றையும் சக்தியாய் காட்சிப்படுத்திக் கொண்டிருந்ததாய்.

டீ ஊற்றினார்,

இளம் பிரவ்னில் லேசானா தண்ணீரை தலைகீழாய் கவிழ்த்தி ஊற்றியது போல் கிளாஸ் நிறைந்த ஸ்டாரங்கான டீயோ இல்லை லைட்டாக பால் டீ எனச் சொல்வார்களே அதுவோ அல்ல,

கழுவப்போகும் முன்னாய் கிளாஸின் அடியில் மிச்சம் கொண்டும் தனது போக்கில் பிடிவாதம் காட்டியும் விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டிருந்த டீயின் மிச்சத்தை ஊற்றினார்,

டீயின் டிகாக்சனும் பாலின் கலத்தலுமாய் ஊற்றிய டீயின் மிச்சம் பட்டு தெரிந்தது/

இலை வளர்ந்தது.

வளர்ந்த இலையும் துளிர்த்து நின்ற மிச்ச இலையின் சொச்சக்கரமும் பட்டுத் தெளிந்து செடியாய் பரிணமித்து நின்றது.

தேயிலை போடுகிறார்.

போட்ட தேயிலை முழுதாய் பாக்கெட் தாங்கியோ இல்லை வேறெதுவுமான உருவில் அடைகொண்டு இருக்கிறதை தூக்கி போடவில்லை,டீ ஆற்றுவதற் காய் பயன்படுத்திய டீத் தூளின் சேகரிப்பை டிக்காக்சன் ஊற்றும் பையிலி ருந்து தூக்கிக் கொட்டுகிறார்,ஆற்றிய டீக்கும் டீ ஆற்ற உறுதுணை புரிந்த டீத்தூள் தாங்கிய டிகாக்சன் பைக்கும் சொல்லாமலும் அதனிடம் அனுமதி கேட்காமலும்/

அனுமதி கேட்கவில்லை என்றால் என்ன செய்கிற காரியத்தின் ஞாயம் உணர்ந்தும் பலம் கூட்டியுமாய் போட்ட தேயிலை போய் ஒட்டிக்கொள்கிறது செடியின் ஓரங்களெங்கும்.அன்பும் பிரியமும் மேலோங்க காதலியின் கரம் பற்றிய காதலனின் பிரியம் மிகுந்தது போல,,,/

காதலனின் கரத்திற்குள்ளாய் அடை பட்டுக்கிடந்த பிரியம்மிகுந்த காதலியின் கரத்திலிருந்து பிரிந்தும்விரிந்தும்சென்ற ரேகைள் காற்றின் திசைகளெங்கும் கிளைகொண்டுபரவியும் பாவியும் சொல்லிச் சென்ற கதைகள் ஏராளங்களில் ஒன்றாய்,,/

அது ஒரு டீக்கடை ,வழக்கங்களில் அடையாளம் பூசியிருந்த டீக்கடைகளி லிருந்து வித்தியாசம் காட்டியும் சின்னதாயும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த டீக்கடைக்கு வயது எத்தனை என்பதை அங்குமுங்கும் அக்கம் பக்கம் அடைகொண்ட கடைகளிலிருந்தும் அது சுமை கொண்ட மனிதர்களிட மிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் சொன்னார்கள் சொல்வதுதான் சொல்கிறோம் ,கடையின் வயதுடன் சேர்த்து அதன் அடையாளத்தையும் சொல்லி விடுகிறோம்,என ஆரம்பித்து அதை விவரிக்கையில் சொல்கிறார்கள்,

அந்தக்கடையின் வயது இருபதிற்கு நெருக்கி இருக்கலாம்.இன்னும் சுத்தமாக சொல்லப் போனால் பதினாறு என்கிறார் பக்கத்துக்கடைக்காரர்,”அதெல்லாம் இல்லை.அவர் சொல்வது அறியாமையின் உச்சத்திலும் தெரியாமையின் அறிவின்மையிலுமாய் என்கிறார் இரண்டு கடை தள்ளி இருப்பவர்,

உண்மைதான் வாஸ்தம்தான் என இரண்டு விதங்களிலும் அவர் சொல்வதை ஒத்துக்கொண்ட போதும் கூட கடையின் வயதில் அவர்கள் முரண்பட்ட வித்தியாசம் பெரிய அளவிலான பாதிப்பு ஒன்றையும் ஏற்படுத்தி சென்று விடப் போவதாய் பட்டுத் தெரிவதாக/

.தள்ளு வண்டி ஒன்றை மூலதனமாய் வைத்து உழைப்பும் உண்மையும் மட்டுமே உருக்கூட்டி அந்தத்தெருவின் முக்கில் நகராட்சியின் உயரிய அனுமதி பெற்று ஆரம்பித்த கடை,

முதன் முதலாய் டீயும் டிகாக்சனும் மட்டு மே,அந்தக்கடையின் பிள்ளையார் சுழி/அதற்கே அவர் வீட்டிலிருந்த நகைகள் அடகுக்கு நகர்ந்து வேகம் காட்டிப் போனது நகரின் மையத்திலிருக்கிற ஒரு வங்கி வரைக்கும்.

எப்பொழுது போனாலும் எளிதில் வேலையை முடித்து பணத்தை சீக்கிரமாய் தந்து அனுப்புகிற அந்த வங்கியின் நடைமுறையும் எளிதான அணுகு முறை யும் டீக்கடைக்காரின் இதயம் நெருங்கிய பழக்கமாகிப்போகிறது,

ஆகவே ஐந்து பவுன் ஆன போதும் சரி,ஐம்பது பவுன் ஆன போதும் சரி அங்குதான் கொண்டு போய் அடகு வைப்பார்.

இது போலான மனம் பிடித்த பழக்கங்களில் ஈடு கொண்ட மனம் நகை அடகு வைப்பது குறித்தான கவலைகலை விடுத்து வங்கிக்கு வந்து போகும் போது ஏற்படுகிற சந்தோஷத்தை எண்ணி மகிழ்ந்தது.

அடகு வைத்த நகைகள் திருப்ப ஏது இல்லாமல் திரும்பத்திரும்ப மறு அடகு வைத்து மறு அடகு வைத்து பணம் ஈட்டி வாங்கிய சமயங்களில் கடை கொஞ்சம் புது பொலிவுமாய் கடையின் அடையாளம் வேறொரு உருத் தாங்கியுமாய் அடையாளம் கொள்ள ஆரம்பித்திருந்தது,

மாறிப்போன கடையின் அடையாத்துடனுடன் கடையின் உரிமையாளரும் கொஞ்சம் புதுக்கோலம் பூண்டிருந்தார்.பூண்ட கோலம் நிலைக்கவும் அதை பிடிவாதம் கொண்டு நிலை நிறுத்தவுமாய் கடைக்குக் கொஞ்சம் புதுச் சாய மும் கடையினுள்ளாய் அலங்காரமும் காட்ட ஆரம்பித்தார்,

அதன் படி கடையின் ஜன்னலுக்கு ஆடை உடுத்தியிருந்தார்,கடையின் உள்ளே பூப் பூக்க விட்டிருந்தார்,கடையின் வாசலில் இரண்டு பக்கமுமாய் சின்னச் சின்னதான தொட்டிகளில் தென்னை மரம் வளர்த்திருந்தார்.

வளர்ந்து நின்றிருந்த மரத்தின் குட்டை உயரம் கடைக்குள் செல்வரோறதும் வருவோரதுமாய்இருந்தவர்களின் கால்களை உரசியும் அவர்களது கைகளைப் பற்றி குலுக்கிய படியுமாய்,,,/

இவனது கால்களும் முழங்காலுக்கும் சற்று மேலே தூக்கியிருந்த கைகளும் அதற்கு தப்பவில்லை.

அப்படியாய் தப்பாமல் காலை உரசிய குட்டைத்தென்னை மரத்தின் கீற்று களை கைகளால் ஒதுக்கி விட்டுச்சென்ற ஒரு நாளின் நகர்தலில்தான் தான் டீக்குடிக்கப்போயிருந்தான் அந்தக்கடைக்கு.

டீக்கடைக்காரர் முதலில் இவனை அடையாளம் கண்டு கொள்லைவில்லை, இவனுக்கும் தெரியவில்லை அவரை,

ஆற்றிய டீ அடங்கிய கிளாஸை கடைக்காரரிடமிருந்து வாங்க எத்தனிக் கையில்தான் அவரது முகம் பார்க்கிறான் இவன்,அவரும் அப்பொழுதுதான் இவனது முகம் பார்த்திருப்பார் போலும்,சார் தெரியுதா என்னைய, மறந்து ட்டீங்களா சார்,கடைப்பக்கமே ஆளக்காணோமேஎன்றவரிடம் அப்பிடியெல் லாம் இல்லை,ஒங்கள மறந்தா அது என்னையே மறந்தது போலையின்னு வச்சிக்கங்களேன்.என்றான் இவன்,அவரது கடையில் குடித்த டீயும் வடையும் நன்றாக இருந்தது,அன்றிலிருந்து அந்தப்பக்கம் எப்பொழுது போனாலும் கண்டிப்பாக நிறுத்தி ஒரு டீக்குடித்துவிட்டுத்தான் போவேன்,

குடித்த டீக்கும் கடித்த வடைக்குமாய் காசை எண்ணிக் கொடுக்கையில் மறந்து போன பந்தமும் தொடர்பற்றுப்போன உறவும் கொஞ்சம் வந்து மனசை உரசிச்செல்லும் சுகம் இவனில்,

அவரையும் அந்த டீக்கடை உறை கொண்டிருக்கிற இடத்தையும் கடக்கிற போதும் அல்லது கடக்க நினைக்கிற நேரத்திலுமாய் அவரது நெருக்கம் வந்து உள்ளத்தை உவகை கொள்ளச் சொல்லும்./

உவகை கொண்ட உள்ளத்திற்கு கட்டிவிடப்பட்ட இறக்கைகள் எந்த தொய்வும் களைப்பாறலும் அற்று நினைவின் போக்கில் சுற்றியலைந்து ஓடிக்கொண்டி ருக்கும் அடுத்ததான நினைவு வந்து மனதை ஆக்ரமிக்கிற நேரம் வரை/

ஆக்ரமித்த நினைவுகளின் ஒன்றினைவுகள் கரம் கோர்த்து இவனுள்ளாய் ஏற்படுத்தும் உள்வினையும் ஊள்வினையும் அதிகமாகவே/

நினைவுகள் அதிகம் பட்டுத்தெரிந்த நேரம் மனம் பட்டுத் தொட்ட பச்சை இலை வைத்த ஒற்றை கொன்றை ஒன்று சிறு செடியாக ஆளுயரம் காட்டி வளர்ந்து நிற்கிறது இலைகளும் காயும் பூவுமாக/

இருப்பு கொண்ட இலைகளையும் காய்களையும் பூக்களையும் விடுத்து பச்சைக்கு பச்சை நிறம் பூசியது போல் காட்சிப்பட்டு விறைத்தும் துளிர்த்தும் நின்ற இலைகளை ஒவ்வொன்றாய் செடிக்கு வலிக்காமல் மெல்லாமாக பிடு ங்கி, எடுத்து வந்து வலிக்காமல்,,,நூலில் கோர்த்தது போல வரிசையாக அடுக்கி வைத்து மெல்ல வந்து எட்டிப்பார்க்கையில்அதன் நிறம் இன்னும் சற்று கூடுதலாயும் தூக்கலாயும் ஆகித் தெரிகிறதாய்,,/

பச்சை இலைகளை மட்டுமே பிடுங்கி அடுக்குகையில் தனித்து விடப் பட்டி ருந்த வெளிர் நிற இலைகளும் மஞ்சள் பாரித்திருந்த இலைகளும் விடுபட்டுப் போகக்கூடாது என்பதற்காய் அதையும் பிடுங்கி சேர்த்து வைக்க வேண்டிய தாகிப் போகிறது.

சேர்த்துச்சேர்த்துவைத்த இலைகளும்கிளைகளுமாய் ஆகித்தெரிந்த செடி மொத்தத்திற்குமான நிறங்கள் அத்தனையையும் ஆள்வைத்து சிறப்பாக்கி யிருப் பார்க ளோ,,,?

பூசிய நிறங்களின் கலவையை சேர்த்தெடுத்து துணுக்காக்கி வைத்தால் துண்டுபட்டுஆகித் தெரிகிறதாய் செடி/

ஆகித்தெரிந்த யாவையும் கூட்டி ஒன்று சேர்த்து கலராக்கி காட்சிக்கு வைத்த வரைதொடர்புகொண்ட அன்றில் அவர் தொடர்பிலக்கிற்குஉள்ளிருந்த போதும் கூட பேசுவதில் ஓர் கூடுதலாகிப்பட்ட சிக்கல் தெரிந்தது,

தெரிந்த சிக்கலில் அறிந்துபட்ட அவரது உருவம் ஒன்று கூட்டி காட்டிய பேசிய பேச்சு சிதறிய போது செல் போனின் ஒன்று கூட்டிக்கொடுத்தது.

சார் வணக்கம் ,நல்லாயிருக்கீங்களா,என்பதே அவரது வழக்கமான பேச்சின் ஆரம்பம்,

வணக்கம் என்பது அவர் தருகிற மரியாதை என்றால் நல்லாயிருக்கீங்களா என்பது ஒரு கூடிதல் ஒட்டுதல் அவ்வளவே என்பார் அவரை கேட்கையில்,,/

அட விடுங்க சார்,இருக்குறப்ப சம்பாதிக்கிறோம்,பணம் காசு மொத்தமா இல் லாட்டிக்கூட ஒங்களப்போல தங்கமான மனசுக்கு சொந்தக்காரங்கள சேத்து வசிருக்குறமே அது போதாதா சார் என்பார்.

வாஸ்தவம்தானே அவர் சொல்வதும்.பணம் காசு என்ன பணம் காசு பெரி தாய்,,/

நல்ல பசியுடன் ஒரு நாளின் காலை நேரமாய் இட்லிக்கடை ஒன்றின் ஓரமாய் சிறு தயக்கம் காட்டி நின்ற போது யாரென முகம் அறியாத வெளி யூர் கடைக்கார இட்லிக்கடை மூதாட்டிகள் எத்தனையோ பேர் எத்தனையோ பேருக்கு உதவுவதில்லையா,அந்த நேரத்தில் எந்தப்பணம் வந்து யாருக்கு உதவும் சார் சொல்லுங்கள் என்பார்.

வாஸ்தவமே அவர் சொல்லுவதும் என்கிற நினைப்புடன் வண்ணங்கொண்ட எண்ணங்களை சுமப்பவரை ஆராதிப்பவனாய் ஆகிதெரிகிறேன்/

பூத்திருந்த பூக்களின் நிறம் மஞ்சள் எனச்சொன்னால் யாரும் எளிதில் நம்பிவிட மறுக்கிறார்கள் என தன் நிறத்தை செடியின்றும் வெளி எடுத்துப் போட்டு அவ்வழியில் போவோர் வருவோர் எல்லோரையும் கவனம் ஈர்த்துக் கொண்டிருந்ததாய் அச்செடி/

ஈர்த்த கவனம் சிதறிப்போகாமல் இருக்க தன் வாசைனையையும் இலைகளி னதும் பூக்களினதுமான அசைவை தன்னகத்திலிருந்து வெளி எடுத்து காற் றில் கலந்து செல்ல அனுமதித்திருந்தது.

அனுமதி வாங்கிய அசைவுகள் வேறெங்கிலும் போய் விடாமல் கவனம் காட்டி ஊறைவிட்டிருந்தது அவ்விடம் முழுவதுமாய்…,,/

முழுவதுமான இடம் எனச் சொல்கையில் மண்ணும் மண்சார்ந்தவையுமாய் ஆகிக்காட்சிப்பட்டு தெரிகிறதாய்,

காட்சிப்பட்ட யாவிலும் இன்மையும் இருப்பும் இல்லாதிருந்த போதும் கூட முளைத்து நின்ற செடி தன் நிறம் காட்டியும் அழகு காட்டியுமாய்/

அழகு காட்டிய செடி நான் ஓர் ஒற்றை மரம்,இவ்விடத்தில் துளிர்த்து நின்று உறவு காட்டுவது என் சுயத்தில் ,நான் இங்கு வளர்ந்து நிற்பதும் காட்சிப் படுவதும் சுயம்புவாகவே தவித்து வேறெதுவுமாய் இல்லை என்கிற ஒற்றைக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்து கொண்டிருந்ததாய்/

தண்ணீரையும் டீக்ளாஸ் நீரையும் டீத்துகளிகள்களின் கசடையும் வாங்கி வளர்ந்திருந்த ஒற்றைக்கொன்றை டீக்கடையின் அருகில் அழகு காட்டியும் தன் சுயம் காட்டியுமாய் வீற்றிருந்ததாய்,,,/

வீறு கொண்ட விதைகளை உள்வாங்கிக்கொண்ட மண் தன் மலர்வில் தாவரத்தின்துளிர்ப்பையும் ,பூப்பையும் காய்ப்பையும்மண்பிளந்து தந்து விட்டுப் போகிறது கொடையாக என்பதை மறக்காமல் ஞாபகம் கொள்வதாய் அந் நேரத்தைய மனது/

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் வார்த்தைக் கோர்வையே தனி அழகுதான் நண்பரே

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றியும் அன்பும் வருகைக்கு,,,,/

vimalanperali said...

வணக்கம் சார்,
அன்பும் நன்றியும் வருகைக்கு,,,/

vimalanperali said...

வணகம் சார்,
அன்பும் பிரியமும் வருகைக்கு,,/