20 Jul 2018

வாழ்த்தின் பக்கங்களில்,,,,,

வாழ்த்துவதில் என்ன வந்து விட முடியும்?வாழ்த்தி விட்டுத்தான் வந்து விடு வோமே வாயாரவும் மனதாரவுமாய் எனச்சொன்னபோது யாருக்கு வாழ்த்து எதற்கு,எப்பொழுது,எங்கேவைத்து,,,?என்கிற முதல் விதையை விதைத்தவள் இவன் மனைவிதான்,

அதற்கப்புறம்தான் எதிர் வீட்டு அக்கா கேட்டாள்,”என்ன தம்பி வாழ்த்து அது இதுன்னு பேச்சு அடிபடுது,எனக்கெப்பிடி தெரியுமுன்னு கேக்குறீங்களா, தற் செயலா நான் இந்தப்பக்கமா கடைக்கு போயிட்டு வந்துக் கிட்டு இருந்தேன், நீங்க பேசுனது காதுல கேடுட்டுச்சி.சரி பேசுனது யாரு நம்ம தம்பியும் தம்பி பொண்டாட்டியும்தான்ங்குற உரிமையில கேக்கவந்தேன் தப்பு ஒண்ணும் இல்லயேப்பா,,,”,என சொன்ன போது இவன் மிகவும் வருத்தமாகிப் போனவ னாய் சொன்னான்.

“என்னக்கா இதுக்குப்போயி இப்பிடியெல்லாம் கேட்டுக்கிட்டு ஏங் தம்பி வீடு நான் உரிமையோட அப்பிடித்தான் வருவேன் சொல்லீட்டு வருவீங்களா இதுக்குப்போயி வருத்தமா,சங்கடமா,தப்பான்னு,,,,,? கேள்வி கேட்டுக்கிட்டு என்றான்,” இவன் அக்காவைப் பார்த்து/

இளம்பழுப்புக்கலர் காட்டன் புடவையில் பார்க்க பாந்தமாய்த்தெரிந்தாள், நெற்றிக்கிட்டிருந்த சிவப்பு செந்தூர மும்,அதன் கீழான கோடு போன்ற திருநீர் இழுப்பும் அழுந்தப்படியவாரியிருந்த தலைமுடியின் நடு வகிட்டு நுனியில் இழுத்திருந்த திருநீரும் செந்தூரமும் கலந்த பூச்சும் அவளது தோற்றத்தை இன்னும் பாந்தப்படுத்திக் காட்டியது,

எப்பொழுது பார்க்க நேரிடும் போதும் அவள் அப்படித்தான் தெரிகிறாள், எந் நேரம்எழுந்திருப்பாள்,எந்நேரம்குளிப்பாள்,எந்நேரம்ரெடியாவாள்இதுபோலாய் பாந்தப்பட்ட தோற்றத்திற்கு எனத்தெரியவில்லை,

ஒரு நாள் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தற்செயலாய் கேட் டதற்கு ”சும்மா இருங்க நீங்க,ஏங்கிட்ட பேசுன மாதிரி வேற யாருகிட்டயாவது போயி இது போல கிறுக்குத்தனமா பேசிக்கிட்டு இருக்காதீங்க,,,” என்றாள்.

வேற யாருக் கிட்டயும் போயி கேக்கத்தெரியாமயா ஒங்கிட்ட வந்து கேக்கு றேன் என்கிற பதில் பேச்சுடன் அவளைப்பற்றிய பேச்சு முடிந்து போனாலும் உரிமையுடன் நடுவீடு வரை வந்து பேசி விட்டும் சிரித்துவிட்டும் கல்மிஷம் ஏதும் இல்லாமல் சொல்லிச்சென்ற அக்கா போன பின்னாய்த்தான் தெரிந்தது, வாழ்த்துவதில் பிரச்சனை இல்லை,காசா பணமா,சொற் பிரயோகமும் பரந்து விரிந்த மனசும்தானே,,,? என/

வாழ்த்துவதும் வாழ்த்தை வாங்குவதும் யார் என்பது தானே முக்கியம்,

வாழ்த்துவது இவனாகவும் வாழ்த்தைப்பெறுவது மாப்பிள்ளையாகவும் ஆகித் தெரிகிறார்கள்,மாப்பிள்ளைக்கு பெயர்,வேணாம் அது எதற்கு இங்கு இப்போ தைக்கு மாப்பிள்ளை அவ்வளவுதான்.

“டேய் மாப்புள என்றால் என்ன மாப்புள என்பான்,நீயும் பதிலுக்கு டேய்ப் போடுறா என்றால் இல்ல மாப்புள வேணாம் அதெல்லாம்,நம்ம கூட்டாளிகள யெல்லாம் டேய்ப் போடத்தெரிஞ்ச எனக்கு ஒன்னைய அப்பிடி கூப்புடணுமு ன்னு தோணல மாப்புள என்பான்.

“அதான் ஏன்” என இவன் கேட்கிற ஒரு மென் சிரிப்புடனோ இல் லையெ னில் ஒரு அடர்ந்து கடக்கிற பார்வையுடனோ கடந்து விடுவான்,

அடர் நிறங்களில் அவன் அணிகிற உடை போலவே அவனது மனது செய் கையும் கொஞ்சம் கடினம் தாங்கியே,ஆனால் அதன் பிரதிபலிப்பென்னவோ மென்மை காட்டியே இருந்திருக்கிறதாய்/

வறுமைக்கு வாக்கப்பட்ட அவனின் குடும்பத்தில் வெளியேறிப்போய் வருமா னம் ஈட்டி வந்த முதல் பிள்ளையாய் இவனின் மாப்பிள்ளை நண்பன் இருந் தான்,

அவனது அப்பாவின் பற்றாக்குறை வருமானத்தில் நொண்டியடித்துக்கொண்டு நடை போட்ட வண்டியை கொஞ்சம் வேக ஓட்டமெடுக்க வைத்த மாப்பிள் ளை டின் பேக்ட்ரியில் வேலை செய்த போது அதே பேக்ட்ரியில் வேலை கேட்டுப் போன அவன் பழக்கமானான் இவனுக்கு,

பழக்கமான நாளிலிருந்து டின் பேக்ட்ரி வேலையில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்ததிலிருந்து வெளியில் நட்புகளினூடாகவும் தோழமைகளி லும் ஒரு நெருக்க நெசவை நூற்க வைத்தவன் மாப்பிள்ளை,

பின் என்ன தாகம் கொண்ட இரு நதிககளும் பரஸ்பரம் கைகொள்ளா நீரை அள்ளி அள்ளிப்பருகிக்கொண்ட ஸ்னேகம் இருவரின் தோள் மற்றும் மன உரசலிலும் தெரிந்தது.சற்றும் மிகைபட்டுக்கொள்ளாமால்/

அன்றிலிருந்து இன்றுவரை அதே மாப்பிள்ளை,மாப்பிள்ளை, மாப்பிள்ளை தான்,,,,அந்த மாப்பிள்ளையின் பெண்ணுக்குத்தான் நாளை கல்யாணம்,போக வேண்டும். வாழ்த்த வேண்டும்.

வாயார வாழ்த்தினால் பிறருக்குத்தெரியும், மனதார வாழ்த்தினால் வாழ்த் துபவருக்கும் அவரின் அருகில் இருப்பவருக்கு மட்டுமே தெரியும்/

”நீங்க சும்மா வாயாரவே வாழ்த்துங்க சார்,,,,”என்பாள் மனைவி கன்னத்தைப் பிடித்துக்கிள்ளிக்கொண்டே,,/

”ஏய் சும்மா கழுதை ஒண்ணு தோசைக் கரண்டியால தலையில் அடிக்கிற, இல்லைன்னா சத்தம் இல்லாம வந்து இப்பிடி கன்னத்தப்புடிச்சு கிள்ளீட்டுப் போற” என சொல்லிக்கொண்டே சென்ற இவனைப்பார்த்து ஆமாம் ஐயாவப் பத்தி தெரியாத எனக்கு, ஒண்ணு ஏதாவது நடக்காதான்னு பகல் கனா கண்டுக்கிட்டே பின்னாடியே சுத்திச்சுத்து வர வேண்டியது,அது நடந்தா இப்பிடி ஒரு சொல்ல சொல்ல வேண்டியது,போங்கங்கஎன்பாள் மனைவி.

அவள்சொல்லிலும் வாஸ்தவம் இல்லாமல் இல்லை.வாஸ்தவத்தை தாங்கிக் கொள்கிற கணங்களில் இருக்கிற மென் வலியும் இல்லாமல் இல்லை.

