8 Jul 2019

இனிப்புக்கேக்கும் ,பன்னும்,,,,/

”பன்னு சாப்புடுவோமா” என பாண்டியண்ணன் கேட்டபோது ”வேணாம் பன்னு, இந்தா இந்த இனிப்புக்கேக்கு சாப்புடுவோம்,நல்லாயிருக்கும்”,,,,என்றவாறே எடுத்துக்கொடுத்தான் இவன்,

ஒருவாய் சாப்பிட்டு விட்டு ஆச்சரியம் தாங்கிப் பார்த்தவராய் ”உண்மையிலே நல்லாயிருக்குண்ணே,” என்றார்,

“ஆமாம் நீ இந்த மாதிரி திங்கிற அயிட்டமெல்லாம் எது எங்க நல்லாயிருக் குன்னு தேடி அலைய மாட்டயே,ஒனக்கு எப்பிடித்தெரியும் இது நல்லா இருக்குமுன்னு ,அப்ப கடை கடையா ஏறி யெறங்கி இதே வேலையா அலை ஞ்சிருக்குற,,,” என சப்தமாக சிரித்தவரிடம் இல்லை என மறுக்கமுடியவில் லை.

”டீக்குடிக்க மட்டுமல்லவே டீக்கடைகள் மனமாற்றிக்கொள்ளவும்தானே” என்கிற நினைப்புடன் டீக்கடைக்குச்செல்கிற நேரங்களில் வடைக்கு மாற்றாய் ஏதாவது சாப்பிடலாம் என்கிற நினைப்பின் முன் இது போலானவைகள் வரிசை கட்டி நிற்கும்.

அப்படியாய் ஒரு நாளில் சாப்பிட்டதுதான் இப்படி பாண்டியண்ணனுக்கு கேக்கை பரிந்துரை செய்கிற அளவிற்காய் துணிவு காட்டி நிற்கிறது,

பழைய ஜெய்சங்கர் படங்களில் வருவது போல் உடுத்தியிருந்தார்,இவன் பார்த்த அளவிற்கு உடைகளின் அப்டேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரி ல்லை என்பது தெரிந்தது,

வெளிர்க்கலரில் அணிந்திருந்த சட்டையும் தொள தொளவென அடர்கலரில் அணிந்திருந்த பேண்ட்டும் பார்க்க அப்படி ஒன்றும்மோசமாகத் தெரியவில் லை,

அதைப்பற்றி அவர் ஒன்றும் கவலை கொண்டவராகவும் தெரியவில்லை. உடையையும், வெளிப் பகட்டையும்வைத்து ஆட்களை எடை போடுகிற உலகில் இவரைப்பார்த்து இப்படித்தான் நினைப்பார்கள் என்கிற எண்ணத்தை தெரிந்தே சுமந்து கொண்டு திரிந்தபவராய் தென்படுகிறார்,

ஆத்தூரிலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கியவன் முக்கு ரோட்டில் நின்று கொண்டு மூத்த மகளுக்கு போன் செய்கிறான்,

பஸ்ஸிலிருந்துஇறங்கியபின்னும் இளையராஜா அவர்களின் பாடல் இன்னும் காதையும் மனதையும் நிறைத்துக் கொண்டும் அசரீரியாய் ஒலித்துக் கொண் டும்/

பயணங்களின் நிறைவிற்கும்,சுகத்திற்கும் பேருந்துகளில் வசதிகள் மட்டும் போதாது போலும்,இது போலான மனம் நிறைக்கிறவைகள் வேண்டியதுதான் இருக்கிறது,அவ்வப்பொழுதும் நிரந்தரமாயும்./

நிரம்பிப்பூத்த பூக்களை அதன் வாசனை மாறாமல் அள்ளித்தெளித்து போர்த்தி யிருந்த பூக்காடாய் அலங்கரிக்கப்பட்ட தனியார் பஸ்களின் டிரைவர்களும் கணடக்டர்களும்தான் இன்னும் இது போலான பாடல்களை விடாமல் கட்டிக் காத்துக் கொண்டும் பயணிக்கிறவர்களின் மனதுக்கு இதம் சேர்த்துக் கொண் டும்,மா மருந்திட்டுக் கொண்டுமாய்/

மூத்த மகள்தான் சரி,எங்கிருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் போட்டு விட்டுவந்து விடுவாள்,

கல்லூரிப்பாடம், அதை கரைத்துக்குடிக்க வேண்டும் என்கிற கதையெல்லாம் விடமாட்டாள்,அப்படியே இருந்தாலும் கூட கரைத்துக்குடித்தலை சிறிது ஒத்தி வைத்து விடுவாள் இவனுக்காக/

இளங்கலையின் மூன்றாமாண்டு படிக்கிறாள்,ஒங்களகூப்புட வர்றத விட எனக்கு பெரிசா என்ன வேலை இருந்துறப்போகுத்துப்பா என்பாள்,

கொஞ்சம் தைரியமானவள், தைரியம் என்றால் இவனை விட கொஞ்சம் ஜாஸ்தி எனலாம்.

போன மழை மாதத்தில் அவள் கல்லூரி விட்டு வந்த மாலை வேளையாக வீட்டிற்குள் அமர்ந்து டீக்குடித்துகொண்டு டீ வி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டின் வெளியில் ஒரே சப்தமாக கேட்டுக்கொண்டிருந்தது, அதுவும் வீட்டு வாசலுக்கு அண்மையில் கேட்பது போல் இருந்தது,

அம்மாவும்இல்லை,கடைக்குப்போயிருந்தாள்.அப்பாவழக்கம்போலஇரவுதான் வருவார்,

சிறிது நேரம் விட்டுவிடலாம் அப்படியே என்றால் சப்தம் கூடிக்கொண்டே போனது,

அம்மா வருவாள் என இனியும் எதிர்பார்ப்பது தவறுதான்,வாசல் நோக்கிப் போனவள்அங்குநின்றுகொண்டுஅரட்டையடித்துக்கொண்டிருந்தஇளைஞர்கள் நான்கைந்து பேரில் உன்னி உன்னி பேசிக்கொண்டிருந்த ஒருவனின் அருகில் சென்றவள் அவனது கன்னத்தில் அரைந்து விட்டாள்,

“ஏண்டா நாயே நீங்க கெட்ட வார்த்தை பேசி வெளையாட எங்க வீட்டு வாசல்தான் கெடைச்சதா,” என்றவாறே,,,/

”இது என்ன குடும்பம் நடத்துற யெடமுன்னு பாத்தயா,இல்ல டாஸ்மாக் பார்ன்னு நெனைச்சயா ராஸ்கல்”என்றவாறு விரட்டி விட்டிருக்கிறாள் அதற்கு முன் அக்கம் பக்கம் கூடிவிட பையன்களும் அந்த இடத்தை விட்டு நகன்று விட்டனர்.

அதில் ஒருவன் அவளைப்பார்த்து ”நான் ஒன்னைய நேசிக்கிறேன்” எனச் சொல்ல ,”மொதல்ல ஒழுக்கமான பழக்கத்த பழகப்பாரு,அதுக்கப்புறமா நேசம் காதல்ன்னு கதை விட கத்துக்கலாம்,உள்ளதுக்கே வழி இல்லாம நிக்கும் போது,,,,கழுத நெனைச்சிச்சா கந்தலும் கசக்கலுமா,,,,,,” எனச்சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்தாள்.

இரவு இவன் வந்ததும் இவனிடம் சொன்ன போது வீட்டிற்குள் சொல்லி விட இவன் கொஞ்சம் கொதிப்பாகிப்போனான்,வெட்டுவேன் குத்துவேன் என,,/

”ஆமா வெட்டீட்டாலும்,குத்தீட்டாலும்,,,,,, விடுங்கப்பா,அதான் நான் சமாளிச்சி சத்தம் போட்டு அனுப்பீட்டேன்ல்ல,நீங்க எதுக்கு வெட்டியா பிளட் பிரஷ்ர கூட்டிக்கிட்டு இருக்குறீங்க என்றாள்.

“என்னையப் பாத்த ஒடனே அவனுக்குள்ள ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கு,அது எப்ப இருந்து ஏற்பட்டிருக்குன்னு தெரியல,அத காதல்ன்னு தப்பா நெனைச்சிக்கிட்டு அலையுது நாயி,எங்க காலேஜீல படிக்கிற பையந்தான்,எப்பலயிருந்து இது போல நெனைச்சிக்கிட்டு திரியிறானே,எத்தனை பேர்கிட்ட என்னனென்ன சொல்லி வச்சிருக்கானோ,கேட்டவுங்க பாக்குறவுங்க என்னென்ன புரிஞ்சி வச்சிருக்காங்களோ தெரியல, என்றவளை உச்சி மோந்து முத்தமிட்டான்.

வெளிர்கலரில் டாப்ஸ் என்றால் அடர்கலரில் பேண்ட் என அமையுமாறு பார்த்துக்கொள்வாள்,அவள்எடுக்குற சுடிதாரில்./

கூடவேஅதில் பூத்துக் காணப் படுகிற பூக்களின் நெடிஅதிகமாய் மூக்கை நெரு டாதது மாதிரி பார்த்துக் கொள்வாள்,

அவளைப் பொறுத்தவரை அணிந்திருக்கிற உடைகளில் அதிகம் பூக்களை பூக்கச்செய்வதும் அது உதிர்ந்து விழுவதும் கூடாது என நினைப்பவள், அணிந் திருக்கிறஉடை விடுத்து அதது பூக்க வேண்டிய இடங்களில் பூத்தால் கண்டிப் பாக பலன் கிடைக்கும், வாழ்வார்கள் பயிர் செய்து பிழைப்பவர்கள்,அவர் களது பிழைப்பிற்கு அச்சாரம் இடுவதை விடுத்து இங்கு உடல் போர்த்துகிற ஆடைகளில் பயிர் பண்ணிக்கொண்டு திரிந்தால் எப்படி,,,,?இது விடுத்து எம்ப் ராய்டரி ஒர்க் அதிகம் பண்ணியிருந்தாலும் அதுவும் கண்ணை உறுத்துகிறது தான்,இதெல்லாம்இல்லாதது போல் இருப்பதுதான் அவளதுசாய்ஸில் முதல்/.

அவளதுஅம்மாவுடன்சுடிதார்எடுக்கச்சென்றால்அவ்வளவுதான்கடையில் போரே நடந்து விடும்,

”ஏய் கொஞ்சம் பூ கீ ,இல்ல எம்ப்ராய்டரி டிசைன் வச்ச மாதிரி போட்டா நல்ல யிருக்கும் அத விட்டுட்டு மொளுக்குன்னு இலைக உதுந்து போன மரம் மாதிரி மொட்டையாஎடுத்தா”என அவள் அவளது பங்கிற்கு நான்கைந்து மாடலை எடுத்துப் போடச்சொல்லுவாள்,

வேண்டா வெறுப்பாய் எடுத்துப்போடும் கடைக்காரர் சலித்துக் கொள்வார் சலித்து/

”ஏம்மா நம்ம காலங்க,நம்ம எண்ணங்க,நம்ம பிடிப்புக வேற,இப்ப இருக்குற புள்ளைங்க டேஸ்ட் வேற, அவுங்களுக்கு புடிச்சாப்புல அவுங்க எடுத்துக்கிரட் டும் விடுங்க,துளிர்த்து வளந்து நிக்கிறது அவுங்கதான,எதுக்குப்போயி தளுக்கு றப்பவே கிள்ளிவிடுறீங்க”என்பார்.

“அதுக்கில்லண்ணேஅவஇஷ்டத்துக்குவிடுறதும்,புதுஜெனரேஷன்இப்பிடித்தான் யோசிக்கும்ங்குறது எல்லாம் சரிதான் ,அதுக்காக வீட்டுல இருக்குற அம்மா அப்பா கூடவா யோசனை சொல்லக் கூடாது,இல்ல கருத்துச்சொல்லக் கூடா தா,அதுக்குக்கூடவா பெத்தவுங்களுக்கும் கூடப்பொறந்த பொறப்புகளுக்கும் உரிமை இல்லாமப்போச்சி,அந்தளவுக்கா இவுங்கள்லருந்து சிந்தனை மட்டத் துல வெலகி நிக்கிறோம் நாங்க,

”அப்பிடியே இருக்கமுன்னு கூட வச்சிக்கிருவோம்,அதுக்காக நாங்க சொல்றத எதுவுமே கேக்க மாட்டேன்னு பிடிவாதமா நின்னா எப்பிடி,,,?நாங்க இவுங்க அளவுக்கு படிக்கலைதான்,நானும் சரி ஏங் வீட்டுக்காரரும் சரி,இவுங்களவுக்கு நுனி நாக்குல இங்கிலீஷு பேசலதா,இவுங்க அளவுக்கு ஒரு நேரத்துல ரெண் டாயிரத்துக்கு கொறையாம உடுத்தலதான், இவுங்களவுக்கு கைநெறைஞ்ச சம்பாத்தியத்துல நல்லதா ஒரு வீடு,நல்ல வசதியான சாப்பாடுன்னு இல்ல தான்,அதுக்காக நாங்க சொல்றதெல்லாம் தப்பாகிப்போகுமா என்ன,,,?

”நான் இவள மட்டும் வச்சிச்சொல்லல,பொதுவா இவளப்போல இருக்குற இவ கூடப்படிச்சி வேலைக்கிப்போன புள்ளைங்க,அக்கம் பக்கமுன்னு இருக்குற நம்ம பொண்ணு வயசு,பையன் வயசுல இருக்குற புள்ளைங்க எல்லாத் தையும்தான் சொல்லுறேன்,,,”எனும் போது கடைக்காரர் திரும்புவார்,

“ஏம்மா ஒங்க புள்ளைங்கதானே ,அதுங்க ஆசைக்கு இருந்துட்டுப்போகட்டுமே கல்யாணம் வரைக்குமாவது,அதுங்க சொந்தக்கூடு இது,அதுங்க அடையிற மரம் அது,பூவும் பிஞ்சும் காயும் கனியுமா இருக்குறதுல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிறட்டுமே /

மண் பிளந்து துளிர்த்து வளர்ந்து வேர் விட்ட யெடத்துல குடி கொண் டிருக்கிற அதுங்களுக்கு சிறகு இடிக்காம இருக்குற அளவுக்கு அதுகளா ஏற்படுத்திக்கிர்ற சௌகரியம் உள்ள யெடம் அது.

இங்க இருக்குற வரைக்கும்தான அதுகளுக்கு அதுக கூடுங்குற உணர்வு இருந்துற முடியும்,அதுகளுக்கு அதுக யெடம்ங்குற ஒரு உறுத்தல் இருந்துற முடியும்,இதவிட்டுட்டுப் போயிட்டாங்கன்னா அதுகளுக்கு உருத்து உள்ள யெடம் ஏது சொல்லுங்க என்றார்,

கடைக்காரர் பேசுகிற அந்த நேரம் இவனும் இருந்து விட்டால் போதும் ”நல்லா சொல்லுங்கண்ணே,நல்லா சொல்லுங்க”,,,,என்பான்,உடன் மகளும் சேர்ந்து கொள்வாள் என்பதை சொல்லவா வேண்டும், அப்புறமாய் அவர்கள் இருவரும் சேர்ந்து இவன் மனைவிக்கு எதிராக பிடிக்கும் போர்க்கொடி கொஞ்சம் உயரம் கூடியதாகவே இருக்கும்.

இவளுக்கு பிளைனாக இருக்கிற சுடிதார் ரொம்பவே பிடிக்கும்தான்,அதிலும் இவள் தேர்ந்தெடுக்கிற அடர்க்கலர்,லைட்க்கலர் காம்பினேஷன் நன்றாக இருந்தாலும் கூட அவள் நினைக்கிற விலையிலிருந்து ஒரு நூறு ரூபாய் அதிகமாகபோனாலும் கூட வேண்டாம் என்று விடுவாள்,

“அவ அப்பிடித்தான் சொல்லுவா கடைக்காரரே,நீங்க பேக்ப்பண்ணி குடுங்க ,நான் கொண்டு போயிக்கிர்றேன்”என கடைக்காரரிடம் சுடிதாரை பேக் பண்ணி வாங்கி வந்து விடுவார்,

வீட்டுக்கு வந்ததும் கூட இவன் வாங்கி வந்ததை கையால் கூட தொட்டுப் பார்க்க மாட்டாள் ஒரு நாள் இல்லை,இரண்டு நாட்கள் இல்லை, வாரக்கண க்கில் ஆனாலும் கூட அது அப்படியேதான் இருக்கும்,

அப்பொழுதான் இவன் சமாதானத்தூதுவனாய் மாறி மகளிடம் போவான், ”என்னம்மா அப்பா மேல கோவமா,இருக்க வேண்டியதுதா,அது நல்ல கோபமு ன்னா பிரயோஜனமா இருக்கும்,இல்ல கெட்ட கோபமாவாவது இருக்கணும். அதுவுமில்லாமஇதுவுமில்லாமரெண்டுங்கெட்டானாஇருந்தாஎப்பிடி,கடையில இருக்குறதுலயே அந்தக்கலர் சுடிதார்தா ரொம்பப்புடிச்சிருந்தது ஒனக்கு, நான் வர்றதுக்குமுன்னாடி அதத்தான் தொட்டுத்தொட்டு பாத்துக்கிட்டு இருந்துரு க்க, அத அளவெல்லாம் வச்சி வேற வச்சிப் பாத்துருக்குற, நெஞ்சோட அள்ளி அணைச்சி ஆசையா வச்சிகிட்டு இருந்துருக்க,கொஞ்ச நேரம்,இத்தனையும் செஞ்ச இந்த நேரத்துல கண்டிப்பா அந்த சுடிதார உடுத்திக்கிட்ட மாதிரி கனவு கண்டிருப்ப,“ஊலாலா..” ஓடிருக்கும் மனசுக்குள்ள,ஓங் பிரண்ட்ஸீககிட்ட இந்த சுடிதாரப் பத்தி மானசீகமா பேசீருப்ப,அவுகளெல்லாம் நீயி புது சுடிதாரு போட்டுக்கிட்டு போன அன்னைக்கி கண்டிப்பா ஒரு டிரீட் கேட்டுருப்பாங்க, நீயும் குடுத்துருப்ப, இன்னும் கூட நீ அந்த ட்ரெஸ்ஸ சுத்தி என்னனெமோ நெனைப்பவளத்துக்கிட்டுஇருந்துருக்கலாம்,இத்தனையும்பாத்துட்டும்கேள்விப் பட்டுக்கிட்டுமா இருந்த நான் எதையும் கண்டுக்காம நீயி ஆசைப்பட்டத சுடிதார வாங்காம ஜடம் மாதிரி வந்துருந்தேன்னு வையி, என்னைய மாதிரி கொடுமைக்காரன் யாரும் இருந்துற முடியாது, அதான் எடுத்துட்டு வந்தேன்,

”நூறு ரூபாய் அதிகமா வெலை குடுத்து ஏங் மகளுக்கு ஒரு சுடிதார் எடுத்துத் தர எனக்கு உரிமை இல்லையா சொல்லு” என இவன் சொல்கிற கணங்களில் சிரித்து விடுகிற மகள் நூறு ரூபாய் கூடப்போட்டு எனக்கு சுடிதார் எடுத்துத் தரஎங்கப்பாவுக்குஎவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவுக்கு அது வேணாம் வெலை அதிகமுன்னு கோவிச்சிக்கிறதுக்கு எனக்கும் உரிமை இருக்கு”,,,,என இவன் தலையைப்பிடித்து அருகே அமர்ந்திருக்கும் மனைவியின் தலை மீது மோத வைத்து விட்டு ஓடி விடுவாள்.

இந்த சுடிதார அம்மாவ போட்டுக்குறச் சொல்லுங்க நல்லாயிருக்கும் என்ற வாறே,/

பன்னு சாப்புடுவோமா என பாண்டியண்ணன் கேட்டபோது வேணாம் பன்னு, இந்தா இந்த இனிப்புக்கேக்கு சாப்புடுவோம், நல்லாயிருக்கும்,,,, என்றவாறே எடுத்துக் கொடுத்தான் இவன்,

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகளை ஒப்பீடுகளாக... அருமை...

vimalanperali said...

வணக்கத்துடன் அன்பும் பிரியமும் சார்!

வலிப்போக்கன் said...

டீ கடையில கிளாசில் வாங்கிய டீயில் பன்னை பிச்சு டீயில் முக்கி வாயில் போட்டு சுவைத்து தின்பதை பார்த்திருக்கிறேன். கேக் திணபதை தங்கள் பதிவு மூலம் இப்பத்தான் பார்க்கிறேன்.

vimalanperali said...

கேக் சாப்பிட்டுத்தான்
பார்ப்போமே!

vimalanperali said...

நன்றியும் அன்பும்