25 Sept 2010

மறுதலிப்பு






தண்ணீரின் அசைவும்
வாளியின் நகர்வும்
உடல் தேய்த்தலுமே
உனது பேச்சை கேட்க விடாமல்
செய்கிறதென
குளித்துக்கொண்டிருக்கும்
நான்
எனது மனைவியிடம்
கூறியபோதே
அவளது பேச்சை கேட்க
மறுப்பவனாகிப் போகிறேன்.

No comments: