விடுபட்டுப் போன ரூபாய் இரண்டை வாங்கா விட்டால்தான் என்ன இப்பொ ழுது குறைந்து போனது என்கிற நினைப்பில் குடிகொண்டிருந்த போது பக்கத் தில் அமர்ந்திருந்தவர் சொல்கிறார்,சார் அப்பிடியெல்லாம் விட்டுறக் கூடாது சார்,
ஒரு நாளைக்கு ஏறி யெறங்குற அத்தனை பேருகிட்டயும் ரெண்டு ரெண்டு ருபாய் மிச்சம் வைச்சாஎவ்வளவு ரூவா அவனுக்கு சேர்றது நெனைச்சிப் பாரு ங்க, என்றவரை ஏறிட்ட போது ”ஆமா சார் அப்பிடித்தான் செய்வாங்க சார், என்றார்.
இரண்டு ரூபாயில் என்ன வாங்கிவிட முடியும் பெரிதாய்,கடைக்குப்போய் நின் றால் இரண்டு சாக்லேட்,தருவார்கள்.இன்னும் ரூபாய் எட்டு சேர்த்தால் ஒரு டீக்குடிக்கலாம், வடை வாங்க வேண்டுமென்றால் இன்னும் ரூபாய் மூன்று சேர்க்க வேண்டும்.
அத்தனைக்குமாய் ஆசை கொள்பவர்கள் அது தாண்டி வேறேதும் செய்து விட முடியாது என்கிற நினைப்பு மேலிட சாக்லேட் வாங்கி பையில் போட்டுக் கொண்டு பஸ்ஸிற்காக நிற்கிற போது என்ன சார் இது சின்னப்புள்ளைங்க மாதிரி சாக்லேட்டும் ஆரஞ்சு மிட்டாயுமா வாங்கி போட்டுக்கிட்டு திரியிறீங்க என கேலி பேசுவார் பஸ்ஸில் கூட வருபவர்,
அவரது பேச்சில் எப்பொழுதுமே ஒரு எல்லை மீறாத எள்ளலும் கேலியும் இழையோடிக்கொண்டே இருக்கும்,
சாயம் நனைக்கப்பட்ட நூலாக நெசவோடிக்காணப்படுகிற அவரது பேச்சு மனம் தொடுகிற ஆதுரப்பேச்சாகவும்,மன ஆறுதல் தறுகிற பேச்சாயும், பெரி தாக எதுவும் பூடகம் தாங்கிப் பேச மாட்டார்,
மதுரைப்பக்கமிருந்து வருகிறார், மதுரைக்குப்பக்கத்தில் இருக்கிற ஏதோ சிற்றூர்தான்அவருக்கு சொந்த ஊர் என்றும் பிள்ளைகளது படிப்பிற்காக வெளி யேறி மதுரைக்கு குடி வந்துவிட்டேன் என்றும் சொன்னார்,
தவிர தன்னை வளர்த்த ஊர் இரண்டாக இருப்பது கண்டுபொறுக்க மாட்டாமல் வந்து விட்டதாயும் சொன்னார்,
தான்,தனது குடும்பம்,தனது பிள்ளைகள் என மட்டுமாய் இருந்து விடாமல் கொஞ்சம் பொதுவுக்கு மனதை தத்துக்கொடுத்திருக்கிற அவர் அப்படியாய் வருத்தப்படுவதில் பெரிதாய் தவறொன்றும் இருந்து விட முடியாதுதான்.
அவர் இவனில் பழக்கமான நாள் ஒரு இனிப்பு சுமந்த நாளாகவே இருந்தது, பஸ்ஸில்பயணித்துக் கொண்டிருந்த காலை நேரமாய் இவனது அருகில் வந்த மர்ந்த அவர் இவன் சாக்லேட் உறித்துத்தின்றதைப்பார்த்து ”என்ன சார் லோ சுகரா,காலையில சாப்புடலையா,என்ன அவசரம் இருந்தாலும், ஒருகை சாப்பு ட்டுருங்க சார்,அப்பத்தான் நல்லாயிருக்கும்,எனக்குப்பாருங்க லோ சுகர்தான் இருந்துச்சி,அது போலான நேரங்கள்ல சட்டைப்பையி நெறைய சாக்லேட்டும் ஆரஞ்சு மிட்டாயுமா வாங்கிப்போட்டுட்டுத் திரிவேன்.வீட்ல புள்ளைக கூட கேலி பேசும்,ஏம்பா இப்பிடி ,மிட்டாயி வாங்குனா அத ஒங்க சாப்பட்டுப் பையில போட்டுக்கிட்டு வர வேண்டியதுதான,இப்பிடியா சட்டப்பையில போட் டு இங்க பாருங்க பையெல்லாம் மிட்டாயி ஈரம் கசிஞ்சி ஒட்டுன கரையா இருக்கு, அத என்னதான் சோப்புப்போட்டு தொவைச்சாலும் கறை போக மாட் டேங்குது,இப்பிடி கரையோட சட்டையப்போட்டுக்கிட்டு போகும் போது பாக்க அசிங்கமா இருக்குங்குறாங்க, எனக்கும் அப்பிடி போட்டுக்கிட்டு திரிய ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சி,என்னதான் இனிம இத்தனை வயசுக்கு மேல என்னங்குற நெனைப்பு இருந்தாலும் கூட புள்ளைங்க சொன்னதுல உண்மை இல்லாம இல்ல,இப்பிடி உண்மைத்தன்மையையும் புள்ளைங்க பேச்சையும் ஏங் நெனைப்பையுமா சொமந்துக்கிட்டு திரிஞ்ச நேரம் ஒடம்புல இருந்து சுகர் எடுத்து நித்தமும் காப்பி டீ போட்டு குடிக்கிற அளவுக்கு சுகர் கூடிப் போச்சி. ஆனா இப்பயும் கூட பையில சாக்லேட்டும் ஆரஞ்சி மிட்டாயும் வாங்கி வைச்சிக்கிட்டுத்தான் திரியிறேன்,என்ன இப்ப சாப்பாட்டுப்பையில மிட்டாய போட்டுக்கிட்டு அலையிறேன்,அம்புட்டுத்தான், வித்தியாசம்” என்கி றவர்
”சார் நான் கொஞ்சம் யதார்த்தமாவும் கேலியாவும் பேசுவேன்,அது ஒங்க ளுக்கு ஏற்புடையதா இல்லைன்னா சொல்லீருங்க,நான் பேச்சக் கொறைச்சிக் கிறேன் என்றவரை ஏறிட்ட போது அவர் அடுத்த நினைப்புக்கு தாவியிருந்தார் வேறுபக்கமாய் திரும்பி,,/
அந்தத் திரும்புதலும்,அடுத்த நினைப்பும் பஸ்ஸில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களின் வரிகளிலும்,இசையின்லயத்திலுமாய் மனசை பறி கொடுத்ததை சொல்லிச் சென்றது.
அதற்கு சாட்சியாய் அவரது கை விரல்கள் பஸ்ஸின் கம்பியிலும் கால் பாத ங்கள் பஸ்ஸின் தளத்திலுமாய் தாளம்போட்டுக்கொண்டிருந்தன,
இப்படியெல்லாம் சூழலுகேற்ப இசைந்து போக ஒரு தனி மனது வேண்டும் தான். அந்த மனது அவருக்கு வாய்த்திருக்கிறது எனக்கொள்ளலாம் என்கிற முன் வரைவுடன்தான் அறிமுகமானார் அன்று/
அன்றிலிருந்து இன்று வரை அவர் அப்படித்தான் காட்சிப்படுகிறார்.
ஊதாக்கலர்சட்டை அணிந்திருந்தார்,அவர் அணிந்திருந்தகறுப்புக்கலர் பேண்ட் ஊதா சட்டைக்கு மேட்சாக இருந்தது,
முன்பு போல் கறுப்புக்கலரைப்பார்ப்பது அபூர்வமாகிப் போனதுதான்.கறுப்பு வெள்ளை ,கறுப்பு வெளிர் நிறம் என்கிற காம்பினேஷன் அப்பொழுது மாண வர்களிருந்து பெரியவர்வரை சாதாரணமாகக் காணக்கிடைக்கிற காட்சியாக இருக்கும்.அதிலும் இவனுக்குஆஸ்க்கலர் பேண்ட் என்றால் மிகவும் பிடிக்கும், ஆஸ் கலர் பேண்ட் லைட்கலரில் லயனிங் போட்ட சட்டை இல்லை கட்டம் போட்டசட்டைஎன ஏதாவது ஒன்றின் மேட்சிங்கிற்குள் அடைப்பட்டுப்போவது இவனுக்கு மிகவும் பிடித்ததுண்டு,
ஆனால் மேட்சிங்க் என்பது இவனைப் பொறுத்தவரை எப்பொழுதுமே எட்டி நிற்கிற விஷயம்தான்.
இருக்கட்டும், இருக்கட்டும், அதுவும் நல்லதுக்கே, மேட்சிங்க், மேட்சிங்க்,மே ட்சிங்க் எதுக்கெடுத்தாலும் அப்படின்னா பின்ன எப்படி,,? உனக்கும், இருப்ப வனுக்கும் மேட்சிங்க் சரி,இல்லாதவனும் அதைப் பத்தி நெனைச்சிக்கூட கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறவனும் என்ன செய்வான் பாவம், கெடச்சத அள்ளிப்போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான்,
இருக்குறதுல நல்லதாப்பாத்து தொவைச்சிப்போட்டு உடுத்திக்கிருவான், அவ்வளவுதான்/
அவனுக்கு அவன் பொழைப்பப்பத்தியும் அன்றாட நகர்த்துதலைப்பத்தியே யோசிக்க நேரம் சரியா இருக்கும் போது எங்க போயி மேட்சிங்க் அது இது என யோசிப்பான், சொல்லுங்க,
காலையில எந்திரிச்சி இன்னைக்கி எங்கிட்டுவேலைக்குப் போகலாம் எங்க வேலை கிடைக்கும் என்ன சம்பளத்தில் அமையும்ங்குறத உள்ளடக்கி பிள் ளைகுட்டிகபடிப்பு,அவர்களுக்கும் அதுப்போல அன்றாடக்கூலிவேலை மற்றது மற்றது போலானத யோசிக்கவும் சரி செய்யவுமே நேரம் சரியாக இருக்குற பொழுது அவன் எங்கிட்டுப்போயி,,,,,என்பார் அரிதாக பேசுகிறவர்/
இவனுக்குஅப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை காசுக்கடை பஜாரிலிருக் கிற டெய்லர்தான் இவனுக்கு ஆஸ்தானம்,
இவன் மனதில் நினைத்ததை பேண்டாக சட்டையாக தைத்துக் கொடுத்து விடுவார்,
இவன் போய் கடைக்கு முன் நின்றதும் வாங்க கலை வித்தகரே என்பார்,
”என்ன இது ஏன் இப்பிடி கேலி பண்ணுறீங்க டெய்லர் சார் என்றால் சார் சும்மா இருங்க ஒங்களுக்கு தெரியுமோ தெரியதோ ஊருக்குள்ள ரொம்பப் பேரு கலை வித்தகரு, கலை வித்தகருன்னு சொல்லிக்கிட்டு திரியிறான். நாலு பேருக்கு கண்டதக்கடியத வாங்கிக்குடுத்தாவது அப்படி சொல்ல வைக்கிறான். ஆனா அதுக்கு முழுதகுதியும் இருக்குற ஒங்கள அப்பிடி கூப்புடுறதுல என்ன தப்பு இருந்துற முடியும் சொல்லுங்க,என்பார்,
“அப்பிடி சொல்றது புடிக்கலைன்னா சொல்லுங்க ,இனிமே அப்பிடி கூப்புடுறத நிறுத்தீருறேன்.என்பவரைப்பார்த்து இல்ல நீங்க கூப்பிடுங்க அப்படியே எனச் சொல்லவும் வேண்டாம் எனச்சொல்லவும் மனதில்லை, மையமாக வைத்து ஓடிக்கொண்டிருந்தான்.அந்த ஓட்டமே இவனை ஆற்றுப்படுத்துவதாக/
டெய்லர் எப்படி அப்பிடியெல்லாம் பேசுகிறார்,இவன் கலை வித்தகர் என அவர் எப்படி எதை வைத்துச்சொல்கிறார்,அவர் சொல்வதால் இவன் கலை வித்தகர் ஆகிப்போவானா இல்லை அப்படி சொல்லாமல் விட்டால் கலை வித்தகர் கிடையாதாஎன இவனுக்குள் இவனாககேட்டுக் கொண்டால் அதற்கும் விடை இல்லை என்றே தோணுகிறது.
பெரிதாக ரெடிமேட்கள் கோலாச்சாத நேரம், அது மீறி எடுக்க ஆசைப்பட்டா லும் கூட மதுரை போன்ற பெரிய நகரங்களில் போய் பிராண்டெட் ஐட்டமாக எடுத்து வந்தால்தான் உண்டு, கொடுக்கிற விலைக்கு உழைக்கும் அது என்றா லும் கூடஅப்போதைக்கு அவ்வளவு விலைகொடுப்பது கொஞ்சம் சிரமம் தாங்கியதாகவே இருக்கும்,
இவன் எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று செட்டுக்கு மேல் பேண்ட் சர்ட் வைத்திருப்பதில்லை.அனாவசியம் அப்படி வைத்திருப்பது என்றோ இல்லை ஏன் தேவைக்கு மேல் என்கிற மனோ நிலையோ இவனை தேவைக்கு மேல் துணிகள்வைத்துக்கொள்ள அனுமதித்தில்லை.
“எதுக்குப் போட்டுக்கிட்டு என்பான் கேட்பவர்களிடம்,”
“ஏன்என்னகொறைச்சலு ஒனக்குன்னு ரெண்டு இல்ல மூணு செட்டு ட்ரெஸ்ஸீ போதுமுங்குற.ஒண்ணும் இல்லாதவிங்களெல்லாம் எப்பிடி எப்பிடியோ மினுக் கிக்கிட்டுதிரியும் போது ஒனக்கு என்னடா,,/ஆனா ஒண்ணு கொறைச் சலா ட்ரெஸ்ஸீ வைச்சிருந்தாலும் கூட நல்ல படியா செலக்ட் பண்ணி வைச் சிருக் கப்பா,ஒனக்குன்னு பெரிசா மேட்சிங்க் அது இதுன்னு புடிக்காட்டி கூட நீ போடுற ட்ரெஸ் கம்பினேஷன் கரெக்டா இருக்குறதாத்தான செய்யும்.
அதுவே மேட்சிங்காக்கூட ஆகித்தெரியும் சமயத்துல,அது போலா எல்லாரு க்கும் அமையாது,ஒனக்கு அமைஞ்சிச்சி அப்பிடி, அதுவேக் கூட அப்பிடியே ஊர் முழுக்க விதைச்சி விட்டது மாதிரி பேஷனா ஆகி நின்னுச்சி.
அப்பிடி இருக்குற நேரத்துல நீயி இன்னும் கொஞ்சம் கலர் கலரா ரெண்டு மூணு செட்டு பேண்டுக வைச்சிருந்தையின்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமில்ல என்பார்,
அப்படிச் சொல்கிற அவரிடம் சரி சரி என தலையாட்டி விட்டு பின் இவன் போக்குப் படியே இரண்டு மூன்று ட்ரெஸ் மட்டுமே வைத்துக் கொள்வான்,
அதற்கு மேல் வைத்துக் கொள்ள இவனுக்கு மனம் ஒப்பியதில்லை.
அப்படியே இவனை மறந்து ஒப்பினாலும் கூட அதற்கு கொஞ்சம் திரை இட்டு விடும் விதமாய் ”ஒழுக்கமா இருக்குறத வச்சி நாட்கள ஓட்டப்பாரு, இப்ப என்ன கிழிஞ்சி போனா வேற வாங்கிக்கலாம்.நாம ஓடிறப்போறமா இல்ல துணிமணிக ஓடிறப் போகுதா சொல்லு,,,,” என திரையிட்டு மூடி விடும் மனம் கொஞ்சமாய் முன்னறிவித்துச் செல்லும் அல்லது தீர்மானமாகவே முன் வைத்து விடும்.
அருகில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து விட்டு இவன் உடையைப்பார்த்த பொ ழுது கொஞ்சம் பளிச்செனவே தெரிந்தது,அவரது கறுப்பு வெளிர் நிற காம்பி னேஷன் என்றால் இவனது வெளிர்க்கலர் பேண்டும் ஆரஞ்சுகலர் சட்டை யுமான காம்பினேஷனில்இருந்தது,
இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை, திருமணத்திற்கு அப்புறமாய் கூடுத லாய் இரண்டு செட் பேண்ட் சட்டைகள் வைத்திருக்கிறான், ஆனால் அவை யெல்லாம் டெய்லர் கடை ஸ்டிச்சிங்க் இல்லை.ரெடிமேட்தான்,/
பேண்ட்மட்டும் தேர் முட்டி அருகில் இருக்கிற கடையில் தைத்துக் கொள்கி றான்,
என்ன விலை கொடுத்து ரெடிமேடில் பேண்ட் வாங்கினாலும் கூட செட் ஆகவி ல்லை,
எங்கிட்டாவதுஇழுத்துக்கொண்டும்புடைத்துக்கொண்டுமாய்.,சட்டைஅப்படியில்லை, கொஞ்சம் லூசாக இருந்தாலும் டைட்டாக இருந்தாலும் செட்டாகிப் போ கிறது ,இல்லையென்றால் செட்டாகிவிட்டதாய் நினைத்து மனம் மகிழ்ந்து கொள் கிறான்.
ஆறுமுகம் சாரைப்பார்த்துதான் இது போலாய் ரோஸ் வயலெட் கலர்களில் சட்டை எடுக்க ஆரம்பித்தான்,ரிடையர் ஆவதற்கு முன்பாய் அவர் நல்ல சட்டை அணிந்து இவன் பார்த்ததேயில்லை,
ரோமக்கட்டை தட்ட விடாத ஷேவிங்,மீசையை மழுங்கச்சிரைத்த முகம், இரு ப்பதில் நல்லதாய் தேய்த்த பேண்ட்,சர்ட் என போட்டுக்கொள்வார்.,பஸ்ஸேற வரும்போது ஒட்டு மொத்த ரோடும் அவரை கவனிக்கிறது போல் ஆகிப் படும்.அவரது பளீச்னெஸ்ஸீம், அவரது உடை தூய்மையும் என்றைக்கு இவ னை சுண்டியிழுத்ததோ அன்றிலிருந்து இவன் இப்படியாகித்தெரிந்தான்.
அதனால் என்ன ரூபாய் இரண்டுதானே விட்டு விடலாம் ,அதை போய் கேட்டு அவரை துன்பப்படுத்தா விட்டால் என்ன என்கிற எண்ணம் வந்தபோது அதற் காகத் தானே அவர் இருக்கிறார் என மனம் சொன்னாலும் கூட வழக்கத்தை விட இன்று அதிகமாய் இருந்த கூட்டத்தைப்பார்த்து அவரிடம் சில்லரை கேட்க மனம் வரவில்லை,
அல்லாடிக்கொண்டிருந்தார் மனிதர்,பஸ்ஸீன் உள்ளே ஆட்களை ஏற்றச் சொன்னால் பஸ்முழுவதும் ஆட்களை ஏறியிருந்தார்கள், கட்டுச் சீட்டுக்களை பக்க வாட்டில் வரிசையாக நெருக்கி ஒன்றின் அருகாய் ஒன்றாக அடுக்கியது போல் நின்றிருந்தார்கள் பயணிகள்,
இதில் டிக்கெட் போடுவதற்கும் காசுகளை வாங்குவதற்கும்கண்டக்டர் தனது திறமையை முழுவதுமாய் காட்ட வேண்டியிருந்தது.
தனது உடல் பொருள் ஆவி என அத்தனை திறமைகளையும் உள்ளடக்கி பிரயோகித்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டியிருக்கும், அப்படிக் கஷ்டப்படுகிறவரிடம் போய் இரண்டு ரூபாய் சில்லறையை கேட்பது கொஞ் சம் மன உறுத்தலுக்குள்ளான விஷயமாகவே ஆகித்தெரிந்தது.
இந்த நேரத்தில்,அதுவும் போக அவர் கூட்டத்தில் சிக்கிநடுவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்,
வழக்கமாய் இந்த நேரத்தில் பயணிப்பவர் போலும்,மிகவும் ஒன்றிப்போய் பேசிக்கொண்டிருந்தார்,சுகம் துக்கம் நலம்,நலமின்மை,குடும்பம் என இன்னும் இன்னுமாய் அரை பட்ட அவர்கள் இருவரின் பேச்சில் இருந்த உயிர்ப்புத் தன் மையையும் ஈரத்தையும் வாஞ்சையையும் மீறி கண்டக்டர் சொன்ன வார்த்தை உயிர் வார்த்தையாய் ஆகித் தெரிந்தது அந்த நேரத்தில்,
அந்த வார்த்தையின் நுனி பிடித்து சென்று கொண்டிருந்த நேரம் மீதம் சில்லறை ரூபாய் இரண்டை இவனிடம் கொடுத்தார் கண்டக்டர்/
10 comments:
சாயம் நனைக்கப்பட்ட நூலாக நெசவோடிக்காணப்படுகிற அவரது பேச்சு
ரசித்தேன் நண்பரே
நல்லதொரு கண்டக்டர்...
பஸ்ஸில் பாட்டு போடும் வழக்கம் இன்னும் இருக்கிறதா? மதுரைப்பக்கம்தான் இது வழக்கம். குறிப்பக ஜெயவிலாஸ் பஸ்ஸில். ஜெயவிலாசுக்குப் போட்டியாக இன்னொரு பளபள பஸ் 'வத்ராப்' போகும் பெயர் நினைவில்லை. இளவயது கண்டக்டர், அவர்களுக்குத் துணையாக ஓரிரண்டு பேர்கள்... அவர்கள்தான் பாடல் கேசெட் மாற்றுவார்கள்!
வணக்கம் சார்,
நன்றியும் அன்பும்.
இழையோடுகிற வாழ்க்கையின் நெசவு,,,/
நல்லதொரு கண்டக்டர்கள் எங்கும்
காணக்கிடைக்கிறார்கள்தான்,
சாதாரணர்களை ஈஸியாக
கைகாட்டி பழித்து விடுகிறது சமூகம்,,,,/
இன்னும் இசையை உயிர்பித்துக்கொண்டிருப்பவர்கள்
இது போலான தனியார் பேருந்து ஓட்டுனர்களும்
நடத்துனர்களுமே எனச் சொல்லலாம்/
அருமை. நன்றி
இப்படியான நல்ல கண்டக்டர்களும் இருக்கிறார்கள் தான்..
பஸ்ஸில் பாட்டு போடுவது ப்ரைவேட் பஸ்ஸில் இருக்கிறதுதான். அது சில சமயங்களில் நன்றாக இருக்கிறது. சில சமயங்களில் ஆஃப் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றும். அரசு பஸ்களில் இருப்பதாகத் தெரியவில்லை.
//அவரது பேச்சில் எப்பொழுதுமே ஒரு எல்லை மீறாத எள்ளலும் கேலியும் இழையோடிக்கொண்டே இருக்கும்,
சாயம் நனைக்கப்பட்ட நூலாக நெசவோடிக்காணப்படுகிற அவரது பேச்சு மனம் தொடுகிற ஆதுரப்பேச்சாகவும்,மன ஆறுதல் தறுகிற பேச்சாயும், பெரி தாக எதுவும் பூடகம் தாங்கிப் பேச மாட்டார், //
இப்படியான மனிதர்களைக் காண்பதும் அரிதுதான்..
துளசிதரன்., கீதா
அன்பும் நன்றியும்,,,/
பிரியம் வைத்த நிலங்களில்
மனிதர்கள் பல இடங்களில்
பல பொழுதுகளில் பலவாறாய்,,,/
Post a Comment