கையிலெடுத்த கல்லை எதன்
மீதும் எறிய பிரியமற்று கீழே
போட்டு விடுகிறேன்.
கருப்பும்,ப்ரௌனும் வெள்ளையுமாய்
மேய்கிற கோழிகளும்,அவை
கிளறிய குப்பைகளும்,மண்ணும்
அதில் நெளிகிற புளுக்களும்
என் கவனம் ஈர்க்காமல்
இருந்தது இல்லை.
தூரத்தில் செல்கிற பால்க்காரரின்
சைக்கிள் மணி சப்தமும்,
தண்ணீர் லாரியின் ஓசையும்
காதை எட்டித்தொடாமல் இல்லை.
நேற்றிரவு 11.00 மணி கடந்த வேளையில்
தொலைபேசியில் பேசிய நண்பனும்,
மறுநாள் காலை 5.00 மணிக்கு
கை பேசியில் அழைத்த தோழரும்
நட்பு கொண்டு பேசுகிறார்கள்
அதன் எல்லைக்குள் நின்று கொண்டு/
மகளுக்கு திருமணம் முடித்து விட்ட
திருப்தியை முகத்தில் காட்டிக்கொண்டு
பேசிய எதிர் வீட்டுக்காரர்.
வீட்டின் கொல்லையிலிருந்து
பார்த்தால் தெரிகிற பின் வீட்டின்
தட்டி அடைக்கப்பட்ட பாத்ரூம்.
எங்கு பார்த்தாலும் எப்போது பார்த்தாலும்
வாய் நிறைய பேசி மிகவும் ஒட்டுதலாயும்,,
வாஞ்சையுடனும் இருக்கிற தோழர்.
இரு சக்கர வாகனத்தின்
பின் டயரை மாற்ற வேண்டும் கண்டிப்பாக
என வந்து போகிற நினைவு/
திடீரென பணியிட மாறுதல்
செய்து விட்டால் பையனின் படிப்பு,
குடும்பம்,,,,,,,,,,,,,என இன்னும்,இன்னுமாய்
நிறைந்து வருகிற யோசனைகள்.
அலுவலகம் செல்லுகையில்
சீக்கிரம் சென்று விட்ட பேருந்திற்காய்
ஏக்க பெரு மூச்சு விடும் நான்.
மதியச்சாப்பாடு கொண்டு போகாத தினத்தில்
மரணவிலாஸ் ஹோட்டலில் சாப்பிட்ட
வேகாத புரோட்டா,நன்றாக இல்லாத டீ,
அம்மாவின் உடல் நலம்,
என்னின் அலுவலகப்பணி,
மனைவியின் கூடிப்போன வீட்டு வேலை,,,,,,,,
என இன்னும்,இன்னுமான
தொடர்பற்ற சிந்தனைகளுடன்
பயணிக்கிற எனது அன்றாடங்கள்/
18 comments:
Yathartham kavinyare yathartham
தலைப்பும் அதற்கான விளக்கமாய்
அமைந்த கவிதையும் அருமை
எப்போதும் நெருப்பைத் தாங்கி
வெளிக்காட்டது இருக்கும் சிக்கி முக்கி கற்களை
அருமையான படிமமாக பயன்படுத்தியது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
கவிதையில் ஒரு கதையே சொல்லி விட்டீர்களே... எத்தனை எத்தனை சிந்தனைகள்... வாழ்த்துக்கள் சார்...
uefnvu [url=http://frjordannsoldes.webnode.fr/]jordan pas cher[/url] tzskaj air jordan xmkyfc http://frjordannsoldes.webnode.fr/
யதார்த்தமான உண்மை. நம் மனதில் எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பல எண்ணங்கள் நடமாடிச் செல்வது இயற்கையே. அதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ஒரு மெல்லிய நூலிழை கொண்டு எதார்த்த வரிகளை கோர்த்த விதம் மிக சிறப்புங்க சார்...
மரண விலாஸ் ரொம்ப அருமை
ன்றாட வாழ்க்கையை அருமையாக வடித்து விட்டீர்கள்.
இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html
வணக்கம் கவி அழகன் சார்.நன்றி
வணக்கம் ரமணி சார்.
நன்றிதங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
அப்புறம் ரமணி சார், சொல்ல மறந்து போனது ஒன்று.தங்களது கருத்தும்,
படைப்புகளும் எப்போதும் கலங்கரை விளக்கம் போலவே உள்ளது.நன்றி.
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் விச்சு சார்,தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும்,
வருகைக்குமாக மிக்க நன்றி/
வணக்கம் அரசன் சே சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் குட்டன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
யதார்த்தமான வரிகள். அருமையான தலைப்பு. தலைப்பை போலவே வாழ்க்கை என்பதை யதார்த்தமாக கூறியுள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
அன்றாட நிகழ்வுகளை ஆயாசங்களை சொல்லிக்கொண்டு போகிறது கவிதை ஒரு தொடர்வண்டியைப் போல .
அருமை
வணக்கம் ரேசன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சிவகுமரன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment