24 Aug 2019

துளிகளின் இலையாய்,,,,,

டிப்போவுக்கு பால் வாங்கச்செல்கிற தினங்களில் பார்க்கிற மாரியம்மக்கா இவனது சொந்தமோ உடன் பிறந்தவளோ அல்ல,

”என்னடாஎப்பிடியிருக்க,,,?பெரியஆளாஆயிட்டீங்கடாநீங்களெல்லாம்,வீட்டுப் பக்கமோ, டிப்போப் பக்கமோ பாக்க முடியல முன்ன மாதிரி”,என்பாள்,

ஆமாம்அவள் சொல்வதிலும் வாஸ்தம் காத்து இல்லாமல்இல்லை,ஏதோ ஒரு வேலையை முன்னிறுத்தி எங்காவது அலைந்து கொண்டுதான் இருக்கிறான்,

”உக்காரநேரமில்லாத,,,,” சொல் போல் ஆகிப்போனது சிறிது நாட்களாய் இவன் பிழைப்பு/

ஆனால்அதை அவளிடம் சொல்லி விட முடியாது,”கோ,கொல்லே” என சப்தமி டுவாள்,

“ஆமாடா எங்கள வந்து பாக்கணுமுன்னா மட்டும் ஒங்களுக்கு வேலை மொ ளைச்சி வந்துரும்,ஆனா என்.ஜி.ஓ,,,,காலனிப்பக்கம் போகும் போது இருக்குற வேலையும்உதுந்துபோகும்அப்பிடித்தான,,,”எனஇடுப்பில்கைவைத்து முறைக் கும் போது தலை குனிந்து விடுவான்.

அவளிடம் போய் ”ஜன்னலைத் திறந்து விடு,காற்று வரட்டும்,கூடவே காதலும் தான்,,,”என்கிற சொல் எனக்குப்பிடித்திருக்கிறது அதனால்தான் தேடி அலைகி றேன் காதலையும் காதல் கொண்டவளையும்/

மனம் பிடித்தவள் அங்கு இருக்கிறாள்.கல்லூரியில் இளங்கலை பயின்ற போது துளிர்த்த காதல் முதுகலை பயிலும் போது அவள் படிப்பைத்தொடர முடியாமல் கல்லூரியை விட்டு வெளியேறி விட விட்ட காதலை தொட்டுத் தொடர்கிறேன் அவ்வளவுதான்,

அவளது வீட்டில் அவளுக்கு மணம் முடிக்க திட்டமிட்டிருப்பதாய் அறிந்தேன், ஒரு அதிகாலையில்/ ஒரு வேளை அவளது படிப்பை அதற்காகக்கூட நிறுத்தி யிருக்கலாம்,அதனால் ஒன்றுமில்லை இப்பொழுது,

ஆனால் அவளிடம் இன்னும் என் மீது மாறாத அன்பும் வற்றிப்போகாத காத லும் மீதம் இருக்குமானால் அவளை கூட்டி வந்து மணம் முடிக்கலாம் என திட்டம்என்பதை இவளிடம்சொல்லமுடியுமா,சொன்னாலும்ஒத்துக் கொள்ளக் கொள்வாளா,,,,?

”வசந்தத்தின் வாசலில் வாசம் வீசி நிற்கிற புத்தம் புது மலராய் நானும் நீயும் கைகோர்த்து நிற்கிற நாள் நமக்கு வசந்தம் வீசுகிற பொன்னாள்” என கல்லூ ரியில் காதலியிடம் பேசிய ஆசையை மாரியம்மாக்காவிடம் சொல்ல முடியு மா தெரியவில்லை,சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டாள்,

ஆனால் காதலியை கைபிடிப்பதென முடிவாகிப்போனால் மாரியம்மாக்க போ ன்றவர்களின் துணைதான் தூணாகக்காத்து நிற்கும் எனச்சொல்லலாம்.

இதை தயங்கித்தயங்கி மாரியம்மாக்காவிடம் சொன்ன போது ”அடக் கிறுக்கா, இதச்சொல்லவாஇம்புட்டு யோசிச்சிக்கிட்டு நின்னவன்,ஒரு வகையில பாத்தா நானும் ஓங் மாமாவும் இப்பிடித்தான கல்யாணம் பண்ணிக்கிட்டம்,

”நான் இல்லாட்டி அவரு இல்ல,அவரு இல்லாட்டி நானு இல்லங்குற மாதிரி யெல்லாம் இல்ல,ரெண்டும் வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பந்தான்,எனக்கு அவரப்புடிச்சிருந்துச்சி,அவருக்கு என்னையப் புடிச்சிருந்துச்சி,

அதுக்காக ஒங்களப்போல காலேஜு மாதிரி கவிதை கிறுக்கிக்காட்டியெல்லாம் அந்த மனுசன்கிட்ட ஏங் மனசச்சொல்ல,

”அவரா ஏங் நடவடிக்கயைப் பாத்து புரிஞ்சிக்கிட்டாரு,பக்கத்துத் தெருக்காரரு தான், அவுக வேற நாங்க வேற ,

”லோடு மேன் தான்னாலும் மத்தவங்க மாதிரி தண்ணிய கிண்ணியப் போட் டுக்கிட்டுசலம்பிக்கிட்டெல்லாம்இருக்கமாட்டாரு,வேலைக்கிப்போகவீட்டுக்கு வர தானுண்டு தான் வேலையுண்டுன்னு இருப்பாரு.,

”தன்னைச்சேந்த லோடு மேனு யார் வீட்லயாவது கல்யாணம் ,காது குத்து, கோவில் பொங்கல்ன்னா போயி முன்னாடி முன்னாடி நிப்பாரு,அது போல அவுங்க வீட்ல ஏதாவது பிரச்சனை,ஆஸ்பத்திரி ஜோலின்னாலும் மொத ஆளா ஆஜராயிருப்பாரு அங்க,

இவரு அப்பிடிப்போயி நிக்குறதுமழையில நனைஞ்சி நிக்கிற கோழிக்குஞ்சு க்கு தலை தொவட்டி பஞ்சாரத்துல அடச்ச மாதிரி இருக்கும் அவுங்களுக்கு/

”எங்க அப்பாவும் லோடு மேனுதான்,இவரும் அவரும் ஒரே மில்லுலதான் பதிவா வேலை பாத்தாங்க,பொதுவா அங்க வேலை பாத்த பழக்க வழக்கத் துலயோ என்னவோ எங்கப்பா அவர மாப்புள,மாப்புளைன்னுதான் கூப்புட்டுப் பழகீருக்காரு,அவரும் மாமங்குற வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமத் தான் பழகீருக்காரு,அதுவே பிற்காலத்துல உண்மையாவும் ஆகிப்போச்சி,

”யேய்,இதுக்குத்தானப்பா,அவன மாப்புள மாப்புளைன்னு கைக்குள்ள போட்டுக் கிட்டுத் திரிஞ்ச,,,”,என உடன் இருப்பவர்கள் சொல்லும் போது கடகடவென சிரித்து விடுவார்,

”ஏம்பா எதுக்கெடுத்தாலும் இப்பிடி சிரிச்சிற்ரயேப்பா,,,எனகேட்கிற சமயங்க ளில் சிரிப்பு ஒரு அரு மருந்தப்பா,அது வர்ற கோவத்தக்கூட முழுங்கீரும், அதான் வலிய சிரிச்சிக்கிறேன் பல சமயங்கள்ல பல விஷயத்துல/

”வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போகுதுங்குறாங்க அது யாருக்குப் பொரு ந்துதுதோ இல்லையோ எனக்குப் பொருந்துது.அதான் எதுன்னாலும்அப்பிடியே பதனமா போயிக்கிறது” என்பார்,

”அப்படித்தா அவர் பேச்சும் பழக்கமும் அங்க இருக்கும்,யாரு கிட்டயும் மொற ச்சிக்கிற மாட்டாரு,யாருகிட்டயும் பகமை பாரட்டிக்கிற மாட்டாரு,யாரையும் பகைச்சிக்கிற மாட்டாரு,யாரு கிட்ட பேசுனாலும் பதனமா பேச,பதனமா அணுக,பதனமா நடந்துகுறங்குற பக்குவத்த இன்னைக்கி வரைக்கும் மடியில கட்டி வைச்சி காப்பாதிக்கிட்டு வர்றாரு,

”ஆனா லோடு மேன்களுக்கான பிரச்சனைப்பத்தி அவுங்க யூனியன்ல போயி பேசும்போது தொண்ட நரம்பு பொடைக்கிற மாதிரி டாண்,டாண்ணு பேசுவாரு, அவரளவுக்கு அப்பிடி பேச அங்க யாரும் இல்லைன்னு பெருமையா சொல்ல லாம்.

அவுங்க கூட வேலை பாக்குற ரெண்டு மூணு லோடு மேன்க கூட என்னைய கேலியா பேசுவாங்க,

என்னதலைவரம்மா,நல்லாஇருக்கீங்களான்னு.எனக்குத்தான்கொஞ்சம்சங்கட மா இருக்கும்,அவருகிட்ட சொன்னா விடும்மா கள்ளம் கபடம் இல்லாத வெள் ளைப் பேச்சுமா அது,அத தப்பா எடுத்துகாதன்னுவாரு.,,,,,

”எங்கப்பாவுக்கு சோறு கொண்டுபோகும் போது அவரோட அம்மா வீடு தேடி வந்துஏங்புள்ளைக்கும் சேத்துக்கொண்டுபோயி குடுத்துருன்னுவாங்க, நானும் வாங்கீட்டு வருவேன் சமயத்துல அவுங்களும் கூட வருவாங்க, அப்பிடி கூட வர்றநாட்கள்ல மில்லுக்கு வர்ற வரைக்கும் ஒண்ணும் பேசிக்கிற மாட்டாங்க, நான் கூட நெனைக்கிறதுண்டு,ஒரு வேளை நம்ம மேல ஏதாவது கோபமா இருப்பாங்களோன்னு,ஆனா போகப்போகத்தான் தெரிஞ்சி அவுங்க இயல்பே அப்பிடித்தான்னு,

”நான் அவுங்கள அத்தையின்னுதான் கூப்புட்டேன்,அப்ப அப்பிடிக்கூப்புட்டது பிற்பாடு நெஜமா மாறிப்போச்சி,

”அப்பிடி நெஜமா மாத்த நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல,அவரும் வீட்ல சொல்லிப்பாக்குறாரு,நானும் ஏங் வீட்ல சொல்லிப்பாகுறேன்,கேக்குற வழியி ல்ல,ரெண்டு வீடும் தலை கீழா நிக்குது,

”பையனப்பத்தியோ அவன் கொணம் பத்தியோ அவன் சம்பாத்தியம் பத்தியோ கவலை இல்லமா எனக்கு,ஆனா அவுங்க வீட்டாள்கதாம்மா எனக்கு புடிக்கல, அதுக்குத்தான் கொஞ்சம் மலைப்பா இருக்கு என மலைப்பை பெருசா பேசுன அப்பாவும்,அவரு வீட்டாள்களும் நாங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் ஆபீஸில போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு மாலையும் கழுத்துமா வீட்டுக்கு வந்து நின்னப்ப மனசலவுல கொமைஞ்சி நின்னாகளே தவிர்த்து பெரிசா ஒண்ணும் சொல்லீறல,,,,/

”ஏன்னா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிகூட்டிக்கிட்டு வந்ததே அவரு யூனியனு தலைவர்ங்கதான்,

”ஏற்கனவே அவங்க வந்து எங்க ரெண்டு பேரு வீட்லயும் பேசிட்டுத்தான் போனாங்க,எங்க கல்யாணத்தப்பத்தி,ஆனாலும் இழுபறியா இருந்ததுனால இப்படியாகிப் போச்சி/

”அன்னையிலஇருந்துஇன்னைக்கிவரைக்கும் எங்களுக்குள்ள பெரிசா சண்டை சத்தமுன்னு வந்ததில்ல,கஞ்சிக்கு இல்லாத பொழுதுகள்ல கூட சந்தோஷ மாத்தான்இருந்துக்கம்,மத்தபடிலேசாஅப்பப்பவர்றஒரசல்கதான்,அதத் தாண்டி பெரிசாஒண்ணுமில்ல,நல்லாத்தான்ஓடிக்கிட்டுஇருக்கு,அவரும்இதுநாவரைக் கும் ஒரு சுடு சொல்லு சொன்னதில்ல என்னைய,அது போலத் தான் புள்ளை ங்க ரெண்டும்,,,/

“அப்பிடியாப்பட்ட என்னையப்பாத்தா ஓங் காதல் கல்யாணத்துக்கு சம்மதிப்பே னா இல்லையான்னு கேக்குற,,,கிறுக்கா”என முற்றுப்புள்ளி வைப்பாள் அந்தப் பேச்சிற்கு/

“இல்லக்காஅப்பிடியெல்லாம் இல்ல,,,,ஒங்க தலைமுறைவேற,எங்க தலை முறை வேற,அதான் ஒரு சின்ன தயக்கம்,

”நேத்துக்கூட காலையில பால் வாங்க வந்துருந்தேன்,வீட்ல அம்மா தயிர் ஊத்தி வைக்க மறந்துட்டாங்க ,கேட்டதுக்கு பாக்கெட்டுப்பாலுதான் இருக்கு ,அதுலதயிருக்கு ஒரை ஊத்தி வச்சா மாவக்கரைச்சிக்குடிச்சமாதிரி இருக்கும், வேணாமுன்னுட்டாங்க,அதான் தயிர் வாங்கீட்டு பாலும் சேத்து வாங்கீட்டுப் போகலாமுன்னு வந்தேன்.

“வந்தஎடத்துல ஒன்னையக்கேட்டப்ப நீ வரலைன்னாரு டிப்போக்கணக்குப் புள்ள,என்னஎதுனாலும்ஒடம்புகிடம்புசரியில்லையோன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன், ,ஒனக்குத்தான் காலையில ஒடம்பு சரியாயிருக்கும்,சாய்ங்காலம் ஒடம்பு சரியில்லாமப்போகுமே,,” என இவன் சொன்ன போது அவள் நொந்து போய் சிரிப்பதாய்ப் பட்டது,

”என்ன செய்யப்ப என்னைக்கு பொண்ணா ஜென்மம் எடுத்தமோ அன்னைக்கே சின்னதுலயிருந்து பெரியது வரைக்குமா எதாவது ஒரு நோய் வந்து இலவச மா ஒக்காந்துக்குருது,

”உக்காந்துக்குறது மட்டுமில்லாம உசுரையும் சேத்துல்ல வாங்குது.அட அது கூடபரவாயில்லைன்னுவிட்டுட்டுப்போயிறலாம்.ஆனாஅன்றாடவேலைகளக் கூட ஒழுங்கா செய்யக்கூட விடாம படுத்தி எடுக்குது பாரு,அதுதான் இப்ப பெரிய ரோதனையா இருக்கு” என்பாள்.சிரித்துக் கொண்டே,,/

”எப்படிக்கா இப்பிடி எதுக்கெடுத்தாலும் சிரிக்கிற என்றால் வருதுடா தானா ,வர்றதைஎன்னஅணைகட்டியா நிறுத்த முடியும்,,,,,?

“என்னையப்பொறுத்தஅளவுக்குஅதஒருபெரியவரப்பிரசாதமாத்தான்நெனைக்
கிறேன், அப்பிடி நெனைக்கிறது மட்டுமில்லாம என்னால முடிஞ்சளவுக்கு கையாண்டுக்கிட்டும்வர்றேன்,தேவையில்லாட்டிக்கூடவம்பாசிரிச்சிக்குருவேன், வம்பா பேசிக்குருவேன், மலர்ந்துக்குருவேன்,

”நான்என்னைக்கி ரொம்ப சிரிச்சிப்பேசுறனோ அன்னைக்கி ஒடம்பு ரொம்ப தொந்தரவு பண்ணுதுன்னு அர்த்தம் .இதெல்லாம் மென்னு தின்னுட்டுத்தான் ஓட வேண்டி இருக்கு,ஓடிக்கிட்டும் இருக்கேன்”,என்பாள்.

”ஓடிக்கிட்டே இருக்குறதெல்லாம் சரிதான்.ஓட்டத்தோட வேகத்துல ஓடுற கால்களையும் கால்களுக்கு சொந்தமானவங்களையும் மறந்துறக்கூடாதுக்கா” என்பான் இவன்.

இருள் அகலாத மூன்றரை மணியின் அதிகாலைப்பொழுதிற்கு திறந்து விடு கிற பால் டிப்போவிற்கும் குருசாமியின் டீக்கடைக்கும் ஏதாவது உறவிழை நூற்பு இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

டிப்போவில்முடியிடப்பட்டிருக்கும் கயிறுடீக்கடையில் போய் கதவு திறக்கும்,

அதிகாலையின்மூணுஅல்லது இரண்டரை மணி,தூக்கம்இமைகளை அழுந்தப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிற நேரம்.

ஊரேகட்டிப்போட்டது போல் தூங்கிக்கொண்டிருக்க பால் டிப்போவின் உரிமை யாளர் பாதை பிளந்து இரு சக்கர வாகனத்தில் வேகம் காட்டி வந்துருப்பார்.

அவரது வீடு டிப்போவிலிருந்து ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கும்,

முன்னெல்லாம் சைக்கிள்தான் ,இப்போதுதான் இரு சக்கர வாகனம்/

இரு சக்கர வாகனம் வாங்குற அளவிற்கு வசதி வந்து விட்டது என்றெல்லாம் இல்லை.

இன்னமும் கரை கஞ்சிதான்/

டிப்போவில் வேலை பார்க்கிற நான்குபேருமாய் ஆளுக்குக்கொஞ்சம் பணம் போட்டு அதை முன் பணமாய் கட்டி கணக்குப்பிள்ளைப் பெயரில் நகரின் முண்ணனி ஷோரூமில் அவருக்குப் பிடித்த கலரில் ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

அவர் பெரிய அளவில் பிகுவெல்லாம் பண்ணிக்கொள்ளவில்லை,

”இப்போ இருக்குற நெலைமையில இது தேவையான்னு தோணிச்சி,இன்னும் கொஞ்சம் நாளு கழிச்சி நானே வாங்கிப்போடலாமுன்னு நெனைச்சேன், அதுக்குள்ள அவசரக்குடுக்கைகளாயிட்டீங்க,பரவாயில்லை இதுலையும் ஒரு நன்மை இருக்கு,நானா வாங்கணுமுன்னு நெனைச்சா ஒரு வேளை வாங் க முடியாமக் கூட போயிருக்கலாம்.

ஆனால் அப்படிச்சொன்னவர் வண்டி வாங்கிகொடுத்த அன்று நேராகபூக்கடை க்குப் போய் மாலை வாங்கி வண்டிக்கு மாட்டிவிட்டு விட்டு முருகன் கோவி லில் போய் தேங்காய் உடைத்து விட்டு வந்தார்,

அவர் மாலை வாங்குவதற்கும் பூ வாங்குவதற்கும் தனியாக கடை ஒன்று கண்டு பிடித்து வைத்திருக்கிறார்,

அங்குதான் போவார் ,அந்தக்கடை பூட்டியிருக்கிற நாளில் அவசியம் கருதி எங்காவது மாலை வேறு கடைகளில் மாலை வாங்க வேண்டுமென்றால் அவரது முகம் ஏழு கோணலாகப் போகும்.

மனம் பிடித்த இடம் ,மனம் பிடித்த மனிதர்கள்,,,ஒரு வளையத்திற்குள்ளாய் அமைந்து விட்டால் நடப்பது எல்லாம் நன்றாக அமையும்தானே,,?

அதுதான் அவரது கணக்கு, அவரு அப்பிடித்தம்பா ”அவரையெல்லாம் நிமித்து றது கஷ்டம் என்பார்கள்” அவரது காது படவே/

பூ வாங்குவதில் மட்டுமல்ல பலசரக்கு காய்கறிகள் கறிக்கடை எல்லா வற்றிலும் அவரது நடைமுறை இப்படித்தான் இருக்கும்,

அங்கும் அவர் குறித்த பேச்சு அப்படித்தான் இருக்கும், அதை கேட்டுக் கொண் டே கேட்காதது போல் இருந்து விடுவார்,மிகவும் குடைச்சலான பேச்சுக்கள் காதில் வந்து மோதுகிற நேரங்களில் பதில் சொல்லுவார்.பன்னி ஒரச வருது ன்னு நாமளும் போயி பதிலுக்கு ஒரசீற முடியாது/ அப்பிடி ஒரசுறதும் புத்தி சாலித்தனம்இல்லை ஒடம்பெல்லாம் சேரும் சகதியுமா அசிங்கமாகி நாறிப் போவோம்.இப்ப ரோட்டுல தண்ணியப்போட்டுக்கிட்டு ஒருத்தன் ”ஆத்தா, அம்மான்னு,,,,” பேசீட்டுப் போறான்னு வையிங்க பதிலுக்கு அவன் பக்கத்துல போயிக்கிட்டு நாமளும் பேசீட்டா திரியிறம்,அது போலத்தான்,போறான் தரா தரம் இல்லாத நாயின்னு விட்டுறணும்” என கடகடவென ஒரே சிரிப்பாய் சிரிப்பார்மூச்சு வாங்காமல். சொல்லி வைத்தது போலவும் அச்சடித்தது போல வுமாய் இருக்கும் அவரது சிரிப்பு பார்ப்பதற்கு சந்தோஷமாய் இருக்கும்,

அவருக்கும் சிரிப்பு ஒரு மகா பிரசாதம்தான் போலிருக்கிறது,

அவரைப்போலஎல்லோருக்கும் இது கைவரப்பெறுமானால் இல்லை வாய்க்கு மானால் நல்லது என நினைக்கத்தோனுகிறதுதான்,

டீக்கடையின் நூழிலை டிப்போவை திறக்கிற போது அவருக்குக்காத்திருக்கிற வேலை போல இவருக்கும் காத்திருக்கும்.

டீக்கடைக்காரர் வாசல் கூட்டி நடை தெளித்து கொண்டிருக்கும் போது அவ் வழியாக திருச்சுழிக்குச் செல்லும்பஸ் மூணே முக்காலுக்கு வந்து நிற்கும்,

அந்த ஏரியா பஸ்டாப்பில் நிற்கிற பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடோடி வருகிற கண்டக்டர் இருநூறு பால் வாங்கிக்கொண்டு வந்த வேகத்தில் போய் பஸ் ஸேறி விடுவார்.

டிரைவரும்,கண்டக்டரும் அந்நேரம் டீப்போட்டுக் குடிக்கவே அந்தப்பால்/ பஸ்ஸில் இருக்கிற மின்சார டீக்கொதிகலனில் டீப்போட்டுக்குடித்து விடுவா ர்கள்,

கடையில் குடித்தால் காசும் போவதோடு மட்டுமல்ல,இஞ்சி தட்டிபோட்டுக் குடிப்பது போல் ருசி இருக்காது என்பார் மூன்று பேரும் ஒன்று சொன்னாற் போல./

டிரைவர் ஒருவர்,இரண்டு கண்டக்டர்,கூட்டம் இல்லாத நேரங்களில் ஒன்றும் இல்லை,கூட்டம் இருக்குற நேரங்களில் கண்டக்டர்கள்இரண்டு பேருக்கும் விழி பிதுங்கிப் போகும்.

”தந்தன்னதத்தன்ன,,,,,,தந்தன்னதத்தன்ன,,,,,தன்னானாவுக்கும்,,,,”கண்ணதாசன் வரிகளுக்குமாய் மனம் குழைவாள்,

சமயங்களில் மனமாட்டிக்கொண்டே நின்று விடுவாள் சமைந்து/

”யக்கா,என்னாக்கா,,,”என்கிற குரல் அவள் தோள் தொட்டு உசுப்புகிற போது திடுக்கிட்டு விழிப்பவளாய் ”டேய் என்னடா தம்பி நீ எப்படா வந்த,சத்தமில் லாம பூனைகுட்டி மாதிரி வந்து நிக்கிறியேடா” என்பாள்,

”அட போக்கா நான் வந்து நின்னு அஞ்சி நிமிசத்துக்கு மேலாகுது,இப்ப வந்து கேக்குறயேக்கா” என்பான்,

”இல்ல தம்பி அப்பிடி ஆகிப்போச்சி மனசு,ஆம்பளைக நீங்க போனா போன யெடம் வந்தா வந்த யெடமுன்னு,,,,,டீக்கடைக்குப்போக,உக்காந்து பாட்டுக் கேக்க,நாலு பேரு கூடஅப்பிடியே பேச கதையடிக்கன்னு மனசஆத்திக்கிறீங்க, எங்களச்சொல்லுங்க,இப்பிடி வெளியில வர்ற யெடத்துல யாரு கூடயாவது பேசிக்கிட்டும் பாட்டுக் கேட்டுக்கிட்டும் இருந்தாத்தான் உண்டு,

”அதுலயும் மனசுக்குப்பிடிச்ச பாட்டு கேக்க வாச்சிருச்சின்னா வேற எதுவும் வேணாம் ,சாப்பாடு தண்ணி கூட மறந்துருவேன்.

”ஆமாக்கா நீயா சாப்பாடு தண்ணி மறக்குற ஆளு,அடப்பாவமே,வேற யாரச் சொன்னாலும்நம்பலாம்,ஒன்னையச்சொன்னாநம்பமுடியுமாசொல்லு,அதுவும் அத நீயே சொல்லிக்கிட்டா எப்பிடி,,,?

”எங்க நல்ல அரிசி கெடைக்குது,எந்தக்கடையில பிரஷ்ஷா காய்கறி விக்கி றாங்கன்னு தேடித்தேடி வாங்கீட்டு வந்து சமைக்கிற ஆளு நீயி,நீயி இப்பிடிச் சொன்னியின்னா எப்பிடி நம்புறது,,,?என்பான் பதிலுக்கு இவன்,

”போடா டேய் போடா கிறுக்கா,”நம்பாட்டிப்போ நீயி,,”என சிரித்தவாறே பதில் சொல்லி விட்டு அகன்று விடுவாள் அந்த இடத்தை விட்டு,,,/

அந்தநேரத்தில் டீக்கடையிலிருந்து கசியும் பாடல்களுக்காகவேணும் தினசரி யாய் டிப்போவுக்கு வர வேண்டும் என்பாள்.

இருள் விலகா இளம் காலைப்பொழுதின் அந்நேரத்திற்கு எனது கடை மட்டும் தான் இந்த ஏரியாவாசிகளுக்கு முதல் அறிமுகம் என சொல்லாமல் சொல்லு வார் டீக்கடைக்காரர்/

அவரது கடைக்கு டீக்கடை என பெயர் வைத்ததற்குப்பதில் இசைக்கடை என வைத்திருக்கலாம்.

அவருக்கு இன்னார் பாட்டு ,இவரது இசை,,,என்கிற கணக்கெல்லாம் இல்லை, வஞ்சனையில்லாமல் அனைவரது பாடல்களையும் ஒலிக்கச்செய்வார்,

அனைவரது பாடல்களையும் கேட்பார்,அனைவரது பாடல்களையும் கேட்கச் செய்வார்/

”என்னண்ணே இப்படி,,,” என்றால் இருக்கட்டுமப்பா,எனக்கு ஒன்னைய மாதிரி ரசனை மட்டமெல்லாம் கெடையாது,

அதென்னமோ மேட்டூர் அணை நீர் மட்டம் மாதிரி ரசனை மட்டம்ன்னுக்கு றீங்க,உணர்வு மட்டமுன்னுக்குறீங்க,\எனக்கு அதெல்லாம் தெரியதுப்பா, கேக் குறதுக்கு பாட்டு நல்லாயிருக்கா கேட்டு ரசிக்கிறுவேன் அவ்வளவுதான் எனச் சிரிப்பார், அவரது சிரிப்பே இசை வைத்தது போல் இருக்கும்.

நீலக்கலரில் புடவை,அதற்கேற்ற கலரில் மேட்சிங்க் ஜாக்கெட்,படிய வாரிய தலைமுடி,அதில்கொஞ்சமாய்அன்றலர்ந்து சிரிக்கும் மல்லிகைப்பூ. இதுதான் மாரியம்மாக்காவின்வாடிக்கை,இதில்கொஞ்சம்முன்னும் பின்னுமாய்இருக்க லா மே தவிர்த்து எசகு பிசகு இருக்காது.

டிப்போவுக்கு பால் வாங்கச்செல்கிற தினங்களில் பார்க்கிற மாரியம்மக்கா இவனது சொந்தமோ உடன் பிறந்தவளோ அல்ல,

”கூடப்பொறந்தவளையும்,சொந்த பந்தத்தையும் மட்டும்தான் அக்கா தங்கச் சியா பாவிக்கனுமுன்னா நாட்டுல பாதிப்பேருக்கு மேல அக்கான்னு கூப்புட ஆளு இல்லாம இருப்பாங்கடா” என்பாள்.

10 comments:

 1. அருமையான படைப்பு

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும் சார்,,,,/

   Delete
 2. கூடப்பொறந்தவளையும்,சொந்த பந்தத்தையும் மட்டும்தான் அக்கா தங்கச் சியா பாவிக்கனுமுன்னா நாட்டுல பாதிப்பேருக்கு மேல அக்கான்னு கூப்புட ஆளு இல்லாம இருப்பாங்கடா

  உண்மை
  உண்மை
  அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றியும்,அன்பும்!

   Delete
 3. சிரிச்சாநோய் விட்டு போயிடும் என்பது தெரிந்திருந்தும் சிரிப்பே வர மாட்டேன்கிறதே!! நண்பரே...!!

  ReplyDelete
  Replies
  1. நாம் வைத்துக்கொள்வதுதானே எல்லாம்.சிரிப்பு உட்பட,,,/

   Delete
 4. Replies
  1. நன்றியும் பிரியமும்,,,/

   Delete
 5. //கூடப்பொறந்தவளையும்,சொந்த பந்தத்தையும் மட்டும்தான் அக்கா தங்கச் சியா பாவிக்கனுமுன்னா நாட்டுல பாதிப்பேருக்கு மேல அக்கான்னு கூப்புட ஆளு இல்லாம இருப்பாங்கடா.//

  நிதர்சனம்.

  அருமையான கதை அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் அண்ணா,,,/

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...