6 Apr 2019

மிதமிகு,,,,

சற்றே தாமதமாகித்தான் போனது மன்னிக்கவும் அன்பே,

மலர ஆரம்பிக்கிற மொட்டு இதழ் விரிக்க தாமதமானது போல/

இந்நேரம்நீ எந்த நிலையில் இருப்பாய் ,என்ன மனோ நிலை கொண்டிருப்பாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி/

மிகவும் பல்லைக்கடிக்காதே,மிகவும் கோபம் கொள்ளாதே,மிகவும் இறுக்க மாகிப் போகாதே,,,,நாம் கோபம் கொள்ள வேண்டிய இடமும்,கோபம் கொள்ள வேண்டிய நேரமும் வேறு,

கட்டிக்காத்து வைக்க வேண்டிய கோபத்தை தேவையற்று சிதறி விட்டுவிடு வாயானால் பின் ஒன்று சேர்த்து கூட்டி அள்ள கோபம் இருக்காது, அதைக் காணவும்முடியாது,கண்ணாமூச்சிகாட்டியவறாய் ஓடி ஒளிந்து கொள்ளும்.

மிகவும் இறுகியும் போகாதே,பிசைந்து நெகிழ்த்தபட மண்ணும் நெகிழ்ந்து பரவியிருக்கும் நிலமும் இறுகிப் போனதைப் போலவுமாய்/ பின் தேவையான உருவத்திற்கு மாறிக்கொள்ள முடியாது.

பின் உடலின் சகலமும் சிறியதிலிருந்து பெரியது வரை ஏதாவது ஒரு சின்ன பாதிப்பில் ஆரம்பித்து நிற்கும்.இப்பொழுது உனக்கு மாதந்தோறுமான மாத விடாய் பிரச்சனை இருப்பதாய்ச்சொன்னாய்,

வீட்டிலும் உனதுஉறவுக்காரர்கள், மற்றும் தோழிகள் யாரிடமும் சொல்லவும் பகிரவும் மறுத்து என்னிடம் மட்டுமாய் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்கி றாய் அடிக்கடி,

மருத்துவரிடம் போன ஒரு மாலை கனிந்த இரவு வேளையில்”என்ன உடலு க்கு”,,? எனக்கேட்டு விட்டு சற்றே காத்திருங்கள் இன்னும் நான்கைந்து பேர் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு வைத்தியம் பார்த்து அனுப்பி விட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்றார்.

நாம் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வரவும் காத்திருந்தவர்கள் வைத்தியம் எடுத்துக்கொள்ளவுமாய் குறைந்தது அரை மணியிலிருந்து ஒரு மணி நேரமாவது ஆகலாம்,

சூடு கொண்ட சூரியன் மெதுமெதுவாய் தன் சூடு ஆற்றி மாலை கனிந்து இரவு வரப்போகிற நேரமாய்ப்பார்த்து யார் அனுமதியும் இல்லாமல் மேகக் கூட்ட ங்களுக்குள்ளாய் தன்னை உள் அடைத்துக்கொள்கிறதைப்போல இது வரை காத்திருந்தவர்கள்ஒவ்வொருவராய்போய்வருவதற்குள் நாம் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.என் அன்பே/என உன்னிடம் கேட்ட போது ”மதியம் சாப்பிட்ட சாப்பாடே இன்னும் வயிறு தாண்டி நிற்கிறது. இந் நிலையில் வேண்டாம்” எனச்சொன்ன உன்னிடம் ’சாப்பிட வேண்டும் அவசி யம் ,தேவையிருந்த போதும் கூட ஏதோ ஒரு மனப் பிடிவாதத்தினால் மதியம் சாப் பிடவில்லை நான்.அது இப்பொழுது சிறுகுடல் தாண்டி பெங்குடல் வரை பயணித்து வந்து அங்கே முகாமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வாப்போகலாம்கைகோர்த்தும் மனம் கோர்த்துமாய்/’

’மண்கீறி முளைவிட்ட தளிர் இலைவிட்டு கிளை பரப்பி தன் ஆகுருதி காட்டு கிற பெரும் மரம் போல் விழுதிறங்கி நிற்கிற பசி வயிற்றில் அழுந்தக் காலூன்றி நிற்கிறது.ஆகவே வா அன்பே வா என கூட்டிச்செல்கிறேன் ஹோட் டலுக்கு,என்கிற சொல்லின் கைபிடித்துச்செல்கிறோம்./

பார்க்க மிகவும் பெரிதாக இல்லாமலும், மிகவும் சிறியதாக இல்லாமலும் நடுவாந்திரமாய் காட்சிகொண்டு தெரிந்த ஹோட்டலில் பெண்கள் அமர்ந்து சாப்பிட சரியாக இடம் இல்லாமல் போனது வருத்தமாய் இருந்தது,

இருந்த நான்கைந்து டேபிள்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆண்க ளே சிதறலாய் அமர்ந்திருந்தார்கள்.

ஹோட்டலில் என இல்லை அனைத்து இடங்களிலும் இது போலாய் இருப்ப தாய்த்தான் அறிகிறேன்.

”இவ்வளவு வளர்ந்த நகரத்தில் ஆங்காங்கே ஆண்களுக்கென சிறு நீர்கழிக்க ஏற்பாடு இருப்பது போல் பெண்களுக்கும் இல்லையே,சிறு நீர் கழிக்க மட்டு மா, ஆத்திர அவசரத்திற்கு டீக்குடிக்க ஒரு கடை,நின்று இளைப்பாற ஒரு நிழல்,பேசி அளாவளாவிக்கொள்ள ஒரு பார்க் இப்படி ஏதாவது ஒன்று இல் லை என்பதுதானே முகத்தில் அரையும் உண்மையாக இருக்கிறது, இல்லை யா,

”இது போக ஆயிரங்காலிட்ட நாற்றாங் காலாய் பெண்மக்களுடன் பிறந்திருந் தாலும்,ஒரு பெண்ணுக்கு தந்தையாக இருந்தபோதும் கூட இது போலான விஷயத்தில் பொது வெளியில் நம் நடத்தை நான்,எனது என்கிற அளவிலாய் மட்டுமே சுருக்கம் கொண்டு நின்று போகிறதே தவிர்த்து நாம்,நமது என்கிற தாய் இன்னும் பரிணாமம் கொள்ளவில்லையே,,,,என்கிற சிந்தனையுடன் வேண்டாம்வயிற்றில் இடம் இல்லை எனச்சொன்ன உன்னையும் வற்புறுத்தி கொஞ்சமாய்சாப்பிட வைத்து கூப்பிட்டுக்கொண்டுவருகிறேன் ஆஸ்பத்திரி க்கு,

அதுவரை பொறுமை கொண்டு அமர்ந்திருந்த டாக்டர் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்எனச்சொன்னவராய்உன்னிடம்நோய்என்னஎனக்கேட்டுவிட்டு அதற்கான மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்து விட்டு இருவரையும் வெளியே அனுப்பிய பிறகு கைகோர்த்துக்கொண்டு வருகிறோம் அன்பும் காதலுமாய்,,,/

4 comments:

Yarlpavanan said...

அருமையான வெளியீடு
பாராட்டுகள்

vimalanperali said...

அன்பும் ப்ரியமுமாய்,,/

vimalanperali said...

அன்பும் பிரியமுமாய்,,,

vimalanperali said...

அன்பும் நன்றியும்,,/