Showing posts with label சந்தோஷம். Show all posts
Showing posts with label சந்தோஷம். Show all posts
31 Dec 2016
21 Dec 2016
28 Oct 2016
24 Sept 2015
பூத்தூவலாய்,,,,,,பூந்தூறலாய்,,,/
இச்சி மரம் சொன்ன கதை
நண்பர்களே, முதல் கதையின், முதல் வரியிலேயே,
ததும்பிக் கொண்டிருக்கும் மனிதம் நம்மை நெகிழச் செய்யும்.
என்ன புத்தகம்? அதை யார் எழுதியது என்ற கேள்வி
எழுகிறதல்லவா?
இதுபோல் எழுதக் கூடிய நண்பரும் வலைப் பூவில்
இருக்கிறார், எழுதுகிறார், எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதில் நாமெல்லாம் பெருமைப்
படலாம்.
தான் வாழும் சூழ்நிலையில் இருந்தே சிறு
சிறு, விறு விறு கதைகளை உருவாக்குவதில் வித்தகர் இவர்.
வீட்டு ஜன்னலின் கம்பி வழியே தெரியும்,
கொல்லைப் புறங்களையும், அதை ஒட்டிய வெற்று வெளியையும், அதனைத் தாண்டியிருக்கும்
வீடுகளையும், ரோட்டையும், அது தழுவிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் படம்
பிடித்துக் காட்டுவதில் வல்லவர் இவர்.
சார் வாங்க, அப்படியே ஒரு தேநீர்
அருந்தலாம் என்று கூப்பிடுவது போல, கதைகளை இவர் சொல்லிச் செல்லும் பாங்கே
அலாதியானது.
இவர்தான்,
விமலன்
இவரது
வலைப் பூ
தாங்கள்
நன்கு அறிந்ததுதான்
www.vimalann.blogspot.com
இவரது
புத்தம் புதிய நூல்
இச்சி
மரம் சொன்ன கதை.
நீண்ட நாட்கள்
கழித்து பார்க்க வருவதாலும், மறந்து போன ஒருவரை பார்க்கப் போவதாலும், ஏதாவது
வாங்கிப் போகலாம் என்கிற நினைவை தடுத்தாண்டவராக, அப்பொழுது முத்தமிழன் காண்கிறார்.
சாப்பிடுவதற்கும்,
செலவழிப்பதற்குமாய் அவருக்கு ஒன்றும் பஞ்சமில்லை, தட்டுப்பாடும் இல்லை.
பேசுவதற்கும்
அரவணைப்பதற்கும்தான் மனிதரும், உள்ளமும் இல்லை. இப்பொழுது அதுதான் தேவையும் ஆகிப்
போகிறது.
இன்றைய முதியவர்களின் நிலையை கண் முன்னே
கொண்டு வந்து காட்டுகிறார்.
அவ்வளவுதான்,
ஆசை தீந்துருச்சி அவனுக்கு. காதுல கெடந்த ஒரு ஜோடி கம்மலையும், மூக்குத்தியையும்,
நைச்சியமா பேசி, புடுங்கிட்டு பத்தி விட்டுட்டான்.
பாவம் இவ,
கையில் காசில்லாம ரயில் ஏறி ஊர் வந்து சேந்துருக்கா. இப்ப இங்க இருக்கா. பத்து
வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டு, பத்து வீட்டுலேயும் மூனு வேளை சாப்பாடு, மாசம்
பொறந்தா சம்பளம்ன்னு போயிக்கிட்டுருக்கு அவ பொழப்பு.
படிக்கப் படிக்க, கதை என்பதையும் மறந்து
இவ்வுலகில் கைவிடப் பட்ட அபலைகளுக்காக மனம் பதைபதைக்கிறது.
கணவன் மனைவி,
இரண்டு குழந்தைகள், ஆணொன்றும் பெண்ணொன்றுமாக. ஆண் பிள்ளை ஐந்தாவது படிக்கிறான்,
பெண் பிள்ளை ஏழாவது படிக்கிறாள்.
பெண் பிள்ளை
என்பதில் கடைக்காரருக்கு எப்பொழுதுமே ஒரு பெருமை இருந்ததுண்டு.
