24 Sept 2010
மரப்பாச்சி
படுக்கை பிடித்தமா,பள்ளி பிடித்தமா?
கேட்டால்
படுக்கைதான் பிடித்தம் என்கிறாள்
அந்தமூன்றுவயதுபிஞ்சு.
புத்தகங்கள்திணிக்கப்பட்ட
பையும்,வாட்டர்கேனும்,
டிபன்பாக்ஸும்,
ஸ்னாக்ஸுமாய் ஏதாவது
ஒருகிண்டர்கார்டனில்
ரைம்ஸ்சொல்லவும்,
ஏ,பீ,சி,டிஎழுதவும்,
ஒன்,டூ.த்ரிமனனம்செய்யவுமாய்
அந்தப்பிஞ்சின்தினசரிநகர்வு.
ஆயாவின்
கண்காணிப்பிலும்,பராமரிப்பிலுமாய்
நகரும்அவளது
பள்ளினேரங்கள் /
சாப்பாடும்,தின்பண்டமும்
ஆயாவின்கைகளால்
மட்டுமேபரிமாறப்படும்.
ஒண்ணுக்கு,ரெண்டுக்குகூட
அவளின்தயவில்தான்,
மேற்பார்வையில்தான்.
பலரின்குழந்தைகளுக்கு
பலகிண்டர்கார்டன்களில்
அறிவிக்கப்படாத
தாய்,தந்தையாய்
ஆயாவே
ஆகிப்போகும்அதிசயம்.
அந்தஉரிமையில்தான்
அவளின் "சனியனே" திட்டுக்கும்
தலையில்இறங்கும்குட்டுக்குமாய்
பழகிப்போகிறதுகுழந்தைகள்.
வீட்டுபாத்ரூமின்
பக்கெட்தண்ணீரில்
விளையாடுகையில்
தெரியும்அலையலையான
பிஞ்சின்முகத்தையும்,
வீட்டுத்தோட்டத்தில்
தெரிந்த
மண்ணையும்,மரங்களையும்
நுகர்ந்தவாறும் ,ரசித்தவாறும்
நகரும்பிஞ்சின்பொழுதுகள்.
அவளின்செய்ணேர்தியில்
உருவானகளிமண்
பொம்மைகளும்
சகவிளையாட்டுப்பிள்ளைகளிடையே
வெகுபிரசித்தம்.
வானொலி,தொலைக்காட்சி,
கம்யூட்டர்,செல்போன்
இவற்றுடன்
நெருங்கியதொடர்பிருந்தது
அவளுக்கு.
அவள்அன்றியும்,
அவளதுசெய்கைகள்அன்றியும்
அந்தவீட்டின்இயக்கம்இல்லை.
ஆனால்
அந்தபிஞ்சுகள்அன்றி
கிண்டர்கார்டன்களின்
இயக்கம்உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment