விமலன்எழுதிய"பந்தக்கால்"சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண் டு இருக்கிறேன்..மூன்றுவேலைசாப்பாடும்,(சாப்பாடு என்ன..கம்மங்கஞ்சி,துவையல்,கேப்பைக் கூழ்,பச்சை வெங்காயம் தான்..)வருசக் கடைசியில் சொற்பமாய் கொடுக்கும் ஒரு தொகை,பண்டிகை காலங்களில் ஒரு கைலி,துண்டு இவற்றிக்காக தோட்ட வேலைகளை செய்து வந்த சுப்பு மாமா பற்றிய கதை மனதை நெகிழச் செய்கிறது..காலம் போன பிறகு, கல்யாணம் செய்து கொண்டு, பிள்ளை குட்டிகள் ஆனபிறகு, கட்டுப்படியாகாமல்,ஒரு மில் வாட்ச்மேன் வேலை பார்க்கத் தொட ங்கி இருக்கும் சுப்பு மாமா தன்னை சந்திக்கும் ஊர் பையனிடம் "முன்னைக்கு இப்ப நல்லாயிருக்கேன் மாப்ள.." என்றும் சொல்லும் போது, வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி எல்லாம் இருக்கிறது என வியப்படைய வைக்கிறது.. கணவனால் கைவிடப் பட்ட ஆண்டாளுக்கு, பட்ட மரமாய் தனித்து நின்றஅவளுக்கு,ஒரு குழந்தையின் வடிவில் இளைப்பாருதல் கிடை க் கிறது. குழந்தையும்,அதன் அப்பாவும் அவளுக்கு ஆதரவாய் வரும் வேளையில், ஊர்காரர்களின் எதிர்ப்பால், பிரிய நேரிட்டு, பைத்திய மாக அலைகிறாள் ஆண்டாள்..தனியார் பள்ளி அட்மிசனுக்காக தவம் கிடக்கும் தகப்பனின் கதை "அட்மிஷன்"..அரசு பள்ளியில் படிக்கும் மகனை, ஐந்தாம் வகுப்பில் இருந்து மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்க படும் அவஸ்தைகளை நன்றாகவே சித்தரித்து இருக்கிறார்..தொகுப்பை இன்னும் முடிக்கவில்லை..மண் சார்ந்த உணர்வுகள் ஊடு சரடாய் செல்கிறது இவரது எல்லா கதைகளிலும்..இது இவரின் ஐந்தாவது தொகுப்பு என நினைக்கிறேன்..பாண்டியன் கிராம வங்கி யில் பணி புரியும் விமலன், நுட்பமான உணர்வுகளுக்கு சொந்தக் காரர்.கவிதை வரிகளாய் பல இடங்களில்..கரிசல் மண் வாசம் அடிக்கிறது பல கதைகளில்.தொடர்ந்து எழுதுங்கள் விமலன்...வாழ்த்துக்கள்..இவர் முகநூலிலும் இருக்கிறார்..
Showing posts with label சமுகம். Show all posts
Showing posts with label சமுகம். Show all posts
2 Nov 2014
பூந்தூவலாய்,,,,,
23 Jun 2011
பதிவிறக்கம்,,,,,,,,
பரமக்குடியிலேயே இறங்கிவிட்டேன். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும்என்கிற இல்லை எனக்கு.
வழியெங்கும் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.இறங்குவதற்கு ஏதுவான இடம் எதுவாய் இருக்க முடியும்என,,,,,,,,,,,,,
நீண்டு விரிந்திருந்த பஸ்,அதில் சற்று நிதானமாகவும், அவசரமான மனோ
நிலையிலும்அமர்ந்திருந்தமனிதர்கள்,கலர்,கலரான உடைகளிலும்,
அலங்காரத்திலும்,பெண்களும்,சிறுவர்களுமாய் தனித்துத்தெரிந்தார்கள்.
டிக்கெட் மிசினை சரிபார்த்துக்கொண்டிருந்த கண்டக்டர் ஓட்டுனரிடம் ஏதோ பேச்சுக் கொடுத்தவாறு /
ஆண்களை விட பேச்சு சத்தம் அதிகமாய் கேட்ட பெண்கள் பக்கம் கலகலப்பாய்தெரிந்தது. அப்படி என்னதான் பேசுவார்கள் எனத் தெரியவில்லை.
“வீட்டில்பேசுகிறார்கள்,வெளியில்பேசுகிறார்கள்,பார்க்கிறஇடங்களிலெல்லாம்
பேசிக்கொள்கிறார்கள்.இது போக பேசிப்பேசி தீராத பேச்சும்,வற்றாத ஆற்றாமையும் அவர்களது பேச்சில் வெளிப்பட காரணம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள்”என்கிறான்எனதுநண்பன்.
அது தனியார் பேருந்தா?,அரசுபேருந்தா?,,,,,,,தெரியவில்லை?அலங்காரம் கூட்டித்தெரிந்தது.
ஓட்டுனரின் இருக்கையை ஒட்டியிருந்த முன்புற கண்ணாடியில் சுற்றி,சுற்றிஓடியவாறுஎரிந்தபொடிப்பொடியான கலர் விளக்குகளும்,ஓட்டுனரின் தலைக்கு மேல் ஓடிய இரட்டை தொலைக்காட்சிகளில் ஓடிய படமும்,பாட்டும் பேருந்தை புதிதாய் காண்பிக்கிறது.
நல்ல பாடல் ,நல்ல காட்சி பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாயும், மனதுக்கு இதமாயும் இருந்தது.அது எத்தனை பேரினுள் நுழைந்திருக்கும் என்பது தெரியவில்லை.
வெள்ளியில் உருக்கி ஊற்றியது போல் இருந்தது.பேருந்தினுள் இருக்கைகளை ஒட்டி நடப்பட்டிருந்த தாங்கு கம்பிகளும்,இருக்கைகளின் பின்னால்வளைந்து நின்ற கம்பிகளும். பார்க்கப்பார்க்கஅழகாகவும்,
பளபளப்பாகவும் தெரிந்தது.
தரை தளமாய் பாவியிருந்த அடிபுற மர பலகைகளும் அதன் மேல் அடித்திருந்த இருந்த சில்வர் பட்டைகளும் காலை பதம் பார்க்காது என்பதை உறுதி கூறியது.
ராமநாதபுரத்தில் பஸ் ஏறும்போதே வராத ஒண்ணுக்கை உருவாக்கி இருந்துவிட்டுதான்வந்தேன்.
“அப்புறம் எப்படி அதற்குள்ளாய்,,,,,,” பிடிபடவில்லை.ஒன்று சரியாக இருந்திருக்க மாட்டேன்.அல்லது எனது உருவாக்கத்தில் எங்கோ தவறு நடந்திருக்க வேண்டும்.எது எப்படியானாலும் இப்போது இறங்கியாக வேண்டும்.முட்டிக்கொண்டுநிற்கிறது,நிற்கிறதா?அல்லது அப்படி ஒரு நினைப்பாதெரியவில்லை?எதுவானாலும்இறங்கித்தான்ஆக வேண்டும்.
இல்லையெனில் சிக்கல்லாகிபோகலாம்.
நான்குஇட்லி,கொஞ்சமாகதண்ணீர்,ஒருடீஇவ்வளவுதான் சாப்பிட்டேன்.
நீண்டதூர பஸ் பிரயாணமென்றால் தண்ணீர்,டீ எல்லாம் சுருக்கி விடுவது வழக்கம்.ஆனால் நண்பர் குமார் அருகில் இருந்ததாலும்,அவரே காலைஉணவு வாங்கிக் கொடுத்ததாலும் டீயை குடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிப் போனேன்.
இரவு அவரது அறையில்தான் தங்கியிருந்தேன்.ராயநந்தபுரம் கிளைக்கு பணிநிமித்தமாய் இரண்டு நாட்கள் சென்று வந்து கொண்டிருக்கும் போது உண்டான “வயிற்று வலிக்கு” மருத்துவம் பார்த்துவிட்டு தெருவில் நின்ற என்னை அவர்தான் ஏந்திக்கொண்டார்.
முருகவேலும், மரியசுரேஷீமாய் என்னை கைகுழந்தைபோல பாவித்து அழைத்துகொண்டு மருத்துவம் பார்த்து கொண்டுவந்து விட்டபோது தாங்கிகொண்ட முக்கிய மனிதராகிபோகிறார் குமார்.
மரியசுரேஷ் சொன்னார் “இது ஒன்றும் பெரிய ஆபத்து இல்லை.பெரியதாக நினைத்து பயப்படவேண்டாம்.எனக்கும் வந்திருக்கிறது.வலிவந்த நேரங்களில் தாங்க மாட்டாமல் தலைகீழாகவெல்லாம் நின்றிருக்கிறேன்.இப்போது போட்ட ஊசி இருபத்திநான்கு மணிநேரம் பவர்.அதற்கடுத்து வலிவந்துவிடும்” என்றார்.
ராயந்தபுரத்திலிருந்து முருகவேல்தான் என்னை இறக்கிவிட வந்திருந்தார்.
அவர் அந்த கிளையில் தொகுப்பூதிய அடிப்படையில் வேலை செய்கிறார்.நான் பணிநிமித்தமாக சென்றிருந்த இரண்டாவது நாள் முடிந்து சீக்கிரமாக ஊர் சென்று விடவேண்டும் என்கிற நினைப்பிலும்,அவசரத்திலும் அவரது இருசக்கர வாகனத்தில்கொண்டு வந்து ராமநாதபுரம் வரை விடச்சொல்லியிருந்தேன்.
அவரும் சரி என்றிருந்தார்.காலையில் வேலை ஆரம்பிக்கும்போதே ஆகியிருந்த உடன்பாட்டை மாலை ஐந்து மணிக்கு அமல் செய்தோம்.
16கிலோ மீட்டர் தூரத்தை அவரது பேச்சும், தகவல்களும் நிரப்பியது.அவர்தான் வண்டியை ஓட்டினார்.
16ல்பாதிதூரம்கடந்திருந்தபோதுதான் பாழாய்ப்போனஅந்தவலி ஆரம்பித்தது.
நான் எப்போதும் வருகிற அல்சர் வலிதான்அது,மாத்திரை போட்டால் சரியாகிப்
போய்விடும்.அப்படியும் அடங்காமல் ரொம்பவும் வலித்தால் ராமநாதபுரத்தில் இறங்கி ஏதாவது ஆஸ்பத்திரியில் ஊசி போட்டுக்கொண்டு போய் விடலாம்”என நினைத்தவாறு பயணித்த நேரத்தில்தான் வேர் ஊன்றியிருந்த வயிற்றுவலி, மெதுமெதுவாய்பரவிதனதுகரங்களைஅகலவிரித்து தாண்டவமாடியது.
வாகனத்தில்ஒழுங்காகஅமரக்கூட முடியவில்லை.உடம்புபாடாய்படுத்தியது.
நடுவயிறு,கீழ்வயிறு,தொடை,நெஞ்சு,உணவுக்குழாய்,வயிற்றின்பக்கவாட்டுப்
பகுதிஎனஎல்லாம்வலிக்கவும்,எரியவும்செய்தது.
உடலைநெளித்துஅமர்கிறேன்,குன்னிஅமர்கிறேன்,நிமிர்ந்துஅமர்கிறேன்.
ம்ஹீம்,,,,,எதையும் சட்டைசெய்யவில்லை வலி.தனது கோர கரம் விரித்து தன்னை நிலை நிறுத்திக்கொள்வதில் உறுதியாய் இருந்தது.அந்த உறுதி என்னை நிலை குலையச் செய்துவிட கொஞ்சமாய் அதைரியமாகி விடுகிறேன்.
தாங்கமாட்டாத வலி லேசான தலை சுற்றலை உண்டாக்கி விடுகிறது.முருகவேலிடம் சொல்லி வண்டியை நிறுத்த சொல்கிறேன்.
அவரிடம் விஷயத்தை சொன்னதும் அதிர்ச்சியாகி “சார் என்னசெய்யலாம் சொல்லுங்கள்” என்கிறார்.அப்படியே கொஞ்சம் நிற்போம் என்றவாறு பையில் இருந்த பாட்டில் தண்ணீரை அவசரமாய் எடுத்து முகம் கழுவி குடித்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து விடுகிறேன்.அது எந்த இடம்,எது தெரியவில்லை.எத்தனை ஆடு,மாடுகள் ஒதுங்கியதோ,எத்தனைமுறை நாய்களும்,மற்றஜீவராசிகளும்ஒதுங்கியிருக்கும் என தெரியவில்லை.அவசர ஆத்திரத்திக்கு எத்தனை பேர் ஒண்ணுக்குப்போன இடமோ? மெய்மறந்து அமர்ந்து விடுகிறேன்.
கறுத்து நீண்ட சாலையில் விரையும் பேருந்துகள்,பெரிய,சிறிய, கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள் மனிதர்கள் எதுவும் எனது கவனத்தை ஈர்த்ததாய் தெரியவில்லை.
ஆனால் இது சாதாரண அல்சர் வலிதான் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் அதிக பயமில்லாமலும் இருக்க முடிந்தது.வலியுடனும்,நோயுடனுமாக வாழப்பழகி கொண்ட மனிதம் படும்பாடு இப்படி நட்டநடு வீதிகளிலும்,
ரோட்டிலுமாக விரித்து காட்சியளித்தவாறு பல்லிளித்துக் கிடக்கிறது.
தலை சுற்றல் சரியானதும் அவரிடம் “அப்படியே மெதுவாக ராமநாதபுரத்தில் ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு சென்றுவிடுகிறேன்.நேராக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்” என்கிறேன்.
அப்படியே செய்த அவர் ராமநாதபுரத்தில் பணிபுரியும் மரியசுரேஷையும்,
குமாரையும் சந்திக்க செய்து விடுகிறார்.
விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து மரியசுரேஷ் பரபரப்பாகிபோனார்.சற்றே பதறியும் போனார்.உயிர் நண்பனாகவும், உற்ற தோழனாகவும்,பாசாங்கு அற்ற மனிதராகவும் எப்போதுமே இருக்கிற அவர் அந்த ஊரின் அரசு மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போனார்.
அங்கிருந்தமருத்துவர்வலியை சொன்னதும்சொல்லிவிட்டார்.இது சிறுநீரக
கல்லடைப்புதான்,வேறொன்றுமில்லைஎன.
அதற்கான ஊசிபோட்டு,மாத்திரைகளை கொடுத்ததும் கால் மணியில் வலி சரியாகிப்போனது.
“அது சரியாகும் தருணம் வரை நான் துடித்த,துடிப்பும் எனது மனோநிலையும்,,,,,,,,வெளியில் சொன்னால் வெட்ககேடு வீடு போய் சேருவேனா முழுதாக” என்கிற அளவு சந்தேகம் வந்து விட்டது.
அதிலும் அரசுமருத்துவமனையிலிருந்த நர்ஸ் “ஏதாவது பிரைவேட் ஆஸ்பத்திரியில்வேணுமின்னாஅட்மிட்பண்ணீருங்க,அவரு வலிதாங்கமாட்டாம துடிக்கிறாருல்ல” என சொல்லிவிட எனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது.
வலுப்பட்ட சந்தேகம் தனது முடிச்சுகளை இறுக்க ஆரம்பித்திருந்த நேரம் வலி உச்சத்திற்க்குப்போய் படக்கென குறைந்து விட்டது.
மரியசுரேஷ் மிகவும் சரியாக சொன்னார்.”அது அப்படித்தான்.இப்போது வலி முற்றிலுமாய் குறைந்து வ்யிறு சாதாரண நிலைக்கு வந்திருக்குமே” என்றார்.
நல்லவேளையாக பிரைவேட் ஆஸ்பத்திரி,அட்மிஷன் என்கிற தர்ம்சங்கடமெல்லாம் நிகழாமல் போனதில் பெரிய நிம்மதி.
மரியசுரேஷின் இருசக்கர வாகனத்திதான் சென்றிருந்தோம்.அவரை சந்தித்ததும் முருகவேலைப் போகச்சொல்லி விட்டோம்.
16கிலோமீட்டர்பயணிக்கவேண்டுமே அவரும்.போய்விட்டார்.
தர்மசங்கடங்கள் சூழ்ந்து கொண்ட தருணமாய் அது பட்டது எனக்கு. “ஒண்ணும் நெனைக்காதீங்க, சாமியக்கும்புட்டுட்டு பேசாம படுங்கண்ணே,
ஒண்ணும் சங்கடப்பட்டுக்காதீங்க,மனசபோட்டு ஒழப்பிக்காதீங்க”என நிறைய பேசிக்கொண்டு வந்தார்.
நாங்கள் வருகிற வழியில் உயரமாக கோபுரம் வைத்திருந்த ஒரு கோவில் தெரிந்தது.அது என்ன கோவில் என சரியாகத்தெரியவில்லை.மரியசுரேஷிடமும் கேட்கவில்லை.
ஆயினும்அந்தகோவில்கோபுரத்தின்உச்சியில் “சுரேஷீம்,முருகவேலும்”
தெய்வங்களோடு,தெய்வங்களாய்தெரிந்தார்கள் எனக்கு.
அவர்கள்செய்த உதவிக்குஅவர்களுக்கு கோவில்கட்டிகும்பிடவேண்டும்தான்.
ஆனால் அந்த அளவு வசதி இல்லை எனக்கு.
எல்லாம் முடிந்து குமாரின் ரூமில் இறக்கி விட்டுவிட்டு இரவு டிபன் வாங்கிக்கொடுத்துவிட்டு,,,,,,,,,,,,,,
“வீட்டில்சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள்,அவர்களை கவனிக்க வேண்டும்,இல்லையானால் உங்களுடன் இருந்து விடுவேன்”என கூறி பிரியா விடை பெற்றுப்போன மரியசுரேஷ்யும்,முருகவேலையும் நினைத்துக்கொண்டு படுத்த எனக்கு தூக்கம் சரியாக வரவில்லை.
நடு இரவு எழுந்து மரிய சுரேஷ் வாங்கிக்கொடுத்த இட்லியை சாப்பிடுகிறேன்.சட்னி கெட்டுப்போயிருந்தது. நல்ல வேளையாக சாம்பார் நன்றாக இருந்தது.
கடைகாரர்களுக்குத் தெரியுமா?இப்படி ஒருவன் வாங்கி வந்த டிபனை நடு இரவில் பிரித்து சாப்பிடுவான் என.
ஆனால் என்னைப்போல் நடு இரவில் சாப்பிடுபவர்கள் நிறைய இருப்பார்கள் போல்தான்தெரிகிறது.சமீப காலமாக அதன் எண்ணிக்கையும் கூடிவிட்டது போல தெரிகிறது. அதை வெளியில் தெரியாமல் பராமரித்துக் கொள்வார்கள்
போலும்.
மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்துவிட்டேன்.என்னருகில் படுத்திருந்த குமார் அப்போதுதான் புரண்டு படுத்தார்.மனைவி மக்களை விட்டுபிரிந்து,வயதான தாய் தந்தையை விட்டுபிரிந்து,சொந்த வீட்டை விட்டு சொந்தங்களையும்,சுற்றத்தார்களையும் விட்டு,இப்படி பிழைப்பு நிமித்தமாயும், பணிநிமித்தமாயும்,ஊர் விட்டு,ஊர் வந்து சின்னச்சின்ன புறாக்கூண்டு அறைகளில் தங்களை அடைத்துக் கொண்டு கதியற்றவர்களைப்போல வாழ்கிற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் இதுபோலும் என தெரிகிறது.
குமாரின்நண்பர் தங்கியிருந்த அறைக்கு கூட்டிப்போனார்.அது இவர்களினது அறையைப்போலவே இன்னும் சிறிய புறாகூண்டாய் இருந்தது.
பறவைகளுக்குப்பதில்மனிதர்கள்.இறக்கைகளுக்குப்பதில்கை கால்கள்.
பறப்பதற்க்குபதில்நடந்தும்,வாகனங்களிலுமாய்பயணித்தும்கொண்டிருந்தார்கள்
தானியம்,தவசிகளுக்குபதில்சாப்பாடு,டிபன்எனஉண்டு கொண்டிருந்தார்கள்.
அந்தபுறாக் கூண்டில் தங்கியிருக்கும் குமாரின் நண்பர் திருநெல்வேலி
பக்கத்துக்காராம். “வாராவாரம் லீவுக்கு சென்று திரும்புகையில் வீட்டிலிருந்து பத்துலிட்டர் கேனில் சுடவைத்த தண்ணீரை கொண்டு வந்து விடுவேன்” என்கிறார்.
“இங்குள்ள தண்ணீர் சேரமாட்டேன் என்கிறது எனவும் ,ஒன்று தொண்டையில் புண்வந்து விடுகிறது.இல்லையெனில் ஏதாவது தொந்தரவு செய்து விடுகிறது என்கிறார்.
கொண்டுவந்ததண்ணீர்ஒரு வாரம்வாரம்வரைதாங்குமாம்.பிறகுஊருக்குப்
போகையில் திரும்பவுமாய்,,,,,,,,,,,,,என சொல்லும் அவர் அதற்கு தான் வரும்
ரயில் பயணம் வசதிப்படுகிறது என்கிறார்.
இது தவிர எதுவும் செளகரியப்படவில்லை என்பது அவரது ஆழ்ந்த கருத்து.
அவரது அறையில் தங்கியிருக்கும் அவரின் சக ஊழியர் சொல்கிறார்.நான் வேலைபார்க்கிற ஊரில் மதியசாப்பாடு கிடைக்காது,ஆகவே காலை இங்கேயே சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு பொங்கல் வாங்கி சென்று விடுவேன் என/
இப்படி துயரம் சுமந்ததாய் இருக்கிற அவர்களது வாழ்க்கை என்று சரியாகும் என்கிற நினைப்புடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் இத்தனையும்.
“என்னென்னெமோ வசதிசெய்கிற பஸ்களில் பாத்ரூம் வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா?”
என்கிற நினைப்பு மேலோங்க நிறைந்திருந்த பேருந்தை விட்டு பரமக்குடியிலேயே இறங்கி விடுகிறேன்.மிகவும் பரிதாபமாக.
24 May 2011
சாரக்காத்து,,,,,,,,
சைக்கிளை பற்றிய எனது கனவின் முடிவு பல சமயங்களில் கீழ்கண்டவாறுதான் பதிவாகிறது.
கிட்டத்தட்டஎன்போன்றஎல்லோருக்கும்அப்படித்தான் போலும்.மண்பிளந்து வளர்ந்து துளிர்த்து கிளை பரப்பி மணம் பரப்பும் மலர் மரத்தின் ஆகுருதியாய் மனதில் ஆக்ரமித்துக்கொண்ட நினைவு சில சமயம் பாரமாயும்,சிலசமயம் பாரமற்றும்.
மத்தியதரவர்க்கத்தினரின் ஆசைகளும்கனவுகளும்தள்ளி,தள்ளிப்போவதும்,
கரைந்து சமாதியாகிப்போவதும் இயல்பாகவே ஆகிப்போகையில் அதுபற்றி
பேசுவது கூட தவறுதானோ என்று படுகிறது. இருந்தாலும் பாழாய் போன
உள்மன ஆசைகளும் நினைவுகளும்,,,,,,,,,, /
“இருபது இஞ்சில் இரட்டை பார்வைத்த சைக்கிள்தான் வாங்க வேண்டும்.கருப்பு இளஞ்சிவப்பு, வயலட் என எந்த கலரும் இல்லாமல் பச்சை கலரில்தான் வாங்கவேண்டும்.நினைத்து,நினைத்து பிசைந்தெடுத்து உருவம் கொடுத்து உருவாக்கிய குயவனின் உருவாக்கமாய்,ஓவியரின் கைவண்ணமாய் சிற்பியின் செய்நேர்த்தியாய் இருக்க வேண்டும்.”
பரந்து விரிந்து கிடந்த நகராட்சி எல்லைக்குள் இருந்த கண்ணபிரான் கடை,என்.எஸ்.என் சைக்கிள் மார்ட், மனோரஞ்சிதம் சைக்கிள் பிட்டர்ஸ்,,,, என பெயர் தாங்கிய பல கடைகளில் சைக்கிளை மாட்டியேதான் வைத்திருப்பார்கள் என்றாலும் நான் வழக்கமாக சைக்கிளை வேலைக்கு விடும் பாய் கடையில் சொல்லித்தான் மாட்டச்சொல்லவேண்டும்.
கடைக்காரரிடம் முன்பே சொல்லி விட வேண்டும். “நீங்கள் மாட்டப்போகும் சைக்கிள் என்னிடம் பேசவேண்டும்,,,,,,,” என/
பத்து,ஐந்து கூட செலவாகிப்போனாலும் பரவாயில்லை.அப்புறம் “இல்லை மாமா அது இப்படி,இது அப்படி” என கதைத்துக் கொண்டிருக்கக்கூடாது.
தந்தை,மகன் இருவருமாய் சேர்ந்து தங்களது உணர்வையும்,உழைப்பையும் கலந்துஓடவிட்டிருந்தகடை.
இருபத்தைந்துவருட பழக்கத்தின் விளைவுதானோ என்னவோ?என்னைபார்த்தபின்தான் சைக்கிளைபார்ப்பார்.
நான்+சைக்கிள்+ரிப்பேர்+குடும்பம்+உடல்நலம் என்கிற ப்ளஸ்,ப்ளஸான விசாரிப்புகளினூடாகவே எனது சைக்கிளை பற்றியும் கேட்டறிந்து என்னை அனுப்பி வைப்பார்.
அவர்சொன்னயோசனைதான்இது.வருடமெல்லாம் இதற்கு செலவழிப்பதற்கு புது சைக்கிள் வாங்கி விடலாம் என்றார். அவர் சொன்ன நாளிலிருந்து நன் வைத்திருந்த சைக்கிள் பெருபாரமாய் ஆகிபோனது எனக்கு.
ஒரு ஜே.சி.பி இயந்திரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த எனது சைக்கிளை நாள் முழுவதுமாய் ஓட்டி அலுத்துப்போனது போலவும் இறகு முளைத்திருந்த சைக்கிள் கடை பாய் தலையில் குல்லாயுடன் பறந்து வந்து புது சைக்கிளை தந்து விட்டு பழசை தூக்கிக்கொண்டு பறந்ததாயும் கனவு கண்டேன்.
அன்றிலிருந்து புது சைக்கிள் ஓட்டுபவர்களையும்,சைக்கிள் கடை பாயையும் வெறித்து,வெறித்துபார்ப்பவனாயும்,பித்துபிடித்தவன்போலவும் ஆகிப்போனேன்.
அன்றாடஉடற்பயிற்சிக்குவாக்கிங்,ரன்னிங்,எக்சர்சைஸ்,யோகா,சைக்கிளிங்,
இவற்றில் எது பெஸ்ட் என்பதில் ஆரம்பித்து “சைக்கிளிங்கே” நல்லது முடிவுக்கு வரும்போது அதற்கும் புது சைக்கிளே ஏற்றது என்கிற மன ஏற்புடனும்,சமாதானத்துடனுமாய் இருந்த நாட்களின் நகர்வுகளில்தான் எனது மகன் சொல்கிறான்.ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு செல்பவன்.
“எனக்கு புது சைக்கிள் வேண்டும்.எனது உயரத்திற்கேற்றவாறு நீங்கள் வாங்கித்தரும் சைக்கிளை இந்த முழு பரிட்சை லீவு நாட்களில் நன்றாக ஓட்டிப்பழகிக்கொள்வேன்.
சைக்கிளின் சாரதியாயும்,பராமரிப்பாளனாயும் நானே இருப்பேன்.அதன் ஓட்டத்திலும்,அதன் ஒவ்வொரு சுழற்சியிலும்,அதன் அழகிலும் அதன் ஒவ்வொரு உதிரிப்பாகத்தின் மீதும் எனது பார்வையை ஓடவிட்டு மனம் கலக்கவிட்டு கரைந்துருகி ஆனந்தமாகிப்போவேன்.
பக்கத்தூரிலுள்ள எனது பாட்டி வீடும்,அடுத்த தெருவிலுள்ள அத்தை வீடும் தூரம் அதிகமற்றுப்போகும் எனக்கு” என எக்ஸட்ரா,எக்ஸட்ராவாய் ஆசைகளை விரிக்கிறான். முகமெல்லாம் பூரிப்பாக.
அதுமாதிரியெல்லாம்நான்யாரிடமும் போய் சொல்ல முடியாது.மிஞ்சி,மிஞ்சிப் போனால் எனது மனைவியிடம் சொல்லலாம். “அட பைத்தியகார மனுசா”என அவளும் அதற்காக சிரிக்கக்கூடும்.அதற்காகத்தான் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி சாவியை எங்கோ தொலைத்து விட்டேன்.அனைத்து வீட்டிலும் நிறைவேறாத ஆசைகளுடன் திரியும் பெற்றோர்களின் கணக்கில்தற்காலிகமாகநானும்.
நான் சென்ற பதினோரு மணி இரவிற்கெல்லாம் எனது சைக்கிள் அப்படி நிற்கும் என நினைக்கவில்லை.
அன்று அப்படி ஒரு நினைப்பு.தலை பெருத்தும்,கைகால்கள் சூம்பிப்போன குழந்தையாய் பின்புறம் காட்டி அழுக்கடைந்து நின்றது.
அதிகம்அழுக்குப்படாமலும்,ஒருசின்ன ரிப்பேர் ஆனாலும் அதை சரிபார்த்து சைக்கிளுக்கும்,எனக்குமாய்சந்தோஷம்ஏற்படுத்திபராமரித்த நாட்கள்.
அப்படியெல்லாம் பொத்தி,பொத்தி பாதுகாத்த சைக்கிள் இப்படி நின்றதை பார்த்ததும் வாய் உலர்ந்து நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள உடல் சுருங்கி ஏதோ அன்னிய தேசத்தில் நிற்கும் மனோநிலையினனாய் ஆகிபோகிறேன்.
என்னை சுற்றி வரிசை கிரமத்தில் நின்ற சைக்கிள்கள்,அதை எடுக்க வந்த ஒன்றிரண்டு மனிதர்கள்,சைக்கிள் ஸ்டாண்டினுள் எரிந்த மின் விளக்குகளின் வெளிச்சம்,ஸ்டாண்டை ஒட்டிய சாலையில் செல்லும் ஆட்டோவின் ஹாரன் ஒலி, “ணங்க,,,,,ணங்க,,,,என்கிற அடுப்படி சத்தம், “கண்ணதாசன் காரைக்குடி” என அறிவிக்கிற பாடல் எல்லாம் என்னை சுற்றி வந்தன.
நீள,நீளமாக எதிரெதிரே வகுந்து போடப்பட்டிருந்தவைகளில் எட்டாவது வரிசையில்தான் நிறுத்தியிருந்தேன் இடதுபுறமாக.எப்போதும் பதிவாக நிறுத்தும் வரிசை.
இடது என்றால் உனக்கு அப்படி ஒரு மயக்கம் என்கிறான் நண்பன். “இல்லை நண்பா,நீ நினைத்து அழுத்தம் கொடுத்து பேசுகிற இடது எல்லாம் இல்லை இதில்.நேராகப்போய் இடதுபக்கம்திருப்பி நிறுத்துவதில் உள்ள ஒரு சின்ன செளகரியம்தான் என்னை அப்படி செய்யத்தூண்டுகிறது.வீணாக உனதுசெளகரியப்படிஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே என்கிற சொல்லை
ஊதித்தள்ளியவனாக, “என்னமோபோ,பார்ப்பவையும்,கேள்விப்படுபவையும்,
நீசொல்பவையும்ஏகத்துக்குஇடிக்கிறதே”எனசிரித்தவனாய்கிளம்பிப்போய்
விடுவான்,என்கிற அவனது நினைவை சுமந்தபடி எனது சைக்கிளை சுற்றி,சுற்றி
வருகிறேன்.
அனைத்து குடும்பங்களிலும் பங்கு வகிக்கும் ரத்தமும்,சதையுமற்ற ஓர் குடும்ப உறுப்பினராக இன்றளவும் காட்சி தருகிற ஒரு பொருளாயும்,
பயன்பாட்டிலுள்ள உயிர் திணைபோல் ஆகிப்போன எனது சைக்கிளின் பரிதாப நிலைபற்றி,,,,,,,,,
மீசைக்கும், உருவத்திற்கும், குரலுக்கும் சம்பந்தமற்றவராய் உட்கார்ந்திருந்த சைக்கிள் ஸ்டாண்ட்க்காரரிடம் சொல்லமுடியாது, வருத்தப்பட்டும் ஏதும் பிரயோஜனமில்லை என்கிற நோக்கம் மேலோங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அனாதையாய் அழுதுகொண்டு நிற்கும் குழந்தை போல நின்ற எனது சைக்கிளைஎடுத்துக்கொண்டுகிளம்புகிறேன்மேலும் பரிதாபத்திற்குரியவனாக/.
17 Apr 2011
சாயம்,,,,,,,,
கோபம் இருக்கிற
இடத்தில்தான்
குணம் இருக்கிறது
என்கிறார்கள்.
ஆனால் கோபத்தையே
குணமாகக் கொண்டிருக்கிற
பலருள்அவரும்
ஒருவராகவே தெரிகிறார்.
கள்ளம்,கபடம்,
நயவஞ்சகம்,சூழ்ச்சி,
குரோதம்............,,
போன்ற மிக
நல்ல குணங்களை
மட்டுமே
அடிப்படைபண்பாககொண்ட
அந்த நல்ல மனிதர்
தான் ஒரு தலைவர்,
தான் ஒரு பெரியவர்
தான் ஒரு சமூகப் பிரமுகர்.
தான்ஒரு ...........,,,,,,,,,,,,
என்கிறதையே
அடித்தளமாக்கி
அதன் மேல் ஏறி நின்று
அனுதினமும் கூவுகிறார்.
தான் ஒரு சுயம்பு
எனவும்,தான்
ஒரு முற்போக்கு சக்தி எனவும்/
கருப்பு வெள்ளை,,,,,,,,,,
சப்தம் கூட்டி வைத்தால்
அதன் அதிர்வலைகள்
தாங்காமல் யாரும்
அதிகமாய்கூட்டம்கூடி
பேசமாட்டார்கள்.
வெட்டிப்பேச்சு தவிர்க்கப்படும்
தொழில் நடக்கிற
இடத்தில் எதற்கு வீணாய்?/
ஏதேனும் பிரச்சனை
என்றால் யார் தாங்குவது?
என எப்.எம் வானொலியில்
ஒலி அதிகம் வைத்ததற்கான
காரணத்தை சொல்கிறார்
நான் முடி வெட்டச்
சென்ற சலூன் கடைக்காரர்.
ஞாயம்தான் எனத் தெரிகிற
அவரது கூற்று
அங்கு வந்து அமர்கிறவர்களுக்கு
ஞாயமில்லை எனப் படுகிறது.
10 Apr 2011
கனமற்றது,,,,,,,,,

எறிந்த வடை விழுந்த
சத்தம் கேட்கவில்லை.
காலையில் வாங்கியது.
இரண்டுபருப்புவடைகள்,
மூன்று உருண்டை வடைகள்.
அலுவலக வேலையாக
சென்று விட்டு திரும்பும் போது
ஆடுகாலி கடையில் வாங்கியது.
சேட்டைக்காரமுத்துதான்
அப்படி ஒரு பெயரை
அந்தகடைக்குசூட்டினான்.
காசு இருக்கிற நேரம்
கொடுத்துவாங்குவேன்.
இல்லையெனில் கடன்தான்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்
கடைக்காரனும் தருகிறான்,
நானும் வாங்கிக்கொள்கிறேன்.
அப்படி வாங்கி வந்த
வடைகளில் ஒன்று
சாப்பிடுவார்இல்லாமல்
எஞ்சி மறந்து போக
இரவு நேரம் பாத்திரம்
விளக்கும் போது
கையில் கிடைக்கிறது.
இந்நேரம்
இதை சாப்பிடமுடியாது.
நூல் வேண்டுமானால்
நூற்கலாம் என்பவனாய்
வீட்டின் எதிரிலுள்ள
வெற்று புல்வெளியில்
தூக்கி எறிகிறேன்.
எறிந்த வடை விழுந்த
சத்தம்வெகு நேரமாகியும்
கேட்கவில்லை.
எறிந்த பண்டமும்
விழுந்த இடமும்
கணமற்றதாய்
ஆகிப்போன பின்
எங்கு எது விழுந்தாழும்
இதுவாகத்தானே?
Subscribe to:
Posts (Atom)