இவன் அங்கு டீ
சாப்பிடப் போகிற பொழுதுகளிளெல்லாம் இவனிடம் சொல்லி பெருமை பட்டுக் கொள்வார்.
என்னைக்கிருந்தாலும்
பொம்பள புள்ளைங்க தாய் தகப்பன நினைக்கும்.
அதுக எங்க
போனாலும், அதுக்கு எத்தன வயசு ஆனாலும், அதுக நெஞ்சுக் கூட்டுக்குள்ள, தாய் தகப்பன்
நெனப்பு ஈரம் கட்டிக் குடியிருக்கும்.
ஆனா ஆம்பளச்
பசங்க அப்படியில்ல சார், அத்துவிட்டுப் போயிருவாங்க.
உலகை அறிந்தவர், மனிதத்தை அறிந்தவர் விமலன்
என்பது, ஒவ்வொரு பக்கத்திலும் புலப்படுகிறது.
இல்லப்பா,
ஸ்கூல் மிஸ்கிட்ட கேட்டிருக்கேன்ப்பா, ஸ்கூல் பேட்லயிருந்து ஒன்னு தர்ரேன்னு
சொல்லியிருக்காங்கப்பா. ஒரு பத்து நாளாகும் அந்த பேட்டு வர்றதுக்கு.
அதுவரைக்கும்
லீவு போடுற புள்ளைங்க பேட்ட, மாத்தி மாத்தி வாங்கி சமாளிச்சிக்கிறேன்பா.
விடுங்கப்பா,
எனக்கு பேட் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லப்பா ....நீங்க வீட்டு பாட்டப்
பாருங்கப்பா.
அவளையும், டிவி
பார்த்துக் கொண்டிருந்த மூத்த மகனையும், அருகில் கூப்பிட்டு, உச்சி முகர்ந்த இவன்,
மனைவியையும் அருகில் அழைத்தான்.
அன்பொழுகிய
பார்வையுடன் வந்த அவள், இவனைப் பார்த்ததும், வெட்கித்தலை குனிந்து கொண்டாள். போங்க
அங்கிட்டு என இவனது தோளில் சாய்ந்தவாறு.
நண்பர்களே, மனம் மகிழ்கிறது அல்லவா.
விடும்மா,
அப்பா எது செஞ்சாலும் சரியாத்தாம்மா இருக்கும் என்ற பெரியவள், அப்படியே கையில்
நுனியில் இருந்த இட்லியின் விள்ளலை தட்டில் போட்டுவிட்டு, இவனின் மடியில் சாய்ந்து
கொண்டாள்.
சுழன்று
கொண்டிருந்த மின் விசிறியின் சுழற்சியும், எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டின்
வெளிச்சமும், மகளின் முகத்தை பிரகாசமாக்கிக் காட்டியது. தலையின் முடிகள், இவனது
மடியிலும் தரையிலுமாய் படர்ந்திருந்த்து.
படுத்திருந்தவளை
தலை கோதியவாறே, சிறிது நேரம் உற்றுப் பார்த்தவனின் கண்களில் நீர் சுற்றி
விடுகிறது.
மனதின்
ஆற்றாமை, இப்படி கண்ணீராய் சுற்றி விடுகிற நேரங்கள் நன்றாகத்தான் இருக்கிறது.
சிறிதே
மந்தமாயும், செயல்பாடற்ற மனோ நிலை நிறைந்ததுமாய்.
இதை
உணர்ந்தவளாகவோ என்னவோ, இவனுக்கு எதிர்த்தாற் போல, அமர்ந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்த மனைவி, ஏய், சாப்புட்டு எந்திரிங்க முதல்ல, ரெண்டு பேரும் என,
இவனுக்கு வலப் புறமாய் மடியில் படுத்திருந்த சின்னவனையும் சேர்த்து சப்தம்
போட்டாள்.
சிரித்தவாறே
எழுந்த பெரியவள், சின்னவனைப் பார்த்து கண்ணடித்து, இது அம்மாவோட எடமாம்,
நாமெல்லாம் படுக்கக் கூடாதாம் என்றாள்.
ஆமாடி, என்ன
இப்ப, ஏங் புருசன் மடி எனக்குத்தான். நாங்க நெனைச்சா, நாளைக்கே கூட ஊருக்கெல்லாம்
பத்திரிக்க வைச்சி, இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவோம் என்றாள்.
பண்ணிக்குங்க,
பண்ணிக்குங்க யாரு வேனாம்னாங்க. தெனம் தெனம் கூட கல்யாணம் பண்ணிக்குங்க,
மாங்கல்யம் தந்துனானேன்னு. நானும் தம்பியுமாய் வந்து, வாழ்த்துச் சொல்லி, தாலிக்
கயிறு எடுத்துத் தர்ரோம் என்கிற பேச்சுக்கு மகளையும், மகனைவியையும் பார்த்தவாறே
ஏதும் சொல்லாதவனாய் சிரித்துக் கொள்வான் இவன்.
நண்பர்களே படிக்கப் படிக்க மனம்
நெகிழ்கிறதல்லவா.
நாம் மனிதனாய் பிறந்த்தன் பலனை அனுபவிக்கும்
நொடிகள், இது போன்ற தருணங்கள்தான் அல்லவா.
நண்பர்
விமலனின்
இச்சி
மரம் சொன்ன கதை
படித்துத்தான்
பாருங்களேன்.
நெகிழ்ந்துதான்
பாருங்களேன்
வாழ்வின்
மென்மை நிமிடங்களை
உணர்ந்துதான்
பாருங்களேன்.
தொடர்புக்கு
விமலன்,
94863 21112
வெளியீடு
ஓவியா
பதிப்பகம்,
17-16-5ஏ,
கே.கே. நகர்,
பட்லகுண்டு –
642 202
அலைபேசி 96296
52652என்னுடைய இச்சி மரம் சொன்ன கதைக்கு திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தனது வலைப்பக்கத்தில் “கரந்தை ஜெயக்குமார்” http://karanthaijayakumar.blogspot.com எழுதிய விமர்சனம்.
10 Sept 2015
வலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி?
வரும் 11-10-2015
ஞாயிறு
“வலைப்பதிவர் திருவிழா-2015”
புதுக்கோட்டையில்
சிறப்பான ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன.
புதுக்கோட்டைப்
பதிவர்கள்
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு,
விழாவுக்காக
உடல்
உழைப்பையும் தந்து வருகிறார்கள்..
மற்ற மாவட்டப்
பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.
(1) கவிதை ஓவியக் கண்காட்சி
(2) பதிவர்களின் அறிமுகம்
(3) தமிழிசைப் பாடல்கள்
(4) நூல்வெளியீடுகள்
(5) குறும்பட வெளியீடுகள்
(6) 20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7) தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8) பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9) புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின்
புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது. இதோடு,
பங்கேற்கும் அனைத்துப்
பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக்
குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத் தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்... மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும்
பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும்
தெரிவித்திருக்கிறார்கள்....
அப்ப நீங்க..?
பதிவர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி
செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!
வங்கிக்கணக்கில்
பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா
வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர், விவரம் அறிய இங்கே வாருங்கள் –
--------------------------------------------------------------------------------------
பிரபல வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.
நன்றி வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/
நன்றி வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/
16 Aug 2015
31 Dec 2014
24 Dec 2014
21 Oct 2014
16 Oct 2014
சந்தோஷக்கூப்பாடு,,,,,
அத்துவானமாய் பரந்துவிரிந்துதன்நிறம் காட்டி சிரிக்கும் கரிசல் மண்ணில் ஆழமாயும், அகலமாயும்உழுதுப்போட்டமண்ணின் புழுதியோடும், கரட்டுக் கட்டிகளோடும்,அதன் விளைச்சலோடும் மல்லுக்கட்டிக்கிடக்கிற கிராமத்து மனிதர்களின் ஈரம் படர்ந்த படர்வுகளையும், அவர்களின் சாயலுடனும் அவர்க ளை முன்முகமாய்ச்சுமந்து வாழ்கிற நடுத்தரர்களின் வாழ்வியலையும் சுமந்து கொண்டு வந்திருக்கிற எழுத்துக்களின்பதிவாக,,,,,,,எனது ஐந்தாவதுசிறுகதைத் தொகுப்பு பந்தக்கால் வெளிவந்துள்ளது.
