வரும் 11-10-2015
ஞாயிறு
“வலைப்பதிவர் திருவிழா-2015”
புதுக்கோட்டையில்
சிறப்பான ஏற்பாடுகள்
நடந்து வருகின்றன.
புதுக்கோட்டைப்
பதிவர்கள்
நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு,
விழாவுக்காக
உடல்
உழைப்பையும் தந்து வருகிறார்கள்..
மற்ற மாவட்டப்
பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.
(1) கவிதை ஓவியக் கண்காட்சி
(2) பதிவர்களின் அறிமுகம்
(3) தமிழிசைப் பாடல்கள்
(4) நூல்வெளியீடுகள்
(5) குறும்பட வெளியீடுகள்
(6) 20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7) தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8) பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9) புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின்
புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது. இதோடு,
பங்கேற்கும் அனைத்துப்
பதிவர்களுக்கும் மனமுவந்து வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக்
குறிக்க... குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க... தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத் தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்... மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும்
பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும்
தெரிவித்திருக்கிறார்கள்....
அப்ப நீங்க..?
பதிவர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவரும் இது நம் வலைப்பதிவர் குடும்பவிழா எனும் பங்கேற்பு உணர்வோடு, தாராளமாக நிதி உதவி
செய்யக் கேட்டுக்கொள்கிறோம்!
வங்கிக்கணக்கில்
பணம் செலுத்தி, செலுத்தியவர் பெயர், ஊர், தொகை விவரங்களை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
நன்கொடையாளர் பெயர், ஊர்விவரம் விழா
வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவரும்... இதோ இதுவரை நன்கொடை தந்தோர் பெயர், விவரம் அறிய இங்கே வாருங்கள் –
--------------------------------------------------------------------------------------
பிரபல வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் -
இந்தப் பதிவை அவரவர் தளங்களில் எடுத்து மறுபதிவு இட்டு,
விழாக்குழுவிற்கு உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.
நீங்கள் செய்யப் போகும் உதவிக்கு முன்கூட்டிய எங்கள் நன்றி.
நன்றி வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/
நன்றி வளரும் கவிதை http://valarumkavithai.blogspot.com/
