23 Sept 2010

பொடப்புத்தக்காளி

எனக்கு சிறு வயதில்
வைத்தியம் பார்த்த
வெள்ளைச்சாமி டாக்டரை
இன்று பார்த்தேன்,
நண்பகல் ஒருமணி வெயிலில்,
வருமானவரி அலுவலகம் முன்பாக./
வருமானத்தில் சரியாக வரிகட்டும்
நபர்களில்
அவரும் ஒருவராய் இருக்கிறார் இன்றுவரை.
இரண்டு வேளை மாத்திரை,
வெள்ளை மருந்துடனான ஒரு ஊசி,
இவைகளோடு சேர்த்து
"மறக்காம நாளைக்கு வாங்க"என்பதே
அவரின் வைத்தியமாய் இருக்கிறது இன்றுவரை.
நீண்டு கிடந்த கொடவ்ன் சாலையில்
தெற்குப்பக்கமாய் வாசல் வைத்திருந்த
ஆஸ்பத்திரி
எங்களது சிறு பிராயதில் கோவிலாகவும்,
டாக்டர் கடவுளாகவும்பார்க்கப்பட்டார்.
இன்று காட்சி மாறி
பழமையாளராய் பார்க்கப்படுகிறார்,
அல்லது பேசப்படுகிறார்.
ஆனாலும்
அவர்அணிந்திருக்கும்
தொள,தொள ஃபேண்டிலும்
மணிக்கட்டுவரை மூடிய
முழுக்கை சட்டையிலும்
தலை கவிழ்ந்த தளர்ந்த நடையிலும்
இன்றுவரை மாற்றமுமில்லை.
வைத்தியதிலும் தான்.

No comments: