31 Mar 2019

இடம் கொள்வதில்,,,,


உட்காருவதல்ல,இடம்பிடிப்பதேஅவரதுநோக்கமாய்,இருந்ததுஇப்போதைக்கு/

சம்மணமிட்டு அமர்ந்து தியானிப்பதும் அதில் நிதானித்து மன நிதானம் கொள் வதுமான நிலை விடுத்து அன்றாடம் பஸ்ஸில் இடம் கிடைத்து அமர்வ தென்பது பெரும் பிரயத்தனமான வேலையாகவே இருக்கிறது.

எட்டே காலுக்கு பஸ் என்றார்,வந்து விட்டிருந்தான் எட்டு மணிக்கெல்லாம், வீட்டிலேயே போய் விட்டு வரலாம் என நினைத்தது பஸ்டாண்ட் வந்துதான் சாத்தியப்பட்டிருக்கிறது.

பொது பாத்ரூம் அப்படித்தான் இருக்கும் ,சுத்தத்திற்கும் சரியாய் வைத்திருப் பதிற்கும் எந்த உத்தரவாதமும் இல்லாத இடமாய்த்தான் காட்சிப்படும்,என மனச் சமாதானப்பட்டுக்கொள்ள வேண்டியதிருக்கிறதுதான்.

ஒருதடவை ஏதோ ஒரு பெரிய நகரத்திற்கு போய் திரும்பும் போது அங்கிரு ந்த பஸ்டாண்ட் டாய்லெட்டிற்குள்ளாய் போய் விட்டு வந்தான்.

அங்கேயே அமர்ந்து சாப்பிடலாம் போல அவ்வளவு ஒரு சுத்தம்.

”போடா டேய் வேலை மெனக்கெட்டவனே,அதுக்காக் பாத்ரூமுக்குள்ள உக்கா ந்தா சாப்பாடு சாப்புடலாமுன்னு சொல்லுவ,நீயி போன நேரம் சுத்தமா வச்சி ருக்குக்காங்க,ஒடனே ஒனக்கு அப்பிடியெல்லாம் யோசனை போயிருச்சி, இப்பி டியெல்லாமாடாயோசிப்ப லூசு,,ஒன்னைய பொதுவானநாலு விஷய த்தப் பத்தி படி,யோசி,பேசுன்னுசொன்னமுல்லையா அதுக்குபரிசாடாஇது, பாத்ரூமு,சுத்தம்,சாப்பாடுன்னு,கர்மம்பிடிச்சபயலே,பேசாமவாயமூடுமொதல்ல எனச் சொல்கிற நண்பன் பாத்ரூம் விஷயத்தப்போலத்தான மத்த எல்லாத் தையும் பாப்ப” என்பான்.அவன் இப்பொழுது ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாமல் போ கிறதுதான்,

டாய்லெட் வாசலில் அமர்ந்திருந்தவர் இரண்டு ரூபாய் கேட்டார்,நகராட்சி பாத்ரூமிற்குள் போய் வர கட்டணமா என லாஜிக்கெல்லாம் பேசிக் கொண் டிருக்கமுடியாது இந்நேரம் எனத் தோனியது.

பாவம் அதற்கும் வழியற்றுதானே அவர் கேட்கிறார் ,தேவைக்கு அவருக்கு சம்பளம் கிடைத்தால் ஏன் இப்படியெல்லாம் அவர் கேட்கப் போகிறார்,

தேவைகள்தானே எதையும் தீர்மானிப்பதாய் இருக்கிற போது அவரிடம் போய் இரண்டு ரூபாய் தர மாட்டேன் என மல்லுக்கு நிற்பவர்களை நிறைய நேரங்க ளில் பார்த்திருக்கிறான் இவன்,

சாமன்யர்களின் மேல் இருக்கிற காழ்புணர்வு இச்சமூக வெளியில் நிறைந்து விரவி இருப்பதாகவே/

பஸ்டாண்டிற்குள்ளாய்இருசக்கரவாகனத்தைநிறுத்தப்போகும்போதேஅவரசம் சுமந்து தான் போனான்,

தினசரிகாலையில்அலுவலகம்செல்லும்முன்பாய்செய்யவேண்டிய வேலைக ளை இன்று செய்ய முடியவில்லை.

எழுந்ததே லேட்டாகத்தான் எழுந்தான்,நன்றாக இருக்கிற தமிழ் வீடியோவை கண் முழித்துப்பார்த்ததன் விளைவு காலையில் எழுந்திருக்க முடியவில்லை, நான்கைகைந்து தடவைகளுக்கும் மேலாக பார்த்துவிட்டான், இன்னும் எத்த னை தடவை பார்ப்பான் என்கிற உத்திரவாதமில்லை,

இதற்கும் முன்னாய் இப்படியெல்லாம் பைத்தியம் பிடித்தது போல் இவ்வளவு தடவை எதையும் பார்த்ததில்லை.இப்பொழுதைக்கு இப்பொழுது அப்படிப்பார் க்க தோணுகிறது.

நண்பர் கூடகேட்டார் அப்படி என்ன அதில் விஷேசம் என கண்ணடித்தவாறே/

அவரது நினைப்பும் கேள்வியும் வேறு,வீடியோ என்றால் வேறு என்பது அவரது அகராதியின் அர்த்தம்,

ஆனால் அதில்லை இது, நீங்கள் நினைக்கிற வீடியோ இல்லை ,இது அர்த்த முள்ள வாழ்வியலை அடைகொண்ட ஒரு குறும் படம்.பார்க்க நன்றாக இருக்கிறது,பார்க்கிறேன்,அப்படிப்பட்ட ஒன்றை பார்ப்பதே முழு விஷேசம் தானே என அவரிடம் பதில் சொன்ன நேரம் சைக்கிள் ஸ்டாண்ட் வாசலில் நின்ற வேப்பமரத்தில் இருந்து பறந்து வந்த ஜோடிப் பறவைகள் இரண்டு காற் றின் திசையில் தங்களின் தீராக்காதலைசொல்லிச் சென்றவாறும் தீற்றலிட் டுக் காண்பித்தவாறுமாய்,,/

மண் பிளந்து துளிர்த்து கிளைத்து இலைகளும் பூவும் பிஞ்சும் காயும் கனியு மாய் நிற்கிற மரத்தின் படர்வும் ஆகுருதியும் தன்னில் அடைகொண்டுள்ள பறவைகளையும் ,தன் நிழல் தேடி வருகிறவர்களை அடையாளம் காட்டுகி றவர்களாயுமாய் ஆகித்தான் தெரிகிறது,

டீக்குடித்தால் தேவலாம் போல் தோனியது,பால்க்கடையில்தான் குடித்தான் வழக்கமாக இல்லாவிட்டாலும் கூட எப்பொழுதாவது போனாலும் கூட இவன் தலையைப்பார்ததும் டீயைப்போட்டு விடுவார் மாஸ்டர்,

அவர் டீ ஆற்றுகிற ஸ்டைலைப்பார்க்கவே ஒரு தனி மனம் வேண்டும், பாதியளவிற்கு அல்லது முழுதாய் நிரம்பித்ததும்புகிற டீ நிரம்பிய டபராவை தலைக்கு மேலாய் தூக்கி ஆற்றுவார்,என்ன மாயமோ அல்லது ஏதாயினும் மந்திரமோ தெரியவில்லை.அவர் ஆற்றி ஊற்றுகிற டீ சரியாக கீழே டீப்பட்ட றையில் இருக்கிற கண்ணாடிக் கிளாஸில் வந்து விழும்.

வரிசையாக ஆர்டர் தப்பாமல் வரிகள் வைத்த கண்ணாடிக் கிளாஸில் டீ வந்து விழுகிற வேகமும் டீ நிறைந்த கிளாசை அவர் எடுத்துக்கொடுக்கிற லாவக மும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.காண கண் இரண்டு போதாது,

விழிகழண்டு விரிந்து ஆச்சரியம் கொண்ட பார்வை அவரது டீ ஆற்றலில் நிலைகுத்தி நிற்கிற போது கேட்கிற கேள்விகள் எதற்கும் பேசுகிற பேச்சு எதற்கும் பதில் சொல்ல மாட்டார்,

சிறிது நேரம் கழித்து அவர் கொடுத்த டீயின் மிடறுகள் நாவின் சுவையறும் புகளில் இளம் சூட்டுடன் பயணித்து உள்ளே இறங்கி முடிந்தவுடன் கேட்ட கேள்விக்கும் பேசிய பேச்சிற்குமாய் பதில் சொல்லுவார்,

அவரதுபதிலிலும் பேச்சிலுமாய் பொதி கொண்ட அடர்வும் நெசவுகொண்ட அர் த்தமுமாய் முடியிட்டுக் காணப்படும்.

அதில் பட்டுத் தெரிகிற அவரது அனுபவமும் வயதும் அவரது பேச்சை ஏனோ தானோ என எடுத்துக்கொள்ளத்தோணாது.

அவரது பேச்சைக் கேட்கவாவது அடிக்கடி அந்தக்கடைக்கு டீக்குடிக்கப் போ கலாம் எனத்தோணுகிறது,

டீயைக்குடித்து விட்டு முகத்தோரமாய் வழிகிற வேர்வையை துடைத்துக் கொண்டு பஸ் நிற்கிற இடம் நோக்கி நகர்கிற போதுதான் பாத்ரூம் போய் விட்டு வந்தான்,

இன்னும் கால் மணி நேரம் வரை இருக்கிறது என்கிறார்கள்.

”பத்துநிமிஷத்துலபஸ்ஸைக்கிளப்பீருவோம்.அப்படியேஉறுமிகிட்டேகொஞ்சம் கொஞ்சமா பஸ்டாண்ட் வாசல்வரை நகட்டுவோம்.அதுகுள்ளா ஒங்க நண்பர் வந்தாஏறிக்கிறட்டும்” ,என்கிற கண்டக்டரின்பேச்சைக் கேட்டு ஏறி அமர்வத ற்கு முன்பாய் ஒரு தடவை போன் பண்ணி கேட்டுக்கொள்வோம் என நினைத் தவனாய் போனை எடுத்தான்,

கைக்கு அடக்கமாய் இல்லாமல் போன் கொஞ்சம் பெரிது காட்டியே இருந்தது, கையில் வைத்தால் கையை அகலவிரித்துபிடித்துக்கொள்ள வேண்டியதிருக் கிறது,

பழைய போன் சரியாக சார்ஜ் நிற்கவில்லை என்பதிலிருந்து ஏகப்பட்ட கம்ப்ளெ ய்ண்ட்/அதனால்புதிதாய் ஒரு போன்வாங்க வேண்டும் என்பது இவனது நீண்ட நாள் ஆசை, காலையில் 100 சதவீதம் சார்ஜ் ஏற்றினால் கூட மாலையில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகிறது,சமயத்தில் மாலை வரை கூட சார்ஜ் நிற்பது அபூர்வமாகிப்போகிறது.

முக்கியமான யாருக்காவது அல்லது இவனைப்போன்ற சாதாரணர்களுக்கு போன் பண்ணவேண்டும் என நினைக்கிற போதும், அல்லது வீட்டிற்கு பண்ண லாம் என நினைக்கிற போது சுத்தமாய் சார்ஜ் நிற்காமல் இல்லாமல் போய் விட்டிருக்கும்,

இவனைபொறுத்த அளவில் முதல் முக்கியமானவர்கள் லிஸ்ட்டில் இருப்பது இவனது குடும்பமே/

அடுத்தது அடுத்தடுத்தான அடுக்கில் இருப்பவர்கள் முக்கியம் காட்டி இருப்ப வர்களாய் காட்சிப்படுகிறார்கள்,

அது தவிர்த்து இவனைப்போன்ற சாதாரணர்களுக்கென்று ஒரு தனி அடுக்கு வைத்திருக்கிறான்
அந்த அடுக்கு பிரச்சனையில்லாத அடுக்கும் கூட/

போன்பண்ணினால்எடுத்துப்பேசுவார்கள்.இல்லையென்றால்விட்டுவிடுவார்கள். ஆனால் முக்கியமானவர்கள் அப்படியில்லை,ஏன் போன் செய்ய மறந்தாய் என சண்டைக்கு நிற்பார்கள்.

பேச்சில் முளைத்து விடுகிற சண்டை சமயத்தில் கொம்பு முளைத்து கடை வாயோரம் நீண்டு தெரியும் பற்களைக்காட்டி கோரமாய் முறைக்கும்,அது சமயம் கொஞ்சம் சங்கடமாய்க்கூட ஆகிப்போகும்.

அலுவலகம் முடிந்து பேருந்தின் ஜன்னலோர் சீட்டில் அமர்ந்தவனாய் சட்டைப் பையில் கைவிட்டு போனை எடுத்து நம்பர் அழுத்தப்போகும் போது சார்ஜ் இல்லை என்பது தெரியவரும்,அந்நேரம் வருகிற எரிச்சலுக்கும் கோபத் திற்கும் அளவேயில்லை.அல்லது வீட்டிற்கு பண்ணலாம் என நினைக்கிற போது சுத்தமாய் சார்ஜ் நிற்காமல் இல்லாமல் போய் விட்டிருக்கும்,

அலுவலகத்திற்கு கையோடு எடுத்துப்போகும் செல்போன் சார்ஜராலும் பிர யோஜனமில்லைஅலுவலக வேலை மும்பரத்தில் மறந்து போவான், போனு க்கு சார்ஜ் போட./அல்லது வேலை ,வேலை,வேலை,,,என உடல் பொருள் ஆவி அத்தனையையும் அலுலகத்திற்கு ஒப்புக்கொடுத்து விடுவான், வேலை நேரங்களில் செய்கிற வேலைக்கு ஏதாவது தடங்கல் வந்தாலோ இல்லை அது நடக்க தடைபடுத்துகிற முயற்சியை யாராவது கைக்கொண்டாலோபடக்கென சங்கடம் வந்து விடுகிறது,

வெளிக்காட்ட முடியா சங்கடம் விலையேதுமில்லா சொல்லப்படாத சொல் போல் ஆகித்தான் போகிறது. அதற்காக அதிகமாய் சங்கடமும் பட்டுக்கொள் வதில்லை.

அதற்கெல்லாம்இப்பொழுதுவயதுஇல்லை,உடலும்இல்லை,அதுஒருபிரச்சனை யாயும் இதுநாள் வரை இவனுக்குத்தோன்றியதில்லை,ஒருங்கிணந்து விட்ட உடலும் மனமும் ஒன்றினைந்து கைகோர்க்கிற போது வயதாவது உடல் பிரச்சனையாவது,விட்றா,விட்றா,விட்றா,,,,,,,டேய்எனஇறகுக்கட்டிக்கொள்வான்,

இதுநாள்வரை தெரியாத பாரமா இனி வந்து தெரிந்து விடப்போகிறது என்கிற மன ஓசை எழுப்பி ஓடிக்கொண்டிருக்கிறான்,

அந்தஓட்டத்தின் மயக்கத்திலும் வேகத்திலுமாய் செல்போனுக்கு சார்ஜ் போடு வது மறந்து விடுகிறதுதான்,

இது போக இணைய தளத்திற்குள்ளாய் ஏதாவது பார்த்துக்கொண்டிருக்கும் போது நெட் போய் விடுகிறது,இல்லையானால் பார்த்துக்கோண்டிருக்கும் பொ ழுதேமொத்த போனும் ஆப் ஆகி வெளியில் வந்து விடுகிறது.

அதற்கு ஆற்ற மாட்டாமல் இருந்த ஒரு நாளில் சின்ன மகள் ”பேசாம இருங் கப்பா,நானும் அண்ணனுமா சேந்து ஒங்களுக்கு ஆன் லைன்ல நல்ல போனா வாங்கித்தர்றோம்,கவலைய விடுங்க” என்றாள்.

அவள் எப்போ போன் வாங்கித்தந்து இவன் எப்போ பேசுவது,அது நாள் வரை இணையம்மற்றும் இதர இதரவானவைகளைப் பார்ப்பது என்கிறஎண்ணக் கிட க்கையின் அளவு என்னாவது என்பது தெரியவில்லை.

கண்டக்டர் சொன்னபடியே நண்பர் பஸ் புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது வந்து விட்டார்,

இவனுக்குக்கூடக்கொஞ்சம் பதட்டமே/என்ன இது பஸ் கிளம்பப்போகிற நேர மாகிறது,இன்னும் காணோம் என,ஆனால் நண்பர் சொன்னார் பதட்டம் கொள் ளாமல்/

”அதெல்லாம் கிளம்பாது என்னைவிட்டு விட்டு,என்னை மட்டுமில்ல,என் போல்வாடிக்கையாக வர்ற எல்லாரையும் அவுங்களுக்குத் தெரியும்,அவுங்கள விட்டுட்டு போகாது சாமான்யமா/சும்மா பஸ் ஸ்டாண்டு வாசல் வரை பஸ்ஸை உருட்டிக்கிட்டும்,உரும வச்சிக்கிட்டும் உருட்டிக்கிட்டிருப்பாங்க, ஒவ்வொருஉறுமலுக்கும்,ஒவ்வொருஉருட்டலுக்கும்ஒவ்வொரு ஆளு எனக்

கணக்கு வச்சி கடைசி நேர அவசரத்துல பயணிகள ஏத்திக்கிட்டு,போவாங்க அதில் ஒருவனா நானும் ஆயிப்போவேன் சமயத்துல/

இவன் காத்திருந்து ஏறும் வரை நண்பர் வரவில்லை,

“அதான் சொன்னேனே,என்னையப்போலானவுங்களை விட்டுட்டு பஸ் போ காது” என உறுமியவாறு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் வந்து ஏறினார்,

அவரைப்பார்த்து சிரித்த கண்டக்டர் இவனையும் பார்த்து சிரித்தவராய் ”சார், நீங்களும் சாரப்போல வாடிக்கையா வந்தீங்கன்னா ஒங்களுக்காக பஸ்ச உருட்டிக்கிட்டும் உறுமிக்கிட்டும் இருப்போம்,நீங்க வந்து ஏறிக்கிற வேண்டி யதுதான்,என்றார்.

இடதும்,வலதும் பத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளின் வரிசைகள் இருப்புகாட்டி அம்ர்ந்திருக்க அவைகளுக்குப்பின்னால் இடது ஓரத்தின் பின்புறமாய் நின்று கொண்ட நண்பர் ஆகா ,இவனையும் அருகில் கூப்பிட்டு நிற்குமாறுபணித்தார்,

சார்,நான்கொஞ்சம் இப்பிடியே நின்னுக்கிறேனே என்றவனை அப்படியெல்லா ம் நிற்காதீர்கள்,அது ஆபத்து படியோரமாய் நிற்பதும் காத்து வாங்கியவாறும் கொஞ்சம் கெத்துக்காண்பித்தவாறுமாய் நின்று கொண்டு போவதும் கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கும்,ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலை யில் ஏன் பயணிக்க வேண்டும் என்பார்.

எல்லாரையும் போல நாமளும் டிக்கெட் எடுத்துருக்கமில்ல, உக்காரவேணா மா, வாங்க யெடம் கெடைச்சா ஒக்காருற வழியப்பாப்போம் என்றார்.

அவரது சொல்லிலும் உரைக்கிற வாஸ்தவம் இல்லாமல் இல்லை.ஆனால் வாஸ்தவங்களை மட்டுமே கணக்கில் கொண்டுபயணிக்கிற விதம் எவ்வளவு தூரம் சாத்தியபடும் எனத் தெரியவில்லை.

உடகாருவதல்ல,இடம் பிடிப்பதே அவரது நோக்கமாய் இருந்தது,

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தெல்லாம் கிளம்பாது என்னைவிட்டு விட்டு,என்னை மட்டுமில்ல,என் போல்வாடிக்கையாக வர்ற எல்லாரையும் அவுங்களுக்குத் தெரியும்,அவுங்கள விட்டுட்டு போகாது சாமான்யமா/சும்மா பஸ் ஸ்டாண்டு வாசல் வரை பஸ்ஸை உருட்டிக்கிட்டும்,உரும வச்சிக்கிட்டும் உருட்டிக்கிட்டிருப்பாங்க, ஒவ்வொருஉறுமலுக்கும்,ஒவ்வொருஉருட்டலுக்கும்ஒவ்வொரு ஆளு எனக்

கணக்கு வச்சி கடைசி நேர அவசரத்துல பயணிகள ஏத்திக்கிட்டு,போவாங்க அதில் ஒருவனா நானும் ஆயிப்போவேன் சமயத்துல/

உண்மைதான்
நானும் கவனித்திருக்கிறேன்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகள் அப்படியே கண்முன் தெரிந்தன தோழர்...

vimalanperali said...

நம் அன்றாடங்கள்! அன்பும் நன்றியும்!

vimalanperali said...

நன்றியும் பிரியமும்!