2 Dec 2018

படியேறும் கலரிகள்,,,,

கருப்பு வெள்ளையா இல்லை கலரா என்பது முக்கியமில்லை இங்கு/, அதன் ஒளிர்வும் கலர் காட்டுதலும் மட்டுமே காட்சிப்பட்டதாய்/

காட்டிய கலர்களின் முகங்கள்ஊதாவாய் ,சிவப்பாய் ,பச்சையாய் பட்டுத் தெரி கிறது, பட்டதும் தெளிவுகாட்டியும் வெளிப்படையாகவுமாய் தெரியவில்லை,

யாருக்கும் தெரியாமல் அதுவரை மறைத்து வைத்திருந்த பண்டத்தை திடீ ரென கைகளை மலர்த்திக்காட்டுவது போல்அகல விரித்துக்காட்டி ஆச்சரியப் படுத்தும் சின்னக் குழந்தையின் விளையாட்டாய் பளிச்சென லைட் எரிந்து ஆச்சரியப்படுத்தியது,

எரிந்த லைட்டின் வெளிச்சம் சிறிது நேரம் நின்று வெளிச்சம் காட்டி பின் கண் மூடிக்கொண்டு உள்ளே ஓடிப்போய் வேறொரு நிறம் காட்டியது,பின் சிறிது நேரம் கழித்து இன்னொரு நிறம்,,,,என மாற்றி மாற்றிக்காட்டிய நிறம் தன் அடர்த்தி கொண்டும் கனம் கொண்டும் காட்சிப்பட்டதாய்,,,,,,/

வரட்டுமா,, வா,போகட்டுமா போ என்கிற உத்தரவிற்கும் அசரீரியாய் ஒலித்த குரலுக்கும் கட்டுண்டது போல் இருந்தது அந்த செயல்/

யார் சொல்லி யார் செய்தார்கள் இது போல்,அல்லது யார் சொல் கேட்டு இப்படி அழகு காட்டி அமர்ந்தமர்ந்தும் கண்ணா மூச்சிகாட்டியுமாய் செல்கிறது அது என்பதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் விசாரிக்க வேண்டும்,நீண்டு வாலோடியாய் தெரிந்த ரோட்டின் ஆரம்பம் படந்தாலின் ஆரம்பத்தில் நூல் பிடித்து பஜார் வழி சென்று தூத்துக்குடி ரோட்டில் முடிவுற்றதாய் சொல்லிச் செல்கிறது.

அதன் இடது புறமாய் இவன் நின்றிருந்த இடத்திற்கு நேர் எதிராய் இருக்கிற எம்,கே. எஸ் மார்ட் என்கிற பிரபல கடையின் விளம்பரமாய் அல்லாது சாதார ணமாகவே காட்சிப்படுத்தி அலங்காரம் செய்திருந்தார்கள் கடையின் முகப் பை,

கடை மாடி கீழ் தளமென இரண்டு பிரிவாய் இயங்கியது,கீழ்த்தளத்தில் இருந்த பிரிவில் வெள்ளியும் மேல் தளத்தில் இருந்த பிரிவில் தங்கமுமாய் வைத்தி ருந்தார்கள்.

காட்சிக்கும் விற்பனைக்கும்,மதுரை சென்ற ஒரு நாளில் இவனும் மனைவி யுமாய் பேசிக்கொண்டது நினைவில் வந்தது.

”சின்ன சாமானா எடுத்தாலும் இது போலான கடையிலதான் எடுக்கணும், அத விட்டுட்டுஅங்கஇங்கன்னுபோயிஏறியெறங்கிட்டு”,,,,என்றான்,மத்தியசாலையில் இருக்கிற ஓங்கி உயர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக்கடையைப்பார்த்த தும்/

பளிச்சென்ற அதன் அலங்கரிப்பும் ஓங்கி உயர்ந்து தெரிந்த அதன் தோற்றமும் கடையை பெரிதாய் காட்டியது,

கடையின் வெளிப்புறத்தோற்றம் அலங்கரிப்பும் சேர்ந்து கடையை இன்னும் உயர்த்திக்காட்டியதே தவிர்த்து குறைத்துக் காட்ட வில்லை,அந்த உயர்த்து தலும் குறைத்துக் காட்டாதன்மையும் கடையின் வெளிப்புறத்தை காட்டியதே தவிர்த்து அதன் உள்ளிருப்பை காட்ட மறந்து போனதாய்,,/

அப்படி என்னதான் இருந்து விட முடியும் உள்ளே என ஆவல் கொண்ட இரு மனங்கள் இவனதும் இவன் மனைவியினதுமாய் ஆகிப்போன தருணங்களில் அந்தக்கடைக்குள்ளாய் நுழைந்தார்கள்,இருவரும்/

கடையின் செக்யூரிட்டி இவர்கள் இருவருக்கும்,இவர்களை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கும் வணக்கம் சொல்லி உள்ளே போகுமாறு கைகாட்டினார்,

கை காட்டியவருக்கு பதில் வணக்கம் சொன்ன இவனை கடைக்கு வந்தவர் களும் கடையில் வேலை பார்த்தவர்களும் ஏளனமாகப் பார்த்தார்கள்.

போக இவன் தவிர்த்து யாரும் அந்த செக்யூரிட்டிக்கு பதில் வணக்கம் தெரிவி த்ததாய்தெரியவில்லை,எங்கும்எப்பொழுதும்யார்சொல்லியும்கேட்காதமனது  இது போலானதற்கு தலை சாய்த்து நின்று பணிந்து விடுகிறதாய்/

அது பெரியவர் சிறியவர் என்கிற வித்தியாசம் பார்ப்பதில்லை.எந்த இடம் வீண் கௌரவம் என்கிற ஜம்பத்தில் விழுந்து நிற்பதும் இல்லை.பரஸ்பரம் தலை தாழ்த்தி கொடுக்கிற வணக்கங்களை ஏற்றுக்கொண்டும் தலை தாழ்த்தி வணக் கங்கள்சொல்லிக்கொண்டுமாய் இருக்கிறான்தான் இது நாள்வரை,

அதில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டதாகவோ இல்லை இவனது கௌரவத்திற்கு இழுக்கு வந்ததாகவோ இதுநாள்வரை நினைக்கவில்லை.

அப்படியே இழுக்கு ஏற்பட்டால் கூட இவன் அதை துடைத்தெடுத்து நகன்றி ருக்கிறானே ஒழிய பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொண்டதில்லைஅதுதான் அந்தக் கடைக்குள் போன அன்றும் நடந்ததாய்,,/

கடைக்குள் போன அத்தனை பேரும் நகை எடுத்ததாய் தெரியவில்லை, இவனைப்போலவேடிக்கை பார்க்க வந்தவர்களாய்த்தான் இருந்தார்கள்,

கடைக்காரர்களுக்கு அது தெரிந்திருக்கும் போலும்,வேடிக்கைபார்ப்பவர்களை பதிலுக்கு வேடிக்கை பார்த்தார்களே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை,

அன்று அந்தக்கடையைப்பார்த்தது போலவே இருந்தது இந்தக்கடையைப் பார் க்கிற பொழுதும்/

ஆனால் ஏறிப்போய் வேடிக்கைப் பார்க்கத்தான் தோதில்லை.கடையை ஒட்டி வலது பக்கமாய் இருந்த டீக் கடையில் எந்நேரமும் டீக்குடித்துக்கொண்டும் வடை சாப்பிட்டுக்கொண்டுமாய் இருந்தார்கள்,

சின்னதாய் தென்பட்ட டீக்கடையின் முன்புற இடது ஓரமாய் தரையில் கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்த சிலிண்டருக்கு அருகாய் எரிந்த அடுப்பில் வடை போட்டுக்கொண்டிருந்தார்கள்,

பருப்பு வடை, உளுந்த வடை, வெங்காய வடை,பஜ்ஜி,,,, என பலவாய் வெந்து கொண்டிருந்த வடைகள் உடனுக்குடன் காலியாகிக் கொண்டிருந்ததாய்,,,/

இந்த இடத்தில் நான்கைந்து வருடங்களாய்த்தான் டீக்கடையைப்பார்க்கிறான், அதற்கு முன் அந்த இடம் ஒரு ஹோட்டல்,

அதைசாப்பாட்டுக் கடை,கெளப்புக்கடை கறிச்சாப்பாட்டுக்கடை என பல பெயர் களிலும் அழைத்தார்கள்.

உண்மையில் அப்படித்தான் இருந்தது அது.கடைக்கு சாப்பிடப் போகிறவர்கள் ஏதாவது அசைவம் வாங்கித்தான் ஆக வேண்டும், இல்லையென்றால் ”நீயெ ல்லாம் எதுக்கு இங்க சாப்புட வர்ற” என்பது போல் பார்ப்பார்கள்,

சைவம்மட்டும் போதும் எனச்சொல்லிவிட்டால் போதும் ஹோட்டலின் சமை யலறையிலிருந்து சாப்பாடு,காய்கறி என பறந்து வருகிற தட்டுக்களை நாமே எட்டிப்பிடித்து நாமே சாப்பிட்டுக்கொள்ள வேண்டும் என்பது போல் பார்ப்பா ர்கள்,

பரிமாற வருகிறவர்களுக்கு முகம் எட்டுக் கோணலாய்ப் போகும்.டேபிளில் விரித்து வைத்திருக்கிற இலை கிழிந்து போகிற அளவிற்கு கூட்டையும் கறியையும் பெஞ்சத்தத்துடன் வைப்பார்கள்,

எப்பொழுதுதாவது அபூர்வமாய் ஹோட்டலில் சாப்புடுகிற பழக்கம் கொண்ட அவன் சாப்பிடப்போன அன்று இப்படித்தான் சைவச்சாப்பாடு சாப்பிட உட்கார் ந்த ஒருவரை கடையின் சப்ளையர் புண்படுத்தி விட்டார் புண்படுத்தி,

ஓரளவு வரை பொறுத்துப்பொறுத்துப்பார்த்த அவர் பாதி சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் போதே கோபப்பட்டு எழுந்து விட்டார்,

“என்னாங்கடா,,,இதுஎன்ன அசைவம் சாப்புடுறவுங்களுக்குன்னு வைச்சிருக் குற கடையா,அப்பிடின்னா வெளியில போர்டு வையி,சைவம் சாப்புடுறவு ங்க யாரும் கடைக்குள்ள வரக்கூடாதுன்னு,,, என நிறைய பேசிவாறும் கோபப் பட்டவாறும் இருந்தவரை கடையின் முதலாளி வந்து ஆற்றுப்படுத்தினார்,

”சார் சார் தப்பா நெனைச்சிக்கிறாதீங்க, எனக்கோ இங்கவேலை பாக்குற எங்க பையலுகளுக்கோஅந்தமாதிரிஆசையெல்லாம் இல்ல,ஒங்களப்போல சைவம் சாப்புட வர்றவுங்கள வெறுப்போட பாக்கணுமின்னு அவசியம் இல்ல, என்ன பையன்க அப்பிடி பழகீட்டாங்க,வேற வழியில்ல கறி,மீனுன்னு வித்தாத்தான் எங்களுக்கு நாலு காசு கெடைக்கும், அதுனாலத்தான் அப்பிடி., தப்பு இருந்தா மன்னிச்சிக்கிடுங்க,என்றவர் ஒரு முழுச்சாப்பாட்டை பார்சல் கட்டி கொடுத்து அனுப்பினார்,

சப்தம் போட்டவருக்கு சங்கடமாகிப் போனது,சங்கடமும் சாப்பாடுமாய் போன வர் கடை முதலாளியிடம் மன்னிப்புக் கேட்டு விட்டுப்போனார் சாப்பாடு போ டும் இடத்தில் சப்தம் போட்டதற்காக,,,/

சப்தத்தை மீறிய சப்பாட்டா சாப்பாட்டை மீறிய சப்தமா அங்கு நடந்தது என்கிற சூட்சுமம் பிடிபடுவதற்குள் சைவம் சாப்பிட வந்தவர் சாப்பாட்டுடன் வெளி யேறிவிட கடை அதன் ஓட்டத்தில் நிதானப்பட்டு,,,,/

நின்றிருந்த நிதானங்கள் அவரசம் கொண்டு விடாமல் நிதானித்து போகச் செய்த ஹோட்டல் காலப் போக்கில் மூடப்பட்டு இன்று அதன் இடத்தில் ஒரு டீக்கடையும் என் கே எஸ் மார்ட்டுமாய் காட்சிப்பட்டு நிற்கிறது,

”என்ன சொல்ற இதுக்கு ,இதுதான் கால மாற்றங்குறது,காலம் மிகப்பெரிய கணக்கீட்டாளன்னு சொல்லுவாங்க,அது உண்மையாத்தான்னு தோணுது, மேல இருக்குறங்க கீழ வந்துற்ராங்க,கீழ இருக்குறவுங்க மேல போயிருறா ங்க,,சில நேரம் யெடம் மாறி அடையாளமில்லாமலும் ஆகிப்போயிருறாங்க,

”நம்ம ராயப்பன எடுத்துக்க, அவனாட்டம் நீயூஸ் பேப்பர் போட்டுக்கிட்டு திரி ஞ்ச காலங்கள்ல நல்லா இருந்தான்,

”கால்வயித்து சாப்பாடுன்னாலும் அவனாட்டம் நிம்மதியா சாப்புட்டுக்கிட்டு நிம்மதியா இருந்தான்,காலையில நாலு மணிக்கு எந்திரிக்க, மொத தெரக்குற கடையாப்பாத்து ஒரு டீயக்குடிச்சிட்டு அப்பிடியே சைக்கிள எடுத்துட்டு பஸ் டாண்டுக்குப்போக,அங்க பஸ்ஸீல வந்து யெறங்கீருக்குற நீயூஸ்பேப்பர் கட்ட எடுத்துக்கிட்டு அத ஏரியா வாரியா பைன்களுக்கு பிரிச்சிக் குடுத்துட்டு இவனும் எடுத்துக்கிட்டு இவன் பாக்குற ஏரியாவுக்கு பேப்பர் போட்டுட்டு வந்து சாப்புட்டுட்டு கொஞ்சம் வீட்டு வேலைமதியச்சாப்பாடு அப்பிடியே ஒரு குட்டித் தூக்கமுன்னு இருந்தவன் கொஞ்சம் ஆசைப்பட்டு அகலக்கால் வச்சான்,

அட அவன் அகலமா கால் விரிக்க ஆரமிச்சதென்னவோ சரியாத்தான் இருந் துச்சி,அப்புறமா போகப்போகத்தான் விரிச்ச காலும் ஊனுன விதமும் தப்பு ன்னு ஆயிப்போச்சி,என்ன செய்ய சொல்லு,

”மொதல்ல என்ன செஞ்சான்னா பேப்பர் போட்ட நேரம் போக அப்பிடியே டீக் கடைகளுக்கு டீத் தூளு, பீடி சிகரெட்டு,பிளேடு பாக்கெட்டுன்னு வாங்கிப்போட ஆரம்பிச்சான்,

“அதுல கொஞ்சம் காசு கெடைக்க ஆரம்பிச்சதும் துட்டு ருசி கண்டுக்கிட்டான் கண்ட ருசி காது வரைக்கும் போனாக்கூட பரவாயில்ல,மனசு புகுந்து சீரழிச்சி ருச்சி.அப்பிடியேகொஞ்சம் சீட்டுப்புடிக்கிறேன்,பிசினஸ்பண்றேன்னு யெறங்கி பாவம் கடைசியில எல்லாம் போயி கூட இருந்தவுங்க புடுங்குனது போக கையில சிக்குனத வச்சிக்கிட்டுஅவன்பொண்டாட்டி ஊர்ப்பக்கம் போயி செட்டி ல் ஆயிட்டான்,

“போன முண்ட அங்க போயும் சும்மா இருக்காம இங்க தொட்டுக்கிட்டு இருந்த தண்ணிப்பழக்கத்த தொடர்ந்துருக்கான்.அது கடைசி யில அவனையே தின்னு தீத்து கொன்னும் போட்டுருச்சி/”என காலக்கணக்கீட்டாளனை முன் தூக்கி வைத்து பேசிக்கொண்டிருந்தவர் கடையின் முன் அலைகளாக தென் பட்டார்.

இங்கு தான் இவனது அண்ணன் மகனுக்கு வேலைக்காக கேட்டிருந்தான், காலேஜ் முடித்து விட்டு வீட்டுக்கு தேடி வரும் வேலை எனக் காத்திரு ந்தான்.

அது பொய் எதுவும் தேடுவதும் கிடைப்பதும் வீதிகளில் இறங்கினால் மட்டு மே சாத்தியம் எனப்பிடிபட அவனுக்கு சிறிது நாட்களாகிப்போனது. அந்த நாட்களின் நீட்சியும் காலநீட்டிப்பும் இவனை ஒரு வழியாய் மனநிம்மதி ஆக்கி விட்டவனாக்கிவிட்டிருந்தது,

கற்ற கல்வியும் பெற்ற பட்டமும் தம்பிடிக்கும் பிரயோஜனமில்லாமல் ஆகிப் போனது கண்டு நொந்து போனான் நொந்து/

வேலை,வேலைவேலை,,,அது கிடைப்பது இவ்வளவு கஷ்டமா என அவன் அவ்வப்பொழுது இவனிடம் கேட்டுக்கொண்டிருந்த நாட்களில் இவன்தான் என் கே எஸ் மார்ட்டை அவனுக்கு பரிந்துரைத்தான்.இப்பொழுது அந்தக் கடை யில் நிம்மதியாய் வேலை பார்க்கிறசிப்பந்திகளில்ஒருவனாக அவன் இருக்கி றான்.

ஆனாலும் போதாது இது,தற்சமயத்திற்குதான் இது.இன்னும் இன்னும் தேட வேண்டும்,பயணிக்க வேண்டும்,கற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்.பக்குவம்கொள்ளவேண்டும்.கைக்கொண்டஇவையாவையும்சரியா ன இடங்களில் சரியான நேரத்தில் பொருத்திப்பார்க்கிற மனம்வேண்டும். என இவனிடம் அண்ணன் மகன் சொன்னது இப்பொழுது இந்தக்கட்டிடத்தின் முன் ஞாபகம் வருவதாக/

பலசரக்கு வாங்க கடை வீதிக்கு வந்திருந்தான், கூடவே இவனது மனைவி யும்.ஏதாவது கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் சரி வீதிக்கு வந்து விடுகிறான், தனியாகவோ இல்லை மனைவியை கூட்டிக் கொண்டோ,/

வீதிக்கு வந்தால்தான் பிரச்சனை தீரும் போல என மனைவியிடம் சொல்லும் போது அவள் கருவிக்கொள்வாள் மனதிற்குள்ளாகவே/

”ஆமாம் வீதிக்கி போறதுக்கு ஒங்களுக்கு இது ஒரு சாக்கு,வீதியில யெறங் கீட்டா பத்தோட பதினொன்னா கைய ஒதறீட்டு திரியலாம்.எந்தப்பொறுப்பும் இல்ல, இங்க வீடுன்னா,ஆயிரம் இருக்கும்,அரிசி பருப்பு மளிகையில இருந்து புள்ளைங்க படிப்பு,வீட்டோடவரவு செலவு வரைக்கும் எல்லாம் பாக்கணுமில் ல,,,,, அதான்வீதிவீதின்னு திரியிறீங்க ஆம்பளைங்கங்க,நாங்க வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு கொமையிறோம்.

“ஆனா நாங்க வீட்டுக்குள்ள இருந்துட்டாலும் ஜன்னல் வழியாவெளிஒலகத்த பாத்துருவோம்,ஆனாநீங்கவெளியிலஇருந்துக்கிட்டுவீட்டோடஜன்னலமட்டும் தான்பாக்கமுடியும்.அதுவும்அரிச்சலாத்தான்தெரியும்,பாத்துக்கிடுங்க,என்பாள்,

வாஸ்தவம்தானே அவள்சொல்வதும் என்பது போலத் தோன்றினாலும் கூட வாஸ்தவங்களின் உரை கொஞ்சம் அழுத்தம் கொண்டதாகவே/

விடுமுறை தினங்களின் பொழுதுகளில் இப்படியாய் இலக்கற்று சுற்றித் திரி வதும் ஏதாவது சின்னதாய் இருக்கிற வேலையை சுமந்து கொண்டும் அதை சாக்கிட்டு இரு சக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டு திரிவதும் கொஞ்சம் சுகம் அளிப்பதாயும் மனதுக்கு இதமாயும்,,,,,,,/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தப் பதிவின் படத்தை வேறு விதமாக பயன்படுத்தப் போகிறேன்... நன்றி...

vimalanperali said...

வணக்கம் சார் நன்றி வருகைக்கு.../

vimalanperali said...

பயன்படுத்திக்கொள்ளுங்கள் சார்,
தங்கள் கை படும்போது இன்னும் மிளிரும்/

கரந்தை ஜெயக்குமார் said...

வீட்டுக்குள்ள இருந்துட்டாலும் ஜன்னல் வழியாவெளிஒலகத்த பாத்துருவோம்,ஆனாநீங்கவெளியிலஇருந்துக்கிட்டுவீட்டோடஜன்னலமட்டும் தான்பாக்கமுடியும்.அதுவும்அரிச்சலாத்தான்தெரியும்,

உண்மை
உண்மை

vimalanperali said...

வணக்கம் சார்,நன்றி வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/