3 Oct 2018

விநாடி வாசகம்,,,,

மணியைப்பார்க்கிறான்,
 
ஐந்துமுப்பது,ஆறுக்கும்ஐந்திற்கும்இடைப்பட்டநேரமும் அதை எட்டித் தொடப் போகிற நேரமுமாய் /

இருக்கட்டும் அப்படியே. இடைப்பட்டதுகளிலும்எட்டுத்தொடப் போகிறவைக ளிலுமாய் இளைப்பாறியும் சுகித்தும் காணப்படுகிற மனது,

அலுவலகத்தின் உள்ளேதான்நின்றிருந்தான் ,வேலையெல்லாம் முடிந்து தனி யாளனாய்,

தனியாளனாய் என்றால் இவன் மட்டும் இல்லை,அலுவலகம் நிறைந்து உடன் வேலை பார்க்கிற எல்லோருமாய் இருந்தார்கள்,

எல்லோருமாய் இல்லாவிட்டால் கூடத்தான் என்ன, கனகராஜ் அண்ணன் ஒருவரது பேச்சு போதாதா,அது பத்துப்பேரை கூட இருக்க வைப்பதற்கு சமமாகி விட்டுச் செல்லுமே,,,,

அன்பின் மனிதருக்கு வாய்த்து விடுகிற வெள்ளந்திப் பேச்சு,,,,,மனதின் வெளிப் பாடுதான் பேச்சு என்பது அவரிடம் அப்பட்டம் கொண்டு வெளிப்படும்.

சமயத்தில் கைகள் இரண்டிலும் மனதை சுமந்து கொண்டு பேசுவார்,சிறிது நேரம் பேசுபவர் சார் கொஞ்சம் நேரம் பிடியுங்கள் இதை ,இது ஒன்று தீரா தொந்தரவாய் என அலுத்துக்கொண்டு கை வலிக்கிறது எனக் கொடுப்பார்,

மாற்றிய கையின் ஈரம் காயும் முன்னரே கொடுங்கள் சார்,என் மனது ,நான், எனது,எனக்கென்று ஒரு நாடு,என் மக்கள், எனது ஆட்சி எனது மனது,,, என வாங்கி நெஞ்சைப்பிளந்து உள் வைத்துக்கொள்வார் மனதை/

வற்றாத அன்பையும் பாசத்தையும் நட்பையும் வைத்துக்கொண்டுள்ள மன தை உள்ளே வைத்து பூட்டி திரும்பும் முன்னராய் அலுத்து போவார் அலுத்து/

அவர் ஏதோ வேலையாய் இருந்தார், வேகு நேரமாய் ஏதோ ஒன்றை வலிய முனைந்து கற்பனை செய்திருந்து கொண்டிருப்பவர் ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்தவர் போல் அருகில் வந்து பேச ஆரமிப்பார்.தான் பேசுகிற பேச்சுக்கும் வலிக்காமல்,கேட்பாருக்கும் வலிக்காமல்/

வலி தெரியாமல் வார்த்தைகளை பிரசவிக்கும் வல்லமை எப்படி என அவரி டம்தான் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு வேளை அந்த வல்ல மையை கற்றுத் தருகிற விதம்தானோ என்னவோ அவரது பேச்சு/

அதற்காகத் தான் அப்படியான பேச்சுக்களை தன் வசம் முடி கொண்டு வைத்திருக்கிறாரே என்னவோ,….தனியாக இருக்கையில் ஒரு நாள் அவரிடம் கேட்க வேண்டும்.

இருக்கிற வேலையை எல்லாம் முடித்து விட்டு வேலையை முடித்து விட்டு கையிலும் மனதிலுமாய் அலுவலகம் மற்றும் அது தொட்ட வேலைகள் எதுவுமான சிந்தனையற்று சாப்பட்டுப்பையுடனும் அலுவலக உள்தோற்றப் பார்வையுடனுமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்,

இடது தோள் பட்டையில் தொங்கப் போட்டிருந்த பை கொஞ்சம் கனம் கொண்டதாய் தெரிந்தது.எதற்கும் இருக்கட்டும் என ஒரு துண்டை மடித்து உள்ளே போட்டு கொண்டு வந்தான்,

அப்படிக்கொண்டு வருவது பல சமயங்களில் உதவுகிறதுதான், நேற்றைக்கு முன் தினம் அலுவலகம் முடிந்து கிளம்பிய வேளை இடியும் மின்னலுமாய் தன்னை முன் மொழிந்தும் கட்டியம் கூறியுமாய் தூறல் போட்டுக் கொண்டிரு ந்தது மழை,

”போய் விடலாம் மழை வழுக்கும் முன்பாய்” என்கிற குருட்டு தைரியத்தில் ஹெல்மெட்டை தலையில் மாட்டியவன் அடுத்த நிமிடம் இரு சக்கர வாகன ஓட்டத்தின் வேகத்தில் கரைந்திருந்தான்,

ஊர் முடிந்து பைபாஸ் சாலையில் ஏறி சிறிது தூரம் கடந்திருப்பான், இடி, மின்னலுடன் கைகோர்த்திருந்த தூறல் கொஞ்சம் காற்றையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு பெரிய மழையாய் பெய்ய ஆரம்பித்து விடுகிறது,

ஆவென வாய் திறந்திருந்த வெட்ட வெளிச்சாலை,டயர்களை உள்ளிழுத்துக் கொண்டும் கழட்டு கக்கத்தில் வைத்து கொண்டுமாய் சாலையில் செல்கிற (பறக்கிற) கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள்.

இவனுக்கு பறந்தோ வேகமாக வாகனம் ஓட்டியோ பழக்கம் இல்லை, ஆத்திர அவசரத்திற்கு உதவும் என அவன் வைத்திருந்த சக்கடா வண்டி அது,அதை வைத்துத்தான் தினசரிகளில் இருபத்தி இரண்டும் இருபத்தி இரண்டுமாக காலையிலும் மாலையிலும் நாற்பத்தி நான்கு கிலோ மீட்டர்களை எட்டித் தொடுகிறான்,

பணி மாறுதலாகி அந்த ஊருக்கு செல்லும் போது இரு சக்கரவாகனமே இவ னது சாய்ஸாய் இருந்தது,வேலை மற்றும் அதற்கான தேவைக்காக மட்டும் வண்டி என நினைக்காமல் இலக்கில்லாமல் வண்டியில் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவன்,அங்கிங்கு என இல்லாவிட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட தூரம் குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட ஊர் என்பது இவனது இலக்கு அல்லது அது தாண்டியதாய் இருக்கும்,

அப்படித்தான் வண்டியிலேயே சென்று விடலாம் அந்த ஊருக்கு,என்கிற நினைப்பில் முதல் நாள் இரவு படுத்தவனை மறுநாள் காலை காய்ச்சலால் அரவணைத்துக் கொள்கிறது.

சரி இருக்கட்டும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை,,,,என மாத்திரையை வாங்கிப்போட்டுக்கொண்டு மாத்திரை வாங்கிய கடையின் அருகிலேயே இருந்த டீக்கடையில் கலங்கலாய் ஒரு டீக்குடித்தான்,

என்ன மற்ற கடைகளில் குடிக்கும் போது டீ கொஞ்சம் திக்காய் இருக்கும், அந்தக்கடையில் கொஞ்சம் கிக்காக இருந்தது.

அந்தகிக்குடனே வண்டியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தவன் ஐந்துகிலோ மீட்டர்கள் கூட கடந்திருக்க மாட்டான்,

தலைசுற்றி வாந்தி வந்து விட்டது,இது என்ன புது வம்பாக இருக்கிறதே என்ற வனாய் சுற்றிய தலையை சிரமம் கொள்ளச்செய்யாமல்லும் வந்த வாந்தியை சாலையோரத்திற்கு தத்துக்கொடுத்து விட்டு கழுவிய முகத்தை துடைத்து விட்டு நகர்கிறான் ரோட்டோரம் சிறிது நேரம் நின்றிருந்து விட்டு/

நகர்வின் வேகம் எவ்வளவுதான் பாதுகாப்பாயும் மெல்லவுமாய் இருந்த போ தும் கூட திரும்பவுமாய் தை சுற்றலும் வாந்தியும் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்கிறது.

ஒட்டிக்கொண்டதை உதறி எறிய முயன்றும் முடியாத நிலையில் சமாளிப் போம் என்கிறவனாய் வண்டி ஓட்டுவதை தொடர்கிறான்,

தொடர்ந்த வண்டியின் ஓட்டம் நிலை கொள்ளாத ஒன்றின் தேட்டத்துடனும் நல் மௌன முன்னேற்றம் காட்டியுமாய்/

இதுபோல்ஓடினால் கூடப்போதும் ,நம் இலைக்கை எட்டி அடைந்து விடலாம்.

இலக்கிறக்குப்போன பின் சமாளித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்புடன் வண்டி ஓட்டிக்கொண்டு போனவனுக்கு ஆபத்பாந்தவனாய் கைகொடுத்தார் வழியில் போய்க்கொண்டிருந்தவர்,

அவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரில் ரைஸ் மில்லில் வேலை செய்கிறாராம்.காலையின்சீக்கிரத்திற்குக்கிளம்பிமாலையின் பொழுதடையும் பொழுது வருவதுதான் அவரின் அன்றாடம்,

சார் இந்நேரம் ஒரு பஸ்ஸீ வரும் சார்,நான் இருக்குற ஊர் தொட்டு உள்ளுக் குள்ள ரெண்டு மூணு ஊர்களுக்குப் போய் வரும் சார்.

அந்த ஊர்கள்ல படிக்கிற புள்ளைகள என்னையப் போல வேலைக்குப் போறவு ங்க எல்லாம் ஏறுவாங்க சார்,

இத்தனைக்கும் இந்தப்பக்கம் ஓடுற தனியார் பஸ்ஸ விட ஒரு ரூபா டிக்கெ ட்டுக் கூடத்தான்னாலும் கூட என்னையப்போலானவுங்களுக்கு அது அந்த நேரத்து சொர்க்க ரதம் போல சார்/

அதுனாலத்தான் பாதி அத விடாம பிடிச்சிக்கிட்டு இருக்கோம்,

ஆனா இன்னைக்கிப் பாருங்க,அந்த பஸ்ஸீ வரல,அதான் யாராவது வர மாட்டாங்களா டூ வீலர்ல,அவுங்க கூட ஏறீட்டு போயிறமாட்டோமான்னு காத் துக்கிட்டு இருந்தேன் ,நல்ல வேளையா நீங்க வந்துட்டீங்க கடவுள் மாதிரி, என்றார்,

உணமையிலும் அவர் சொன்ன கடவுள் இவன் இல்லை,அந்த நேரத்திற்கு அந்த இடத்திற்கு அவர்தான் கடவுளாக இருந்தார்.

இவனுக்குள் அப்படி ஒரு பழக்கம் எப்பொழுதிலிருந்து வந்தது எனத் தெரிய வில்லை.எதற்காக வந்தது எனவும் புரியவில்லை,

சைக்கிளிலோ இரு சக்கர வாகனத்திலோ உடல் நலமில்லாமல் செல்கிற நேரங்களில் யாராவது இவனுடன் வந்தாலோ இல்லை யாராவது லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டாலோ இவனுக்குள் வந்து குடிகொண்டு விடுகிற புதுத் தெம்பு இவனுக்குள் இருக்கிற சரியில்லாமல் போன உடலை சரி பண்ணி விடும்.

அது போலத்தான் அன்றும் சரியாகிப்போன உடலை சுமந்து கொண்டு அந்தக் கடவுளின் துணையுடன் போக வேண்டிய இலைக்கை போய் அடைந்தான்.

அந்தக்கடவுள் இறங்கிச்செல்லும் போது தனது பெயர் மாரியண்ணன் என்றும் தன்னை உங்களது வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தவரின் பெயர் வேணு என்பதாயும் சொல்லிச்சென்றார்.

அன்று ஓட்டிய அந்த வண்டியைத்தான் இன்று வரை ரிப்பேர் செய்து ரிப்பேர் செய்து ஓட்டிக்கொண்டு வருகிறான்.

”ஏண்டா ஒனக்கெல்லாம் திமிருதான இது,பேசாம அக்கடான்னு பஸ்ஸீல போயிட்டு பஸ்ஸீல வரவேண்டியதுதான,,,”?என்று சொன்ன நண்பர்களின் பேச்சை புறம் தள்ளியவாய் போய் வந்ததற்கு இன்று நல்ல பலன் வாய்த்து விட்டது போல் ஆகிப்போனது,

வழுத்த மழை தன் பலம் காட்டி பெய்து கொண்டிருக்க சாலையில் சென்ற வாகனங்கள் தன் பங்கிற்கு பயத்தைக்கூட்டிக்கொண்டிருக்க வானத்திலிருந்து வந்திறங்கிய கனத்த இடியோசையும் நவீன ஓவித்தில் இலக்கில்லாமல் இழுக்கப்பட்டிருக்கும் கோடுகளாய் மின்னிய மின்னலும் அவை இரண்டிற்கும் பக்கம் பக்க பலம் சேர்க்க கைகோர்த்துக்கொண்ட காற்றும் இவன் ஓட்டிச் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை பின்னுக்குத்தள்ளி முன்னேற விடாமல் தடுப்பதாக,

அட கஷ்டமே இப்படி ஒரு சோதனையா,பேசாமல் வண்டியை அலுவ லகத் திலேயே வைத்து விட்டு பஸ்ஸில் வந்திருக்கலாம்,ஏதோ வெட்டி கெத்துக் காட்டுவது போல் நினைப்பு போலும் இந்த வயதில் என தன்னை சபித்தவ னாய் சாலையைப்பார்க்கிறான்,

வண்டியின் விளக்கு வெளிச்சமும் பெருங் குரலெடுத்துப் பெய்த அடர் மழையின் நீ ஒழுகலும் தவிர்த்து வேறொன்றும் தெரியவில்லை,

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊர் ஒன்றும் தட்டுப்படவில்லை,இன்னும் எவ்வளவு தூரம்தான் இப்படியே நனைந்து கொண்டு போவது எனவும் தெரிய வில்லை,

இவனுக்குத்தெரிந்து இன்னும் ஒருகிலோமீட்டரில் ஒரு ஊர் வரும் என்பதாய் நினைவு,

ஆனால் அந்த ஒரு கிலோ மீட்டர் போவதற்குள் கதை கந்தலாகிவிடும் போலிருக்கிறதே,

இப்படியே சாலையின் ஒரு ஓரமாய் குழி தோண்டு ஊர்வன போல் சிறிது நேரம் இருந்துவிட்டும் இளைப்பாறி விட்டுமாய் செல்கிற வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,

மிகவும் பாக்கியம் வாய்க்கப்பெற்றவனாக அல்லவா ஆகிப்போய் விடுவேன் இந்தக் கணத்தில் என நினைத்தவனாய் ஆக்ஸிலேட்டரை முறுக்கிய கையை விடாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.

தொப்பலாய் முழுவதும் நனைந்து விட்டஉடல்,வண்டியை இறுக்கிப்பிடிக்க விடாமல் நடுக்கம் கொண்ட கைகள், பயத்தில் படபடக்கிற உடல் ,தாகத்தால் ஒட்டிக்கொண்டநாக்கு,இனம் தெரியாமல்நடுங்குகிற வயிறு முட்டிக் கொண்டு வருகிற ஒண்ணுக்கு,,,,,அந்த இருட்டுச் சாலையில் இவனுக்கு முன் பின் வேகம் காட்டி விரைகிற வாகனங்களின் வெளிச்சம்,, எல்லாம் ஒரு சேர இன்று நம் கதை இந்த பைபாஸ் ரோட்டிலேயே முடிந்து விடும் போலிருக் கிறதே என நினைத்தவனாயும்,”இங்கு விழுந்தால் உடலை சுரண்டி எடுப்பதை தவிர்த்து வேறு வழியில்லை,,” என்கிற நினைப்புடனுமாய்வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறான்,வண்டியை எடுக்கும் போது இருந்த குருட்டு தைரியத் துடன்/

குருட்டாய்க் கொண்ட தைரியம் கைவிட்டு விடவில்லை அந்த பெரு மழையி லும்/

இவன் நினைத்து போலவே ஒரு கிலோ மீட்டரில் வந்து விட்ட ஊரின் நுழைவயிலிருந்தபெட்ரோல் பங்கின் அடிவாரத்தில் நின்றிருந்து விட்டு மழை தூறலாய் இளைத்த பின்பு கிளம்பினான்,

அதுவரை இவனுடன் பயணித்த பயம் பெட்ரோல் பங்கின் அருகாமையாய் இருந்த கடையில் குடித்த தேநீரில் கரைந்து போகிறது.

கடையின் பின் பக்கமாய் போய் ஆளில்லாத அரவத்தில் போய் சிறிது நேரம் நின்று விட்டு வந்தவன் இன்னொரு தேநீருக்கு சொல்லி விட்டு காத்திருக்க ஆரம்பிக்கிறான்,

அந்த நேரத்தில் பையிலிருந்த துண்டு ஞாபகம் வர எடுத்து துடைத்தவன் துண்டு கொண்டு வந்ததில் இருந்த பிரயோஜனத்தை இன்றுதான் உணர்கிறவ னாய்/

பை கனத்தது துண்டால்அல்ல துண்டு சுமந்த நினைவுகளால் என இப்பொழு துதான் ஞாபகம் வந்தவனாய் உணர்கிறான்,

தொட்டுச்சுட்டு விடுகிற உணர்வுகளும் அது தந்து விட்டுப்போகிற தளும்புக ளும் சுகம் தருபவையாயும் அசை போடுகிற நினை வுகளை அள்ளித் தருப வையாகவுமே/

விழி கழண்டோடிய பார்வை தரை தொட்டுப்படர்ந்து பாவி வழியெங்குமாய் காணப்பட்ட தடைகள்எல்லாம் தாண்டி சுவர் பிடித்தேறி மணி பார்த்து விட்டு இவன் காதருகிலாய் வந்து மணி சொல்லிசெல்கிறது,

4 comments:

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை அண்ணா...
மழை இரவுப் பயணம்...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நீண்ட நாட்களுக்குப்பிறகான வருகை,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

வலிப்போக்கன் said...

அசை போடுகிற நினைவுகள் சிலருக்கு சுகமானது

vimalanperali said...

அசை போடுகிற நினைவுகள் யாருக்கும்
அவ்வளவு எளிதில் இனிப்பாய்
வாய்ப்பதில்லைதான்.
நன்றியும் அன்பும் சார்/