25 Sept 2010

மெழுகுவர்த்தி




அப்பம் மட்டுமே உள்ளது.
இட்லி வெந்து கொண்டிருக்கிறது.
தோசை சுட சிறிது நேரமாகும்.
பூரியும் அப்படியே.
இடியாப்பம்
வீட்டிலிருந்த்து வர வேண்டியதிருக்கிறது.
ஊரிலிருந்து இப்போதுதான் வந்தோம்.
அதான்
கடை திறக்கதாமதமாகிப் போனது.
என்கிற பேச்சினுடாகவே
தாமத்திற்கான
தகவலைச் சொன்ன மாமி
நான்கு பர்னர் கொண்ட ஸ்டவ்வின்
முன்பாக நின்றார்.
லேசாக குழிந்திருக்கும் சட்டியில்
மாவை ஊற்றி
வட்டமாக சாய்த்து,சாய்த்து
ஆட்டி அடுப்பில்வைக்கிறாள்.
அடுப்பருகில் உள்ள வட்ட பலகையில்
பூரிக்காக மாவு உருண்டைகளை உருட்டுகிறாள்.
மூன்றவதாக உள்ள அடுப்பில்
தோசை மாவை ஊற்றுகிறாள்.
நான்காவதாக உள்ள பர்னரில்
இட்லிச்சட்டிஇருக்கிறது.
நெரிசலான பஜாரின்
காம்ளக்ஸ் கடையில்
ஐந்தாவது பர்னராகவும்,
அதில் எரியும் தீயாகவும் அவள் தெரிகிறாள்.

No comments: