11 Aug 2019

தூக்க நிமிடங்களின் களவுகள்,,,,,

தூக்கம்வரவில்லை,எவ்வளவுநேரம்தான் சும்மாவே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருப்பது,,,?

”தூக்கம்என்கண்களைதழுவட்டுமே”,,,அனுபவித்துஎழுதியிருக்கிறார்என்பார்கள். சுகமும் தாலாட்டுமான பாடல்/ ,

எழுந்து சிறிது நடக்கலாமா,,,?அடை கொண்ட கூட்டிற்குள்ளாய் எப்படி கை வீசி நடை கொள்வது,,,?கொஞ்சம் எரிச்சலாகவும், ”சை” என்றுமாய் இருந்தது.

என்ன இது சில பேரானால் வீட்டில் எத்தனை பேர் என்ன பேசிக் கொண்டிரு க்கிறபோதும்,சப்தமாக டீ,வி ஓடிக்கொண்டிருக்கும் போதும், எத்தனை களேபர நேரங்களிலும் கூட தேமே என தூங்கிப்போகிறார்கள்,

அப்படி ஒரு மனோ நிலை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்தான்/ ”படுத்த ஒடனே தூங்கிப் போறவரும், சாப்புட்ட சோத்த எந்த இடர் பாடும் இல்லாம செமிச்சிர்றவரும், ரொம்பப்போட்டு மனச ஒலட்டிக்காம, என்ன பிரச்சனையின்னாலும் மனச அலட்டிக்காம இருக்குறவரும் ரொம்பக் குடுத்து வச்சவரு என்பான்.நண்பன்,

இளையராஜாவின் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அவனுக்கு/

அதற்காக மற்றவர்களின் பாடல்கள் பிடிக்காது என்றில்லை,மற்றவர்களின் பாடல்களை விரும்பிக் கேட்கிறவன் இளையராஜாவின் பாடல்களுக்கு தன் மனதையும் செவியையும் ஒப்புக்கொடுத்திப்பான்,

அவனதுசெல்போனில்இளையராஜாவின்பாடல்களுக்கென தனிஇடம் ஒதுக்கி வைத்திருப்பான்.எங்காவது தனியாகப்போகும் பொழுதோ,இல்லை தனியாக இருக்கும் பொழுதோ,இல்லை மிதமான போதை கொண்டு தூங்கப் போகும் பொழுதோ இளையராஜாதான் துணை இவனுக்கு,

செல்போனில் ஆன் லைனிலும் ஆப்லைனிலுமாய் அவர் வருகிற பாடல்கள் காலை வாக்கிங்கின் போது கைபிடித்துக்கூட்டிப்போகும், ஓய்வு வேளைகளில் இதந்தரும் மனவருடியாய் மாறி இவனை சூழ்ந்து கொள்ளும்,

இன்பத்திலும் துன்பத்திலும்,,,,,,,பாட்டு,பாட்டு பாட்டுதான்,,,,,

அவனது சொந்தக்காரர் இறந்த அன்று துக்கம் சாவு வீட்டிற்கெல்லாம் போய் விட்டு வந்து அன்றைக்கு நாள் முழுக்கவும் செல்பொனில் இளையராஜாவின் பாடல்களை போட்டுக்கேட்டுக்கொண்டிருந்திருக்கிறான்,

வழக்கமாய்இவன் செல்கிற பஸ்ஸில் டிரைவர் இவனைப்பார்த்ததும் இளைய ராஜாவின் பாடல்களுக்கு உயிர் கொடுத்து விடுவார்,

இளையராஜாவின் பாடல்களை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருப்பவர்கள் தனியார் பஸ்ஸின் டிரைவரும் கண்டக்டரும்தான் போலும்/

”டேய் சாதாரண பாட்டுதான,ஜஸ்ட் லைக் தட்டுன்னு கேட்டுட்டுப்போக வேண்டியதான எதுக்குப்போயி இப்பிடி அலப்பற பண்ணிக்கிட்டி இருக்குற,,?” எனச்சொல்லும் இவனை ஏறிடுபவன்,,,,

”எது ஜஸ்ட் லை தட்டுன்னு சொல்லுற,,?சாப்பாட்ட ஒன்னால ஜஸ்ட் லைக் தட்டா நெனைச்சி சாப்புட முடியுதா சொல்லு, இன்னைக்கி என்ன கொழம்பு ,என்ன கூட்டு,ரசம் இருக்கா,மோரா இருக்கா,தயிரா ஒறைக்கி ஊத்துன மானிக்கி இருக்கா,பொங்கல் செஞ்சி ரொம்ப நாளாச்சி,அடிக்கடி தோசையா ஊத்திக் கொள்ளாத ,இன்னைக்கி கொஞ்சம் உப்புமா கிண்டலாமா,,,,,அது இது ன்னு எத்தனை கேக்குற,எத்தன சொல்லுற,சாப்பாட்டுல உப்பு கொறச்சலா இருக்கு,கொழம்புலகாரம் அதிகமா இருக்கு,சோறு கொஞ்சம் கொழஞ்சமாதிரி இருக்கு,கொஞ்சம் பொகையடிச்சுப் போயிருக்கு போல,,,?ன்னு டீப்போடுறது லயிருந்து சனி ஞாயிருல கறிக்கொழம்பு வைக்கிற வரைக்குமா என்னென்ன கேக்குற,என்னென்ன சொல்லுற,இதெல்லாம் சொல்லாமா கேக்காம எதிர்பாக் காம ஜஸ்ட் லைக் தட்டா ஏன் சாப்பாட்ட சாப்புட்டுக்கிட்டு போக மாட்டேங் குற,,,,,,?கெடைக்கிற சாப்புட வேண்டியதுதான,,,,”என்பான்.

”ஏண்டா சாப்பாடும் பாட்டும் ஒன்னா,,?” என்றால் ”ஒண்ணுமில்லதா,ஆனா வயிற விட மனசு முக்கியமில்லையா” என்பான்,,,,,

அவன் சொல்லில்எப்பொழுதும் ஒரு ஆழ்ந்த உண்மையும் வாழ்நிலை சார்ந்த தத்துவமும்இருக்கும்,ஆழ்ந்துபார்த்தால்கேட்டால்தான்அது தெரியும் ,மேலோ ட்டமாகபார்ப்பவர்களுக்கும்,கேட்பவர்களும்,பழகுபவர்களுக்கும் சாதாரணமா கத் தெரியும்,

இன்னும் சொல்லப்போனால் அவனைப்பார்க்க கோமாளி போலத் தெரியும், அதை அவன் காது படவே சொல்லிக் கேட்டிருக்கிறான்,

அது சம்பந்தமாய் இவனிடம் வந்து வருத்தம் கொள்கிற நாட்களில் ”விடு அதையெல்லாம்கண்டுக்காத,அப்பிடிபேசுறவுங்கள ஒரு ஆளா நெனைக்காத,”  என்பான் இவன்,,/

”நானும் அப்பிடித்தான் போயிக்கிறது உண்டு,ஆனா அது மீறி நடக்கும் போது கொஞ்சம் சங்கடமா இருக்கும்,”என்பான் நண்பன்/

”அப்படி நெனைக்காத நீயி,ஓங் பேச்சுல,ஓங்செயல்ல,ஓங் நடத்தையில ஒரு ஆழம் இருக்கு,அது ஒரு வித பக்குவம் சார்ந்தது,என்னையப்போல நெருங்கி பழகுனவுங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்,ஊரு சொல்லுது ஒலகம் சொல்லுதுன்னு ஓங் வழக்கத்த கைவிட்டுறாத,”,,,என்பான்.இவன்/

”இல்லபிரளயமே நடந்தாலும் அதைகைவிடுற மாதிரியெல்லாம் இல்ல, இருந் தாலும் சொல்லுறேன்” என்றவனை மனம் தட்டிக்கொடுத்து ”வா டீ சாப்பிடப் போவோம்” என்பான் இது போலாய் பேசிக்கொண்டிருக்கும் சமயங் களில்/

இப்படியெல்லாம் பேசுகிறவனை எதிர் கொள்கிற பொழுது ”தூக்கத்தை மடியி ல கட்டி வச்சிக்கிட்டா நான் தூங்க மாட்டேங்கிறேன்,வர மாட்டேங்குது நான் என்ன செய்யட்டும்,வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்,படுக்கையில விழுந்தா ஒடம்பு மட்டுந்தான் தூங்குது ,மனசு அப்பிடியேதான் முழிச்சிருக்குது., வயசா சில்ல” என்கிற இவனை இடை மறித்து,,,,என்ன ஒனக்கு வயசு அம்பத்தஞ்சி அம்பத்தேழு இருக்குமா சொல்லு” என்பான்.

”அதுஆயிட்டுப்போகுதுஅம்பத்தாறுஅம்பத்தேழுன்னு,,,,,வயசாகிப்போச்சின்னா அதுல்ல,,,,,,குடும்பம் புள்ளைக,அதுக படிப்பு,வேலை,கல்யாணம், பேரன், பேத்தி ஒடம்புல வர்ற பிரச்சனைக,,,,,,இப்பிடி ஆயிரம் இருக்கு, இதையெல் லாம் மொத் தமா சேத்துக்கட்டுன பேச்சுத்தா வயசான்னேன்னு சொல்லுற சொல்லு, தவிர்த்து வேற எதுக்காகவும் சொல்றதில்ல,இருக்குற கவலை எல்லாம் சேர்ந்துக்கட்டுன கல்லா மனசுக்குள்ள ஒக்காந்துக்கிட்டு அரிச்சிக் கிட்டு இருக்கும் போது தூக்கம் எங்கிட்டு வரும் சொல்லுங்க நண்பா” என்பான்,

அது எல்லாம் இல்லாட்டிக் கூட அப்பிடித்தான் இருக்கு,ஒடம்பு மட்டும் படுக் கையில கெடக்க மனசு எந்திருச்சி எளவட்டமா சுத்திக்கிட்டு வருது.

எழுந்து லைட்டைப்போடுகிறான்,பழகிப்போன வீடுதான்,கால் தடுமாறுகிறது கொஞ்சமாய்,

வழக்கத்திற்கு மாறாய் நான்கைந்து தடவைகள் மினுக்கி விட்டு எறிந்தது ட்யூப் லைட்,,,,,/

பெயிண்ட்அடித்த சுவர் ,கிராதி வைத்த ஜன்னல், புத்தகங்கள் சுமந்த அலமாரி, தேங்காய் எண்ணெயும் முடி சுற்றியிருக்கிற சீப்புமாய் இருந்த கடப்பக்கல் வைத்த செல்ப்,இறுக மூடியிருந்த கதவு என எல்லாம் பளிச்சிட்ட போதும் கூடஉயிரோவியமாய் படுத்தக்கிடந்த மனைவி பிள்ளைகள் கண் நிறைத்தார் கள்,

வேறு ஊருக்கு மாற்றலாகிப்போனதிலிருந்து வீட்டை கவனிக்க முடியவில் லை,

காலையில் எட்டு மணிக்கு வீடு விட்டுக்கிளம்பிப்போனால் இரவு எட்டு மணிக்குத்தான் வர முடிகிறது.,சமயத்தில் ஒன்பது மணியாகிப் போகிறது,

அலுவலகம் அது விட்டால் வீடு,வீடு அது விட்டால் அலுவலகம் என சுற்றி வருகிற வாழ்க்கை,,/

”கை வண்டி இழுத்து தன்னோட பொழப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவரு தான் ஏங் பக்கத்துத்தெருக்காரரு,அவருக்கு வயசு நல்லா சொல்லணுமுன்னா இப்பயெல்லாம் அறுபதுக்கு மேலதான் சொல்லலாமே தவிர்த்து அதுக்குக் கொறைஞ்சி சொல்லீற முடியாது,மேல்லச் சட்டை போட மாட்டாரு, இறுக்கிக் கட்டுன கைலி மட்டுந்தான்,என்னைக்காவது ஒரு நாள் வெள்ளை வேஷ்டி கட்டுவாரு,இது ரெண்டுல எது கட்டுனாலும் சரி அது கூட கண்டிப்பா ஒரு துண்டு இருக்கும்,

மொரட்டுத்தனமா நெயப்பட்ட தடிமனானதுண்டு, சிவப்புக் கலர்ல கட்டம் போட்ட துண்டு,

”அதுஏன்அப்பிடிஒரு கலர்ல எடுக்குறாங்கன்னுதெரியல,ஒரு வேளை அவுங்க உரிமை பேசுற அவுங்களோட சங்கத்துக் கொடி செவப்பா இருக்குறதுனால யோஎன்னவோதெரியல, அதையேஅவுங்களோடமனம் பிடிச்ச கலரா தேர்தெ டுத் துக்குறாங்க,

ஆனா அந்த சங்கத்துல இருக்குற இன்னும் சில பேரு அப்பிடியெல்லாம் எடுக்குறதில்ல,

சங்கப்பிடிப்புங்குறது மனசுல இருந்தா போதும்,அத துண்டு போட்டும் வேஷ்டு கட்டியும்தான் காண்பிக்கணுமுன்னு அவசியம் இல்ல என்பார்கள்,

அப்பிடி சொல்லுறவுங்க சொல்லும் ஞாயமாத்தான் இருந்துருக்கு.

”அதுக்காக துண்டு போட்டவுங்க ஞாயம் இல்லாதவுங்க இல்ல,அப்பிடிப்போட் டா தேவலைன்னு தோணிருக்கு போட்டுருக்காங்க,அவ்வளவுதான்,,”,

”அதுக்குஅவுங்கதன்னையேஒப்பும்குடுத்துக்குறாங்க,அதுனாலத்தான்பாத்தியி ன்னா மேதினக் கொண்டாட்டத்தப்பயெல்லாம் அவுங்க முழு ஈடுபாட்டோட கலந்துக்கிறாங்க, ஊர்வலம் கூட்டம் கொடி தோரணம், ரேடி யோ செட்டுன்னு அன்னக்கி ஒரு நாளுல அவுங்க கரைஞ்சி நிக்கிறாங்க,

”அவுங்க மட்டும் இல்ல வேற சங்கத்துல இருக்குறவங்களும் அன்னைக்கி ஒரு நாளு அத திருவிழாவா கொண்டாடுறாங்க,

”இன்னும் சில பேருன்னா சங்கத்துல சீட்டுக்கட்டி,பொங்கல் வச்சி பண்டம் பாத்திரம் எடுத்து சேலை துணி மணி வேஷ்டி சட்டைன்னு கலக்கீருவாங்க,”

அப்பிடி இருக்குற பக்கத்துத்தெருக்காரருக்கு இன்னும் ஒழைச்சித்தான் சாப்பு டுறாரு,இப்பயெல்லாம் கைவண்டி கெடையாது,அதுக்குப்பதிலு மூட்டை தூக்கப் போயிறாரு,

அவரு இந்த வயசுலயும் கல்லத் தின்னாக்கூட செமிச்சிறுவாரு போல இருக் கு,என்பான்,

”அவரு மத்தியானம் வீட்டுக்கு சாப்புட வருவாரு,இன்னும் தனியாத்தான் பொங்கி சாப்புட்டுக்கிறாரு,மகன் வீடு பக்கத்துல இருந்தாகூட அங்க போக மாட்டாரு,

”அவுங்களப்போயி எதுக்கு சங்கடப்படுத்திக்கிட்டு,நம்ம கைகாலு நல்லா இருக் குற வரைக்கும் கை ஊனி கர்ணம் பாய சத்து இருக்குற வரைக்கும் நம்மலா ஒழைச்சி சாப்புடணும்,

”அது முடியாதுன்னு போறப்பதா பிறத்தியாரு ஒதவிய நாடனும்,இன்னும் சொல்லப்போனா முடியலைன்னு ஆகிப்போற நேரம் படக்குன்னு சாவு வந்து ரணும்,மகராசிஏன்பொண்டாட்டி சின்னப்புள்ள மாதிரிஎன்னைய பாத்துக் கிட்டா, அவபோனப்பயே நானும் போயி சேந்துருக்கணும்,இப்பஒண்ணும் கொறவில்ல,மகனும்மருமகளும் நல்லாத்தான் பாத்துக்கிறாங்க,இருந்தாலும் அவஇருந்தது போல வருமான்னு சொல்றவரு எந்த கூட்டம் நெறஞ்ச யெடத்துலயும் கூட அவர் வாட்டி கூட அவரு வாட்டி கட்டாந்தரையில துண்ட விரிச்சி படுத்து தூங்கீருவாரு/ அது அவரு மூட்டை தூக்கபோற மில்லா இருந்தப்பயும் சரி, எந்நேரமும் ஆட்கள் நடமாடிக்கிட்டு இருக்குற பஜாரா இருந்த போதும் சரி அப்பிடி ஒரு ஒடம்பும் மனசும் வாய்ச்சிருக்கு அவருக்கு/” என்பான் நண்பன்/

கட்டம்போட்ட லுங்கியும் மயிர் கால்கள் நீண்டிருந்த வெற்று உடலும் தலை தாங்கியிருந்த தலையணையும் தரை மூடி விரித்திருந்த கோரைப் பாயும் கொஞ்சம் சிறிது இடைஞ்சல் காட்டியே படம் விரிக்கிறதாய்,/

விரிவு காட்டிய படத்தில் பட்டுத்தெரிகிற விரிசல்களாய் ஆங்காங்கே இவனது மனப்பதிவும்,,,/

கையையும் காலையும் படர விட்டுப்பார்க்கிறான்,முடிந்த வரை எட்ட நீட்டி கிளைவிரித்து இலைபரப்பி காய்த்தும் பழுத்தும் பூத்தும் பார்க்கிறான்,

மண் கீறி முளைத்த தளிர் ஒன்று துளிர் விட்டு தன் நிலை காட்டி மண் ஊன்றிய நிலை கொண்ட நிமிடங்கள் சாஸ்வதமாகித் தெரிகிறது,

வேர்த்த உடலும் பிசுபிசுத்த மனமும் ஒன்றாய் கலந்து கை கோர்த்த கலவை தூக்கத்தை எட்டி உதைத்தது.எரிச்சலாயும் கோபமாயும் வந்தது. பேன் காற்று அப்படி ஒன்றும் இதந்தருகிற விதமாய் இல்லை,

மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறான், தூக்கம் வரவில்லை,புரண்டு படுத்துப் பார்க்கிறான்,தூக்கம்வரவில்லை,குறுக்கியகால்களுக்குள்ளாய்கைகளைஅண்டக் கொடுத்துப் படுத்துப் பார்க்கிறான், எழுந்து கொஞ்சம் உட்கார்ந்து பார்க்கிறான் ,அப்பொழுதும் கூட தூக்கம் வரவில்லை.

யோகாசன நிலையில் மல்லாக்கப் படுத்தவாறே மூச்சை ஆழ உள்ளிழுத்து விட்டவனாய்கால்களைசம்மணமிட்டுப் பார்த்தான்,ஹீம்தூக்கம்வரவில்லை, மணி என்ன இருக்கும்,,?சரியாகத் தெரியவில்லை,

எழுந்து போய் பார்க்கலாம் என்றால் மனது வரவில்லை,அப்படியே படுத்து உருண்டு கொண்டே இருந்தான். அதுவும் சுகமாகவே இருந்தது,ஒண்ணுக்கு வருவது போல் இருந்தது.ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை, நோயுற்றவனின் இரவும் வேலையற்றவனின் பகல் பொழுதும் அவ்வளவு சாமான்யமாய் நகர்வதில்லை, என்பார்கள், இவன் நோயுற்றவனும் இல்லை. வேலையற்றவனும் இல்லை.

அன்றாடங்கள் தூக்கமற்றும் தூக்கம் கொண்டுமாய் நகர்கிறதுதான்/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட என் (பாட்டு) நண்பர்கள்...!

vimalanperali said...

பாடல்கள் எல்லோருக்கும் நண்பர்கள்தானே(இதந்தருகிற)