26 Sept 2010

பந்தி



 
ஏன் அப்படியெல்லாம்
வைத்திருக்கிறார்கள்
எனத் தான்
கேட்கத் தோனுகிறது.
கைபிடியைத் திருகித்
திறந்தவுடன்
மொத்தமாக விழாமல்
நூல்,நூலாகப் பிரிந்து
நேர் கோடுகளாய்
சீறிட்டு விழுந்தது.
வரிசையாக நின்ற
பண்ணிரெண்டு குழாய்களும்
கலருக்கு ஒன்றாக.
நீள் பிறை வட்டமாய்
அதன் கீழ்
வைக்கப்பட்டிருந்த
சில்வர்த் தொட்டி.
கை கழுவிவிடும்
தண்ணீரைத்
தாங்கிகடத்தியவாறே.
ஒரே சமயத்தில்
இருநூறூக்கும்
மேற்பட்டவர்கள்
அமர்ந்து சாப்பிடக்கூடிய
சாப்பாட்டு அறையில்
நீள,நீளமாய் வகுந்து
போடப்பட்டிருந்த
சாப்பாட்டு மேஜைகளும்,
அதன் முன்னாக
ஒரே கலரிலான
இரும்புச் சேர்களும்/
மேஜைமேல் விரிக்கப்பட்டிருந்த
டிசைன் பொரித்த
டிஸ்யூபேப்பரில்
வாழை இலை விரித்து
சாப்பிட்ட நூற்றுக்கும்
அதிகமானோரை
கவர்ந்த பதார்த்தங்களும்,
பரிமாறியவர்களின் சீருடையும்,
அதில் பொரித்திருந்த
அவர்களது
சமையல்
குழுவின் பெயரும்.
கூட்டு,பொரியல்,
சாம்பார்,ரசம்,
மோர்,பாயாசம், என
வரிசைக்
கிரமமாய்
சாப்பிட்டு முடித்து
கை கழுவும் போதுதான்
தோனியது.
வீட்டில் மனைவியும்
பிள்ளைகளுமாய்
புடை சூழ சாப்பிட்டு விட்டு
பாத்ரூமிலுள்ள
ப்ளாஸ்டிக் வாளியில்
தண்ணீர் மோந்து
கைகழுவியது போல் இல்லை.



 

No comments: