26 Sept 2010

தலைமுறைஇடைவெளி




இரண்டுக்குமான
வித்தியாசத்தை"ட்வின்ஸ்"
பார்க்கத் தெரியவேண்டும் என
தனக்குத் தெரியாத
ஆங்கிலத்தில் சொன்ன
கந்தவேல்
அவரது தலைமுறையில்
முதன் முதலாக நகரத்திற்கு
கூலி வேலைக்குப் போனதாய்
அறியப் படுகிறார்.
கிழக்கு த்தெருவில்
கண்மாய்க்கரை மேட்டில்
நல்லதண்ணீர் கிணற்றின்
அருகாமையாக அவர் வீடு.
மண்சுவர் வைத்துக் கட்டிய
வீட்டின் மேல் கூரை
கம்மதட்டையால் வேயப்பட்டிருந்தது.
தரை முழுவதும் சாணம் மொழுகிய
ஒற்றை வாசல் கொண்ட அவரின் வீடு.
எந்த வாஸ்த்துக்குள்ளும் அடங்காமல்.
வீட்டின் அடுப்படி வெளி வாசலை ஒட்டி
இடதுபக்கமாய்.
குளியலறை என சிறியதாய்
தட்டி கட்டி மறைத்திருந்தார்கள்.
சாப்பிடுவது தூங்குவது
ஓய்வெடுப்பது,உட்கார்ந்து பேசுவது,
சுகம்,துக்கம் பகிர்ந்து கொள்வது
எல்லாம் வீட்டை ஒட்டிய வெளியில்தான்.
வீட்டைச்சுற்றிலுமாய் வேலி போட்டு
அடைக்கப்பட்ட வெற்றிட்த்தில்
ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்கள்.
ஆடு மேய்க்க்கும் கம்பு,
ஆட்டுக்குட்டிகளை
அடைக்கும் கொடப்பு,
ஆட்டுச் சாணம்,மூத்திர வாசனை
உதிர்ந்த முடிகள் என
ஆட்டுக் கொட்ட்டியையும் ,
சாண வாசமும்,ஒற்றை வாசலுமாய்
இருந்த வீட்டையும்
கொண்டிருந்த அவரின் தாத்தா
வருடச் சம்பளத்திற்கு
ஒரு வீட்டில் வேலைக்கு இருந்தார்.
அவரது தந்தை ஆடு மேய்த்தார்.
இவர் கூலி வேலைக்குச் செல்கிறார்.
தான் குடியிருக்கும்
கிராமத்தின் காடு கரைகளுக்கும்,
நகரத்தின் சந்தடிகளுக்கும் மத்தியிலுமாக/
இவரது பிள்ளைகள்....................?

No comments: