22 Sept 2010

விருந்தாளி



வந்திருந்தவனுக்கு
வயது பதினெட்டிற்குள்ளாய்
இருக்கலாம்.
சிவப்பாக இருந்தாலும்
களையகவே தெரிந்தான்.
கலர் பொருத்தமற்று
அனிந்திருந்த ஆடைகள்
நன்றாகவே இருந்தன.
எனது மகனுடன் படித்தவனாம்.
பள்ளி இறுதி முடித்துவிட்டு
கல்லூரியில்
காலடி எடுத்து வைக்கப்போகிறான்.
தந்தை கொத்தனார் வேலையும்
தாய் வீட்டு வேலையுமாய்
செய்து
சம்பாதிக்கிற பணத்தில்தான்
குடும்பத்தின் ஓட்டம்.
வாரக்கடைசி பள்ளி விடுமுறை நாட்களிலும்,
அரசாங்கம் விடுப்பு அறிவிக்கிற
நாட்களிலுமாய்
அவனும் ஏதாவது வேலைக்குச்
சென்றுவிடுகிறான்.
அவனது படிப்பிற்க்கான
செலவை ஏற்க/
இப்போது அது காணவில்லை என
என் பையனிடம்
சொல்லியனுப்பிவிட்டுதான்
வந்திருந்தான்.
கேட்டின் அருகே
தயங்கித்தயங்கி நின்றவனை
கையசைத்துக்கூப்பிட்டேன்.
வந்தவன் பையிலிருந்த
செல்போனை எடுத்துக் காண்பித்து
இதை வைத்துக்கொண்டு
பணம் தாருங்கள் என்றான்.

No comments: