13 Apr 2019

மலர்வின் நிமித்தம் கொண்டு,,,,


அவனது வயது என்னவென சரியாகத்தெரியாவிட்டாலும் கூடஇவன் வயதை விட இருபது வயதாவது குறையாக இருக்கலாம்,

அலுவலக நடையில் நின்றிருந்த வேளை எதிர் சாரியில் கடை போட்டிருந்த சாத்துக்குடி ஜீஸ்க்கடை கண்ணில் படுகிறது தற்செயலாய்,,,,/

கண்ணில் பட்ட கடை சட்டென மனதில் அடை கொண்டு யார் அனுமதியும் இல்லாமல் இவனுள் திறவாகி ஆனந்தம் கொள்ள வைக்கிறதாய்/

மனம் பூத்த ஆனந்தம் மொட்டு விரித்த பூவாகி இலைதலை உதிர்த்து கிளை உச்சி கொண்ட மலர்வில் தன்னை இருத்திக்கொண்டு அடையாளம் காட்டுவ தாக,,,/

காட்டிய அடையாளங்களின் மிச்ச சொச்சங்கள் முழு உரு கொண்டு நகர ஆரம்பித்த வேளை இவன் கைபிடித்துகூட்டிக்கொண்டு போவதாய்,,,,/

ஆமாடா ,இது ஒரு பெரிய இதுன்னு இத ஒரு பேச்சா பேசிக்கிட்டுதிரியிற பைத்தியம் புடிச்ச மாதிரி,,,,

வெயில் அடிக்க வேண்டிய நேரத்துல வெயில் அடிக்கிறதுதான்,மழை பெய்ய வேண்டிய நேரத்துல மழை பெய்யிறதுதான்,காத்து அடிக்க வேண்டிய நேரத் துல காத்து அடிக்கிறதுதான்,பனி பெய்ய வேண்டிய நேரத்துல பனி பெய்யிற துதான்,எல்லாத்தையும் ஏத்துக்கிறத்தான ஒடம்பும் ,மனசும்/

தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாப்புல நாமளும் மாறித்தான் நிக்கணும், இல் லைன்னா எப்பிடி சரியா இருக்க முடியும் சொல்லு,

வெயிலக்கிற நேரம் பனிக்காகவும்,பனியடிக்கிற நேரம் வெயிலுக்காகவும் ஏங் கீட்டு நின்னா எப்பிடி சரியா இருக்கும்,?

தன் காலத்துக்கு ஏத்தாப்புல ஜனங்க ஒடம்ப வைச்சிக்கிறணுமுங்குறதுக்காக த்தான் அந்தந்த சீஸன்ல பழங்க ,காய்கறி வெளையிறதுலயிருந்து, சாப்புடுற து வரைக்கும் மத்த மத்த எல்லாத்தையும் போட்டு காலம் தனக்குள்ள அடக்கி வச்சிருக்கு,

அத விட்டுட்டு ராத்திரி பண்ணிரெண்டு மணிக்கு ஹோட்டல்ல போயி புரோ ட்டாவ வாங்கி அடுக்கி வச்சிக்கிட்டு அதுகூட ஆட்டுக்கறி ,கோழிக்கறின்னு வாங்கிச் சாப்புடும் போது ஒடம்பு என்னாத்துக்காகும்,,,,?

தாங்குற வரைக்கும் தாங்கீட்டு அதுக்கப்புறம் எதுத்துத்தான் அடிக்கும்,

இயற்கைக்கு எதிரா பண்ணுற எதுவும் அப்பிடித்தானே என்கிற நண்பனை பார்க்கிற போது கொஞ்சம் பெருமிதமாய்த்தான் இருந்தது,

அவன் அப்படித்தான் எப்பவுமே,/சும்மா இருக்க முடியாது,அவனால், பேசுகிற பேச்சு,செய்கிற செய்கை,பார்க்கிறபார்வை மற்றமற்ற எல்லாமே அப்படித்தான் இருக்கும்,

அவனைப்போன்றவர்களுக்கும்யாதர்த்தம்கலந்தவர்களுக்கும்அவனைமிகவும் பிடிக்கும்,

மற்றவர்களுக்கு பிடிக்காது அது பற்றி அவன் கவலைகொண்டதில்லை, முகத் திற்குநேராக பேசாமல் முதுகிற்கு பின்னால் பேசுபவர்களை அவன் கணக்கில் கொண்டதில்லை,

அவுங்களுக்குத்தெரிஞ்சதுஅதுதான்,எனகடந்துவிடுவான்,அதுவேஅவன்அவர்க ளது முகத்தில் அழுந்தக்காறி உழிழ்ந்ததற்கு சமானமாகிப்படும் அப்படிக் கடக் கிற கணத்தில்/

அலுவலக நடையின் படியோரமாய் நின்று கொண்டிருந்தவன் இடதுபக்கமாய் நின்றிருந்த வேப்பமரத்தைப் பார்க்கிறான்,

அதென்ன இடது பக்கம் ,அங்குதானே வளர்ந்து நிற்கிறது அடர்வு கொண்டும், நல்லதாயும், ,பின் அதைச்சொல்லாமல் வேறெதைச்சொல்ல,,,?

அதற்கு எப்படியும் ஐம்பது வயதாவது இருக்கலாம்.வளர்ச்சியின் அடர்வு மரத் தின் பருமனில் தெரிந்தது,

நிலம் கொண்ட மரங்கள் இப்படி ஏதாகிலும் ஓரம் சாரமாய் இருந்தால் மட்டு மே தப்பிப்பிழைக்கும் போலும்,அதன்றி சாலையில் ஓரமாய் வீட்டின் அருகே நின்றிருந்தால் வீடு கட்டப்போகிறேன் என்றும்,சாலை போடுகிறேன் என்றும் மரத்தை வெட்டி விடுகிறார்கள்தான்.

மரங்களற்ற சாலை ஓரங்களும் ,வெட்ட வெளிகளும் இங்கு நிறைந்து தெரிகி றதுதான்.

இலைகளைஉதிர்த்தமரம்இப்பொழுதுதான் தளிர்த்திருக்கும் போலும். பச்சைப் பசேல் என நிறம் காட்டி நின்றது.

தன்னிலிருந்து உதிர்த்த இலைகளையும் பூக்களையும் பிஞ்சுகளையும் திரும் பவுமாய் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது போலாய்,,/

பழுத்து இளம் மஞ்சள் நிறம் காட்டிய இலைகளும்,துளிர்த்து இளம் பச்சை காட்டி நின்ற இலைகளும் போட்டி போட்டுக்கொண்டு மரம் பாவி நிற்க,, பாவி நின்ற மரத்தில் பூத்துத்தெரிந்த வேப்பம் பூக்களும்,அதன் ஓரம் படர்ந்திருந்த கிளைகளில் சில காய்ந்தும் பட்டுப்போயுமாயும் தெரிந்தது,

பட்டுப்போன கிளைகளின் காய்வு தாண்டி பூக்களின் மலர்வு தெரிந்தது,

பூக்களது மலர்வின் கைபிடித்தும் வாசம் கொண்டுமாய் அங்கு கூடு கொண்ட பறவைகள் இரண்டு பறந்து போனது படபடத்து.

மனம் நிறைந்த காதல் கொண்ட பறவைகளின் தன் நிறைவு கொண்ட பறத்த லாய்க் கூட இருக்கலாம் அது அல்லது கூடடைந்து முட்டையிட்டு குஞ்சு பொ றிக்க வந்திருக்கலாம்.

மரத்திலிந்து உதிர்ந்த பூக்களில் இரண்டு இவனது பாதத்தின் அருகில் வந்து விழுந்தது,அதில் ஒன்று செருப்பு உரசிக்கிடந்த போது கொஞ்சம் மனம் நடுக்க முற்றவனாய் சட்டென தள்ளி நிற்கிறான்,

வேப்பம்பூக்களை மிதிப்பது பாவம் என்கிறார்கள்,என்னைக்கேட்டால் எந்தப் பூவையும்மிதிப்பது பாவமே என நண்பனிடம் சொன்னான்.செருப்பின் அருகில் கிடந்த பூவை எடுத்து உள்ளங்கையில் வைத்து மோந்து பார்க்கிறான்,

பூ மணத்தது,ஒற்றைப்பூவின் வாசமே இப்படி இருக்கிறதென்றால் மொத்த பூவும் கையிலிந்தால் எப்படி இருக்கும்,,?

இதற்கு மரத்தின் மேல் ஏறி குடிப்போகத்தான் வேண்டும்,அப்படிப்போனால் அங்கு கூடடைந்திருக்கும் காதல் கொண்ட பறவைகளுகளும்,முட்டையிட்டு குஞ்சுபொறித்தஇளம்பறவைகளும்கொஞ்சம்எரிச்சல்கொள்ளக்கூடும்,ஆகவே வேண்டாம் எனமுடிவெடுத்தவனாய்உள்ளங்கையிலிருக்கிற ஒற்றைப் பூவை மூடியவனாய் சாத்துக்குடி ஜீஸ் கடையைப்பார்க்கிறான்,

பெரிய அளவிலாய் அலங்காரம் பண்ணி இத்தனைக்கு இத்தனை என்கிற அள விற்குள்ளாய் அடைகொண்டு விடாமல் வெட்ட வெளிக்காற்றில் சின்னதான ஒருதள்ளுவண்டியில்ஒருபக்கம்ஜீஸ்பிழிகிறமிக்ஸிபோன்றஇயந்திரத்தையும் ஒருபக்கமாய் குவித்துவைக்கப்பட்டிருக்கிற சாத்துக்குடிப்பழங்களையும் கொ ண்டு காட்சிப்பட்டது,

விழி கழண்டு உருண்டோடிய பார்வை ஜீஸ் கடையையும் ஜீஸ் பிழிந்து கொ ண்டிருந்தஇளைஞனையும்கண்ணாமூச்சிகாட்டிதொட்டுவிட்டுவந்ததுஅவனது அனுமதி இல்லாமல்.

வெளிக்காற்று இதமாய் இருந்தது,வெப்பத்தை தன்னுள்ளாய் அடைகொண்ட கட்டிடங்கள் சிறிது நேரத்திற்கப்புறமாய் மனிதர்களை உள்ளே இருக்க விடுவ தில்லை,இப்படித்தான் காற்றின் குளுகுளுப்பு வேண்டி வெளித்தள்ளி விடுகிற தாய்,,,,,/

முகம் தொட்ட காற்று உடல் பட்டு சுவாசத்தின் உள்ளின் உள்ளாய் போய் வருகிறநேரம் இதம்கொள்கிற மனதுஇறக்கை கட்டி மேல் நோக்கி பறப்பதாய் ஆகிப்போகிறது,

உண்மையிலுமேநல்ல காற்று.சாலையில் விரைகிற கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வெளிவிடுகிற புகையையும் தூசியையும் மாசையும் ஏற்றுக்கொள்கிற காற்று இவன் போலானவரிகளின் மீது வஞ்சகமற்று மோதி வீசி இதம் காட்டுகிற பொழுதுகள் இனிமை கொண்டதாகவும் மனம் நிறை ந்த இதம் காட்டுவதாகவும்/

அப்படியேபோய் அரைக்கண்மாய் தண்ணீரில்போய் விழுந்துவிடலாம் போலி ருக்கிறது, உடலே வெம்பிப்போயும் வியர்வை வாசனை கொண்டுமாயும்/

உழைப்பின் கணம் கொண்ட வியர்வைக்கு வாசம் உண்டுதான் ஆனால் இது போலாய் இறுக்கமாய் பேண்ட், சட்டை அணிந்து கொண்டிருக்கிற அலுவலக வியர்வைக்கு என்ன வாசனை எனத்தெரியவில்லை.

இப்பொழுதான்நண்பனிடம் சொல்லிக்கொண்டிந்தான்,அதென்ன நண்பா வியர் வைக்கு வாசனை எனக்கேட்ட போது அவன் சொல்கிறான்,

ஒற்றை உருபாக்குபவன் சிந்துகிற வியர்வைக்கும்,கட்டமைக்கபட்ட வேலை களை செய்கிறவன் சிந்துகிற வியர்வைக்கும் இங்கு அடிப்படையிலேயே வித்தியாசம் நிறைய இருக்கிறதுதான்,அந்த வித்தியாசத்திக்கு விலை கூட உண்டு என்றான் நண்பன்,என்ன உருபாக்குபவன் கைகட்டு நிற்பவனாயும், கட்டமைக்கப்பட்டதைசெய்கிறவன் கை வீசி நடப்பனாயும் ஆகித்தெரிகிறான், அதுதான் நம்மின் துரதிஷ்டம் என்பான் நண்பன் மேலுமாய்/

ஒழைச்சிச்சாப்புடுறது ஒரு கோடிப்பேருன்னா ஒக்காந்து சாப்புடுறது ஒன்பது கோடிப்பேறாகிப்போன துரதிஷ்டம் நம்மகிட்ட இருக்குற வரைக்கும் நாம் இப் பிடித்தான் இருப்போம்,பாத்துக்க என்பான் நண்பன் மேலும்.

சமீபமாகத்தான் இப்படியெல்லாம் பார்க்க முடிகிறது,பெரியதான நகரங்களின் சாலையோரங்களிலும் சிறியதான ஊர்களின் பரப்பபரப்பான இடங்களிலுமாய் கடை போட்டிருக்கிறார்கள்,

இருக்கிறார்கள்என்னஇருக்கிறார்கள்,இவன்பார்க்கிறபொழுதெல்லாம் சாத்துக் குடி பழத்தின் தோலை சீவி அதை அப்படியே முழுதாக பெரியதாய் மிக்ஸி போல் காணப்படுகிற பாத்திரத்தில் போட்டு அரைத்து பிழிந்து கொண்டிருக்கி றார்கள்,

இவ்வளவு வேகமாகவும் இவ்வளவு சடுதியிலுமாய் ஒரு மனிதனால் வேலை பார்க்கமுடியுமாஎன்கிறஆச்சரியம்அவர்கள்போன்றோர்களைப்பார்க்கிறபோது ஏற்படாமல் இல்லை,

அவனது வயதில் இவன் இப்படியெல்லாம் இருந்திருப்பானா என்பது ஆச்சரி யமே,,,,,/

வாழ்வின் தேவைகள் மென்னியைப்பிடித்து அழுத்த அழுத்த தேசத்தின் ஒரு பக்கமிருந்து இந்தப்பக்கம் இழைக்க வந்தவர்களாய் காட்சிப்படுகிறவர்களின் இந்த இளைனும் ஒருவனாய் இவன் கண்ணுக்குத்தெரிய ஒரு நாள் இல்லா விட்டால் ஒரு நாள் போய் கண்டிப்பாக சாத்துக்குடி ஜீஸ் குடிக்க வேண்டும். ஜீஸின் ருசிக்காக இல்லாவிட்டாலும் கூட அந்தபையனுக்காய் குடிக்க வேண் டும்,

நன்றாக இருந்தால் இருபத்தைந்து வயதிற்குள்ளாய் இருக்கலாம், சாதாரண மாய் ஒரு பேண்ட்,அப்புராணியாய் ஒரு சட்டை என அணிந்திருந்தவனுக்கு சாப்பாடு எங்கு,,,?,அவனது தங்குமிடம் எங்கே,,,,?அவனுக்கென ஓய்வு நேரம் உண்டா,,,,?இதுஅவனதுசொந்தக்கடையா,இல்லை யாரிடமாவது ஒரு முதலா ளியிடம்வேலைசெய்கிறானா,,,?அவன்பசிக்கிறவேளைக்குசாப்பிடமுடியுமா, தாகமெடுக்கிறவேளைக்கு தண்ணீர் அருத்த முடியுமா,,,,?முட்டிக் கொண்டு வருகிற வேளை ஒண்ணுக்கு போய் விட முடியுமா,,?ஆசைப்பட்டுக்கொள்கிற நேரமாய் ஒரு டீ சாப்பிட்டு விட முடியுமா,டீயுடன் சேர்த்து ஒரு வடை என் பது கிட்டத்தட்ட டீக்குடிப்பவர் எல்லோருக்கும் சாத்தியப்படுவது போல அவனுக்குசாத்தியப்படுமா,,,,,?அவனைப்பார்க்கிறபோதும் சரி,அவனை போலு ள்ளவர்களைவேறு எங்காவது காண நேர்கிற கணங்களிலும் சரி.மெகா சைஸ் கேள்வியாகவே இருக்கிறது இது/

மனம் முளைத்துக்கிளைக்கிற கேள்விகள் கனம் கொண்டு காட்சி பூதமாய் உள்ளின் உள்ளில் தைக்கிற நேரமாய் அப்படியே இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான்.

இலக்கற்றுச் செல்கிற திசையில் காற்றின் கைபிடித்தவனாய் அங்குமிங்கு மாய் சுற்றித்திரிந்துவிட்டு கடைசியாய் சாத்துக்குடி ஜீஸ் விற்பவர்கள் இருக் கிற இடமாய் பார்த்து அடை கொள்வான்.

சென்றவாரத்தின் இறுதி நாளான மதியத்தில் பஜாரில் வெங்காயம் வாங்கிக் கொண்டிருந்தவன்வாங்கிமுடித்துவிட்டு அப்படியேநின்றுவிட்டான் சமைந்து,/

மிச்சம்கொடுக்ககூப்பிட்டகடைக்காரர் கல்லாவிலிருந்து எழுந்து வந்து கடைப் பையனிடம் கொடுத்திருந்த மிச்சப்பணத்தை வாங்கியவராய் ”என்ன சார் அப்பிடியே ஒறைஞ்சி நின்னுட்டீங்க,,,சாத்துக்குடி ஜீஸ் கடையப் பாத்துக்கிட்டு இருக்கீங்களா,நல்ல யேவாரம் சார் அவிங்களுக்கு, ஊருக்குள்ள எங்க பாத்தா லும்அவிங்களாத்தான் இருக்காங்க சார்.டவுனுக்குள்ள,அவுட்டர்ல,போற வர்ற வழியில இப்படியா பரவலா கண்ணுக்குத்தட்டுப் படுறாங்க சார்,

“முந்தா நாள் கூட மதுரைக்கிப்போயி வரும்போதுல பஸ்ஸீல இருந்து யெற ங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்துக்கிட்டிருந்தேன்.ஒரே வெயில் வேறையா, பாத்தேன் அந்த நேரம் குளிர்ச்சியா ஏதாவது குடிச்சா நல்லாயிருக்கும் போல தோணுச்சி/

“நான் நடந்து வந்த ரோட்டுல மருந்துக்குக்கூட ஒரு கடையும் இல்ல,கொஞ்ச தூரம் தள்ளி இந்த சாத்துக்குடி ஜீஸ்க்கடைக்காரந்தான் நின்னான், எப்பிடியி ருக்குமோங்குற சந்தேகத்துலதான் குடிச்சேன் மொதல்ல, ஆன சும்மா சொ ல்லக் கூடாது,நல்லாவே இருந்துச்சி,சார்,இப்பக்கூட தோணுச்சின்னா அப்பிடி யே வண்டிய எடுத்துட்டு போயி அவன்கிட்ட ஒரு சாத்துக்குடி ஜீஸ் குடிச் சிட்டு வந்துருவேன்,,,,”என்றவரை ஏறிட்டுவிட்டும்,ஜீஸ்க்கடை போட்டிருந்த வருக்கு மானசீகமான சொட்டு ஒன்று வைத்துவிட்டும் நகர்கிறான் அங்கி ருந்து/

இவன் போன பின்புமாய் இவனது முதுகுக்குப்பின்னாடியாய் கேட்ட பேச்சிற்கு ஏதும் அர்த்தமிருந்திருக்கவில்லை என சொல்லிவிடமுடியாதுதான்,

“சார் ஒரு விஷயத்தப்பாத்து அப்பிடியே அமுங்கீறக்கூடாது,ஒரு விஷயத்தப் பத்தினநம்மளோடஅறிவுக்கும்,ஒரு விஷயத்துல நம்மளோட அறிவ யெழந்து போறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு சார்,நீங்க யெழந்துபோறமனுசன் கெடையாது, என்கிறதுதான் முதுகுக்குப்பின்னால் இருந்ததாய் இருந்தது,

இப்பொழுது டீ சாப்பிடப்போகலாம் என நினைத்திருந்தான், ஆனால் ஜீஸ் சாப்பிடலாம் போலத் தோணுகிறது.

ஐந்து நிமிடம் காத்திருந்து ரோட்டைக்கடந்தவன் நேராக ஜீஸ்க்கடையில் போய் நிற்கிறான் ஜீஸிற்கு சொல்லிவிட்டு/

கடையின் ஓரமாயும் ,கடையைச்சுற்றியும் உரிக்கபட்டுக்கிடந்த சாத்துக்குடிப் பழத்தோல்களின் துண்டுகளில் சிலவற்ற இவன் மிதித்துக்கொண்டுதான் நிற்க வேண்டியதிருக்கிறது என தோணிய நேரத்தில் வலது காலால் தோல்களை தள்ளிவிடும் போது சின்னதாய் இருந்த தோல் ஒன்றில் ஒட்டிக்கொண்டிருந்த சாத்துக்குடிப்பழத்தின் சின்னத்துண்டு ஒட்டிக்கிடந்தது.

ஒட்டிக்கிடந்த துண்டிலிருந்து பறந்த ஈக்களில் இரண்டு இவன் முகத்தை உரசிச் செல்வதாய், கூடவே மனதையும்,,,/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

இதமாய் இருந்தது தோழர்...

vimalanperali said...

மனம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

vimalanperali said...

அன்பும் நன்றியும்!