”சரிதான் நீ சொல்றது, இப்பிடி வாயாரவும் மனசாரவும் வாழ்த்துறதத்தாண்டி வாழ்த்தோட கொஞ்சம் பணமும் நாம செய்ய வேண்டியது அவசியம் இல் லையா” என இவன் சொன்ன போது ,,,,,,

பின்ன கல்யாணத்துக்குப் போயிட்டு அப்பிடியேவா வரப்போறோம்.போய் மொய் எழுதீட்டுதான வருவம் என்ற மனைவியை இடை மறித்து மொய்யிங் குறத கொஞ்சம் எக்கா செய்யலாமுன்னு நெனைக்கிறேன் என்றான்,

செய்யிங்க இப்ப என்ன ஒங்க நண்பருக்குத்தான செய்யிறீங்க,,,,உணர்வுல கலந்துட்ட ஒருவருக்கு செய்யலாம் என்ன வேணுமுன்னாலும் அது தப்பும் இல்லை, அதுனால எந்த பங்கமும் ஒரு பெரிய வந்துரப் போறதில்லை. என் றவளை விழி விரியப்பார்க்கிறான்,

அவள் பேசிய நேரம் மணி இரவு எட்டு முப்பது இருக்கும்,முட்களின் கை கோர் ப்பில் விநாடியும் சேர்ந்து சுற்றிய சுற்றில் காலம் கணக்கு வகுத்து நிற்கிறதாய்/

நீண்டுஅகன்றசுவற்றில்காலம் தன் கணக்கை காட்டிக்கொண்டிருக்க ஆரஞ்சுக் கலரும் மஞ்சள் கலருமாய் மாறி மாறித்தெரிய பார்த்த சுவர் கண்ணுக்கு அழகு பட்டே தெரிந்ததாய்.

கடிகாரத்தின்பக்கத்தில் இரண்டு பூக்களை பூக்க விட்டிருக்கலாம், இப்பொழுது தான் மூங்கில் தப்பைகளை அழகாக செதுக்கி அதில் பூக்கள் பூத்திருப்பது போலவும் சொருகி வைத்திருப்பது போலவுமாய் செய்து வைத்திருக்கிறார் களே,,,?

அது போல் ஒன்றிரண்டும் இன்னும் இன்னுமாய் கொஞ்சம் அலங்காரமாய் ஏதாவதுமாய் வாங்கி வைத்துக்கொள்ளலாம்தான்,என நினைக்கிற வேளை யோடு சரி,பின் ஒடுகிற ஓட்டத்தில் அந்த நினைப்பு ஓரம் கட்டப்பட்டு வேலை வேலை என வேலையை உடம்பில் கட்டிக்கொண்டு ஓட ஆரம்பிக் கிற நேரத் தில் எல்லாம் மறந்து போகிறதுதான்,

”ஆமா நாளைக்கு கல்யாணம் திருப்பரங்குன்றத்துல,போகணுமுல்ல,

கல்யாண வீட்டுக்காரவுங்க ஒங்களுக்கு நெருங்குன சொந்தம் ,எனக்கு கொஞ் சம் தூரத்து சொந்தம் ,எது எப்பிடி இருந்தாலும் இந்த தாலிய தாங்கீட்டு வந்த நாள்ல இருந்து ஒங்களுக்கு தூர முன்னா எனக்கும் தூரம் ,ஒங்களுக்கு பக்கமுன்னா எனக்கும் பக்கம்ன்னு ஏத்துக்க பழகியாச்சி. இதுல போயிட்டு தூரம்பக்கமுன்னுசொன்னா எப்பிடி,,?”வாக்கப்பட்டாச்சி என்றவளை,,,ஏய் சும்மா அத இத பேசாத ஆமா,,,, நாளைக்கு என்ன செய்யலாம் சொல்லு, காலையில வெள்ளென முகூர்த்தம் ,ஆறு டூ ஏழே காலு,அதுக்கு எப்பிடி போறதுன்னு பேசு மொதல்ல,அப்பறமா மத்தத பேசிக்கிறலாம் என்றான்,ஆமா பேசீட்டாப்புல மட்டும்அது படி நடந்து அப்பிடியே கோடு கிழிச்சி ரோடு போட் டுற போறீங்க,ராத்திரிக்கு விடிய விடிய முழிக்க வேண்டியது ,காலையி லைக்கு எட்டு எட்டரை மணிவரைக்கும் தூங்க வேண்டியது,எந்திரிச்சதும் அப்பிடியே குளிச்சி முடிச்சிட்டு ஆபிஸீக்கு ஓட வேண்டியது. இந்தக் கூத்து தான நடக்குது இங்க, இந்த லட்சணத்துல புள்ளைக சீக்கிரம் எந்திருக்க மாட்டேங்குறாங்கன்னு கொற வேற,

“நம்மதான அதுகளுக்கு ரோல் மாடலு,நாமாளே கோணக்கழப்ப சாத்துனமுன் னா புள்ளைங்க எப்பிடி இருக்கும்,நம்மபழக்கத்தானகடை பிடிக்கும் சொல் லுங்க, என்பாள் மனைவி,விடு நீ இப்பிடி சொல்றதுலயோ கொறபட்டுக்குற துலயோ தப்பே இல்லை.ஆனா ஏங்க வயசுக்கும் அவுங்க வயசுக்கும் வித்தி யாசம் இருக்குல்ல,அவுங்க இனிமேதான் ஓடவே ஆரம்பிக்கணும்,நாம ஓடி முடிச்சி ஒரு யெடத்துல வேர் விட்டு ஒக்காந்துருக்கம்.அவுங்க கிட்டப்போயி நம்மள கம்பேர்ப்பண்ணி பேசுன யின்னா எப்பிடி,,?அதுவும் அவுங்க முன்னாடி யே பேசும் போது அவுங்களுக்கு ஒரு மன நிமிர்வும் இப்பிடியெல்லாம் இருக்காலாமோன்னு ஒரு யோசனையும் குடுத்துருமுல்ல,அதுனால அவுங்க முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பேசாத,,” என்கிற பேச்சுடன் ஆனாலும்நீ சொல்றதுல வாஸ்தவம் இல்லாம இல்லதான்.பாப்போம் புள்ளைகளுக்கு முன்னுதாரணமா நாம நடந்துக்குற முடியுமான்னு என முடிப்பான்,

”சரி அது இருக்கட்டும் நாளைக்கு எப்பிடி ,,? காலையில வெள்ளன கெளம்பு னும்ன்னா,இதுக ரெண்டையும் காலேஜீக்கு கெளப்பி விட்டுட்டுல்ல கெளம்ப ணும்,சின்னவகூட அவவாட்டுக்கு கெளம்பீருவா,ஆனா பெரியவ இருக்காளே இல்லாத நொரனாட்டியமெல்லாம் பண்ணிக்கிட்டு இருப்பா,அதுக ரெண்டை யும் கெளப்பி விட்டுட்டு நாம் கெளம்பணும்ன்னா நாம போறதுங்குள்ள கல்யாணம் முடிஞ்சி கல்யாணவீட்டுக்காரங்க மண்டபத்த காலி பண்ணிக் கிட்டு போயிருவாங்க,அப்புறம் வெறும் மண்டபத்த பாத்துக்கிட்டு வர வேண்டி யதுதான்,”என்றவளிடம்,,,,,

அதெல்லாம் ஒண்ணும் இல்ல,அப்பிடியெல்லாம் ஆயிறாது. நம்மளப்போலத் தான் கல்யாணத்துக்கு வரப் போற எல்லார் வீட்லயும் இருக்கும்,அது அந்த கல்யாணவீட்டுக்காரங்களுக்கும்தெரியும்.இவ்வளவுஎதுக்கு.,,,,?நம்மகல்யாணம் காலையில வெள்ளன முகூர்த்தம்தான,,?இது போல ஆறு டூ ஏழே கால் டயம்தான, ஆனா பத்து பதினோரு மணிவரைக்கும் எல்லாரும் வந்துக் கிட்டு தான இருந்தாங்க,காலையில டிபனேபண்ணெண்டு மணிவரைக்கும் ஓடிச் சில்ல,,,அது போலதான் ஆகும், நிதானமா புள்ளைங்க காலேஜீக்கு போனப் பெறகுகெளம்பிப்போனாசரியாஇருக்கும்,ஆனா என்ன ஒண்ணு அவுங்க ரெண்டும் கெளம்புற நேரம் நாமளும் வீட்ட விட்டு கெளம்பீறணும்.அவுங்க போனப் பெறகு கெளம்பலாமுன்னு நெனைச்சமுன்னா அப்புறம் லேட்டா கிரும்,,,,,பாத்துக்க என அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கையில் ஆமா லாக்கர்ல இருந்து ஜாமாங்க எடுத்துட்டு வர்றேன்னு சொன்னீங்களே., என்னா ச்சி,,? எனக்கேட்கிறாள்,

