21 Sept 2010

ஓலக்காத்தடி





கீச்,கீச்சென
சப்தம் எழுப்பியவாறே
சுழலும் மின்விசிறியின்
இறக்கைகள் மூன்றும்
வெளிர் ப்ரவ்ன் நிறத்தில்
இருந்தன.

இறக்கைகள் மூன்றும்
வெளிர் ப்ரவ்ன் நிறத்தில்
இருந்தன

இறக்கைகள் மூன்றிலும்
மூன்று விதமான
கனத்தில் அடர்பரிமாணமாய்
அழுக்கும்,தூசியுமாய்./

இறக்கைகளின் நிறத்திற்க்கு
ஏற்றரர் போலவே
அடர்கருப்பு, ப்ரவ்ன்,
வெளிர்ப்ரவ்ன் என
அழுக்கும்,தூசியுமாய்.

புகழ்பெற்ற முண்ணனி
கம்பெனியின் மின்விசிறி,
மாட்டி இரண்டு வருடம்தான் ஆகிறது
என்றார்கள்.
நகரின் மையத்திலுள்ள கதர்கடையின்
மாடியில் இருந்த தனியார் வங்கியின்
மையத்தில் தொங்கியது.

சென்றவாரம்
எழும்ப ஆரம்பித்த சப்தத்தின் வேகம்
நாட்களின் நகர்வுகளில் அதிகரித்தது.
என்ன செய்ய,,,,,என
ஆளாளுக்கு யோசித்தபோதும்,பேசியபோதும்
கிடைத்த விடை
நல்ல மின் பணியாளர்
ஒருவரை பார்ப்பது என/
மின் பணியாளரும் வந்தார்,
அலுவல் நேரமாக/
இதற்கு செய்கிற செலவிற்கு
மின் விசிறியை மாற்றி விடுவதேமேல் என்றார்.
சேட்டைக்கார முத்துவும் அதையஆமோதித்தான
அருகிலிருந்த முதியவர்தான் சொன்னார்,
அந்த மின்விசிறி இதுவரை தன் வாழ்வில்
எத்தனை பேரை ஆசுவாசப்படுத்தி இருக்கும்?
முடிந்தவரை ஓட விடுங்களேன்
என்றார்.

No comments: