20 Apr 2019

வழிக்கணக்காய்,,,,


வணக்கம் நண்பரே நலம்தானே,,,,?

நலமே வந்து நலம் விசாரிக்கையில் நலத்திற்கென்ன குறைச்சல் இருந்துவிட முடியும்,,,?என்கிற மழுப்பல் பேச்செல்லாம் வேண்டாம்.நேரடியாய் நலம் என் றால் நலம்,அதுஇல்லையெனில் இல்லை எனச் சொன்னால் போதும், அதுவே மனதிற்கு இதந்தரும் சொல்லாய், செயலாய்,ஆக்கமாய் ஊக்கமாய்,,,,/

அது விடுத்து மனதிற்கு இதந்தரும் பொய் எல்லாம் வேண்டாம்.சரி அது வழ க்கம் கொண்டதுதானே,மிகை மீறா பொய்யும்,மிகை மீறா நடிப்பும் நன்மை யில் முடியும் என்பதுதானே வழக்கமானோர் வாக்கு ,அதனால் சொல்லிக் கொள்வோம், கொஞ்சமாயும் மனம் பாதிக்காத அளவிலுமாய்/

கவிதைக்கு மட்டும்தானா,,,?நம் போன்ற நண்பர்களின் பேச்சிற்கும் அழகு சேர்ப்பது தானே பொய்,,,,/

இன்னும் என்னனென்னமோவாய் சொல்லலாம்.சரி அதிருக்கட்டும்,

சென்ற வாரம் வந்தேன் தங்களின் ஊருக்கு,நிலை கொள்ளாமல் அத்துவான வெளியெங்குமாய்பூத்துக்குலுங்குறமலர்ச்செடிகளைப்போலவும்,அவைகளின் நிரம்பித்தளும்புகிற வாசத்தைப்போலவும் அன்றலர்ந்திருந்த மனதினனாயும் மனம்நிறைத்திருந்தசந்தோஷத்தைஅள்ளிக்கட்டிக்கொண்டு தங்களை நோக்கி பயணிக்கிறவனாயும் அம்புக்குறியிடவனாயும்,,,/

ஒன்பதரை டூ பத்தரை முகூர்த்தம்,தங்களது ஊரில்தான் திருமணம்,

பெண்ணுக்கு சென்னைப்பக்கம் ஊர் என்றார்கள்,மாப்பிள்ளை நம்ம ஊர்க் காற்றை அளவில்லாமல் அள்ளிக் குடித்தவந்தான்,

மலர்ந்திருக்கிற மண்ணில் சேர்ந்தாற்ப் போல் கால்மணி நேரம் நின்றால் நம் பாதத்தின் அடியில் வேர் விட்டுப் போகிற விவசாய பூமி அது,

சொல்லைப்போட்டால் நெல் விளையும் மண்ணாய் மந்திர வித்தை கொண்ட மண் அது,

ஒன்றைப்போட்டால் பத்தாக விளைச்சல் காட்டிய மண்ணை அப்படி ஆக்கி வைத்திருந்தார்கள் அந்த விவசாயிகளும் உழைப்பாளிகளும்/

உழைப்பாளிகளின் உடம்பில் குடிகொண்டிருக்கிற வியர்வைக்கு எப்பொழுது மே வாசம் உண்டு எனச்சொல்வதை நிஜமாக்கினார்கள் அவர்கள்,

நேர் கோடு காட்டியும் வகிடெடுத்துமாய் வழிகிற நீர் வரி வியர்வைக் கோடு களின் கனப்பரிமாணங்கள் அவர்களின் வாழ்வை பிரதிபலித்ததாய்,,,/

விழி கழண்டு ஓடுகிற பார்வை பட்ட இடத்தில் பட்டுத்தெரிகிற மண் நம்மி டம் பேசுகிறது என்றும் அதன் சுவாசம் நம்மில் படர்கிற பொழுதுகள் ஜீவநாதம் மீட்டியும் ,உயிரோட்டமாயும்,,/

அப்படியாய் மனிதர்களையும் மனிதர்கள் விளைவித்த விளை பொருட்களை யும்,அவர்களின் உழைப்பையும் மிகையில்லாமல் நிஜம் காட்டி வளர்த்திருக் கிற மண்ணில் வளந்தவன் அவன்,

அவன் அந்த ஊரில் வளர்ந்தான் எனச்சொல்வதை விட அவனை அந்த ஊர் வளர்த்தது எனச் சொல்லலாம்,

விவசாயம்வளர்ந்தபூமியில்விவசாயத்தை உயிராய் நேசிக்கிறவனாக/ அப்படி யானவன்தான் மாப்பிள்ளையாக,,,,

ஏதோ ஒரு வேளையாய் சென்னைக்குச்சென்றவன் அவனது அக்கா வீட்டில் சிலநாட்கள் தங்க நேரிட்ட போது ஐ.டி கம்பெனியில் பணி புரிந்த அந்த பெண் அறிமுகம் என்றார்கள்,

மெலிந்த தேகம்,சிவந்த நிறம்,நடுவாந்திரமான உயரம் என்றெல்லாம் இருந்த அவளது உடலழகு அவனைக்கவர்ந்ததை விடவும் அவளது படிப்பும் பேச்சும் அவனைக்கவர்ந்தது எனச்சொல்லலாம்,

அப்படியெல்லாம் இல்லை ,எதுவும் கஷ்டமில்லை சார் இங்கு ,கற்றால் எல் லாம்சாத்தியம் என பேச்சின் ஊடாக ஒருநாள் அவனிடம் சொன்னாள் அவள்.

”பார்த்தேன் ,சிரித்தேன்,பேசினேன்,பின் தான் பழகினேன்” என்கிற சொல்லை ருசுப்படுத்தும் விதமாகவும்,மனம் காத்த தனமாயும்தான் அவர்களது நட்பு ஆரம்பித்தது,

ஆரம்பத்தில்அவளைப்பற்றிஏதும்சரியாகத்தெரியாது அக்கா வீட்டின் பக்கத்து வீட்டுப் பெண் அவள் என்பது தவிர்த்து/

தூக்கம் வராத இரவுகளில் வெளி வராண்டாவில் உலாத்துகிற போது அவளது வீட்டில் அந்த நடுராத்திரியிலும் லைட் எரிந்தது,

தயங்கித்தயங்கி ஒரு நல்ல நாளாய் பார்த்து சுபமுகூர்த்த சுப வேளையாய் அல்லாத தினமாய் கேட்டே விடுகிறான் அவளிடம்/

எதற்கு இரவு இவ்வளவு நேரம், விளக்கின் ஒளிர்வு,,,? அதற்கான அவசியம் என்னஇங்கு, கரண்ட் பில் எகிறிப்போகாதா,,,,,?என வரிசை காட்டி அடுக்கிய கேள்விகளுக்கு ”படிக்கிறேன்” என்றாள் பொதுவாக,/

”படிப்பா,இந்தவயதிலா,படித்து முடித்து பரிட்சை எழுதி இண்டர்வியூ பாஸ் பண்ணி ஒரு அரசு வேலையிலுமாய் அமர்ந்து செட்டில் ஏகிவிட்டீர்கள்,பின் என்ன இப்பொழுது போய் படிப்பு,,,,,,,,?எனக்கேள்விக்குறிட்டவனிடம் அவள் சொல்கிறாள்,நீங்கள்சொன்னமுன்னதுவேலை,கம்பெனி,இண்டவிர்யூ,எக்ஸட்ரா, எக்ஸட்ரா,எக்ஸட்ரா,,,/

ஆனால்நான்படிப்பது,வாழ்க்கையின்எதார்த்தம்,வாழ்க்கையின் நிறை குறை எனஇன்னும்இன்னுமாய்நிறைகொண்டவைகளைபடித்துக்கொண்டிருக்கிறேன் யாருமற்ற அத்துவான இரவில்,

இருட்டை அடையாளம் கொண்ட இரவுகள் என்னில் இன்றளவும் வெளிச்சத் தை விதைத்து விட்டுச் செல்கிறது என்றால் அதற்குக்காரணம் நான் படிக்கும் புத்தகங்களே,,,/

நான் படிக்கிற புத்தகளிலெல்லாம் வலராறு, இருக்கிறது.புவியியல் இருக்கி றது, விஞ்ஞானம் இருக்கிறது.அது தாண்டி ஆன்மீகம்,பக்தி சுற்றுலா இயற்கை என எல்லாம் இருக்கிறது,

அதை மீறி இவைகளை கைக்கொண்ட மனிதர்களின் ஈரம் உறைகொண்ட வாழ்க்கை இருக்கிறது, அவர்கள் எல்லாம் புத்தகங்களை படிக்கிற கனம் தோறுமாய் என்னிடம் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், துக்கம்பகிர்கிறார்கிறார் கள், அளாவளாவுகிறார்கள்,வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண் டவாறே இயற்கை வளம்மிக்க காடுகளையும்,அவை அடை காக்கும் விலங் குகளையும்,முகடு வைத்த மலைகளையும்,நீர் நிலைகளையும் சிறு மற்றும் பேரருவிகளையும் கடந்தும் எனக்கு அவைகளை அறிமுகம் செய்வித்துமாய் மகிழ்கின்றன,

அது போலாய் விஷயங்களை உள்ளடக்கிய புத்தகங்களைத்தான் இது நாள் வரை நான் நேரம் காலம் பார்க்காமல் படித்துக்கொண்டு வருகிறேன்,

பொதுவாய் புத்தகங்கள் என்னை புதுப்பிப்பதாய்,,ஆகவே மனம் விரும்பி ஏற்றுச்செய்கிறேன் அப்பணியை,,,/எனச்சொன்னவள் இவன் மனம் பிடித்து நுழைய அவளையே கரம் பற்ற முடிவு செய்த சிறிது நாளிலிருந்து இரு வீட்டாரின் இடையேயான பேச்சிற்கு முளைத்த சிறகு இரு வீட்டாரின் பேச்சு ,பரிமாற்றம்,மற்ற மற்றவைகள்,,,,என முடித்து இப்பொழுது திருமணத் தில் வந்து விடியிட வைக்கிறது,

அவளே மணப்பெண்ணாயும் அறிமுகமாகிறாள்,

திருச்சி டூசென்னை செல்லும் சாலையில் இருந்த மண்டபத்தில்தான் திரும ணம்,

மண்டபம் பெரிதுதான்,ஆனால் பார்க்க லட்சணமாக இல்லை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் உருட்டி எறியப்பட்ட பேப்பர்ச்சுருளைப் போல அங்கங்கே கட்டிடங்கள் பிரிந்து பிரிந்து நின்றது மண்டபத்தின் ஏக்கர்க்கணக்கான வளா கம் முழுவதும்,

பொதுவாக கட்டிடங்களை கட்டுவதை விடுத்து பின்னினால் சிறக்கும் என்பார் எனக்குத் தெரிந்த கொத்தனார் ஒருவர்,

அவர் சொல்லை வைத்துப்பார்க்கிற போது இவர்கள் கட்டிடத்தை பின்ன விட் டிருந்தார்கள்.

மனதில் நில்லா அந்த மண்டபத்தின் பெயரை மனம் இறுத்தி நிறுத்தப்பார்த்து முடியாமல் வீட்டை விட்டு கிளம்புகிற நேரமாய் ஓடோடிப்போய் வீடு முழுவ துமாய் தேடி கடைசியில் எனது தோளில் தொங்கிய பையிலிருந்து திருமணப் பத்திரிக்கையை எடுத்து திரும்வும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டு அதே தோள்பையினுள் அதை பத்திரப்படுத்திக்கொண்டுமாய் விரைகிறேன், இடம் நோக்கி/

ஆமாம், திருமணத்திற்கு முதல்நாளே போக வாய்ப்பில்லாதவர்களுக்காய் திருமண வீட்டார்கள் பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள்,

அதிகாலை ஐந்தரை மணிக்கு பஸ் பாலம் ஸ்டேசன் அருகில் இருந்து கிளம் பும் என எல்லோருக்கும் தகவல் சொல்லியும் ஏற்பாடு செய்தும் ஒருங்கி ணைத்தும் போன் செய்தும் குறுந்தகவல்அனுப்பியும்,வாட்ஸ் அப் செய்துமாய் சொல்லி முடித்த பின்பாய் அவசியம் வருகிறேன் எனச்சொன்னவர்களில் சிலர் வராமலும்,வரமாட்டேன் எனச்சொன்னவர்களில் சிலர் வருகிறேன் அவ சியம் என்பதாயும் சொன்ன சொல்லின் நுனி பிடித்தும் அதை இறுகக் கட்டிக் காத்தும் சொற்கட்டொன்றை உருவாக்கி அதை அவிழ்ந்து விடாமல் இறுக்கப் பிடித்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடிந்து வாசனையாய் பவுடர் செண்ட்டின் துணை கொண்டுகிளம்பலாம்என நினைக்கிற நேரமாய் போன் வருகிறது அதிகாலை நான்கரை மணிக்கு,/

“நான்தங்களுடன்திருமணத்திற்குவருவதற்காய்கிளம்பிக்கொண்டிருக்கிறேன், சற்று தாமதமானாலும் வந்து விடுகிறேன் உறுதியாய்,ஆகவே என்னை எதிர் பார்த்துக் கிளம்பவும்,,,” என வந்து விட்டபோன் பேச்சை மனம் பொத்தி ஏற்ற வனாய் நான்கரையிலிருந்துநகன்று மணி ஐந்தை எட்டித்தொடப் போகிற நேரமாய் கிளம்பி பாலம் ஸ்டேசன் வந்து அடைகிறேன் சீக்கிரமாய்,,/

நான் சென்று நின்ற அந்த வேளை டீக்கடைகள் கூட திறந்திருக்கவில்லை. உடனே நான் ஒரு டீக்குடித்தே ஆகவேண்டும் என நினைத்த வேளை பஸ் டிரைவர் போன் பண்ணியவாறே எனதருகில் கொண்டு வந்து பஸ்சை நிறுத் தினார்,

வந்தவர் சும்மா இல்லாமல் என மனதை பிரதிபலித்தவராய் சார் சற்றுத் தள்ளி ஒரு டீக்கடை திறந்திருக்கிறது,வாருங்கள் சாப்பிடலாம் எனக் கூப்பிட்டுப் போனார்,

குட் காம்பினேஷன் என மனதிற்குள் சொல்லியவனாய் டிரைவருடன் நடக்கி றேன்.

நடக்கிற அடி ஒவ்வொன்றுன்றுக்குமாய்,ஒவ்வொருவருக்காய் போன் பண்ணி அங்கு வரவழைக்க சரியாக ஆறு மணியாகிப் போகிறது.

ஒருவர் இருவரல்ல அறுபது பேர்,

ஆற்றை கூட்டி உள்ளங்கைக்குள் அடைக்கச் சொன்னால்,,,,,,,?கஷ்டம்தான், ஆனாலும் கொஞ்சம் முயன்று அடைத்து விட்டேன் என்கிற நினைப்பில் இரு ந்த வேளை பள்ளத்தை நோக்கி ஓடி வருகிற நீர் போல எல்லோரும் வந்தா ர்கள்,

இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் சற்று தாமதமாக வருவேன் எனபோன் பண்ணியவர் வந்ததற்கு பின் தான் சீக்கிரம் வந்து விடுவேன் எனச் சொன்னவர்கள் வந்தார்கள்.

ஒரு வழியாய் ஐந்து ஐந்தரை ஆனது,ஐந்தரை ஆறு ஆனது ,ஆறு ஆறே கால், ஆறே கால் ஆறரையாகி பின் ஏழு மணிக்கு எல்லோரும் ஏறி விட பஸ் ஸைக் கிளப்பினோம்,

இதில் மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் இவர்களையெல்லாம் ஒன்றி ணைத்துஒரேநூலில்கோர்த்து கொண்டு வழி நடத்திக்கூட்டிச் செல்கிறவனாய் நானாகிப் போனேன்,

அப்படியாய் கூட்டி வருகிற வழியில்தான் தங்களை நினைத்தேன் ,திருச்சி செல்கிறோமே நண்பரை பார்த்து விட்டு வரலாம் என ,

நினைத்தநினைப்புஅப்பிடியேஇருக்கசென்றுஇறங்கியதும்திருமணம்,சாப்பாடு திரும்பவுமாய்கூட்டிவந்தவர்களைஒன்றிணைத்து கிளம்ப என்பதுவே சரியாக இருந்தது, அதனால் வர இயலவில்லை,மன்னிக்கவும் சற்றே,,,,/ என மனதிற் குள்ளாய் ஒரு மடலெழுதி தங்களுக்கு அனுப்பிவைத்து விட்டு முடித்து விட்டு கிளம்புகிறேன் அங்கிருந்து/

தங்களை சந்தித்து தாங்கள் எழுதிய புஸ்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டும் தங்களிடம் சிறிது பேசி விட்டு வரலாம் என்கிற நினைப்பு பாகு முறுகிப் போன பலகாரமாகிப்போனதில் கொஞ்சம் வருத்தமே எனக்கு.

இருந்தாலும் அந்த வருத்தத்தை முன் நிறுத்தி இப்பொழுதைக்கு தங்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா,,,,/

காலம் மிகச் சிறந்த கணக்கீட்டாளன் என்பார்கள்,

அவன் இடுகிற கணக்குகளில் பிழை ஏதும் நேரிடாமல் இருக்குமானால் நாம் சந்திக்கநேர்கிறநேரம் கண்டிப்பாய்சீக்கிரத்தில்வாய்க்கும்சந்திப்போம் நண்பா,,/

8 comments:

 1. பொதுவாய் புத்தகங்கள் என்னை புதுப்பிப்பதாய்,,ஆகவே மனம் விரும்பி ஏற்றுச்செய்கிறேன் அப்பணியை,,

  உண்மை
  உண்மை

  ReplyDelete
  Replies
  1. அன்பும் பிரியமும்,,,/

   Delete
 2. Replies
  1. நன்றியும் அன்பும்,,,/

   Delete
 3. அசத்தல் அய்யா

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் பிரியமும்!

   Delete
 4. சில சமயங்களில் சொல்லத் தேவையில்லாத உண்மையை மறைக்க பொய்யும் அவசியமாகித்தான் போகிறது. கை கொடுக்கவும் செய்கிறதுதான்!

  நன்றாக இருக்கிறது

  துளசிதரன், கீதா

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...