நல்ல வேளை கேட்ட போ,இந்தா பேண்ட் பாக்கெட்டுலதான் இருக்கு ,ஏதோ ஒரு ஞாபகத்துல அப்பிடியே மறந்து போயிட்டேன்.இரு கையோட எடுத்து ஓங்கிட்டகுடுத்துர்றேன்.இல்லைன்னாமறந்துபோகும்…..”என்றாவாறுஎடுத்துக் கொடுத்தான்,

எனக்கு இந்த சாமான்களை எடுத்துட்டு வர்றதுல பெரிய அளவுக்கு விருப்ப மெல்லாம் இல்லை.ஏதோ நீ விரும்புறைங்குறதுக்காக கொண்டு வந்ததுதா, கழுத்து நெறையா நகைபோட்டுக்கிட்டு பட்டுச்சேலைகட்டிக்கிட்டு மினு மினுன்னு இருக்குறது ஒனக்கு என்னமோ செட்டாக மாட்டேங்குது,சிம்பிளா ஒரு செயினு,நல்லதா ஒரு காட்டன் பொடவை,இதுதான் ஒனக்கு நல்லா இருக்கு,சிம்பிளான ஓங் எண்ணங்கள் போல,,, என்ற போது ஏற்றுக்கொள்ள மறுத்து அல்ல அவனது பேச்சை ஏற்றுக்கொண்டே பேசினாள்.

வாஸ்தவம் தான் நீங்க சொல்றது.இல்லைன்னு சொல்லல,ஆனா ஏதாவது அந்நியமான வீட்டு விசேசத்துக்கு போற போது ஒண்ணும் இல்லை,ரொம்ப சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்குப்போகும் போது அங்கன என்னடி கழுத் துல பெரிசா ஒரு நகையும் காணமுன்னு நேரடியாவே கேக்குறாங்க,அந்த நேரத்துல பெரிய அவமானமா இருக்கு,என்னதான் பேங்க் லாக்கர்ல வச்சிருக் கம்ன்னு சொன்னாலும் கூட நம்ப மாட்டேங்குறாங்க,அதான் ஒங்கள எடுத் துட்டு வரச்சொன்னேன்.”என்றாள்.

வாஸ்தவம் இல்லாமல்இல்லை அவளது சொல்லிலும் என நினைத்தவனாய் ஏறிடுகிறான் அவளை,

தோசை சுட்டுக்கொண்டிருந்தாள் அவள், கறுப்பு நிறத்தில் ரோஜாப்பூக்கள் பூத்திருந்த சேலையில் பார்க்க அழகாகத் தெரிந்தாள்,

வாழ்நாள் முழுவதுமாய் அவள் சுட்டு அடுக்கிய தோசைகளின் எண்ணிக் கை யும் வெம்மையும் அவளது கை வேகத்திலும் அவளது செய்கையிலுமாய்/

அருகில் போய் பார்க்கிறான்,எரிந்து கொண்டிருந்த தீ ஜிவாலையின் வெம் மை அவளது முகம் பட்டு பிரதிபலித்தது.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// வாயார வாழ்த்தினால் பிறருக்குத்தெரியும், மனதார வாழ்த்தினால் வாழ்த்துபவருக்கும் அவரின் அருகில் இருப்பவருக்கு மட்டுமே தெரியும் //

ஆகா...!

vimalanperali said...

நன்றியும் அன்பும் சார்!

வலிப்போக்கன் said...

செய்முறையோடு வாழ்த்தினால்....அது மற்றவர்களுக்கு தெரியவரும்...ஒரு அனுபவம்....

vimalanperali said...

செய்முறை என்பதும் நன்றியான ஒரு பிரதியுபகாரம்தானே,,?
இன்று அது வேறொன்றாய் உருவெடுத்து நிற்கிறது/

vimalanperali said...

நன்றி சார்!