எறிந்த வடை விழுந்த
சத்தம் கேட்கவில்லை.
காலையில் வாங்கியது.
இரண்டுபருப்புவடைகள்,
மூன்று உருண்டை வடைகள்.
அலுவலக வேலையாக
சென்று விட்டு திரும்பும் போது
ஆடுகாலி கடையில் வாங்கியது.
சேட்டைக்காரமுத்துதான்
அப்படி ஒரு பெயரை
அந்தகடைக்குசூட்டினான்.
காசு இருக்கிற நேரம்
கொடுத்துவாங்குவேன்.
இல்லையெனில் கடன்தான்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்
கடைக்காரனும் தருகிறான்,
நானும் வாங்கிக்கொள்கிறேன்.
அப்படி வாங்கி வந்த
வடைகளில் ஒன்று
சாப்பிடுவார்இல்லாமல்
எஞ்சி மறந்து போக
இரவு நேரம் பாத்திரம்
விளக்கும் போது
கையில் கிடைக்கிறது.
இந்நேரம்
இதை சாப்பிடமுடியாது.
நூல் வேண்டுமானால்
நூற்கலாம் என்பவனாய்
வீட்டின் எதிரிலுள்ள
வெற்று புல்வெளியில்
தூக்கி எறிகிறேன்.
எறிந்த வடை விழுந்த
சத்தம்வெகு நேரமாகியும்
கேட்கவில்லை.
எறிந்த பண்டமும்
விழுந்த இடமும்
கணமற்றதாய்
ஆகிப்போன பின்
எங்கு எது விழுந்தாழும்
இதுவாகத்தானே?
8 comments:
" கனமற்றதாகிப் போனபின் எது
எங்கு விழுந்தாலும்....மிக அருமை
"வடையின் கனம் "...என்னுள் புகுந்து
என்ன என்னவோ செய்கிறது
படைப்பின் சிறப்பே அதுதானே
நல்ல தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்.வடைஒரு உருவகம்தானே/
//எறிந்த பண்டமும்
விழுந்த இடமும்
கணமற்றதாய்
ஆகிப்போன பின்
எங்கு எது விழுந்தாழும்
இதுவாகத்தானே?//
அருமை,விமலன்!
நன்றி சென்னை பித்தன் சார்.உங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/பண்டங்க்கள் மட்டுமா,பண்டம் செய்தவனின் பாடும்தானே?
உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக
வணக்கம் தமிழ்வாசி சார்.நலம்தானே?மிகவும் உளமார்ந்த நன்றி.
தங்களின் வருகைக்கும்,
வலைச்சரத்தில்சிட்டுக்குருவியை அறிமுகம் செய்ததற்காகவும்/
நல்ல குறியீடுகள் . இந்த உடலும் அப்படித்தானே ? உயிர் உள்ள வரைதானே இதற்கு மதிப்பு ?
அருமை விமலன்
நன்றி எல்.கே சார் உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக.
மதிப்பென்று பார்த்தால் உடலுக்கு மட்டுமல்ல,பலவிஷயங்களுக்கும் அப்படித்தானே?
Post a Comment