தொடர்புக்கு: 94863 21112
23 Sept 2014
15 Sept 2014
சந்தோஷ விருது,,,,,,,,,
இத்தமிழ்கூறும் நல்லுலகில் என் பங்காய் பெரிதாக ஏதும் பதிவு இல்லை
பெரிதாக இதுவரை,
நான்கே,நான்கு சிறுகதை தொகுப்புகள் எழுதி
விட்டு ஒரே ஒரு வலைத் தளம் நடத்தி வருகிறேன்.
சிட்டுக்குருவி
www.vimalann.blogspot.com இதுவே எனது வலைத்தள முகவரியும் பெயரும் ஆகும்.
இதுதவிரகொஞ்சமானபடிப்பு கொஞ்சமான எழுத்து
இதுவேஎனதுபணியாய் இருக்கிறது இன்று வரை இத்தமிழ் கூறும் நல்லுலகில்.
அதைபெரிதாய்கருதிஎனக்குஇவ்விருதைவழங்கிய திரு.கரந்தைஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
தவிர விருதுகள் பொறுப்பைக்கூட்டும் எனச்சொல்வார்கள். பொறுப்புக்கூடி யிருக்கிறது,வாலைமடக்கிக்கொண்டுஒழுக்கமாய்நிறைய எழுத வேண்டும், நிறைய படிக்க வேண்டும்,நிறைய பார்க்கவும் ,பேசவும் வேண்டும்.கூடவே முடிந்தால் நிறைய பயணிக்க வேண்டும்.
படிப்பும் பயணங்களும்,எழுத்தும் நிறைய நிறை கற்றுக்கொடுக்கும்தான்.
கற்றுக்கொள்கிறேன்,பயணிக்கிறேன் சக பயணியாக உங்களோடு/
இனி நான் எனது பங்காய் இவ்விருதை இவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.
அடர் கருப்பு
ஒளி
19. டி.எம்.சாரோனிலிருந்து...
அகநாழிகை - பொன்.வாசுதேவன்
அலையல்ல சுனாமி
திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
தவிர விருதுகள் பொறுப்பைக்கூட்டும் எனச்சொல்வார்கள். பொறுப்புக்கூடி யிருக்கிறது,வாலைமடக்கிக்கொண்டுஒழுக்கமாய்நிறைய எழுத வேண்டும், நிறைய படிக்க வேண்டும்,நிறைய பார்க்கவும் ,பேசவும் வேண்டும்.கூடவே முடிந்தால் நிறைய பயணிக்க வேண்டும்.
படிப்பும் பயணங்களும்,எழுத்தும் நிறைய நிறை கற்றுக்கொடுக்கும்தான்.
கற்றுக்கொள்கிறேன்,பயணிக்கிறேன் சக பயணியாக உங்களோடு/
இனி நான் எனது பங்காய் இவ்விருதை இவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறேன்.
அடர் கருப்பு
ஒளி
19. டி.எம்.சாரோனிலிருந்து...
அகநாழிகை - பொன்.வாசுதேவன்
அலையல்ல சுனாமி
நெடுஞ்சாலை
ஆத்மா
இரவின் புன்னகை
! ரெவெரி !
காற்றுவெளி இதழ்
அருணா செல்வம்-
இவர்களுடன் என்விருதைபகிர்ந்துகொள்வதில்பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி வணக்கம் வலை உலக நட்புகளுக்கும்,உறவுகளுக்குமாய்/
ஆத்மா
இரவின் புன்னகை
! ரெவெரி !
காற்றுவெளி இதழ்
அருணா செல்வம்-
இவர்களுடன் என்விருதைபகிர்ந்துகொள்வதில்பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
நன்றி வணக்கம் வலை உலக நட்புகளுக்கும்,உறவுகளுக்குமாய்/
Subscribe to:
Posts (Atom)










.gif)







