23 Sept 2010

வெறுமை




இன்றுஎன் மனைவிவீட்டிலில்லை.
ஊறவினர்பிள்ளைக்குமொட்டை
எடுக்கிறார்கள்என
போய்விட்டாள்.
காலையிலேயேகிளம்பிச்
சென்றவளைநான்தான்சென்று
வேனில்ஏற்றிவிட்டுவந்தேன்.
பொங்கல்வைத்து,கெடாவெட்டி,............................
நடக்கிறவிசேசத்தில்கலந்துகொள்கிற
பாக்கியத்தைவிடஉறவுகளின்
கோபத்திற்கு பயந்தே இப்படியெல்லாமுமாக.
அதிகாலை எழுந்துஅவசரகதியில்
ரெடியாகிகிளம்பியவள்
எனக்கும் பிள்ளைக்குமாய்
மதியச்சாப்பாடுவரைசெய்து
வைத்துவிட்டுச்செல்லமறக்கவில்லை.
வீடு,வாசல்,வீதி,ரோடுஅதுகடந்து
அவளை ஏற்றிக்கொண்ட வேன்
காலையில் சென்றதிலிருந்து
இளம் மாலையாகியும் இதுவரை
காணவில்லை.
அவளை விட்டுவந்த்திலிருந்து
சாப்பிடுகிறேன், குளிக்கிறேன்,
பிள்ளைகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்,
தொலைக்காட்சிபார்க்கிறேன்,கண்ணயர்கிறேன்.
எழுந்துதேனீர்அருந்தசெல்கிறேன்.
திரும்பவும் வந்து  பிள்ளைகளுடன்
பேச தொலைக்காட்சி பார்க்க.........
என்கிற வரிசைக்கிரமத்திலும்
அது அல்லாமலும் ஏதேதெல்லாமோ
செய்து பார்க்கிறேன்.
ஆனாலும் அவள் அற்ற வீடு
வெறுமை சூழ்ந்தே./

No comments: