31 Jul 2019

கூட்டு மனசு,,,

 
வரிசை காட்டி வீடுகளை அடுக்கி வைத்திருந்த
தெருவின் திருப்பத்தில் நிலை கொண்டிருந்த
கோயிலைக் கடைக்கையில் கேட்கிறேன் மனைவியிடம்,/
வண்டியை நிறுத்தவா,கோயிலுக்குள் செல்கிறாயா என,/
சற்றே மௌனித்தவள் இல்லை சாமியே எனதருகில் இருக்கையில்
எதற்கு அங்கெல்லாம் என்றவள்
இனி என்னுடன் வருவது தவிர்த்து கொஞ்சம் விலகியே நில்லுங்கள்.
வீடு விட்டு வேறெங்கிலுமாய் வரவேண்டும் என்றால்

 நானும் நாலாவது தெரு அக்காவும் வந்து கொள்கிறோம்,
கணவர் இறந்த நாளிலிருந்து எங்கும் வெளியேறாத அவளை 

தோள் தொட்டும் மனம் போர்த்தியும் கோயிலுக்கும்,
இன்னும் பிற இடங்களுக்குமாய் அழைத்து வர ஆசை,
ஆகவே கொஞ்சம விலகியே நில்லுங்கள் ,,,,
என்னை கூட்டி வருவதிலிருந்து/
வலி நிறைந்த வாழ்வின் சுகந்தத்தில்
கண் முழியா கோழிக்குஞ்சுகளாய்

 பிள்ளைகள் இரண்டை வைத்துக்கொண்டு 
 அல்லப்படுபவளை என்னால் இயன்ற அளவிற்காய் 
ஆற்றுப்படுத்த முனைகிறேன்,,,/

                                                  ___________________


தேநீர் குடித்துகொண்டிருக்கிறேன்,பஸ் நிலையத்தின் இடது ஓரம் காட்டி இருந்த டீக்கடையில்/

அந்தக்கடை என்னில் அறிமுகமனதா இல்லை நான் அந்தக்கடைக்கு அறிமுகமானேனா என்பது இன்று வரை தெளிவு பெற தெரியவில்லை.

அந்தக்கடை எனக்கு அறிமுகமானமானதும் அங்கு டீக்குடிக்க நேர்ந்ததும் ஒரு சரித்திர நிகழ்வுக்கு ஒப்பான செயலே,,,,/

பனி போர்த்திய ஒரு வேலை நாளின் காலைப் பொழுது,/

வருகிறேன் பணிக்கு வழக்கம் போலான காலை நேரத்தில்/ அரக்கப்பரக்க எழுந்து அதே அரக்கப் பரக்கத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கிளம்பி கொஞ்சம் சடுதி காட்டி பஸ் ஏறினால் ஒன்பது அல்லது அதை ஒட்டிய நேரங் களில் கொண்டு வந்து விடுகிற செயல்களில் நாட்கள் நகன்று கொண்டிருந்த பொழுதுகளில் பூத்த பனி காத்துக்காத்துப்பார்த்து வருகையற்ற பொழுதுகளில் வாடி நிற்பது போல முரட்டுத்தனம் காட்டி போர்த்தியிருந்த போர்வையாய் தன் பிடிவாதம் காட்டி விலகாமல் இருந்த பனி வெயிலை எதிர்பார்த்து ஏமா ந்தும் மெல்லென சுயம் கொண்டுமாய் இருந்தவேளையில் பஸ்ஸேறிய வன் கூட வே கைபிடித்து அழைத்து வருகிறேன் பனியை,,,,/

பஸ் வருகிற வழியெங்குமாய் செய்து வைக்கப் பட்டிருந்த ஊர்களில் ஊனும் உயிரும் ரத்தமும் சதையும் தன்னுள் உள் பொதிந்த மனமுமாய் வாழ்கிற ஜனங்கள் கொண்ட ஊர் எட்டிக்கிற்கும் மேலாய் தாண்டி வர இருபது இடங்க ளுக்கும்மேலாய்நின்று நின்று வரவேண்டியகட்டாயத்தில்இருக்கிற பஸ்ஸில் தூங்கிப்போன அலுப்புடன் வந்து இறங்குகிறேன் ஒரு காலை நாளென்றில்,,,/

பூத்த பூக்கள் மொத்தத்தையும் சுத்தமாய் அள்ளிக் கட்டி பிரியம் கொண்ட மனம் காத்தவர் மேல் மெல்லென எறிந்தால் வலிக்காதுதென்பது பொதுவான சொல்/

அதன் படி யாரோ மனம் கொண்டவர் என்மீது எரிந்த பூக்களின்மென் வாசனை யுடனும்வலிதாங்கியுமாய் பஸ் நிலையம் இறங்கி உடல் போர்த்திய குளிர் தாங்காமல் டீக்கடைகளை தேடிய பொழுது கண்களில் பட்டது அவரது கடையாய் இருக்க முதல் டீயிலேயே அசத்தி விட்டார் மனிதர்,

இப்படியான ஒரு மென் படலத்தின் ஊடேதான் அவரது கடை எனக்கு அறிமுக மாகியது/

ஆனால் அங்கு ஒரு மென் அதிசியம் போல டீக்கடையின் அருகிலேயே ஒரு பழ ஜுஸ் கடையும்,,/

சூடுபறக்கும் வெந்நீர் ஓடையும் ,பெரும் குளிர் பிரவாகமெடுத்த நதியும், அருகருகாய் ஓடினால் எப்படி இருக்கும்,,,?அப்படித்தான் இருந்தது அந்தக் கடைகளை முதன் முதலாய் பார்த்த போது/

அந்தப்பக்கம் டீ,இந்தப்பக்கம் குளிர் பானம், இந்தப் பக்கம் குளிர் பானம், அந்தப் பக்கமாய் டீ,

அந்தப்பக்கம் போகிறவர்கள் இந்தபக்கம் வந்து விடக்கூடாது,இந்தப்பக்கம் வந்தவர்கள் அங்கு போய் விடக்கூடாது,அப்படியே மாறினாலும் கூட பிரச்ச னை ஒன்றுமில்லை பெரிதாக/சம்பந்தபட்ட இரு கடைக்காரர்கள் அவர்களாக வே மடை மாற்றி விடுவார்கள் தங்கள் கடைக்கு வருகிறவர்களை,,,/

அப்படியாய் மடை மாற்றம் பெற்றவர்களில் ஒருவனாய் நானும்/

இப்பொழுது அந்த டீக்கடை வாசலில் நின்றுதான் டீக்குடித்துக் கொண்டிருக்கி றேன்.

என்னுடன்பேசிக்கொண்டிருக்கிறாள்,அவளென்றால் யாராக இருக்கமுடியும் ?

அவள் பேசிக்கொண்டிருக்கிறாள்,நான் டீக்குடித்துக்கொண்டிருக்கிறேன்,

நாவின் சுவைறும்புகளில் படர்ந்து உள்ளின் உள்ளாய் இறங்கும் மிடறுகள் ஒவ்வொன்றும் அவளது பேச்சை மனமிருத்தியும் ,தேநீரை உள் வாங்கி பயணிக்கச் செய்கிறதாயுமாய்,,,/

கைக்கு எட்டுகிற தூரத்திலாய் நின்ற பேருந்துகளும் அதனுள்ளாய் பயணிக ளும் பேருந்தின் அருகாமை காட்டிஉறைகொண்டிருந்தஓட்டுனர் நடத்துனர் களும்பஸ் நிலையத்தின் மனிதர்களும்,வியாபாரிகளும் இன்னமும் இன்ன மும் பிறவானவர்களும் நொடிப்பொழுதில் நிகழ்கிற வாழ்வின் நிலைத் தன் மையை சொல்லிச்செல்கிறவர்களாக,,,,,/

தேநீர் குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்/என்னுடன் பேசிகொண்டிருக்கிறாள் அவள்/

மனம் வியாபித்த பிரவாகமாய் பேசிக் கொண்டிருக்கிறாள் அவள்.தேநீர் குடித் துக் கொண்டிருக்கிறேன் நான்/

சொல்லிச்செல்லும் காற்றின் திசையில் மனம் பிடித்த காதலியின் நிறை பேச்சு மனம் நிறைத்து நிற்கிறதைப்போல நாவின் சுவையறும்புகள் தொட்ட தேநீரின் ருசி மிகவும் நன்றாக இருக்கிறது./

தேநீர் குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்.என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறா ள் அவள்.

என்னுடன்பேசிக்கொண்டிருக்கிறாள்அவள்.தேநீர்குடித்துக்கொண்டிருக்கிறேன் நான்,,,,,/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளும் பல கதைகளை சொல்கிறது...

vimalanperali said...

அன்பும்,பிரியமும்,,.!