26 Sept 2010
ட்ராக்
"ஃபன் ஆன் ட்ராக்ஸ்"
என
ஆங்கிலத்தில் வாசகம்பொரிக்கப்பட்டிருந்தஎண்பது பக்க
நீள சைஸ் நோட்டின்
பள பளத்த அட்டையில்
புகைவண்டிஒன்று
நீராவி எஞ்சினுடனும்,
பெட்டிகளுடனுமாய்
நின்றது,
நின்ற பெட்டிகளினுள்
மனிதர்கள்
ஏறவும் இல்லை,
இறங்கவும் இல்லை.ஊதா பெயிண்ட்
அடிக்கப்பட்டிருந்த
பெட்டியில்
மஞ்சள் நிறமாய்முழுக்கை
அணிந்திருந்தவரின்கை வலது பக்கமாய்
வெளித்தெரிய
இடப்பக்கமாய்
நடை மேடையும்
மனிதர்களும்
ரயில்வே
அதிகாரியும்.சிமெண்ட்
தகடுகளாலானநடைமேடை மேற்கூரை
அதைதாங்கி நின்ற
இரும்புத் தூண்கள்,
அதன் இடைவெளிகளில்
தொங்கிய
விளக்குகள்,மின்விசிறிகள்
வட்டமானபெரிய
கடிகாரம்என திறந்த வெளியில்
இருந்த ரயில் நிலையம்
களை கட்டி
காட்சியளித்தது.
மின் விசிறிகளையும்,
ஓடாத கடிகாரத்தையும் ,
கழுத்தின் உள்பக்கமாய்
மடித்திருந்த அதிகாரியின்
சட்டைக் காலரையும்
பார்த்து ரசித்த
மனிதர்கள்
யாரும்
கவனிக்கவில்லை.நீராவிஎஞ்சினுடனும்,பெட்டியுடனுமாய்நின்றிருந்த
புகைவண்டியின்இருப்புப்பாதையில்
ஒன்று சற்றே
இடைவெளி விட்டு
இல்லாதிருந்ததை /.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment