15 Jul 2018

இனிப்பு பன்னு,,,,,


டீக்குடிக்கப் போய் பால்பன் வாங்கி வந்தது தற்செயல் நிகழ்வா முன் முடிவு எடுக்கப்பட்ட செயலா என்பது தெரியாமலேயே/

டீ,டீ,டீ,,,இத விட்டா வேறெதுவும் தெரியாதா ஒங்களுக்கு,,?”என்கிற கனமான ஒற்றைக்கேள்வி எதிரொலித்துக் கொண்டிருக்கிற பெரும்பாலான வீடுகளில் இவனது வீடும் ஒன்றாகிப் போகிறதுதான்.

அப்படி இருப்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றும் இருந்து விட முடியாதுகூட த்தான்,லைட் டீ,ஸ்டாரங் டீ, இரண்டுமற்று மீடியம் ரகத்தில் ஒன்று என்கிற ஒவ்வொரு தனித்த டேஸ்டில் குடித்து பழகிய நாட்களில் டீயின் சுவையை ஏற்றுக் கொண்ட நாவின் சுவையறும்புகள் இன்று வரைக்கும் அருந்துகிற டீயின்ஒவ்வொரு மிடறுக்குமாய் நாவின் சுவையறும்புகளும் உடலின் சுவை பாகங்களும் உடலும் பதில்ச் சொல்லிச் செல்கிறதாகவே/

பொதுவாகவே இவனின் பழக்கமாய் இருக்கிற டீக்குடிக்கும் முன்பாய் ஒரு டீ டீ குடிக்கும் போது ஒரு டீ,டீ குடித்த பின்பாய் ஒரு டீ,,,,,என்கிற சொல்லோ ட்டமும்நனவோட்டம் கனவோட்டமும் இப்பொழுது வெறும் ஸ்டாராங் டீயில் மட்டுமே நிலை கொண்டு இவன் மனதில் மையமிட்டுக் கொண்டிருக் கிற பொழுது வீட்டின் நிலை இப்படியாய் இருக்கிறதுதான்,

பெரும்பாலுமாய் டீ விரும்பிகளின் வீடுகளில் இருக்கிற நிலை இதுதான் போலும்,

”போதும் போதும் ஒங்க ஒரு மனுசனுக்கு ஆகுற டீ த்தூள் செலவும் பால் செலவும் மட்டும் வச்சிப்பாத்தா வீட்டுக்கு இன்னொரு பத்து கிலோ அரிசி சேத்து வாங்கீறலாம் போல/”என்பாள் மனைவி,

வாஸ்தவம்தான் ,அப்பிடிப்பாத்தா கடைகள்ல டீ மட்டும் இல்ல ,மற்ற மற்ற தான பீடி சிகரெட்டு பாக்கு தண்ணி இன்னும் இன்னுமான லாகிரி வஸ்த் துக்கள் எதுக்காகவும் செலவழிக்கிறது அனாவசியம்ன்னுதான் தோணுது. இல்லையா என அவளின் சொல்லுக்கு பதில் சொல் சொல்லும் போது அது எப்பிடி வேணுமுன்னாலும் இருந்துட்டுப்போகட்டும் விடுங்க,நம்ம நெலமைய பேசுங்க மொதல்ல ஊர பேசுறது இருக்கட்டும்” என்பாள்.

அவள் சொல்லில் இருக்கிற வாஸ்தவத்தை உள்ளெடுத்துக் கொண்டவனாய் பார்க்கிறான் குடிக்கிற டீயைக்குறைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறதா என/

முதலில் எனது நாவின் சுவையறும்புகளுக்கும் குடிக்கச்சொல்லுகிற மூளை க்கும் சின்னதாய் ஒரு மனுப்போட்டுப் பார்க்கிறேன், அவை இரண்டும் சம்மதி த்து விட்டால் பரிசீலனை செய்து பார்க்கிறேன் என்கிற முன்முடிவற்ற பேச்சை அவள் முன் வைத்த போது நம்பிக்கையற்று தெரிந்தாள்,

”கொறைக்கச் சொன்னா கொறைப்பீங்களா அத விட்டுட்டு மனுப்போடுறேன், சுவையறும்பு ,நாக்கு மூளையின்னுக்கிட்டு”,,,,,எனக்குன்னு எங்கிருந்துதான் வந்து வாச்சிங்கீளோ…”எனச்சொல்லும் போது ”பாட்டி இந்த வயசுல போயி தாத்தாவ வையாதீங்க,இனிமே போயி எங்கயிருந்து வந்தாரு,எதுக்கு வந்தா ருன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா எப்பிடி,,,,,,?என்பாள் பேத்தி அவளது தோளில் சாய்ந்துகொண்டு/

”அவ கெடக்கா வெறும் கிறுக்கி,சும்மா வெளியிலதான் இப்பிடி பேசுவா,ஒரு ரெண்டு நா வெளியூர் ஏதாவது போயிட்டேன்னா மனச எடுத்து வெளிய போட்டுக்கிட்டு தவிச்சிப் போவா தவிச்சி/”

”இப்பிடித்தான் போன மாசம் ஒரு தடவை நானும் பாட்டியும் தனியா இருக்குற போது ஆபீஸ் வேலையா வெளியூர் போனவன் அங்கயே ஒரு நாளு தங்க வேண்டியதாப் போச்சி.

“ரிட்டையர் ஆகபோற நேரமில்லையா அதுக்கான வேலைகள பாக்க வேண்டி யதா போச்சி,நீங்களெல்லாம் வேற பக்கத்துல இல்லாத நேரம், ஒங்க ஊர்க ள்ல இருந்தீங்க,அவ மட்டும் தனியா இருந்தா,மாத்தி மாத்தி எனக்கு போன் பண்ணிஎப்ப வருவீங்க,எப்ப வருவீங்கன்னு தவிச்சிப் போனா தவிச்சி, வேலை முடிஞ்சி வீடு வந்து பாக்குறேன், தன்னால அழுது பொலம்ப ஆரம்பிச்சிட்டா, சரின்னு அவள சமாதானப்படுத்தி அப்பிடியே வெளியில போயிட்டு வந்தோம், ரெண்டு பேருமா,இப்பிடித்தான் ஏதாவது விட்டேத்தியா இருக்குற நாட்கள்ல அப்பிடியே ரெண்டு பேரும் வீட்ட விட்டுக் கெளம்பீருவோம்.பக்கத்து கிராம த்துல இருக்குற அவ அம்மா வீட்க்குப் போயிட்டு அவங்கள ஒரு எட்டு பாத் துட்டு வருவோம்.எனக்கு அம்மா இல்லா ததுனால அவுங்கள அம்மா ஸ்தான த்துல நிறுத்திப்பாத்துக்கிறேன். அதுல எனக்கும் ஒரு திருப்தி,ஓங் பாட்டிக்கும் ஒரு திருப்தி/ பரஸ்பரம் இப்பிடி திருப் தியான மனோநெலைமைகள் கெடைக் கிறது அபூர்வம் இந்தக்காலத்துல, அது எங்களுக்கு வாய்ச்சதா நெனைச்சிக்கி ர்றோம் சந்தோஷப்பட்டுக்கிர்றோம்,

“பட்டுக்கிட்டச்சந்தோஷத்தோட அப்பிடியே கடை கன்னின்னு போயிட்டு வரு வோம்/ அப்பிடி போயி வர்ற நேரங்கள்ல ஏதாவது ஒரு டீக் கடையோரமா நிறுத்தச் சொல்லி என்னைய போயி டீக்குடிச்சிட்டு வரச்சொல்லுவா,அது எவ்வளவு வெயிலடிச்சாலும் சரி,எவ்வளவு மழை பேஞ்சாலும் சரி,அந்த சௌகரியத்த எனக்கு பண்ணிக்குடுக்குறதுல முனைப்பா இருப்பா,அதுதா அவ மனசு,சும்மா டீத்தூள் செலவாகுது பாலுக்கு ரொம்ப காசு குடுக்க வேண்டி யிருக்குதுன்னு அவ சொல்றதெல்லாம் வீண் பேச்சு,,,,,”என இவன் சொல்கிற நேரங்களில் லேசு பட்டுப்போகிற மனது அவள் முகத்தில் பட்டுத்தெரிய புதிதாய் பூத்து விரிந்த மலர் ஒன்றின் பூப்பு அவள் முகம் பட்டுத் தெரியும்.

போயிருந்த திருமணம் முடிந்து கிளம்பும் போதே மணி ஆறு முப்பது ஆகியி ருந்தது. ”கல்யாணத்துக்கு போயிட்டு எங்கயாச்சும் அப்படியே போயிட்டு வரலாம்,,,” என்பது மனைவியின் விருப்பம்,சரி போவோம் நேரமிருந்தால் என இவன் சொல்லியிருந்தநேரம் சென்ற கல்யாணம் சீக்கிரம் முடிந்து விட்டது, சாப்பிட்டு விட்டு தெரிந்தவர்களுடன் எவ்வளவு நேரம்தான் பேசிக் கொண் டிருப்பது மனமெல்லாம் எங்காவது போகவேண்டும் என்கிற எண்ணம் நிரம்பி இருக்கிற போது,,,?என்கிற எண்ணம் மனம் ஆக்ரமித்திருந்த நேரமாய் மிகவும் பழகிய அக்கா வந்து உட்கார்ந்துவிட்டாள்,வந்து விட்டவள் என்ன தம்பியும் தம்பு பொண்டாட்டியும் அப்பிடி என்ன ரகசியம் பேசிகிட்டு இருக்கீங்க, எங்க ளுக்குத் தெரியாம என்றவாறு அருகிலிருந்த சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து விட்டால் அருகில்,/

“பேசினாள்,பேசினாள், பேசிக்கோண்டே இருந்தாள்,இழுத்தாள் இழுத்தாள் இழுவையாய் இழுத்தாள்,அவளது பேச்சில் அவ்வளவாய் மனம் ஒன்றிப் போய் விடாவிட்டாலும் கூட சில பேச்சுக்கள் அவள் பேசிய சில பேச்சுக்க ளுக்கு இவன் செவி சாய்க்கவும், சந்தோஷபட்டுக் கொள்ளவும் துக்கம் கொள் ளவும் இன்னுமாய் பல பரிணாமங்கள் செய்து கொள்ளவுமாய் வேண்டி இருந் தது,

இந்த நேரத்தில்தான் திருமண வீட்டார்களும் வந்து விட்டார்கள்,

”வராதவுங்க வந்துருக்கீங்க,இருங்க இன்னொரு தடவை கூட சாப்புட்டுட்டு நாங்க மண்டபத்த காலி பண்றவரைக்கும் எங்க கூட இருந்துட்டு போங்க,இது எங்க ஆசை மட்டும் இல்ல,பொண்ணு மாப்புள ஆசையும் இதுதான்,என பெண் வீட்டுக்காரரார்சொன்னபோது ஆனந்தத்தில் உட்கார்ந்து விட்டார்கள் இவனும் மனைவியும்/

அதில் கொஞ்சம் தாமதமாகிப்போனது,திருமணமண்டபத்திலிருந்து கிளம்பும் போது சிதறிக்கிடந்தவைகளை அள்ளி முடிய மனமில்லாமலும் அள்ளி முடியாமலும் உயர் அழுத்த மனோநிலையினானாயும் விட்டேத்தி மனோ நிலையிலும் வந்து விடுகிறான் இவன்.

அழுத்துகிறஅழுத்தங்களை புறந்தள்ள மனமில்லாமலும் தொடர வேண்டாம லும் புள்ளி வைத்து முடித்து விட்டு வந்து விடுவான்,சமயத்தில் முடித்தால் வைக்கப்பட்ட புள்ளிகளைத் தூக்கி அழுந்த நட்டு வைத்து சுற்றி கோலமிட்டு விடுவான்,

இட்ட கோலத்தின் அழகும் இழுத்த கோடுகளின் நீளமும் சுற்றி கலக்கப் பட்டிருக்கிற கலர்களின் நேர்த்தியும் கைவண்ணமும் கவந்திழுக்க வேண்டும் என்பதில் முழு கவனம் கொண்டு செய்வான்.

மனம் ஒன்றி செய்கிறவை எப்பொழுதும் சோடை போனதில்லை என்பதை உணர்ந்த உடனிருப்பவர்கள் கொஞ்சம் மனம் ஒன்றியும் ஆச்சர்யம் தாங்கி யுமாய் பார்க்கிற சமயங்களிலும் கேட்கிற போதுமாய் பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்து விடுவான்,

“எப்பிடி சார் உங்களால மட்டும் இப்பிடி எதுக்கெடுத்தாலும் சிரிக்க முடியுது, எனக் கேட்கிற சமயங்களில் அதற்கும் சிரித்துக்கொள்வான்,அப்புறமாய் கேள்வி கேட்டவர்கள் செவிசாய்க்க மனமிருக்கிற சமயத்தில் சொல்வான், சிரிப்புங் குறது என்னையப்பொறுத்த அளவுக்கு ஒரு அருமறுந்து நண்பா, அதை யாருக்கும் கெடைக்காத வரமாத்தான் நான் பாக்குறேன்,உள்ளபடிக்கும் சொல்லப்போனா வந்த சிரிப்பையும் கலகலப்பையும் கௌரவம் பாத்துக்கிட்டு அடக்கி வச்சிக்கிட்டு மலச்சிக்கல் வந்தது போல முழிக்கிறவுங்க மத்தியில நான் இப்படி வெள்ளந்தியா சிரிக்கிறதுனால அது எனக்கு ஒரு பெரிய நஷ்ட மும் இல்ல, அப்பிடி சிரிக்காதவுங்களுக்கு அது ஒரு பெரிய லாபமும் இல்ல,

”வருஷமெல்லா கௌரவம்,கௌரவமுன்னு இல்லாத ஒண்ண அசிங்கம் முடிச்ச மூட்டையா கட்டித்தூக்கீட்டு திரியிறத விட்டுட்டு நல்லா வாய் நெறைய சிரிச்சி மகிழ்வோம்ங்குறது என்னோட விருப்பம்,தவுர அது ஒடம் புக்கு நல்லதும் கூட,ஏங் ஒடம்புக்கு நானா பாத்துக்கிற சுய வைத்தியம் அது.

அதுனாலத்தான் பல சமயங்கள்ல நான் விரும்பியோ விரும்பாமயோ வம் படியா சிரிச்சிக்கிருவேன்,

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகுதோ என்னவோ தெரியல,மனசு பிரியாயிரும்,அதுக்கப்புறம்என்னவேணும்,,?ப்ரியானமனசுலஎன்னவேணு
முன்னாலும் கூட கஷ்டமில்லாம தூக்கி உக்கார வச்சிக்கிறலாம்,

அத விடுத்து எந்நேரமும் அடுத்தவனப்பத்தி பொரணி பேசிக்கிட்டும், அடுத்த வன கெடுக்குறத மட்டுமே வேலையா வச்சிக்கிட்டு மனசு சூம்பிப் போயி எண்ணங்கள் அழுகிப்போயி கெட்டிக்காரன்ங்குற பேர்ல ஒரு மனக்கெட்ட குரூபியா அலையிறதுக்கு இப்பிடி சிரிச்சிப் பேசித்திரியிறதுனால எந்தக்காரி யமும் கெட்டுப் போயிறப்போறதில்ல,அப்பிடியே கெட்டுப்போனாலும் அது என்னளவுலதான்பாதிக்குமே தவுர பெரிசா ஒண்ணும் கெட்டுப்போயிறப் போற தில்லை,அதுனாலத்தான் இப்பிடி இருக்கேன் எனச்சொல்லும் போது ஆச்சரி யம் கொண்டார்கள் மண்டபத்தில் பேசிய அக்காவும் சூழ்ந்திருந்திருந்தவர்க ளும்,,/

அவர்களுக்கு புதிதாய் தெரிகிற ஒன்றை அவர்கள் முன் படம் விரிக்கும் போது அவர்களின் ஆச்சரியம் ஒன்றும் புதில்லை எனக் கடந்து விடுவான்.

இவன்அணிந்திருக்கிற கறுப்புவெள்ளையில்எப்பொழுதும் பளிச்சனவே தெரிந் திருக்கிறான்,

கறுப்பு வெள்ளையில் மட்டும் என இல்லை,அடர் நிறத்தில் பேண்ட் அணியும் போது வெளிர் நிறத்தில் சட்டை அணிவான்,அடர் நிறத்தில் சட்டை அணிகிர சயங்களில் வெளிர் நிற பேண்டே இவனது சாய்ஸாக இருக்கும்.

அதுவே இவனது தோற்றத்தை மேம்படுத்தியும் பளிச்செனவும் காட்டியிருக் கிறது இது நாள் வரை/

இதை மண்டபத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல,பஸ்ஸில் வரும்போது தெரிந்த கண்டக்டர் ஒருவர் சொன்னார்,

சொல்லணுமுன்னு தோணிச்சி சொன்னேன் என்றார் சிரித்துக்கொண்டே/

அவரின் சொல்லையும் சிரிப்பையும் திருமணமண்டபத்தில் அந்த அக்கா பேசிய பேச்சையும் நிறைகுறைகளையும் இவன் மனநிறைவாய் ஏற்றுக் கொள்ளும் தருணங்களிலும் குறை பட்டு தெரிகிற தருணங்களிலும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு இந்த ட்ரெஸ் காம்பினேஷன் என சிலர் நேரில் சொல்லவும் பின்னால் பேசவும் கேட்டிருக்கிறான் பல சமயங்களில்/

இவனுக்கு மட்டும் என இல்லை, அனேகருக்கும் அதே கதி தான் போலும் ,இது போலான வேளைகளில் என ஓங்கி ஒலிக்கிற ஒற்றைச் சமாதானச் சொல் பெரும்பாலான நேரங்களில் இவனை ஆற்றுப்படுத்தியிருக்கிறது.

பொதுவாகவே இவனது பழக்கம் கொஞ்சம் அவக்,,,,,தொவக்,,,,,, என அள்ளி முடிந்து கொண்டு வந்து விடுவதில் முடிவதில்லை.கூட இருப்பவர்களிடம், உடன் பட்டு தென்படுகிறவர்களிடம் கொஞ்சம் அன்பு,நட்பு,பாசம்,தோழமை,,, எனஅள்ளி பைக்குள்ளாகவும் மனம் நிரப்பியுமாய் போட்டுக்கொண்டு வருகிற பழக்கத்தை கைகொண்டு வந்துள்ளான் இது நாள் வரை/

அப்படித்தான் இருந்திருக்கிறான் இத்தனை வருடங்களாக,இனியும் அப்படித் தான் இருப்பான் போலும்.இம்மி பிசகாத இது வரையிலான பழக்கமும் நடவடிக்கையும்,இப்பொழுது வரை இவனில் பசையிட்டு ஒட்டிக்கொண்டிரு ப்பதாகவும் மனதுடன் நல்லுறவு இடுவதாயும்/

இந்த இருபதைந்து வருடங்களில் மாறாமலும் புதுப்புது அனுபவங்களாயும் புத்தம் புது நெசவிட்டுமாய் ஓடிக்கொண்டிருக்கிறதுதான்.

பொதுவாக இவனது சொல்லும் செயலும் எவ்வித நெருடுமற்றே ஓடிக் கொ ண்டிருக்கிறதுதான் இது நாள்வரை/

வந்தது வந்தாயிற்று இனிமேல் என்ன,இத்தனை வயது கடந்தபின்னும் பெரி தாகவும் புதிதாகவும் என்னதான் செய்து விடபோகிறோம் என ஒரு நாளும் ஒரு பொழுது எண்ணியதில்லை இவன்,

இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற நினைப்புதான் அன்றாடங்களின் காலை கள் இவனை ஆக்ரமித்திருக்கிறது.

அவ்வித ஆக்ரமிப்புக்களே இவன் கடக்கிற பாதைகளில் கிடக்கிற கல் மற்றும் முளைத்துக்கிடக்கிற அசிங்கங்கள் எல்லாவற்றையும் பிடுங்கியும் அகற்றியும் பிடுங்கி எறிந்து விட்டும் சமயத்தில் அதன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு மாய் கடந்து போகச் செய்திருக்கிறது.

மதுரை ரோட்டை கடக்கும் போது ஞாபகம் வந்தவனாய் பஸ்டாண்ட் பக்க மிருக்கிற டீக்கடைக்கு செல்கிறான்,அங்கு சென்றும் டீக்குடித்தும் வெகு நாட்களாகிப் போனது,

டீக்குடிக்கப் போய் பால் பன் வாங்கி வந்தது தற்செயல் நிகழ்வா முன் முடிவு எடுக்கப்பட்ட செயலா என்பது தெரியாமலேயே/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... காட்சிகள் கண்முன்னே தெரிகிறது...

vimalanperali said...

பிரியம் விதைத்த கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி சார்/