26 Sept 2010

தள்ளாட்டம்








ஊசல் என்கிற
கருப்பசாமி

இறந்து போகிறார்,

ஒரு சுபயோக
சுப தினத்தில்.

அவரது இயற்பெயர்
கருப்பசாமிதான்.

உழைப்பின் பாரத்தை
உடலில்
சுமந்து
கொண்டிருந்தநாட்களிலிலும்,

சரியாக உணவு
கிடைக்காத பொழுதுகளிலும்

ஊசிப்போனதைத்
தின்று
வயிறு
நிரப்பிக்கொண்டதால்

அவருக்கு
அந்தப்பெயரே

நிலைத்துப் போனது.

ஊசல் மாமா, ஊசல் சித்தப்பா.ஊசல் அண்ணன்..
ஊசல் பெரியப்பா,ஏய்...............ஊசலு
என
எல்லோராலும்
அழைக்கப்படுபவருக்குதண்ணீர் என்றால்கொஞ்ச நஞ்சமல்லநிரம்பவே இஷ்டம். காலையில் எழுந்து
முழிக்கிற

முதல் முகம்
அதன் முகமாகத்தான்
இருக்கும்.

இல்லையென்றால்அன்று நாளேசரியில்லை
என்பார்.
கள்ளச்
சாராயத்திலிருந்து
மிலிட்டரி ரம் வரை
ஒரு கை பார்ப்பார்.
அவருக்கு அழகான
தங்கை இருந்தாள் .
அவளும் ஊசல் தங்கைஎனவே
அறியப்பட்டிருந்தாள்.

சொந்த
மச்சின்னுக்குத்தான்

தங்கையை
மணம் முடித்தார்.

தான் சுமந்த பாரம்
மச்சினனின்

தோளுக்கு  கைமாறும்
என.
அப்படியே ஆகியது.
கல்யாணம் மறுவீடு,
சந்தோசம் ,பிள்ளைப்பேறு
என

இருந்த நாட்களின்
நகர்வில்

மச்சின்னும்
இறந்து போகிறான்

அழகானபெண்பிள்ளையைக்
கொடுத்து விட்டு.

மச்சினன்
இறந்து போனதும்

குடும்பபாரம்
பழைய படியும்

ஊசலின் தோளில்.
கூடிப் போன
பாரத்தை
தாங்கும்சக்தி
தண்ணீருக்கு மட்டுமே உண்டு
என
தீர்மானித்தவராய்

முழுக்கவுமே
தண்ணீரில்

தஞ்சமடைகிறார்.

தான், தன் குடும்பம்
மனைவி,மக்கள் ,மைத்துனன்
தங்கை ,தங்கை பிள்ளை
என

ஒவ்வொருவரை
நினைக்கும் போதும்

ஒவ்வொரு க்ளாஸ்.
ஒவ்வொரு க்ளாஸின்
மிடறுகளிலும்
ஒவ்வொன்றின்
நினைவு.

நினைவு கூடக்கூட
தண்ணீரின் அளவும்
கூடுகிறது.

தண்ணீரின் அளவு கூடக்கூட
நினைவுகளும்
றெக்கை
கட்டி...........,,,

இரண்டும் ஒரு
சேரச்சேர

அவரது உடல்
அவரறியாமலேயே

தின்னப்பட்டு விடுகிறது.
தின்னப்பட்ட உடலை
திரும்ப பார்த்து
ஒட்டுப்போடும் முன்

முத்திப் போய்ஒன்று கூடிப்போன
நோய்களால்
ஒரு நாள் மிகவும்
பரிதாபமாக
இறந்து போகிறார்.
கருப்பசாமி ன்கிற
ஊசல்.

No comments: